கணவரை மகிழ்விப்பது எப்படி?

(அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் -ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)

 நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரைஉங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்துஉணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(30:21)  மேலும் வாசிக்க

Advertisements

பெண்ணியம் சில புரிதல்கள்

பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களைசகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன். பிரச்சனையின் முழுப்பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும். ஏனென்றால், யார் வேண்டுமானாலும்எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றிய அடிப்படையான அறிவு இருக்கின்றதோ, இல்லையோபேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது. பெண்ணியம் என்றால்என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்றுநான் கருதவில்லை. மேலும் வாசிக்க

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

 பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

 ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.  மேலும் வாசிக்க

மணங்கள் ம‎ணக்க மனங்கள் மாறட்டும்

பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) ம‎னமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமி‎ன்றி அனுபவிக்கலாம். அல்குர் ஆ‎ன்:4-4

மேலும் வாசிக்க

‘தலாக்’ ஓர் ஆய்வு!

மனிதனின் குடும்ப வாழ்வு நரக வாழ்வாக நீடிக்க வகையில்லாது ஒரு முடிவுக்கு கொண்டு வர அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள சாதனம் ‘தலாக்’ விவாக விடுதலை. அந்த தலாக் இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விதவிதமான பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அல்லாஹ் அளித்துள்ள இந்த அனுமதி ‘தலாக்’ – இதன் எதார்த்தமான நிலையை ஆராய்வோம்.

மேலும் வாசிக்க

முக்காடு

நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]

மேலும் வாசிக்க

பெண்களின் வழிபாட்டுரிமை

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள் அவர்களின் உலக இலாபங்களை அடையும் விஷயத்தில் மட்டுமல்லாது ஆன்மீக விஷயத்திலும் ஆண்களுக்கு கொடுக்கும் உரிமைகளை பெண்களுக்கு மறுக்கவில்லை. உதாரணத்திற்கு ஆண்கள் தங்களின் ஜவேளை தொழுகையை நிலைநாட்ட பள்ளிவாயில்களை நோக்கி செல்வது அவர்களின் கடமை என்பதையும், அவ்வாறு செல்லாதவர்கள் நபியவர்களால் கண்டிக்கப்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்த உண்மையே. இவ்வாறு ஆண்கள் பள்ளிக்கு வருவதை கடமையாக்கிய இஸ்லாம் பெண்களின் நலன் கருதியும், பெண்கள் வீட்டையும்,குழந்தையும் பராமரிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு பெண்கள் அவர்களின் இல்லங்களிலேயே தொழுதுக் கொள்வதை சிறப்பிற்குரியது என்று கூறுகிறது.

மேலும் வாசிக்க

பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள்

‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரீ 5238, முஸ்லிம் 666

முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.

மேலும் வாசிக்க

கணவனின் கடமை

கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்

குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.

ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.

மேலும் வாசிக்க

இஸ்லாத்தில் பெண்கள் நிலை

இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும். கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.

மேலும் வாசிக்க

நிக்காஹ் (திருமணம்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ

“இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)

மேலும் வாசிக்க

கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்!

இஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது.

‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்’ என்று கூறியிருப்பதே! தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.

மேலும் வாசிக்க

பெண்ணுரிமை

முழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை!

நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும்.

மேலும் வாசிக்க

மார்க்கமின்மைதான் நம்முடைய முதல் பிரச்னை

மார்க்கமின்மைதான் நம்முடைய முதல் பிரச்னை. குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் போதனையிலிருந்து நாம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். அன்று அரபிகள் பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தார்கள். அறிவியல் தொழில் நுட்பம் இன்று பெரிதும் வளர்ந்துள்ளது. இந்த வானளாவிய வளர்ச்சி மனிதனுக்கு ஒரு பக்கம் அருட்கொடையாய் இருக்கிறது. இன்னொரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

மேலும் வாசிக்க

காது குத்துவது ஹராமா?

சமீபகாலமாக ஃபத்வா ஒன்று காது குத்துவது ஹராம் என்று சிலர் கூறுகின்றனர். காது குத்துவது சமுதாயத்தில் உள்ள பெண்களின் பழக்கமாக நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே இருந்தது. இந்த பழக்கம் முஸ்லிம் பெண்களால் இன்றளவும் தொடரப்பட்டுள்ளது. மேலும் காது குத்தக்கூடாது என்பவர்கள் கீழ் வரும் வசனத்தையும் ஹதீதையும் ஆதாரமாக கூறுகின்றனர்.

மேலும் வாசிக்க

ரகசிய கேமராக்கள்: பெண்களே ‍எச்சரிக்கை!

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர்நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மேலும் வாசிக்க

நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்

புகழ் அனைத்தும் அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே உரியது. நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களின் இம்மை, மறுமை, வாழ்விற்குத் தேவையான எல்லா வற்றையும் சரியான முறையிலும் இலேசான முறையிலும் கற்றுத் தரக்கூடிய மார்க்கம். அம்மார்க்கம் பெண்களின் ஆடை விஷயத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற ஒழுக்கமான நன்னடத்தையையும், கண்ணியமான தூய வாழ்க்கைக்கும் வழி காண்பிக்கின்றது. இவ்விஷயத்தில் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வும், முழுமையான ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று தெளிவாக விளங்க முடியும்.  மேலும் வாசிக்க

அடிமைப் பெண்கள்

திருமணம் செய்யாமல் அடிமைப் பெண்களுடன் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம் என்று திருக்குர்ஆனின் பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (பார்க்க திருக்குர்ஆன் 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 30:58, 33:50, 33:52, 33:55, 70:30) இது முஸ்லிமல்லாதவர்களுக்கும், சில முஸ்லிம்களுக்கும் பலவித ஐயங்களை ஏற்படுத்தக் கூடும்.  மேலும் வாசிக்க

ஹிஜாப்

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் வாசிக்க

பாகப்பிரிவினை

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.

பெண்களின் சாட்சிகள்

‘இரண்டு பெண்களுடைய சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சியத்திற்கு நிகராகும்’ என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. இதையும் மாற்றார்கள் விமர்சனம் செய்கின்றனர். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) (அல்குர்ஆன் 2:282) இரண்டு பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமாகக் குர்ஆன் கூறுகிறது. இது பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.  மேலும் வாசிக்க

பெண்கள் ஆட்சித் தலைமை

‘பெண்கள் ஆட்சித் தலைமையை ஏற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இது பெண்களின் உரிமையைப் பறிப்பதும் அவர்களை அவமானப்படுத்துவதுமாகும்’ என்பதும் மாற்றார்கள் செய்யும் முக்கியமான விமர்சனமாகும். ‘பெண்கள் ஆட்சி செய்யும் சமுதாயம் வெற்றி பெறவே மாட்டாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான். நூல்: புகாரி 4425, 7099  மேலும் வாசிக்க

பெண்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பா?

பெண்கள் தலைமையேற்றால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்றும், பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுவும் கட்டுக் கதையாகும். பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் எல்லா சந்தர்ப்பத்திலும் ஆண்கள் தான் பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர். பொது இடங்களில் பெண்ணுக்கு இடையூறு செய்தால் இவளுக்கு இது வேண்டும்’ என்பது தான் பெண்களின் விமர்சனமாக உள்ளது. ஆண்கள் தான் தட்டிக் கேட்கின்றனர்.

இஸ்லாத்தில் பெண்கள் நிலை

இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.

பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள்

‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 5238, முஸ்லிம் 666

பெண்களின் வழிபாட்டுரிமை

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள் அவர்களின் உலக இலாபங்களை அடையும் விஷயத்தில் மட்டுமல்லாது ஆன்மீக விஷயத்திலும் ஆண்களுக்கு கொடுக்கும் உரிமைகளை பெண்களுக்கு மறுக்கவில்லை. உதாரணத்திற்கு ஆண்கள் தங்களின் ஜவேளை தொழுகையை நிலைநாட்ட பள்ளிவாயில்களை நோக்கி செல்வது அவர்களின் கடமை என்பதையும், அவ்வாறு செல்லாதவர்கள் நபியவர்களால் கண்டிக்கப்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்த உண்மையே.

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வொரு ஆணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்)

அழகிய வரவேற்பு – வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.  மேலும் வாசிக்க

கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை…..

 ஹிஸ்டரெக்டமி என்பது கருப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்பது கருப்பையை முழுமையாகவோ (அதாவது கருப்பையின் முழு அமைப்பில் கருவக அடி மற்றும் கருப்பைக் கழுத்து உட்பட ஒட்டு மொத்த கருப்பையையும் களைதல்) அல்லது பகுதி நீக்கமாகவோ களைதல் ஆகும்.
மேலும் வாசிக்க

அதிகரித்த மாதவிடாய் போக்கு

 பெண்களுக்கு அதிகரித்த மாதவிடாய் போக்கு உடல் சோர்வு அசதி, வெறுப்பு, இடுப்பு, வலி, உடல் வெளுப்பு, வீக்கம் ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள். இதை பெரும்பாடு என்றும் அழைப்பார்கள்.

மேலும் வாசிக்க

%d bloggers like this: