லைலத்துல் கத்ர் நாள் எப்போது?

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபிஅவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.

மேலும் வாசிக்க

Advertisements

தொழுகை நடத்தும் இமாமுக்கு சம்பளம் கொடுக்கலாமா?

கேள்வி – எங்கள் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாம் என்று பள்ளி நிர்வாகிகள் முடிவெடுத்தோம். ஆனால் அவர் சம்பளம் வாங்க மறுக்கிறார். 36:21 வசனத்தில், உங்களிடம் கூலி கேட்காதவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப் படுவதை ஆதாரமாகக்காட்டுகிறார். இமாமுக்குச் சம்பளம் கொடுப்பது சரியா? தவறா? விளக்கவும். –ஜாஹிர் ஹுசைன், நாச்சியார் கோவில்

மாற்று மதத்தவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா?

கேள்வி : மாற்று மத நண்பர்கள் இருவர் நோன்பு வைத்தும், தொழுதும் வந்தார்கள். அதை நமது சகோதரர் ஒருவர் நீங்கள் நோன்பு நோற்பதும், தொழுவதும் பாவம். அதனால் இனி நோன்பு வைக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார். அவர்களிடம் நீங்கள் சுன்னத் செய்யவில்லை. கலிமா சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா? அவர்களுக்கும் நன்மை கிடைக்குமா? – குடவாசல் எம். கமால் பாட்சா, மயிலை.  மேலும் வாசிக்க

நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

“இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் ஆராய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு காரணங்களைப் பார்ப்போம். மேலும் வாசிக்க

மார்க்க கேள்வி பதில்கள்!

பதில்கள்மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்: 

கேள்வி: கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா?     அல்லாஹ்வின் அடிமை (ஊர் இல்லை)

பதில்: நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால் நீங்கள் கேட்காத இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்ல வைத்து விட்டீர்கள்! நீங்கள் இப்படிக் கேள்வி கேட்பதே ஏதோ தவறான செயல் என்று கருதுவதால் தான், உங்கள் ஊரையும் முகவரியையும் எழுதாமல் விட்டுள்ளீர்கள் என தோன்றுகிறது. மார்க்கத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன வெட்கம்? நபித்தோழர்கள் இவ்வாறு இருந்திருந்தால் பல சட்டங்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் மார்க்கம் மிகவும் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளது. நீங்கள் தான் கேட்டுத் தெரிந்து கோள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க

மண்ணுக்குள் தோண்டிப் பார்த்து வேதனை செய்யப்படுவதைக் காட்ட முடியுமா?

கேள்வி: மண்ணுக்குள் தோண்டிப் பார்த்து வேதனை செய்யப்படுவதைக் காட்ட முடியுமா?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)
நல்லவர் கெட்டவர் அனைவரும் மண்ணறை வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. குறிப்பாக, கெட்டவர்கள் மண்ணறை வேதனையிலிருந்து தப்பவே முடியாது என்பதற்கும் இஸ்லாத்தில் ஆதாரங்கள் உள்ளன. மேலும் வாசிக்க

தாயின் காலடியில் சுவர்க்கம் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது?

கேள்வி:bதாயின் காலடியில் சுவர்க்கம் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அந்தத் தாயின் காலில் விழுவதை ஏன் இஸ்லாம் பாவம் என்று கூறுகிறது? மாரிமுத்து

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)
இது இலக்கியச் சொல். தாய் நிற்கின்ற இடத்தை தோண்டிப் பார்த்தால் அங்கே சுவர்க்கம் இருக்குமா? தாயின் காலடியில் சுவர்க்கம் என்பது தாய்க்குக் கட்டுப்பட்டு, மரியாதை கொடுத்து கண்ணியப்படுத்த வேண்டும் என்பதாகும்.

மேலும் வாசிக்க

விதியை நம்புதல்

கேள்வி: உங்கள் மார்க்கப்பற்று படி அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால் நல்ல மனிதர் செய்யும் செயலும், இறைவனால் செய்யப்படுவதே தீய மனிதன் செய்யும் செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. மறுமையில் அம்மனிதர்களுக்கு சுவர்க்கமும் நரகமும் கொடுக்கப்படுகிறது என்றால் நரகம் செல்லும் மனிதனின் செயல் இறைவனின் உத்தரவுப்படியே அம்மனிதனால் செய்யப்படுகிறது. அவனால் செய்யப்படவில்லை. அப்படி இருக்கும்போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்? விளக்கம் தரவும்.

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)
விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம் அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அவனவன் முடிவின்படி தான் செயல்படுகிறான் இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் கடவுள் என்பவன் பலவீனனாக கையாளலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும். மேலும் வாசிக்க

(ரஹ்) (அலை) (ஸல்) (ரலி) என்றால் என்ன?

கேள்வி: (ரஹ்) (அலை) (ஸல்) (ரலி) என்றால் என்ன? அதன் விளக்கம் என்ன? அதன் அர்த்தம் என்ன? அதை ஏன் போடுகின்றீர்கள்? அதை ஏன் அந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு மட்டும் போடுகிறீர்கள்? அதை ஏன் இப்போது உள்ள முஸ்லிம்களுக்கு போடுவதில்லை?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)
ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி லஸல்லம் என்பதன் சுருக்கமாகும். எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வாசிக்கவேண்டும் அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும் என்பது இதன் பொருள். மேலும் வாசிக்க

இஸ்லாமிய மார்க்கத்தில் நான்கு பிரிவுகள் உண்டா?

கேள்வி: இஸ்லாமிய மார்க்கத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாக பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களை பின்பற்றுவதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும், பாகிஸ்தானிலும் சன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் சண்டைகள் நடப்பது ஏன்?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)
இஸ்லாமிய மார்க்கத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் கூறுவது முதலில் தவறாகும். முஸ்லிம்களிடம் ஏன் இந்தப் பிரிவுகள் என்று தான் கேள்வி அமைந்திருக்கவேண்டும். இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும் அனுமதிக்க வில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லையென்றாலும் முஸ்லிம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆனால் இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவை ஒப்பிட எந்த நியாயமும் இல்லை. மேலும் வாசிக்க

முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகவே சித்தரிக்கப்படுவது ஏன்?

கேள்வி: முஸ்லிம்கள் பழைமைவாதிகளாகவே சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் தங்களது எதிரிகளை இனங் கண்டுகொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாக கருதுவது ஏன்?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)
முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிககப்பட்டால்தான், இஸ்லாத்தின் பால் மற்றவர்கள் கவனத்தைத் திருப்பமாட்டார்கள் என்பதற்காக திட்டமிட்டு இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நரபலியிடுதல், ஜோதிடம் பார்த்தல், விதவை விவாகம் மறுத்தல், பெண் சிசுக்களைக் கொல்லுதல், தீண்டாமையைக் கடைப்பிடித்தல், போன்ற எல்லா விதமான பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இஸ்லாம் வளர்ந்து விடக்கூடாது என்ற ஓரே நோக்கம் தான்.

மேலும் வாசிக்க

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கேள்வி: இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் கடவுள் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)
நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்னையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை, நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! உங்களுக்கும் ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது. மேலும் வாசிக்க

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

கேள்வி:
அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறைவான வார்த்தையாகக் கருதப்படுகிறபோது, இறைவனை அவன் என்று முஸ்லீம்கள் குறிப்பிடுவது ஏன்?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)
இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்கவழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். எனவே இது பற்றி விரிவாக நாம் அறிந்து கொண்டால் தான் மற்றவர்களுக்க விளக்கமுடியும். இது சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதலில் அறிந்து கொள்ளவேண்டிய விஷயமாகும். அவன் என்பதற்கு அரபு மொழியில் ஹுவ என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அவர்கள் என்பதற்கு ஹும் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் ஒருவனைக் குறிப்பது என்றால் ஹுவ என்றும் பலரைக் குறிப்பது என்றால் ஹும் என்றும் கூறுவார்கள் மாதியாதைக்காக ஒருவனைக் குறிக்கும் போது (ஹும்) அவர்கள் என்று அரபியில் கூறவேமாட்டார்கள். மேலும் வாசிக்க

குர்ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டது ஏன்?

கேள்வி: உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் தவிர்த்துவிட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனை ஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)
மனிதர்களிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமாக இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் வேதங்கள் அருளப்பட்டன. ஈஸா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை இயேசுவின் தாய்மொழியில் தான் அருளப்பட்டது. மேலும் வாசிக்க

முத்தலாக் பெண்களின் உரிமைகளை பறிக்கின்றதே?

கேள்வி: முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பறிக்கின்றதே?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)

சில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஓரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியை விவகாரத்து செய்கின்றனர். ஓரே சமயத்தில் மூன்று தலாக் கூற இஸ்லாத்தில் அனுமதியில்லை. அப்படி கூறினால் அதனை ஒரு தலாக் என்றே கருதப்படும். மேலும் வாசிக்க

முஸ்லிம்களில் விஞ்ஞானிகள் யாரேனும் உண்டா?

கேள்வி: இன்றைய உலகில் கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும் முழுவதும் காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள் மேற்கத்திய நாட்டினர்தான். இவர்களால் உலகில் சில தீமைகள் ஏற்பட்டிருக்கலாம் அதை விடப் பன்மடங்கு நன்மைகளை உலகிற்குச் செய்துள்ளனர். இன்று அரபு தேசங்களில் மக்கள் வசதியாக வாழ்வதற்கு வழி வகுத்தவர்கள் மேற்கத்திய நாட்டினர். எண்ணைய்க் கண்டு பிடிப்பு, கடல் நீரைக் குடிநீராக மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். ஆனால் முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றவில்லை மாறாக உலத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு தானும் அழிந்து மற்ற நாட்டினரையும் அழித்து தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் செய்து கொண்டு இந்த உலகத்தை நிம்மதியிழக்கச் செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி உலகத்திற்கு எந்த நன்மையும் செய்யாத இவர்களை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஆதரிப்பது ஏன்? மேலும் வாசிக்க

மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள் ஆதாரம் உள்ளதா?

கேள்வி: மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள் ஆதாரம் உள்ளதா? மரணத்திற்குப் பின்பு மனித உடல் மட்கியவுடன் எவ்வாறு அவை திரும்ப எழுப்பப்படும்? எரிக்கப்படுபவர் அல்லது மீன் விழுங்கி மரணம் அடைந்தவர்கள் எவ்வாறு மீள முடியும். மண்ணறையில் வேதனை நடைபெற்றால் மண்ணறையை தோண்டிப் பார்க்கும் போது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையே ஏன்?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)

மறுமையைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் இப்போது நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்வது நல்லது. ஏனெனில் ஒரு பொருளை முதலில் படைப்பது தான் சிரமமானது. அதை அழித்து விட்டு மறுபடியும் உருவாக்குவது அவ்வளவு சிரமமானதல்ல. இது அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக்கடிய விதியாகும். ஒரு கம்பியூட்டரை உருவாக்க எத்தனையோ ஆண்டுகள் தேவைப்பட்டன உருவாக்கிய பின் அது போல் இலட்சக்கணக்கில் உருவாக்குவது எளிதாகி விட்டது.

மேலும் வாசிக்க

கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்?

கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும் தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யுவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)

மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன. வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை. வலிமையானவர்களின் அடக்கு முறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத்திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதங்கள் உள்ளன.

மேலும் வாசிக்க

“கசகசா” மார்க்கதில் அனுமதிக்கப்பட்டதா?

இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள் ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம். கசகசா வை ஆங்கிலத்தில் Opium Pappy என்று சொல்லப்படும்.

இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

மேலும் வாசிக்க

சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?

தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

மேலும் வாசிக்க

அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?

கேள்வி: உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். திருக்குர்ஆன் 16:15என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. சுற்றுவதும் அசைவுகளால் நிகழ்வது தானே. ஆனால் இறைவன் அசையாதிருப்பதற்காக மலைகளை நிறுத்தியுள்ளோம் என இறை வசனத்தில் வருகிறதே! குழப்பமாக உள்ளது. விளக்கம் தரவும். -ஜீ. முஹம்மது ஜலீல், நாகப்பட்டிணம்.  மேலும் வாசிக்க

மற்ற மதங்களை விமர்சிக்கக் கூடாதா?

கேள்வி: ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால், திருக் குர்ஆனே பல இடங்களில் ஏனைய மதங்களையும், ஏனைய மதங்களின் கடவுள் கொள்கையைப் பற்றியும் விமர்சிக்கின்றதே? ஏன் இந்த முரண்பாடு? – ஹெச்.எம். ஹில்மி, அக்கூரன, இலங்கை.  மேலும் வாசிக்க

மாற்று மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா?

கேள்வி : எனது மாற்று மத நண்பர் ஒருவர் வருத்தத் தோடு என்னிடம் சொன்னார். நான் பள்ளிவாசல் கட்டுமானப் பணி களுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள். இது சரி தானா? என்று கேட்கிறார்.-எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி.  மேலும் வாசிக்க

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

 பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

 ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.  மேலும் வாசிக்க

தொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா?

இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது. தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.

கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.

மேலும் வாசிக்க

அவ்லியாக்கள் கப்ருகளை பள்ளிவாசல்களாக ஆக்கலாமா?

“மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது எனவே அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள். (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கே சுஜூத் செய்யவேண்டும். அவனிடமே சரணடைய வேண்டும். அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக் கூடாது.

மேலும் வாசிக்க

இறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா?

இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது, அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது … போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகின்றான்.

மேலும் வாசிக்க

ஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..?

இந்த ஆய்விற்குள் நுழைவதற்கு முன்னால் முதலாவதாக ஒரு விஷயத்தை அழுத்தமாகத் தெரிவிக் கொள்கிறோம். ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மறுப்பவர்கள் ‘ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம்’ என்று தமது தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை மறுக்கும் இவர்கள் ‘ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும்’ என்ற தங்கள் வாதத்திற்கு நேடியான ஒரு ஆதாரத்தையாவது எடுத்துக் காட்டுகிறார்களா என்றால் இன்றுவரை அவர்களால் முடியவில்லை. அப்படியானால் அவர்கள் எப்படி தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் ‘கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து இவ்வாறுதான் புரிந்துக் கொள்ள முடியும்’ என்றே தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள். அவர்கள் புரிந்துக் கொள்வதில் எவ்வளவு நியாயமிருக்கிறது என்பதை அலசப் போகிறோம்.

மேலும் வாசிக்க

ஜகாத்: ஆயுளில் ஒரு தடவையா?

ஒரு முஸ்லிமுடைய உடமையில் ஜகாத் கொடுக்கப் பட வேண்டிய அளவுக்கு செல்வம் இருந்து அதில் அவர் ஒரு தடவை ஜகாத் கொடுத்து விட்டால் மீண்டும் ஆண்டுதோறும் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? கடந்த 14 நூற்றாண்டு காலமாக ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மா ஏற்றுக்கொண்டதும் அனைத்து நாடுகளிலும் எல்லாப் பிரதேசங்களிலும் செயல்படுத்தி வருவதுமான இஸ்லாமிய ஷரீஅத் சட்ட நடைமுறை என்னவெனில்:

மேலும் வாசிக்க

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்பட பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?  ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? (எம். ஷபீர்)  மேலும் வாசிக்க

நாளின் ஆரம்பம் எது?

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?

கேள்வி பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும் அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள். அவர்கள் எடுக்கும் உதாரணம், நார்வே போன்ற நாட்டைத் தான். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக இருப்பதால் எப்படி பிறையைக் கணக்கிடுவார்கள்? தயவு செய்து நல்ல ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன். (ரஃபீக் நாகர்கோவில்)

மேலும் வாசிக்க

அரபா நோன்பு உண்டா?

அரபா நாளை குறித்து அந்த நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றாத மற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும் அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். இங்கு அந்த நாள் என்பது ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடியிருக்கும் அந்த நாளை தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்று தான் அரபாவுடைய நாள் என்று கூறி அன்று நோன்பு வைக்க சொல்கிறீர்கள். (வஹீதுஸ் ஸமான்)

மேலும் வாசிக்க

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், பைஹகீயின் சுனன் ஸகீர், தப்ரானியின் முஃஜம் ஸகீர், தாரிமி இன்னும் பல நூல்களிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

போலி ஒற்றுமை!

கேள்வி : ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்? – ஷமீம்.

மேலும் வாசிக்க

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

கேள்வி: உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் விட்டு, விட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனை, ஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்? என்று மாற்று மத நண்பர்கள் கேட்கிறார். – எஸ்.எம்.ஹெச். கபீர், கீழக்கரை.  மேலும் வாசிக்க

இஸ்லாம் மார்க்கமா? மதமா?

கேள்வி: நான் நேரான பாதையில் செல்ல விரும்பு கிறேன். ஆகையால், இஸ்லாத்தின் வழி நடக்க எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. இந்து மதம், கிறித்தவ மதம், சீக்கிய மதம், பிராமண மதம் எனப் பல வகையான மதங்கள் உண்டு. ஆனால், இஸ்லாமிய மதம் என்று கூறாமல், இஸ்லாமிய மார்க்கம் என்று கூறுவது ஏன்? – டி. பாலு, கோவை.   மேலும் வாசிக்க

ஏன் தத்து எடுக்கக் கூடாது?

கேள்வி : ஒரு இந்து மத நண்பர் என்னிடம் இஸ்லாத்தில் தத்து எடுத்தல் கூடாது என்று உள்ளது பெரிய குறையாக உள்ளது. குழந்தையே இல்லாது தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் என்ன செய்வது? விபத்து, பெற்றோரின் நடத்தை சரியில்லாமல் பிரியும் குழந்தைகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக திகழலாம். இது கூடாது என்பதினால் இதை விட மோசமான டெஸ்ட் டியூப் பேபி’ என்ற முறையைத் தேர்ந்தெடுகிறார்கள் என்று கேட்டதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. விளக்கம் தரவும்.எம்.எஸ். முஹம்மது ஹபீபுல்லாஹ் சீர்காழி.  மேலும் வாசிக்க

முதலில் தோன்றிய மதம் எது?

கேள்வி: உலகில் மதம் மாற்றப்படும் அனைவரும் இந்துக்கள் தான் என்றும், அவர்களுக்கு மதங்கள் போதிக்கப்படுவதில்லை என்றும், புத்த மதம் உலகில் தோன்றிய முதல் மதம் என்றும், பின்பு கிறித்தவம். அதன் பின்பு இஸ்லாம் வந்தது என்றும் இவையனைத்திற்கும் முன்பு தோன்றியது இந்து மதம் என்றும் முஸ்லிமல்லாத என் நண்பர் கேட்கிறார். ராஜா கவுஸ், அல் படாயா, சவூதி அரேபியா.  மேலும் வாசிக்க

%d bloggers like this: