நோன்பின் சட்டங்கள்

இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக உள்ளதை நாம் காண்கிறோம். நோன்பை முறித்து விடக் கூடிய காரியங்களைச் செய்து விட்டு, நோன்பாளிகளாகத் தங்களைப் பற்றி நினைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். நோன்பை முறிக்காத காரியங்களை, நோன்பை முறிக்கும் காரியங்கள் என்று நினைத்து, தங்களைத் தாங்களே சிரமப்படுத்திக் கொள்பவர்களும் உள்ளனர். நோன்பைக் குறித்துப் பலவிதமான மூட நம்பிக்கைகளும் சமுதாயத்தில் உள்ளன. எனவே நோன்பைப் பற்றி தெளிவான விளக்கத்தை அளிக்கும் நோக்கத்தில் இந்நூல் வெளியிடப்படுகின்றது.

மேலும் வாசிக்க

Advertisements

வாரி வழங்குவோம்

2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான்.அல்லாஹ் தாராளமானவன்;அறிந்தவன்.  மேலும் வாசிக்க

‘ஜகாத்’ செலுத்தாதவர்களின் நிலை

உலக மக்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் 1421 வருடங்களூக்குமுன் மனிதன் நாகரீகமடையாத அந்தக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இன்று இந்த நாகரீகக் காலத்திலும் அதன் நிலை மங்காமல் எந்த மாற்றத்திற்கும் அவசியமில்லை என்று நிலை நாட்டிக்கொண்டிருப்பது அதியசமன்றோ. அது மட்டுமல்ல உலகம் அழியும் வரை மக்கள் கடைபிடிக்க எளிதாகவும் தெளிவாகவும் இருப்பதும் அதிசமன்றோ.

மேலும் வாசிக்க

கட்டாயமான சதகதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம்

நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம்.

நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும். அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503 இந்த ஹதீஸில் ஃபரள (கடமையாக்கினார்கள்) என்ற வாசகம் தெவாக இடம் பெற்றுள்ளதால் இது ஒரு கட்டாயமான கடமை என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் வாசிக்க

ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்!

அல்குர்ஆன் வாழும் வேதம் மட்டுமல்ல!  அது ஆளும் வேதம் என்பதை ஒவ்வொரு ரமளானும் நிரூபித்துக் காட்டுகின்றது.  நாம் பாராத புதுப் புது முகங்கள்!  அதுவரை பள்ளி பக்கமே வாராதிருந்து இப்போது பள்ளியில் அடியெடுத்து வைத்த எத்தனையோ தோற்றங்கள்!

ஐந்து நேரத் தொழுகைகளில் ஆட்கள் அதிகரிப்பு! பள்ளியை விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று எண்ணும் அளவுக்கு பள்ளியில் மக்கள் நெருக்கமும் இறுக்கமும் ஏற்பட்டு பள்ளி நிரம்பி வழிந்தது.  இவ்வளவு சிறப்பும் எதனால்? அல்லாஹ் இம்மாதத்தில் குர்ஆனை இறக்கியருளியதால்!  குர்ஆன் இறங்கிய லைலத்துல் கத்ர் அம்மாதத்தில் அமைந்திருப்பதால்!
 

நோன்புப் பெருநாள் தர்மம்

புனிதமான இந்த மாதத்தில் இறைவன் கடமையாக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் ஸகாதுல் பித்ர் ஆகும். உலோபித்தனத்திலிருந்து மனதை சுத்தப்படுத்தவும், நோன்பாளிக்கு ஏற்படும் தவறுகள், கெட்ட வார்த்தைகள், வீண் விளையாட்டுகளில் இருந்து பரிசுத்தமாகவும், ஏழை, எளியோர்க்கு உதவியாகவும், ரமழான் மாதத்தில் பூரணமாக நோன்பு நோற்று வணக்கங்களை இலகுவாக நிறைவேற்றியதையிட்டு இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும் நோக்கோடு இறைவன் இதை கடமையாக்கியுள்ளான்.

மேலும் வாசிக்க

ரமழானும் நோன்பும்…

 உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

மேலும் வாசிக்க

தர்மத்தின் சிறப்புகளை உணர்த்தும் பொன்மொழிகள்…

குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே!

ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ர­லி),  நூல்: புகாரி 55

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்…

தர்மம் வழங்குவதன் சிறப்புகளையும் அதற்குக் கிடைக்கும் நன்மைகளையும் கடந்த இதழ்களில் பார்த்தோம். தர்மம் வழங்காதவர்கள் அடையும் தண்டனைகளைப் பற்றி குர்ஆனும் ஹதீசும் என்ன சொல்கின்றது என்பதை இப்போது பார்ப்போம்.

வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்

ஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..?

இந்த ஆய்விற்குள் நுழைவதற்கு முன்னால் முதலாவதாக ஒரு விஷயத்தை அழுத்தமாகத் தெரிவிக் கொள்கிறோம். ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மறுப்பவர்கள் ‘ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம்’ என்று தமது தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை மறுக்கும் இவர்கள் ‘ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும்’ என்ற தங்கள் வாதத்திற்கு நேடியான ஒரு ஆதாரத்தையாவது எடுத்துக் காட்டுகிறார்களா என்றால் இன்றுவரை அவர்களால் முடியவில்லை. அப்படியானால் அவர்கள் எப்படி தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் ‘கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து இவ்வாறுதான் புரிந்துக் கொள்ள முடியும்’ என்றே தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள். அவர்கள் புரிந்துக் கொள்வதில் எவ்வளவு நியாயமிருக்கிறது என்பதை அலசப் போகிறோம்.

மேலும் வாசிக்க

ஜகாத்: ஆயுளில் ஒரு தடவையா?

ஒரு முஸ்லிமுடைய உடமையில் ஜகாத் கொடுக்கப் பட வேண்டிய அளவுக்கு செல்வம் இருந்து அதில் அவர் ஒரு தடவை ஜகாத் கொடுத்து விட்டால் மீண்டும் ஆண்டுதோறும் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? கடந்த 14 நூற்றாண்டு காலமாக ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மா ஏற்றுக்கொண்டதும் அனைத்து நாடுகளிலும் எல்லாப் பிரதேசங்களிலும் செயல்படுத்தி வருவதுமான இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நடைமுறை என்னவெனில்:

மேலும் வாசிக்க