புனித ரமழானே வருக!

உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப் பட்ட இருதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அற்புதம் தான் திருக்குர்ஆன் அந்த திருமறை கிடைத்த ரமழான் மாதம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும.;நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும் நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)2:185)

மேலும் வாசிக்க

Advertisements

ரமளான்…

உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப் பட்ட இருதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அற்புதம் தான் திருக்குர்ஆன் அந்த திருமறை கிடைத்த ரமழான் மாதம் நம்மை நோக்கி வந்து  விட்டது .

மேலும் வாசிக்க

புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)

மேலும் வாசிக்க

ரமழானும் நோன்பும்…

 உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

மேலும் வாசிக்க

இஸ்லாம் விரும்பும் முஸ்லிம்…

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

    முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேடவேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் வாசிக்க

நாவைப் பேணுக!

குர்ஆனின் நற்போதனைகள்     நாவைப் பேணுக!

உண்மை பேசுக! அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119 மேலும் வாசிக்க

இறையச்சம்…

எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி , இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.
இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? இதைத் தடுக்க எத்தனை தடா, பொடாக்கள் வந்தாலும் அந்தக் கொடுமைகளை ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் தடுக்க முடிகின்றதா? இல்லை என்பது தான் யதார்த்தமான மறுக்க முடியாத உண்மை.

அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்!

கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹூதஆலா தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:
ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்கள் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.  (அல்குர்ஆன்: 2: 148)

மீஸான் (தராசு)

இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)

வெற்றிபெற்றோர்!

இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்களில் அதிகமானோர் அல்லாஹ்வை மறுத்தும் அவனுக்கு இணைவைத்தும் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சொற்ப நபர்களே அவனை நம்பிக்கைக் கொண்டு அவனது தூதருக்கு கீழ்படிந்து வருகிறார்கள். அல்லாஹ் நம்மை இந்த சொற்பக் கூட்டித்தைச் சார்ந்தவர்களாக ஆக்கியுள்ளான். அவனுக்கேப் புகழனைத்தும்! மேலும் வாசிக்க

ஹலாலான உழைப்பின் சிறப்பு!

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ) உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) மேலும் வாசிக்க

நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிவது எப்படி?

குர்ஆனின் கோட்பாடுகள் நிராகரிக்கப்படும் சூழ்நிலையில், நல்லவற்றையும் கெட்டவற்றையும் பிரித்தறிய பல்வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன. இத்தகைய பலதரப்பட்ட அளவுகோல்களை நம்புவதால் தவறான வழியில் நடக்கவும் தீய விளைவுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு முறை குற்றம் இழைக்க முயன்ற ஒருவர் பல குற்றங்களைச் செய்தவரை விடத் தூய்மையானவராகக் கருதப்படுகிறார். கொள்ளையடிப்பவன் தன்னைக் கொலையாளியை விடத் தீமையற்றவனாக எண்ணிக் கொள்கிறான்; கொலையாளி தான் ஒரு தடவை தான் கொலை செய்திருப்பதால் தன்னை அவ்வளவு கெட்டவனாகக் கருதுவதில்லை. மேலும் வாசிக்க

நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிருத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான். ஒருவர் தொழாதவறாக இருப்பார் தொழாமல் இருப்பது சரியல்ல தொழ வேண்டும் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அதற்கடுத்த நேரத் தொழுகைக்கான அழைப்பொலியை எதிர்பார்த்து பள்ளிக்கு விரைந்திட வேண்டும்.

தொழக் கூடியவராக இருப்பார் ஆனால் வைகரைத் (ஃபஜ்ரு) தொழுகையை தொழாதவராக இருப்பார் மற்ற நேரத் தொழுகைகளை தொழுது கொண்டு ஃபஜ்ரை தொழாமல் இருப்பது சரியல்ல நாளை முதல் அதையும் தொழுவதற்கு தொடங்கிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அலாரத்தை வைத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்து தொழுதிட வேண்டும்.

மேலும் வாசிக்க

நன்மைக்குப் பத்து! தீமைக்கு ஒன்றே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அளவற்ற அருளாலன், நிகரற்ற அன்புடையோன் என்பதற்கு மேற்காணும் திருமறை வசனம் மிகப் பெரிய சான்றாகும்.

சுவனத்திற்கள் நுழைந்து அதன் எண்ணிலடங்கா இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நன்மைகள் அதிகம் சேர்த்தாக வேண்டும் அதனால் மக்கள் நற்செயல்கள் புரியம் போது அதை ஒன்றுக்குப் பத்தாக்குகிறான் அளவற்ற அருளாலன் அல்லாஹ்.

மக்கள் நற்செயல்கள் புரிந்து நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்காகவும், தீய செயல்களிலிருந்து தங்களை தடுத்துக் கொள்வதற்காகவும் அவரவர்கள் பேசும் மொழியிலிருந்தே தூதர்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்வப்பொழுது தேவையான விளக்கங்களை ( வேதங்களை ) அனுப்பிக் கொண்டிருந்தான். திருமறைக்குர்ஆனுடன் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றது.  மேலும் வாசிக்க