ரமளான் இரவு வணக்கங்கள்

புனித ரமளானில் நின்று வணங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆயினும் ரமளானில் தொழுவதற்கென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரத்தியேகமான வணக்கம் எதனையும் கற்றுத் தரவில்லை. அவர்களும் பிரத்தியேகமான எந்த வணக்கத்தையும் செய்யவில்லை.

மேலும் வாசிக்க

Advertisements

லைலத்துல் கத்ரு இரவு!

ரமளான் மாதத்தில் கடைசிப் பத்து நாட்களில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.அல்குர்ஆன் 97:1-3

மேலும் வாசிக்க

லைலத்துல் கத்ர் நாள் எப்போது?

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபிஅவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.

மேலும் வாசிக்க

பாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும்

புனித மிக்க ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தை நாம் நெருங்கியிருக்கும் இவ்வேலையில் இந்த இறுதிப்பத்தின் மகத்துவத்தையும், கண்ணியத்தையும் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இன்று நமது ஊர்களில் ரமழான் மாதம் முழுவதும் தூய்மையான முறையில் மார்க்கக் கடமைகளை செயல்படுத்த வேண்டியவர்கள் மார்க்கத்திற்கு முரனான பல காரியங்களை செய்து கொண்டிருப்பதை கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

மேலும் வாசிக்க

நோன்பின் பலனை புரிந்து கொள்வோம்!

அல்லாஹ்வின் கிருபையால் ரமழானை சந்திக்கும் வாய்ப்பினை அல்லாஹ் நம்மனைவருக்கும் அல்லாஹ் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)

மேலும் வாசிக்க

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்!

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன், ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மேலும் வாசிக்க

ரமளான்…

உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப் பட்ட இருதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அற்புதம் தான் திருக்குர்ஆன் அந்த திருமறை கிடைத்த ரமழான் மாதம் நம்மை நோக்கி வந்து  விட்டது .

மேலும் வாசிக்க

நோன்பை முறிக்கும் செயல்கள்

சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடு தான் நோன்பு எனப்படுகிறது.

நோன்பாளிக்கு இந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும்.இவை தவிர நோன்பாளி கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக ஒழுங்குகளும் உள்ளன. அவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057

மேலும் வாசிக்க

நோன்பின் சட்டங்கள்

இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக உள்ளதை நாம் காண்கிறோம். நோன்பை முறித்து விடக் கூடிய காரியங்களைச் செய்து விட்டு, நோன்பாளிகளாகத் தங்களைப் பற்றி நினைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். நோன்பை முறிக்காத காரியங்களை, நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று நினைத்து, தங்களைத் தாங்களே சிரமப்படுத்திக் கொள்பவர்களும் உள்ளனர். நோன்பைக் குறித்துப் பலவிதமான மூட நம்பிக்கைகளும் சமுதாயத்தில் உள்ளன. எனவே நோன்பைப் பற்றி தெளிவான விளக்கத்தை அளிக்கும் நோக்கத்தில் இந்நூல் வெளியிடப்படுகின்றது.

மேலும் வாசிக்க

‘ஜகாத்’ செலுத்தாதவர்களின் நிலை

உலக மக்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் 1421 வருடங்களூக்குமுன் மனிதன் நாகரீகமடையாத அந்தக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இன்று இந்த நாகரீகக் காலத்திலும் அதன் நிலை மங்காமல் எந்த மாற்றத்திற்கும் அவசியமில்லை என்று நிலை நாட்டிக்கொண்டிருப்பது அதியசமன்றோ. அது மட்டுமல்ல உலகம் அழியும் வரை மக்கள் கடைபிடிக்க எளிதாகவும் தெளிவாகவும் இருப்பதும் அதிசமன்றோ.

மேலும் வாசிக்க

ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)

நீண்ட காலமாக உலக மெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் இரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரகஅத்துகள் தொழு வருகிறார்கள். பரம்பரைபரம்பரையாக 20 ரகஅத்துகள் தொழுது வருவதால் அதை நியாயபடுத்தவே மனித மனம் விரும்புகின்றது. ஆனால் மனித விருப்பம் மார்க்கம் ஆக முடியாது. அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக் கொண்டு, மார்க்கமாகக் காட்டித் தந்தது மட்டும்தான் மார்க்கமாக முடியும்.

மேலும் வாசிக்க

நோன்பின் மாண்பு!

வாழ்க்கை அனைத்துத் துறைகளுக்கும் வழி காட்டக்கூடிய நெறிநூலாகிய அல்குர்ஆன் அருளப்பட்ட பாக்கியமுள்ள ரமழான் மாதத்தில் பகல் பொழுதில் உண்ணாமலும், பருகாமலும், நோன்பிற்கான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நோன்பு நோற்று ஏக இறைவனின் கட்டளையை செயல்படுத்துவோம் அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் வாசிக்க

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

நோன்பை தாமதமாக திறத்தல்

நோன்பு நேரங்களில் சூரியன் மறையக் கூடிய நேரத்தை விஞ்ஞானக் கணிப்பு மூலம் அறிந்து கொள்கின்றோம். ஆனால் சில நிமிடங்கள் முன் பின்னாக முரண்பட்டுக் கூறுகின்றனர். இதனால் பேணுதலுக்காக சில நிமிடங்கள் கூடுதலாக்கி நோன்பைத் திறக்கலாமா?

மேலும் வாசிக்க

புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)

மேலும் வாசிக்க

கட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்

நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம்.

நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும். அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503 இந்த ஹதீஸில் ஃபரள (கடமையாக்கினார்கள்) என்ற வாசகம் தெவாக இடம் பெற்றுள்ளதால் இது ஒரு கட்டாயமான கடமை என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் வாசிக்க

ரமளான் சொன்ன சேதி என்ன?

மாசு மருவற்ற தூய இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்…

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்கள் முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது'(அல்குர்ஆன் 2:183)

ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்!

அல்குர்ஆன் வாழும் வேதம் மட்டுமல்ல!  அது ஆளும் வேதம் என்பதை ஒவ்வொரு ரமளானும் நிரூபித்துக் காட்டுகின்றது.  நாம் பாராத புதுப் புது முகங்கள்!  அதுவரை பள்ளி பக்கமே வாராதிருந்து இப்போது பள்ளியில் அடியெடுத்து வைத்த எத்தனையோ தோற்றங்கள்!

ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று எண்ணும் அளவுக்கு பள்ளியில் மக்கள் நெருக்கமும் இறுக்கமும் ஏற்பட்டு பள்ளி நிரம்பி வழிந்தது.  இவ்வளவு சிறப்பும் எதனால்? அல்லாஹ் இம்மாதத்தில் குர்ஆனை இறக்கியருளியதால்!  குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் அம்மாதத்தில் அமைந்திருப்பதால்!
 

நோன்புப் பெருநாள் தர்மம்

புனிதமான இந்த மாதத்தில் இறைவன் கடமையாக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் ஸகாதுல் பித்ர் ஆகும். உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ரமழான் மாதத்தில் பூரணமாக நோன்பு நோற்று வணக்கங்களை இலகுவாக நிறைவேற்றியதையிட்டு இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் நோக்கோடு இறைவன் இதை கடமையாக்கியுள்ளான்.

மேலும் வாசிக்க

ரமழானும் நோன்பும்…

 உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

மேலும் வாசிக்க

பெருநாள் தொழுகை

பெருநாள் தொழுகையின் அவசியம்: பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும்.

மேலும் வாசிக்க

நபிவழியில் நம் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்)

மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் நேசிக்கும் அவ்லியாக்களுக்கொரு பெருநாள் என எந்த நன்மையும் இல்லாத பற்பல பெருநாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் நபி அவர்கள் காட்டிச் சென்ற பெருநாட்களை தெளிவாக அறிந்து கொள்வோம்.

மேலும் வாசிக்க

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்…

தர்மம் வழங்குவதன் சிறப்புகளையும் அதற்குக் கிடைக்கும் நன்மைகளையும் கடந்த இதழ்களில் பார்த்தோம். தர்மம் வழங்காதவர்கள் அடையும் தண்டனைகளைப் பற்றி குர்ஆனும் ஹதீசும் என்ன சொல்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்.

வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்

ரமளான் நோன்பு

நோன்பின் அவசியம்!  ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183). ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)

மேலும் வாசிக்க

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மேலும் வாசிக்க

மாற்று மதத்தவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா?

கேள்வி : மாற்று மத நண்பர்கள் இருவர் நோன்பு வைத்தும், தொழுதும் வந்தார்கள். அதை நமது சகோதரர் ஒருவர் நீங்கள் நோன்பு நோற்பதும், தொழுவதும் பாவம். அதனால் இனி நோன்பு வைக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அவர்களிடம் நீங்கள் சுன்னத் செய்யவில்லை. கலிமா சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா? அவர்களுக்கும் நன்மை கிடைக்குமா? – குடவாசல் எம். கமால் பாட்சா, மயிலை.  மேலும் வாசிக்க

மிஃராஜ்

அடியாரை (முஹம்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்”(அல்குர் ஆன் 17:1)

       அண்ணல் நபிஅவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்குகிறான். நபிகள் நாயகம் அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.
மேலும் வாசிக்க

ஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..?

இந்த ஆய்விற்குள் நுழைவதற்கு முன்னால் முதலாவதாக ஒரு விஷயத்தை அழுத்தமாகத் தெரிவிக் கொள்கிறோம். ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மறுப்பவர்கள் ‘ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம்’ என்று தமது தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை மறுக்கும் இவர்கள் ‘ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும்’ என்ற தங்கள் வாதத்திற்கு நேடியான ஒரு ஆதாரத்தையாவது எடுத்துக் காட்டுகிறார்களா என்றால் இன்றுவரை அவர்களால் முடியவில்லை. அப்படியானால் அவர்கள் எப்படி தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் ‘கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து இவ்வாறுதான் புரிந்துக் கொள்ள முடியும்’ என்றே தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள். அவர்கள் புரிந்துக் கொள்வதில் எவ்வளவு நியாயமிருக்கிறது என்பதை அலசப் போகிறோம்.

மேலும் வாசிக்க

ஜகாத்: ஆயுளில் ஒரு தடவையா?

ஒரு முஸ்லிமுடைய உடமையில் ஜகாத் கொடுக்கப் பட வேண்டிய அளவுக்கு செல்வம் இருந்து அதில் அவர் ஒரு தடவை ஜகாத் கொடுத்து விட்டால் மீண்டும் ஆண்டுதோறும் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? கடந்த 14 நூற்றாண்டு காலமாக ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மா ஏற்றுக்கொண்டதும் அனைத்து நாடுகளிலும் எல்லாப் பிரதேசங்களிலும் செயல்படுத்தி வருவதுமான இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நடைமுறை என்னவெனில்:

மேலும் வாசிக்க

மறைவான வணக்கம்

இஸ்லாமிய சகோதரர்களே! இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:

மேலும் வாசிக்க

ஏழைகளின் பங்கு

உங்களில் எவர் செயல்களால் மிகவும்  அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும்,  அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 67:2 வல்லோனாகிய ஏக இறைவன்  இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரிட்சை வாழ்க்கை என்று அல்குர்ஆனில் தெளிவு படுத்தியுள்ளான்.  எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, அதிகாரம் வகிப்பவன்  அதற்குக் கட்டுப்படுபவன் போன்ற ஏற்றத்தாழ்வுகளுடன் நடமாட விட்டிருப்பது சோதனையின்  காரணமாகவே. இவ்வுலகம் இயங்கி சோதனையான பரிட்சை முடிவடைய வேண்டுமென்றால் இத்தகைய  ஏற்றத் தாழ்வுகள் அவசியம் என்பதை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள்.

மேலும் வாசிக்க

தராவீஹ் 20ரக்அத்துக்கள் என்ற அறிவிப்புகளின் நிலை

நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஜமாத்து அன்றி 20 ரகஅத்துகளும், வித்ரும் தொழுதார்கள் (இப்னு அப்பாஸ்(ரழி) பைககீ)    இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ‘இப்றாஹீம்பின் உஸ்மான்’ என்பவர் மிகவும் பலகீனமானவர். இவர் பற்றி இவர் பொய்யர் என்று ஷஃபா அவர்களும், நம்பகமற்றவர் என்று அஹ்மத், இப்னு முயீன், புகாரி, நஸயீ, அபூதாவூத், அபூஹாத்தம், தாரகுத்னீ ஆகியோரும், ஹதீஸ்கலையினரால் புறக்கணிக்கப்பட்டவர் என்று திர்மிதி, அபூதாலிம் ஆகியோர் விமர்சித்துள்ளார்கள்.

மேலும் வாசிக்க

நாளின் ஆரம்பம் எது?

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?

கேள்வி பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும் அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள். அவர்கள் எடுக்கும் உதாரணம், நார்வே போன்ற நாட்டைத் தான். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக இருப்பதால் எப்படி பிறையைக் கணக்கிடுவார்கள்? தயவு செய்து நல்ல ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன். (ரஃபீக் நாகர்கோவில்)

மேலும் வாசிக்க

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா? (ஷஃபீக்)

பதில்: துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது. ஆஷூராவுடைய நோன்பு (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது ஃபஜர் தொழுகைக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை. அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி), நூல் : நஸாயீ (2373)

மேலும் வாசிக்க

நோன்பு திறக்கும் துஆ

மறு ஆய்வு: தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து… என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹும்ம லக்க சும்த்து… என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

மேலும் வாசிக்க

பிறை ஓர் விளக்கம்

முஸ்லிம் சமுதாயத்தின் வணக்க வழிபாடுகளுக்கான காலத்தைத் தீர்மானிப்பதில் பிறை முக்கியமான பங்கு வகிக்கின்றது. இஸ்லாமிய மாதங்கள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு மாதத்தின் முதல் பிறையையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ளது. இந்த அவசியத்தை முஸ்லிம் சமுதாயம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. ஆயினும் முதல் பிறையைத் தீர்மானிப்பதில் நபித்தோழர்கள் காலம் முதல் இன்று வரை கருத்து வேறுபாடுகள் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது. குறிப்பாக இந்த நவீன யுகத்தில் புதுப்புது வாதங்கள் எழுப்பப்படுவதால் அந்த வேறுபாடுகள் அதிகரித்து விட்டதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலிலும் எந்தக் குழப்பமும், முரண்பாடும் இல்லை; இருக்காது என்பதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகம் இருக்க முடியாது. திருக்குர்ஆனையும் நபிவழியையும் அணுகும் விதத்திலும், வானியலைப் புரிந்து கொள்ளும் விதத்திலும் நம்மில் யாரிடமோ அல்லது நம் அனைவரிடமோ ஏதோ தவறுகள் இருப்பதால் தான் இந்தக் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன.

எனவே தான் இறையச்சத்தை முன்னிறுத்தி காய்தல் உவத்தலின்றி நடுநிலையுடன் இது குறித்து விரிவாக ஆராய்ந்து தலைப்பிறையை எவ்வாறு தீர்மானிப்பது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறோம். 1999 நவம்பர் மாத அல்முபீன் இதழில் தொகுத்து வெளியிடப்பட்ட இந்த ஆக்கம், கொள்கைச் சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று, மெருகூட்டப்பட்டு நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கிறது. இஸ்லாமிய மாதத்தின் முதல் நாளை எவ்வாறு தீர்மானிப்பது என்பதில் பலருக்கும் ஏற்பட்டுள்ள குழப்பங்களை இந்நூல் தீர்த்து வைக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் வாசிக்க