இறைவனால் இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்!

    (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெருகிறீர்கள். (7:3)

    அல்லாஹ் இவ்வசனத்தின் கருத்தின்படி நாம் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும் அவனால் அனுப்பப்பட்ட நபிصلى الله عليه وسلم அவர்களை மாத்திரமே பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக மற்றவர்களைப் பாதுகாவலர்களாக நம்பி பின்பற்றுவோமேயானால் நிச்சயமாக நாம் பகிரங்கமாக வழிகேட்டிலேயே ஆகிவிடுவோம்.

மேலும் வாசிக்க

Advertisements

இஸ்லாம் விரும்பும் முஸ்லிம்…

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

    முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேடவேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் வாசிக்க

சகிப்புத்தன்மை!

 சகிப்புத்தன்மையுடையவர்
ஒளிமயமான இஸ்லாமிய நெறியியை பின்பற்றிவரும் இறை அச்சமுள்ள முஸ்லிம், அனைத்து சந்தர்ப்பங்களிலும் சகிப்புத் தன்மையையும், கோபத்தைக் கட்டுப்படுத்துவதையும் வழமையாகக் கொள்ளவேண்டும்.

… அவர்கள் கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லோரை நேசிக்கிறான். (அல்குர்அன் 3:134)

    இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வலிமையானவர் யாரெனில், தனது உடல் பலத்தால் மனிதர்களைத் தாக்கி வெற்றி கொள்பவரல்ல. மாறாக, கோபத்தை அடக்கும் ஆற்றல் பெற்று நிதானத்தைக் கடைபிடிப்பவரே வலிமையானவர்.

மேலும் வாசிக்க

தாடி வைப்பது அவசியமா?

தாடி வைப்பது நபிவழி என்று மக்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள். ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வ­யுறுத்திக் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (5892)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு) களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­ரி)  நூல் : முஸ்­ம் (435) மேலும் வாசிக்க

மனிதநேயம்…

மனிதனிடத்தில் அவசியம் இருக்கவேண்டிய பண்புகளில் மிக முக்கியமானப் பண்பு மனிதநேயம். மனிதநேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். தனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும் தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதுமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாக கண்டுவருகிறோம். இறைவன் மனிதனுக்கு பயன்படக்கூடிய உறுப்புகளை ஏற்படுத்தி வெறும் உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே மனிதனை உருவாக்கியுள்ளான். மேலும் வாசிக்க

முஹர்ரம் மாதம் வணக்கங்கள்!

நன்மைகளை அதிகம் பெற்று மறுஉலக வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடத்திலே அதிகம் இருக்கிறது. இந்த பேராவ­னால் மார்க்கத்தில் இல்லாத காரியங்களை நன்மை தரக்கூடியவைகள் என்று எண்ணிக்கொண்டு தங்களது முயற்சிகளை பாழகாக்கிக்கொள்கிறார்கள். இந்நிலைக்கு முதற்காரணமாக மார்க்கத்தை கற்ற அறிஞர்களைத் தான் குறிப்பிட வேண்டும். இஸ்லாம் எவற்றையெல்லாம் நன்மையான காரியங்கள் என்றும் புனிதமானவை என்றும் சொல்­த்தந்திருக்கிறதோ அவற்றை அனைத்தையும் மக்களுக்கு இவர்கள் எடுத்துச் சொல்­யிருந்தால் ஏராளமான பித்அத்கள் என்றைக்கோ ஒழிந்திருக்கும். மேலும் வாசிக்க

இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம்!

வல்ல அல்லாஹ், இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன்தரக்கூடியவற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாமலும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதிகளை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யாமலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப்படுத்தவில்லை.

அல்லாஹ் மிகத் தெளிவாகக் கூறுகிறான்: மேலும் வாசிக்க

நபிவழியே நல்வழி!

நபிவழியே நல்வழி,நாயன் அன்பைப் பெறும் வழி! நபிவழி இன்றேல் நாயன் அன்பில்லை!

(இத்திபாவும், இதாஅத்தும்)

(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராயிருப்பின், என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கிறார்.

மேலும், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடவுங்கள் என்றும் கூறுவீராக! அவர்கள் (அதைப்) புறக்கணித்து விட்டால், நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய காபிர்) புறக்கணிப்போர்களை நேசிக்க மாட்டான். (3:31,32) மேலும் வாசிக்க

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை!

(“ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மையுடைய வேதத்தை இறக்கி வைத்தான், எனினும் அவ்வேதம் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மாறுபட்டு, புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்”. (அல்குர்ஆன் 2:213) மேலும் வாசிக்க

மார்க்கக் கல்வி!

எந்தக் கல்வி கற்க வேண்டும், எந்தக் கல்வி கற்கக்கூடாது, என்று மார்க்கத்தில் எத்தகைய கட்டுப்பாடும் இல்லை. இறை நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய கல்வியைக் கற்கவேண்டும். இறைவசனம் – இறைத் தூதர்(ஸல்) அவர்கள் விதித்த மார்க்க வரம்பை மீறாத தன்மையுடைய கல்வியைக் கற்க வேண்டும், மார்க்கத்திற்கு முரணாக எக்கல்வியாலும், அதனைக் கற்கக்கூடாது. மேலும் வாசிக்க

குறுக்கு வழியும், நேர் வழியும்!

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துக்களைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது. மேலும் வாசிக்க

நபி வழியைப் பின்பற்றுவதன் அவசியம்

நபி வழி என்றால் என்ன? நபிவழிஎப்போது தொகுக்கப்பட்டது? எப்படித் தொகுக்கப்பட்டது? என்றவரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், நபிவழிஎன்றால் என்ன?நபிவழியைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் என்ன?நபிவழியைப் பின்பற்றாதவருக்குரிய தண்டனைஎன்ன?என்பதைமுதலில் பார்ப்போம்.