தாடி வைப்பது அவசியமா?

தாடி வைப்பது நபிவழி என்று மக்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள். ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வ­யுறுத்திக் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (5892)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு) களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­ரி)  நூல் : முஸ்­ம் (435) மேலும் வாசிக்க

Advertisements

நட்பின் பயன்கள்!

ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும் மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இதுபோன்ற உறவுகளில் சிலதை அவன் பெறாவிட்டாலும் கண்டிப்பாக நட்பு என்ற உறவை பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை.

நட்பினால் பல பயன்களை மனிதன் அடைவதால் நாம் எல்லோரும் நட்புகொள்கிறோம். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் தனிமையை விரும்புவதில்லை. துணைக்கு நண்பன் வந்துவிட்டால் நேரம் போவதே தெரியாமல் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் அதிகமாக கூடிவிட்டால் நம்முகத்தில் கவலையையே பார்க்க இயலாது. சந்தோஷமாக காலத்தை கடத்துவதற்கு ஒரு சாதனமாக நட்பு இங்கு பயன்படுகிறது. மேலும் வாசிக்க

தூய்மை…

உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளை படைத்து அவைகளுக்குத் தேவையான வசதிகளையும் அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளான். இதனடிப்படையில் அவன் அதிகம் அதிகமாக மற்ற உயிரியினங்களைக் காட்டிலும் மனிதனுக்கு பல பாக்கியங்களை வழங்கியுள்ளான், இன்று பெரும்பாலும் அவன் வழங்கிய பாக்கியங்களில் ஒன்றான செல்வம் அதிகமாக நேசிக்கப்படுகிறது.  மேலும் வாசிக்க

வெட்கம்…

நாம்மிடத்தில் உள்ள பல தன்மைகள் விலங்குகளிடத்தில் காணப்பட்டாலும் நம்முடைய சில தன்மைகளால் அவைகளுக்கும் நமக்கும் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகின்றது. உதாரணமாக சாப்பிடுவது, உறங்குவது, மலம், ஜலம், கழித்தல் ஆகிய காரிங்களை நாம் செய்வது மட்டுமல்லாமல் பிராணிகளும் செய்கின்றன. சில பிராணிகள் இக்காரியங்களில் மனிதனையே மின்ஞிவிடுகின்றன. பெண்ணாகிறவள் ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தை அல்லது அரிதாக இரு குழந்தைகளை பெற்றெடுப்பாள். ஆனால் முயல், நாய், பன்றி போன்ற பிராணிகள் டஜன் கணக்கில் ஈன்றெடுக்கின்றன. இணைப்பெருக்கத்தில் நம்மை மிகைத்துவிடுகின்றன.  மேலும் வாசிக்க

நல்­ணக்கத்தை ஏற்படுத்துதல்!

நல்­ணக்கத்தை ஏற்படுத்துதல்
அன்றாட வாழ்வில் மனிதன் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறான். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் சில வேளை அவனுக்கு பிரச்சனைகள் எழுகிறது. ஒரே தெருவில் வசிக்கின்ற அண்டைவீட்டாருடனும் சில பிரச்சனைகளை அவன் சந்திக்க நேரிடுகிறது. நெருங்கிப் பழகும் நண்பர்கள் நம்மிடம் வியாபாரம் செய்யும் நுகர்வோர் இன்னும் இது போன்று பலதரப்பட்டவர்களிடம் அடிக்கடி பிரச்சனைகள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. இந்நேரங்களில் பிரச்சனையை தீர்த்துவைப்பதற்காக யாரும் முன்வராவிட்டால் அவன் தன்னுடைய சுயநினைவு இழந்து ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று கூட சிந்திக்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதால் பல விபரீதங்கள் ஏற்படுகின்றன. மேலும் வாசிக்க

பேச்சின் ஒழுங்குகள்!

ஒருவனுடைய நடை உடை பாவனைகள் அவனிடத்தில் பொதிந்துள்ள பண்புகளை படம்பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவரது பேச்சுக்களும் படம்பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமைகாட்டுபவனாகவும் பிரதிப­க்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சிற்கு உண்டு. சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளை கூறிவிடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்ளாமல் கே­க்காக கூறியபோதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார். மேலும் வாசிக்க

சிரிப்பின் ஒழுங்கு

மனிதனுக்குள் இறைவன் ஏற்படுத்தியுள்ள பண்புகளில் சிரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இரக்கம் கோபம் வெட்கம் பயம் போன்ற எத்தனையோ குணங்கள் மனிதன் குறிப்பிட்டப் பருவத்தை அடைந்தப் பிறகு தான் தோன்றுகின்றன. ஆனால் சிரிப்பைப் பொறுத்தவரை மனிதன் பிறந்த உடனே இத்தன்மை குழந்தைக்கு தொற்றிக்கொள்கிறது. பிறத்தல் மரணித்தல் அழுதல் போன்ற பண்புகல் இயற்கையாகவே மனிதனிடத்தில் குடிகொண்டிருப்பதைப் போல் சிரிப்பும் மனிதனுடன் பிண்ணிப்பிணைந்துள்ளது. மேலும் வாசிக்க

பெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

ஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது. பெண்கள் அணிந்துகொள்ளலாம் என்பதே மார்க்கச் சட்டம் என்று பரவலாக மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள். பலவருடங்களாக நாமும் இதேக் கருத்தையே சொல்­க்கொண்டுவருகின்றோம்.

இந்த நமது நிலைபாட்டிற்கு எதிராக சில அறிஞர்கள் பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்று கூறியுள்ளனர். இந்த கருத்துவேறுபாடு நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களிடமும் இருந்துள்ளது.

தற்காலத்தில் இமாம் அல்பானீ அவர்கள் இந்தக் கருத்தை வாதப் பிரதிவாதங்களோடு அழுத்தமாக கூறியுள்ளார். இவரது கருத்தை அமோதித்து இன்றைக்கு சிலர் பெண்கள் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்று கூறிவருகின்றனர். மேலும் வாசிக்க

புத்தாண்டு!

இஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது. பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அல்லாஹ்(ஜல்) தனது இறுதித்தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை அவர்களது 40வது வயதில் தேர்ந்தெடுத்தான். அவர்களது 40வது வயதிலிருந்து 63வது வயதுவரை அல்லாஹ் தன்புறத்திலிருந்து வஹீ இறக்கி சிறிது சிறிதாக அல்குர்ஆன் வசனங்களை அருளி அதை நிறைவு செய்தான். மேலும் வாசிக்க

இறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்!

ஒழுக்கக் கேடு, அநீதி, துயரம், தோல்வி மனப்பான்மை, தொந்தரவு, தனிமை, பயம், பதற்றம், ஏமாற்றம், அவநம்பிக்கை, பழியஞ்சாமை, கவலை, கடுங்கோபம், பொறாமை, மனக்கசப்பு, போதை மருந்துக்கு அடியாமையாதல், பரத்தமை (விபச்சாரம்), சூதாட்டம், பசி, வறுமை, மரணம் பற்றிய பயம், ஆகிய அனைத்தையும் பற்றிய செய்திளை நாள்தோறும் நாளிதழ்களில் வாசிக்கின்றோம்; தொலைக் காட்சிகளிலும் கேட்கின்றோம். பிரபலமான பத்திரிக்கைகள் இந்தச் செய்திகளுக்கு முழுப்பக்கங்களை ஒதுக்குகின்றன; இவை மனோதத்துவ ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் விளைவிக்கும் பாதிப்புகளைப் பற்றி சில பத்திரிக்கைகள் இடையறாது எழுதி வருகின்றன. ஆனாலும் மேலே கூறியவைப் பற்றி நாம் இந்த ஊடகங்கள் மூலம் மட்டும் அறிந்து கொள்கிறோம் என்று சொல்ல முடியாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இத்தகையப் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம்; அவற்றை நாம் வாழ்க்கையில் அடிக்கடி அனுபவிக்கிறோம்.

மேலும் வாசிக்க

தற்கொலைக்கு முயன்ற ரசிகன்

உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் விட மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவன் மனிதன். காரணம் மற்ற எல்லா உயிரினங்களையும் விட அவனிடம் இருக்கும் சிறப்புத்தகுதியான பகுத்தறிவுதான். இதன் மூலம் அவன் நாளுக்கு நாள் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி காட்டிக்கொண்டே இருக்கிறான். அந்த வரிசையில் கண்டுபிடிக்கப்ப்பட்ட சாதனம்தான் வீடியோ கேமராக்கள். இன்று இது அதிகளவில் பயன்படுத்தப்படுவது சினிமாத்துறைகளில்தான். மேலும் வாசிக்க

கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் மிகவும் பரபரப்பாகவும், மும்முரமாகவும் உலகம் முழுவதும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டும் வருகிறது.

இந் நிகழ்கால நிகழ்வுகளில் கிரிகெட் பற்றிய உண்மைத் தகவல்களையும், அதனால் ஏற்படும், தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களையும் பற்றி தெளிவாக உணர்த்துவதற்காக இந்த கட்டுரை வரையப் படுகிறது.

மேலும் வாசிக்க

ஆயிரங்களில் இஸ்லாத்தில் நுழைந்தவா்கள், தற்போது லட்சத்தில் நுழைகிறார்கள்

நவீன உலகின் பலம்மிக்க சக்தி இஸ்லாமே! இன்றைய நவீன உலகை ஆளும் தகுதி படைத்த ஒரே வார்த்தை இஸ்லாம் மாத்திரமே!

எந்தவொரு மதத்தினாலும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை உலக வரலாற்றில் ஏற்படுத்திய பெருமை இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு.

இஸ்லாத்தை அழிக்க நினைத்தவர்களை கூட தன் தூய கருத்தினால்,உண்மை செய்திகளினால் உள்ளிழுத்து நேர்வழியின் பக்கம் அவா்களை கொண்டு வந்த சத்திய மார்க்கம் தான் இந்த இஸ்லாம்.

மேலும் வாசிக்க

“கசகசா” மார்க்கதில் அனுமதிக்கப்பட்டதா?

இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள் ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம். கசகசா வை ஆங்கிலத்தில் Opium Pappy என்று சொல்லப்படும்.

இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

மேலும் வாசிக்க

பர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்

பெரும்பாலான மக்களைப்போல, எனக்கும் ‘முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிகின்றனர்?’ என்ற ஐயம் எழவே செய்தது. நான் பருவம் எய்திய பின்பு, எனது முதல் எண்ணம், எனது முதல் அச்சம், எனது தலைமுடியை மறைக்கும் பர்தாவை நானும் அணிய வேண்டுமே என்பதேயாகும். பர்தா அணிவதன் உண்மைப் பொருள் என்னவென்பதைப் பிறகு விளங்கியதும் பர்தா அணிய வேண்டும் என்ற திடமான முடிவை மேற்கொண்டேன். ஆனால் அதனை மெல்ல மெல்லத் துவங்கினேன்.

தென் கலிஃபோர்னியா இஸ்லாமிய மையத்திலுள்ள மஸ்ஜிதுக்குச் செல்லும்போது மட்டும் பர்தா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அத்துடன் கைகளையும், கால்களையும் மறைக்கும் நீண்ட உடைகளையும் அணிந்து வந்தேன். பிறகு படிப்படியாக தோழிகளின் வீடுகளுக்குச் செல்லும்போது பர்தாவுடன் சென்றேன். கடைசியாக, வசந்தகால விடுமுறைக்குப் பிறகு கல்விக்கூடத்திநற்குச் செல்லும்போது பர்தாவைத் துணிந்து அணிந்து சென்றேன். பள்ளிக்கூடத்திற்கு பர்தாவுடன் செல்வதைப் பற்றித்தான் மிகவும் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால், இப்புதிய அனுபவம் மிகவும் உற்சாகம் மிகுந்த அனுபவமாக அமைந்துவிட்டது.

மேலும் வாசிக்க

வந்தே மாதரம்? & தாயே வணக்கம்?

வந்தே மாதரம் பாடலுக்க முஸ்லிம்களாகிய நாம் எதிர்ப்பது எதன் அடிப்படையில் என்று புரிந்துக்கொள்ளுங்கள்! நாம் வணக்கு வது அல்லாஹ் ஒருவனைத் தான் அவனைத் தவிர யாரை வணங்கக்கூடாது என்று தடை உள்ளது! எனவே பாரத மாதாவை வணங்குவது போன்ற பாடல் எங்களுக்கும் எங்கள் இஸ்லாமிய கொள்கைக்கும் மாற்றமானதாகும்! எனவே நாம் எதிர்க்கிறோம்.

மேலும் வாசிக்க

முஸ்லீம்களின் கல்வி பொருளாதார நிலை ஓர் ஆய்வு, தீர்வு

கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமுகங்களை விட முஸ்லீம் சமுதாயம் பின் தங்கி உள்ளது. தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லீம் சமுதாயம் பின் தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்−ம்களின் கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமூகம் கடைரிலையில் உள்ளது. 2006லிஆம் ஆண்டு வெளியிட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லீம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

தாவரங்களின் வளர்ச்சி (Wi-Fi கதிர்கள்)

Wi – Fi கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க

கருந்துளை மர்மங்கள்-BLACK HOLE

அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…

அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.

மேலும் வாசிக்க

ஐரோப்பாவின் முதல் விவசாயி

அல் குர்ஆனின் வழியில் அறிவியல்… இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து,

இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  அல்குர்ஆன். 30:9

மேலும் வாசிக்க

குடி கெடுக்கும் குடியரசுகள்

அல்குர்ஆனின் வழியில் அறிவியல்……

இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அல்லாஹ் கூறுகின்றான்,

மேலும் வாசிக்க

கடல்கள் இடையே உள்ள திரைகள்

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)

    அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. ‘மரஜா’ எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.

மேலும் வாசிக்க

வணிகம்

கேள்வி: முஸ்லீம்கள் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யலாமா? ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா என்பதையும் தெளிவுப்படுத்தவும். பதில் தெரிந்தவர்கள் உடனே பதியவும்.

பதில்: பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா என்பதை ஆய்வு செய்வதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும்! அலசுவோம் வாருங்கள்! வியாபாரம் வியாபாரம் செய்யப்படும் முறையை 4 வகைப்படுத்தலாம் 1)      தனி நபர் நிறுவனம் 2)      கூட்டு நிறுவனம் 3)      வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம் 4)      பொதுத்துறை நிறுவனம் தனி நபர் நிறுவனம் (PROPRIETORSHIP CONCERN) உங்களிடம் 5 இலட்ச ரூபாய் உள்ளது ஒரு நிறுவனத்தை நடத்த விரும்புகிறீர்கள் ஆனால் அந்த நிறுவனத்தின் இலாபம் நட்டம் உங்கள் ஒருவரை மட்டுமே சார்ந்தது காரணம் நீங்கள் நேரடியாக அந்த நிறுவனத்தின் முதலாளி ஆகிறீர்கள்.

மேலும் வாசிக்க

இஸ்லாத்தை நோக்கி அலையாய் வரும் பிரிட்டன் மக்கள்

அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்; பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்)இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.  மேலும் வாசிக்க

ரகசிய கேமராக்கள்: பெண்களே ‍எச்சரிக்கை!

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர்நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மேலும் வாசிக்க