அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்

அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும். இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ”என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,”” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்ஆன் 31:13)

ஈமான் கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள் நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் நாடினால் ‘தவ்பா’ (பாவமீட்சி) இல்லாமலும் மன்னித்து விடலாம்.

ஆனால் “இணை வைத்தல்” என்ற பாவத்தை ‘தவ்பா’ இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:

மேலும் வாசிக்க

Advertisements

இணைவைப்பு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்……..     அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்

 முன்னுரை

அன்பிற்கினிய  சகோதர, சகோதரரிகளே இறைவனாகிய அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து  பக்குவப்படுத்தி யிருக்கிறான் அப்படியிருக்க வணங்கத் தகுதியான் அல்லாஹ்  மட்டும்தான் என்று உணர்ந்த முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம்  என்றும் அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர்.  இவர்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் குர்ஆன் ஹதீஸ்களை பின்பற்றாத  மூதாதையர்கள்தான், இவர்கள் மார்கத்திற்கு முரணாக கடைபிடித்து வந்த தவறான  கொள்கையே ஆகும்.

மேலும் வாசிக்க

தாயத்து! தாயத்து!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்………   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஒரு ஹஜரத் கருப்பு கயிற்றை எடுத்து அதில் திருமறை வசனங்களை படித்து உஃப், உஃப் என ஊதிவிட்டு இந்த கயிறு மகத்துவமிக்கது இதை கழுத்திலோ, இடுப்பிலோ கட்டிக் கொண்டால் துன்பம் விலகும், சூனியம் நீங்கும், காத்து கருப்பு அண்டாது என்று கூறுவார்! மற்றொருபுறம் தர்காஹ்வில் ரெடிமேடாக கருப்பு, சிகப்பு, மஞ்சள் நிற கயிறுகளுடன் சில அரபு வசனங்கள் எழுதப்பட்ட காகிதங்களை சயனைடுகுப்பி போன்ற வடிவத்திலோ உள்ள தாயத்தில் சுருட்டியோ அல்லது கிரிக்கெட் வீரர் அஸாருத்தீன் கழுத்தில் கட்டும் பச்சைநிற தலையைனை போன்ற பொருளில் சொருகிவிட்டோ மக்களை நோக்கி மகத்துவமிக்க இந்த தாயத்தை கட்டிக்கொள்ளுங்கள் என்று விற்பனை செய்வார்! இவர் மக்களை தேடி செல்லமாடடார் மக்கள் இவரை நாடி வருவார்கள் உலகிலேயே மார்க்கெட்டிங் தேவைப்படாத பிஸினஸ் தாயத்து பிஸினஸ்!

மேலும் வாசிக்க

சுன்னத் ஜமாஅத்? பெயரை மாற்றுங்கள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை.

தங்களை சுன்னத் ஜமாஅத் என்று கூறி்க்கொள்ளும் தர்காஹ்வாதிகளே இது சுன்னத்தா? ஷிர்க்கா?

சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது. சுன்னத்  என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும்  ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள்  வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும்  பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

மேலும் வாசிக்க

மன்னிக்கப்படாத பாவம்…

அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை  ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி  பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை  அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை  சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய  இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.

    எனவே மனிதன்  தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ்  கூறுகின்றான். இப்பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதற்காக பரிகாரம் கோரக்  கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகின்றான். ஒருவன் தான்   செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்பு கோரி பச்சாதாபப் படுவானாயின்,  அப்பாவங்கள்  அனைத்தயும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். சில பாவங்களுக்காக  மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால்  அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம்; மன்னிக்காமலும் இருக்கலாம். இது அல்லாஹ்வின்  நாட்டத்தை பொருத்தாகும். மேலும் வாசிக்க

இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்

தவ்ஹீத்  என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும்  கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான  கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம்.

பெரும்பாண்மையான  இணைவைப்பாளர்கள் தவ்ஹீதை எவ்வாறு உணர்ந்துள்ளார்கள்? தவ்ஹீத் தரும்  படிப்பினையை எத்திவைப்பவர்கள் மீது இவர்களுக்கு ஏன் கடுங்கோபம் ஏற்படுகிறது  என்பதை உணர்ந்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு  கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)! வாருங்கள் இதுபற்றி அலசுவோம்!

மேலும் வாசிக்க

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை)

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை, அல்லாஹ்வைத் தவிர!  ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.  அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்!  ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

மேலும் வாசிக்க

சத்தியப் பாதையில் அழைப்புப் பணி…

இறைவன் தன்னுடைய அளவில்லா கருணையினால் இஸ்லாம் என்ற அற்புதத்தை ஏற்கும் பாக்கியத்தை நமக்கு வழங்கியுள்ளான். கோடிக்கணக்கான மக்களில் நம்மை தேர்வு செய்து இந்த பாக்கியத்தை வழங்கியுள்ளான். பெரும் பெரும் செல்வந்தர்களுக்கும் நாட்டையே ஆளும் வ­மைபடைத்தவர்களுக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை இஸ்லாத்தை ஏற்றதின் மூலம் நாம் பெற்றிருக்கிறோம்.  மேலும் வாசிக்க

வணக்கமும், உதவி தேடலும்!

திருக்குர்ஆனின் போதனைப்படி இறைவனுக்குச் செய்யவேண்டிய வணக்கம் மூவகைப்படும். அவையாவன:-

(1) அவனுக்குரிய உயர்ந்த இலட்சணங்களைக் காட்டும் பெயர்களைக் கொண்டு நாவால் புகழ்தல்

(2) அவன் சன்னியதில் உள்ளச்சத்துடன் கைகட்டித் தலைகுனிந்து நெற்றியைப் பூமியில் வைத்து (ஸுஜுது செய்து) தன் சரீர உறுப்புகளைக் கொண்டு தன்னைத் தாழ்வுப்படுத்தி, அவனை மகத்துவப் படுத்துதல்.

(3) தன் உடலையும், பொருளையும் மற்றும் தான் நேசிக்கும் எல்லா வஸ்துக்களையும் அவனுக்காகத் தியாகம் செய்தல். மேலும் வாசிக்க

எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும்கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமேஅடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’என்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்குமட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்துபிரார்த்தனை செய்வது!

மேலும் வாசிக்க

அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?

முஸ்லிம்களின் அடிப்படையான நம்பிக்கையில் ஒன்று, அல்லாஹ்வையும் அவனுடைய பண்புகளையும் தெரிந்து கொள்வதாகும். இதுவே ஈமானின் கடமைகளில் முதல் கடமையாகும். இதுபற்றி நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் பரவலாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கையை மட்டும் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அதாவது, அல்லாஹ் எங்கும் இருக்கின்றான். தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான் என்ற நம்பிக்கை தவறானதாகும். இப்படி ஒரு முஸ்லிம் நம்புவது, குர்ஆனுக்கும் நபிகளாரின் வழிமுறைக்கும் மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான் என்பதே சரியான கொள்கையாகும். பின்வரும் குர்ஆன் மற்றும் ஹதீதுகளும் அல்லாஹ் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

மேலும் வாசிக்க

முஸ்லீம்களாக மாத்திரம் மரணிப்போம்.

உலகில் வாழும் காலத்தில் தான் தோன்றித் தனமாக வாழும் எத்தனையோ பேர் தனது இறுதிக் காலத்தில் கவலைப்பட்டு, கைசேதப் படுவதைக் காண்கிறோம். மூஸா நபியை எதிர்த்த பிர்அவ்னுடைய நிலையை ஒத்ததாக பலருடைய நிலை மாறிவிடுகிறது.

மனித குலத்திற்குறிய நேரிய வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு மனிதனையும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக மரணித்துவிடும்படி வலியுறுத்துகிறது. அல்லாஹ் தனது திருமறைக் குா்ஆனிலே ஒவ்வொரு மனிதனுடையவும் இறுதி நேரம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது மிக அழகான வழி முறையொன்றைக் காட்டித்தருகிறான்.

மேலும் வாசிக்க

அல்ஹம்து லில்லாஹ் என அல்லாஹ்வைப் புகழ்வோம்

உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் தனக்கு ஏதாவது சந்தோஷமான நிகழ்வுகளோ அல்லது பேரைப் புகழைப் பெற்றுத் தரக்கூடிய நிகழ்வுகளோ ஏற்படும் போது அது தன்னுடைய ஆற்றலாலும் அறிவாழும்தான் கிடைத்தது என நினைத்து விடுவதைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையான முஸ்லிமாக ஒருவர் இருந்தால் அவருக்கு இப்படிப் பட்ட நிகழ்வுகள் ஏற்பற்டால் அல்லாஹ் தான் இதை எனக்குத் தந்தான் எனது கையில் எதுவும் கிடையாது என்று நினைத்து அல்லாஹ்வைப் புகழ்வான் அப்படிப் புகழ்ந்தால்த் தான் அவன் உண்மை முஸ்லிமாக இருப்பான்.

மேலும் வாசிக்க

அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிப்போம்

உலகில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் நேரான வழியில் வாழவேண்டும் என்பதற்க்காக மனிதர்களுக்குறிய நேர்வழி காட்டிகளாக அல்லாஹ் காலத்திற்குக் காலம் பல நபிமார்களை இவ்வுலகுக்கு அனுப்பியுள்ளான்.அந்த நபிமார்கள் அல்லாஹ் தமக்கு அறிவிக்கும் வஹி எனும் இறைத் தூதுச் செய்தியை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதின் முலம் அவர்களுக்கு நேர்வழியைக்காட்டுவார்கள்.

அந்த வரிசையில் இவ்வுலகுக்கு நேர்வழி காட்ட அனுப்பப் பட்ட நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் நமக்கு பல செய்திகளை சொல்லித் தருவதின் முலம் நம்மை நல்லவர்களாக உலகில் வாழ வழி செய்துள்ளார்கள்.

மேலும் வாசிக்க

அல்லாஹ்வை நம்புவது எப்படி?

அவனுக்கு முடியாதது ஏதுவும் இல்லை.

முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அல்லாஹ்வை நமது இறைவன் என்று நம்ப வேண்டும் என்பதை விளங்கி வைத்திருக்கிறோம், அவன் நம்மைப் படைத்தவன். உணவளிப்பவன் நன்மை தீமைகளைத் தீர்மானிப்பவன். இது போன்று மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் அவன் தான் என்று நம்புகிறோம்.

ஆனால் இந்த நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்கறதா? என்று பார்த்தால் நாம் எந்த அளவு அல்லாஹ்வை நம்ப வேண்டுமோ அந்த அளவுக்கு யாரும் அவனை நம்புவதில்லை. அப்படியே நம்பினாலும் அந்த நம்பிக்கையில்  குறை செய்கிறோம் என்பதுதான் உண்மை. எனவே நமது நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

ஆலிம்களை ஆக்கிரமிக்கும் ஆடைத் திணிப்பு !

தவ்ஹீது கொள்கைக்கு மரண அடி கொடுப்போம் என்று இணைவைப்பாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டு தடம் புரண்ட கொள்கைக்கு வக்காளத்து வாங்கிய நேரத்தில் ஏகத்துவத்தை ஏற்றவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட வாதங்கள் எதுவும் ஏற்புடையதள்ள என்று அக்காலத்தில் பேசியவர்கள் எல்லோறும் இக்காலத்தில் அக்கொள்கைகளை தம் கொள்கையாக மாற்றிக் கொண்டுள்ளது வியப்பல்ல பரிதாபமே!

ஆம் அன்று ஆயிரத்து தொல்லாயிறத்து ஐம்பதுகளுக்கு மேல் ஏகத்துவம் இந்நாட்டில் தலை காட்ட ஆரம்பித்தது. இறைவனை வணங்க வேண்டிய மக்கள் இணை வைத்துக் கொண்டிருந்த காலம் அது.

ஏகத்துவக் கொள்கையை எடுத்துச் சொன்னால் கொடுமை அல்லது கொலைதான் சன்மானம் என்றிருந்த நேரத்தில் உயிர் போனாலும் எம் கொள்கை போகாது, மானத்தை இழந்தாலும் மார்க்கத்தை இழக்கோம் என்ற கோஷத்தோடு தவ்ஹீத் சகோதரர்கள் திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மேலும் வாசிக்க

முஸ்லிம்களே! விழித்திருங்கள்

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவன் எனவும், அவனைத்தவிர வேறு கடவுள்கள் இல்லை எனவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்கள். அல்லாஹ்வின் போதனைகள் ஆகிய குர்ஆனையும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலான ஹதீஸையும் பின்பற்றக்கூடியவர்களே முஸ்லிம்கள்.

மேலும் வாசிக்க

சிலைகளை போட்டுடைத்த ஏகத்துவவாதி!!!

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு  அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள்.  மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில்  அமைந்துள்ளன.

மேலும் வாசிக்க

தாஃவா-வை தடுக்காதே!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்…  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாஃவா பணியை முஸ்லிம்களே தடுக்கின்றனர்! அன்பிற்கினிய ஏகத்துவ சகோதர சகோதரிகளே!

ஏகத்துவவாதிகள் என்று நம்மை நாமே மார்தட்டிக்கொள்கிறோம். எந்த ஒரு செயலை செய்தாலும் அது குர்ஆனில் உள்ளதா? ஹதீஸ்களில் உள்ளதா? என்று ஆராய்ந்து பார்க்கிறோம். அதன் பயனாக இன்று நாம் தூய்மையான மார்க்கதில் இருக்கிறோம் (அல்ஹம்துலில்லாஹ்) ஆனால் நேற்று நம் நிலை என்ன?சற்று சிந்தித்துப் பாருங்களேன்!  மேலும் வாசிக்க

யாருக்கு புத்திதடுமாறியது?

கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் ஏகத்துவம் என்றழைக் கப்படும் ஓரிரைக்கொள்கையின் வீரியம் அனைவரும் அறிந்ததே! பட்டி தொட்டி எல்லாம் பரவிக்கிடந்த தர்காஹ் வழிபாடுகளை ஒருவழியாக ஒழித்துக்கட்ட அனைத்து சகோதரர்களும் பாடுபட்டார்கள் முடிவு இன்று பணக்காரர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் இணைவைப்பதால் சுவனம் செல்ல இயலாது என்பதை உணர்ந்துவருகிறார்கள். மார்க்கம் என்பதை அறியாமல் இணைவைப்புகளில் தட்டுத்தடுமாறி ஏமாந்து போன அப்பாவி முஸ்லிம்கள் தற்போதுதான் ஓரளவு தெளிவு பெற்றும் வருகிறார்கள். ஏன் மாற்றுமதத்தினரும் இஸ்லாத்தை புரிந்து ஆங்காங்கே முஸ்லிம்களாகி மார்க்கத்திற்குள் விரைந்து வருகிறார்கள்! அல்ஹம்துலில்லாஹ்மேலும் வாசிக்க

நீங்கள் ஏகத்துவவாதியா?

உண்மையில் நீங்கள் ஏகத்துவவாதியா? அல்லது ஏகத்துவத்தின் போர்வையில் இருக்கும் மனிதரா?

நாம் பிறந்த உடனேயே இஸ்லாம் மற்றும் அதன் முதல் முக்கிய கொள்கையான ஏகத்துவம் என்பதை அறியாமல் எத்தனையோ இணை வைப்புகளில் மூழ்கியிருந்திருப்போம் ஆனால் அல்லாஹ் நம்மீது கருணை காட்டியிருப்பான் அதன் அடிப்படையில் தற்போது நாம் மார்க்கம் என்றால் என்ன? திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறைகளை உள்ளடக்கிய ஹதீஸ்கள் என்றால் என்ன என்பதை அறிந்திருப்போம்.

மேலும் வாசிக்க

தவ்ஹீது (ஏகத்துவம்)

தவ்ஹீது என்பதற்கு ஒருமைப்படுத்துதல் என்று பெயர். இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு, அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதி யுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.

மேலும் வாசிக்க

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்

 அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)  மேலும் வாசிக்க

பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ

நபி அவர்களும் அவர்களின் கலீபாக்களும், மற்றும் சஹாபாக்களும் பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டாக துஆ ஓதியதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதாவது இமாம் துஆ ஓத மற்றவர் “ஆமீன் ஆமீன்” என்று கூறும் நிலை (இன்று நமது பகுதிகளில் நடைமுறையில் இருப்பது போல்) அவர்கள் காலத்தில் கிடையாது.

மேலும் வாசிக்க

நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை

நபி (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்படி நம்புவதற்கும் அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆராய்வதற்கு முன் இது ஒரு மூட நம்பிக்கைதான் என்பதற்குறிய காரணங்களைப் பார்ப்போம்.

மேலும் வாசிக்க

குறுக்கு வழியும், நேர் வழியும்

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துகளைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது.

மேலும் வாசிக்க

வணக்கமும் உதவிதேடலும்

திருக்குர்ஆனின் போதனைப்படி இறைவனுக்குச் செய்யவேண்டிய வணக்கம் மூவகைப்படும். அவையாவன:- (1) அவனுக்குரிய உயர்ந்த இலட்சணங்களைக் காட்டும் பெயர்களைக் கொண்டு நாவால் புகழ்தல் (2) அவன் சன்னியதில் உள்ளச்சத்துடன் கைகட்டித் தலைகுனிந்து நெற்றியைப் பூமியில் வைத்து (ஸுஜுது செய்து) தன் சரீர உறுப்புகளைக் கொண்டு தன்னைத் தாழ்வுப்படுத்தி, அவனை மகத்துவப் படுத்துதல். (3) தன் உடலையும், பொருளையும் மற்றும் தான் நேசிக்கும் எல்லா வஸ்துக்களையும் அவனுக்காகத் தியாகம் செய்தல்.

மேலும் வாசிக்க

ரபீஉல் அவ்வல்

ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி صلى الله عليه وسلم அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.

மேலும் வாசிக்க

“லாயிலாஹ இல்லல்லாஹ்”வின் பொருள்

கப்று வணங்கிகளுக்காகவும், பாத்தியா மொளலூது என்று இறந்தவர்களுக்காகவும் அவுலியாக்கள், வலியுல்லாக்களுக்கும் ஓதுவதால் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பி இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை அறியாமல் செய்து வரும் மக்களுக்காக ஒரு சிறப்புப் பார்வை.

லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை வாயால் மட்டும் மொழிந்து விட்டால் போதுமானது என்று நினைத்து அதை செயல் வடிவத்தில் கடை பிடிக்காமல். இறைவனுக்கு இணைவைக்கும் செயலாக தர்ஹாக்களில் சென்று வலியுல்லாக்களிடம் உதவி தேடுவதும். நாம் செய்த நன்மை தீமைகளினால் மட்டுமே சொர்க்கம், நரகம் தீர்மானிக்கப்படும் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையே நம்பாமல். பாத்தியா, மொளலூது ஓதி எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று நினைத்து செய்தும். இறைவனோ, ரசூல் (ஸல்) அவர்களோ அறிவித்துக் கொடுக்காத ஒன்றை, எந்த வித ஆதாரமும் இல்லாத ஒன்றை கடைபிடித்து இறைவனால் மன்னிக்கப்பட முடியாத குற்றமான இணை வைத்தலில் மூழ்கி கிடக்கும் நம் சமுதாயத்தில் யாரேனும் ஒருவரேனும் இக்கட்டுரையை படித்து திருந்தினார்கள் என்றால். இறைவன் அவர்களுக்கும் எமக்கும் இம்மையிலும், மறுமையிலும் நற்கூலி அளிப்பானாக ஆமீன்.

மேலும் வாசிக்க

அல்லாஹ் என்றால் யார்?

கேள்வி: அல்லான்னா யாருங்க? – சகோ. ஜெகதீஸ்வரன்,    பதில்:சிராஜ் அப்துல்லாஹ்.

அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்! நீங்கள்      அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!

அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்

  • நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை      வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு      இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும்      அவன் தான் உங்கள் இறைவன்!

மேலும் வாசிக்க