திருமண பந்தல் கால் ஊன்றப் போகிறோம்! அவசியம் வாருங்கள்”

கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் முஸ்லிம் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் ‘பந்தல் கால் ஊன்றுதல்’ பக்தி சிரத்தையோடு நடை பெறுகிறது! அதாவது திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னதாக திருமண வீட்டார், ஊர்த் தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் “இத்தனை மணிக்கு பந்தல் கால் ஊன்றப் போகிறோம்! அவசியம் வாருங்கள்” என்று அழைப்பு விடுப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் ஊர் பெரியவர்கள் எல்லோரும் திருமண வீட்டிற்கு வந்து விடுவார்கள். அவர்களில் சிலரை கம்பீரமான தலைப்பாகைத் தோற்றத்தோடும் காணலாம். மேலும் வாசிக்க

Advertisements

திருமணத்தில் தீய பழக்கங்கள்!

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம். மேலும் வாசிக்க

இணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், “ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே” என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால்,

ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்களோ எந்த சிலைகளையும் வணங்கவில்லை; இறைநேச செல்வர்களின் கப்ருகளுக்கு சென்று அவர்களிடம் தானே பிரார்த்திக்கின்றோம் (துஆச் செய்கின்றோம்)! அந்த இறை நேச செல்வர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்து கண்ணியப்படுத்துகிறோம்! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத் தருமாறு அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம்! ஆனால் நாங்கள் அவர்களை வணங்கவில்லை” என்று கூறுகின்றனர்.

மேலும் வாசிக்க

மீலாதுக் கொண்டாட்டமும் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பும்

செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில்  கொண்டு சேர்க்கும்.” (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி),  நூல்: நஸயீ-1560)

பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது இஸ்லாமியக் கலாசாரம் கிடையாது. மாறாக, யூத, கிறிஸ்த்தவ கலாசாரமாகும். ஆனால், இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர்களில் சிலர் ரபீஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் சத்திய மார்க்கத்தைக் களங்கப்படுத்தக் கூடிய வகையில் பல்வேறு அநாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனர். கழிப்பறை ஒழுக்கம் முதல் அரசாட்சி நடாத்துவது வரை தன்னிகரில்லா உயரிய வழிகாட்டலினை வழங்கி நிற்கும் இறைமார்க்கமாம் இஸ்லாம் புனித மாதங்கள் விடயத்தில் என்ன கூறுகின்றது என நோக்குவோம்.

மன்னிக்கப்படாத பாவம்!

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன். மேலும் வாசிக்க

ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.  மேலும் வாசிக்க

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் அரங்கேறும் விழா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்…

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும் (திருக் குர்ஆன் 7:194)
ரபீவுல் ஆகிர் மாதம் பிறந்து விட்டது. முஹ்யித்தீன் ஆண்டவர்(?) பிறந்த நாள்விழா கொண்டாட்டங்கள் குதூகலத்துடன் தொடங்கப்போகின்றன. இதயத்தில் இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச ஈமானும் கொடிமரங்களில் இனி தஞ்சமடையப் போகின்றன. (நவு+து பில்லாஹ்) அல்லாஹ் நம்மைக் காப்பானாக. தூய இஸ்லாத்தில் இல்லாத திருவிழாக்களும் வழிகேடுகளும் மாற்றார் எள்ளி நகையாடும் விதத்தில் முஸ்லிம்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களால் இன்னமும் அரங்கேற்றப் படுவதைக் கண்டு நம் நெஞ்சு பொறுக்குதில்லையே!

கலாச்சார ஊடுருவல்

உலகின் பல்வேறு இன, மொழி, தேசக் கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டு அகில உலகத்தையும் தன்பால் ஈர்த்தக் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரமாகும். இறை வேத வரிகளும் இறைத்தூதர் மொழிகளும் போதித்த இஸ்லாமியக் கலாச்சாரத்தை இம்மியும் பிசகாமல் இஸ்லாமியச் சமுதாயம் கடைப்பிடித்த காலமெல்லாம் அகில உலகுக்கும் முன்மாதிரியாக அது திகழ்ந்தது.

மேலும் வாசிக்க

வலிமார்கள் நமக்கு வக்கீல்களா?

அவ்லியாக்கள் பெயரால் நடைபெறும் அநாச்சாரங்கள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து ஒதுக்கித் தள்ளிய உத்தமர்களிலும் கூடச் சிலர், தர்காக்களுக்குச் செல்வதையும், வலிமார்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதையும், நியாயம் என்று நினைக்கின்றனர்.
தமது தேவைகளை அவ்லியாக்கள் மூலம் கேட்பதற்குச் சில உதாரணங்களை ஆதாரங்களாக அள்ளி வீசுவார்கள்.முதலமைச்சரை நாம் நேரடியாகச் சந்திக்க முடியுமா? நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை முதலில் சந்திக்க வேண்டும். அவர் நம்மை அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் அறிமுகப் படுத்தி வைப்பார். அதன் பிறகுதான் முதலமைச்சரிடம் நமது தேவையைக் கேட்க முடியும். இதே உதாரணம், முதலமைச்சருக்குப் பதிலாக மன்னர், பிரதமர், கலெக்டர், என்று இடத்துக்குத் தக்கபடி மாறுவது உண்டு. மேலும் வாசிக்க

முஹையத்தீன் பெயரால் மூட்டைமூட்டையாக

சுன்னத்வல்ஜமாஅத் கதை பரங்கிப்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக மீலாது விழா, குத்பு முஹையதீன் நினைவு சொற்பொழிவு மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அலுவலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா கும்மத்பள்ளித்தெருவில் நடைபெற்றது. ஷேக் அப்துல்லா ஜமாலி, முதலானோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கூட்டத்தில் முன்னதாக பேசிய முஹம்மது காஸிம் என்பவர் தனது உரையில் முஹம்மது நபி ரசூல் (ஸல்) அவர்களின் கால் செருப்பு அல்லாஹ்வின் அர்ஷைவிட உயர்வானது, அன்னை ஆமினாவின் மணிவயிறு அல்லாஹ்வின் அர்ஷைவிட மகத்தானது என்றெல்லாம் அடிமுட்டாள்களை விடகேவலமாக உளறிக் கொட்டினார். சுன்னத் வல் ஜமாஅத் என்றப் பெயரில் அறங்கேறிய இந்த கொடுமையை தாங்க முடியாத சில ஓரளவு விபரம் உள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினர் முகம் சுலித்தனர். பிற முஸ்லிம் பெயர் தாங்கிகள் இது குறித்தெல்லாம் எதுவும் கண்டுக் கொள்ளாமல் ‘ஜம்’மென்று சுன்னத் பேஜ் குத்திக் கொண்டு அலைந்தனர்.

சூனியம் என்பது உண்டா?

ஆன்மீக சிந்தனையுள்ளவர்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று சூனியமாகும். இந்த நம்பிக்கை வேரூன்றிய இடங்களில் அதன் பாதிப்புகள் குறித்த பேச்சும் பிரச்சாரமும் அதிகமாகவே இருக்கும். ஆன்மீக வாதிகள் சூனியத்தை நம்புகிறார்கள் என்ற பொதுவான கருத்திலிருந்து முஸ்லிம்களும் விடுபட வில்லை. இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் நிலைப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சூனியம் பற்றி பேசும் குர்ஆன் வசனங்களும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு அதன் காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று வரும் ஹதீஸ்களும் அவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ‘இறைத்தூதருக்கே சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்’ என்று தமது சூனிய நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம்களைப் பார்க்கிறோம். மேலும் வாசிக்க

செய்வினையும் – பொய்வினையும்

உடல் நில சரியில்லை என்றால், உரிய மருத்துவம் செய்ய வேண்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். அதை விட்டு விட்டுச் சிலர், மந்திரவாதிகளையும், மலையாளத் தங்கள் களையும் அணுகிப் பரிகாரம் தேடுகின்றனர்.

ஏமாற்றிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்ட எத்தர்களுக்கு இவர்களைக் கண்டால் கொண்டாட்டம் தான். ‘நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லை, எல்லா வகையான மருத்துவமும் பார்த்தாகி விட்டது’ என்று இவர்களே வாக்கு மூலம் கொடுக்க – சரியான இளிச்சவாயன் கிடைத்து விட்டான் என்று மந்திரவாதி அசரத்துகளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. ‘உங்களுக்கு செய்வினை செய்யப் பட்டுள்ளது’ ‘நீங்கள் எந்த டாக்டரைப் பார்த்தும் ஒரு பயனும் இல்லை’ என்று சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குக் கொஞ்சம் செலவு ஆகும் என்று அவர் தனது முதல் வியாபாரத்தை ஆரம்பிக்க – கொஞ்சம் கொஞ்சமாக இருக்கின்ற பணத்தையெல்லாம் இழந்து – கடனும் வாங்கிகிச் செலவு செய்துக் கடைசியில் கண்ட பலன் ஒன்றும் இருக்காது. இழந்தது பணத்தை மட்டுமல்ல, ஈமானையும் கூட என்பதை இந்தப் பாவிகள் உணர மாட்டர்கள்.

பில்லி சூனியம் செய்வினை

ஆன்மீக சிந்தனையுள்ளவர்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று சூனியமாகும். இந்த நம்பிக்கை வேரூன்றிய இடங்களில் அதன் பாதிப்புகள் குறித்த பேச்சும் பிரச்சாரமும் அதிகமாகவே இருக்கும். ஆன்மீக வாதிகள் சூனியத்தை நம்புகிறார்கள் என்ற பொதுவான கருத்திலிருந்து முஸ்லிம்களும் விடுபட வில்லை. இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் நிலைப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சூனியம் பற்றி பேசும் குர்ஆன் வசனங்களும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு அதன் காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று வரும் ஹதீஸ்களும் அவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ‘இறைத்தூதருக்கே சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்’ என்று தமது சூனிய நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம்களைப் பார்க்கிறோம். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாத்தியமா.. என்ற சாதாரண சிந்தனைக்கூட இவர்களிடம் எட்டுவதில்லை.

மேலும் வாசிக்க

மண் கேட்ட படலம்!

அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரில்(அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரில்(அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரில்(அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில்(அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங் கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல்மவ்தை அல்லஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

மேலும் வாசிக்க

இணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்!

முன்னுரை

அன்பிற்கினிய சகோதர, சகோதரரிகளே இறைவனாகிய அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து பக்குவப்படுத்தி யிருக்கிறான் அப்படியிருக்க வணங்கத் தகுதியான் அல்லாஹ் மட்டும்தான் என்று உணர்ந்த முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம் என்றும் அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் குர்ஆன் ஹதீஸ்களை பின்பற்றாத மூதாதையர்கள்தான், இவர்கள் மார்கத்திற்கு முரணாக கடைபிடித்து வந்த தவறான கொள்கையே ஆகும்.

இறைவனுக்கு இணை வைத்ததினால், இறுதித் தூதரின் பெற்றோருக்கும் நரகமே!

இந்த உலக மக்கள் நேர்வழி பெற்று மறுமையில் வெற்றியடைந்து சுவர்க்கச் சோலையில் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும் என்பதற்காக இறைவனால் இந்த உலகுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த நபியின் பெற்றோர்களின் மறுமை நிலை என்ன என்பதைப் பற்றி நாம் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

ஏன் என்றால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த நபியவர்கள் முதன்மையாக இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாக லா இலாக இல்லல்லா முஹம்மதுன் ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபியவர்கள் இறைவனின் தூதராவார் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தார்கள்.

மேலும் வாசிக்க

இஸ்லாத்தின் பெயரால் செய்யும் பித்அத்துகள்!

புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.

உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?

மேலும் வாசிக்க

இஸ்லாமிய மார்க்கத்தில் நான்கு பிரிவுகள் உண்டா?

கேள்வி: இஸ்லாமிய மார்க்கத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாக பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களை பின்பற்றுவதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும், பாகிஸ்தானிலும் சன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் சண்டைகள் நடப்பது ஏன்?

பதில்: (சகோதரர், பி. ஜைனுல் ஆபிதீன்)
இஸ்லாமிய மார்க்கத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் கூறுவது முதலில் தவறாகும். முஸ்லிம்களிடம் ஏன் இந்தப் பிரிவுகள் என்று தான் கேள்வி அமைந்திருக்கவேண்டும். இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும் அனுமதிக்க வில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லையென்றாலும் முஸ்லிம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆனால் இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவை ஒப்பிட எந்த நியாயமும் இல்லை. மேலும் வாசிக்க

அறிவை அடகு வைத்த அவ்லியா பக்தர்கள்

சமுதாயத்திaன் சாபக்கேடு!

இஸ்லாம் என்பது அல்லாஹ்வினால் இம்மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு அதை இறுத்தித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலம் பூரணமாக்கிவிட்டான் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதுபோல் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கும் சுரண்டல்களையும் தடுத்துவிட்டது. இஸ்லாத்தில் இடைத்தரகர்களோ, மூட நம்பிக்கைகளோ சிறிதுமில்லாமல் அதன் வாசலை முற்றிலுமாக அடைத்துவிட்டது. ஆனால், இன்று இஸ்லாத்தில் இல்லாத தகடு, தாயத்து, தர்கா வழிபாடு போன்றவற்றை இஸ்லாத்தினுள் புகுத்தி அதையே இஸ்லாம் என்று நடைமுறப்படுத்தி மார்க்கத்தின் பெயரால் சில அறிஞர்கள் (?) பிழைப்பு நடத்தி வந்தனர்; இன்றும் நடத்தி வருகின்றனர். அதிலொன்றுதான் கேடு கெட்ட தர்கா வழிபாடு.

பிறந்ததினத்தை எதிர்த்த நபிக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா?

உலகில் வாழும் மக்களுக்கு நேர் வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் இறைவன் பல நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு நேர்வழியை சொல்லிக் கொடுத்தான். நல்லது எது? தீயது எது? என்பதை அந்த நபிமார்கள் மூலமாக பிரித்துக் காட்டினான். இந்த உலகுக்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் நாம் நேர் வழி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட திருமறைக் குர்ஆனைத் தந்ததுடன் அதற்கு விளக்கமாக வாழ்ந்தும் காட்டினார்கள்.

மேலும் வாசிக்க

முஸ்லீம்களாக மாத்திரம் மரணிப்போம்.

உலகில் வாழும் காலத்தில் தான் தோன்றித் தனமாக வாழும் எத்தனையோ பேர் தனது இறுதிக் காலத்தில் கவலைப்பட்டு, கைசேதப் படுவதைக் காண்கிறோம். மூஸா நபியை எதிர்த்த பிர்அவ்னுடைய நிலையை ஒத்ததாக பலருடைய நிலை மாறிவிடுகிறது.

மனித குலத்திற்குறிய நேரிய வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு மனிதனையும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக மரணித்துவிடும்படி வலியுறுத்துகிறது. அல்லாஹ் தனது திருமறைக் குா்ஆனிலே ஒவ்வொரு மனிதனுடையவும் இறுதி நேரம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது மிக அழகான வழி முறையொன்றைக் காட்டித்தருகிறான்.

மேலும் வாசிக்க

ஆடம்பர திருமணங்களை தவிர்ப்போம் தடுப்போம்

மார்க்க விடயங்களில் மிகவும் பேணுதலாக நடக்கும் ஒவ்வொரு கொள்கைவாதிகளும் சறுக்கி விழுகின்ற, தோற்றுப்போகின்ற ஒரு சம்பவம் தான் இந்தத்திருமணம் ஆகும். மார்க்க சட்டதிட்டங்களை பேசுவார்கள் பேணுவார்கள்.ஆனால் இந்த ஒரு விடயத்தில் மட்டும் மௌனியாவார்கள்.ஒரு சுன்னத்தைப் பேணுவதற்காக பல ஹராமான காரியங்கள் அரங்கேறுவதை இன்றைய திருமணங்களில் காணலாம்.நிக்காஹ்வை பள்ளிவாசல்களில் மிகவும் எளிமையான முறையில் நடாத்தி ஒரு பயானையும் நிகழ்த்தி விட்டு அதற்குப் பிறகு நடப்பதுவோ முழுக்க முழுக்க அநாச்சாரமும், ஆடம்பரமும், அநியாயமுமாகும்.

மேலும் வாசிக்க

ஆலிம்களை ஆக்கிரமிக்கும் ஆடைத் திணிப்பு !

தவ்ஹீது கொள்கைக்கு மரண அடி கொடுப்போம் என்று இணைவைப்பாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டு தடம் புரண்ட கொள்கைக்கு வக்காளத்து வாங்கிய நேரத்தில் ஏகத்துவத்தை ஏற்றவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட வாதங்கள் எதுவும் ஏற்புடையதள்ள என்று அக்காலத்தில் பேசியவர்கள் எல்லோறும் இக்காலத்தில் அக்கொள்கைகளை தம் கொள்கையாக மாற்றிக் கொண்டுள்ளது வியப்பல்ல பரிதாபமே!

ஆம் அன்று ஆயிரத்து தொல்லாயிறத்து ஐம்பதுகளுக்கு மேல் ஏகத்துவம் இந்நாட்டில் தலை காட்ட ஆரம்பித்தது. இறைவனை வணங்க வேண்டிய மக்கள் இணை வைத்துக் கொண்டிருந்த காலம் அது.

ஏகத்துவக் கொள்கையை எடுத்துச் சொன்னால் கொடுமை அல்லது கொலைதான் சன்மானம் என்றிருந்த நேரத்தில் உயிர் போனாலும் எம் கொள்கை போகாது, மானத்தை இழந்தாலும் மார்க்கத்தை இழக்கோம் என்ற கோஷத்தோடு தவ்ஹீத் சகோதரர்கள் திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மேலும் வாசிக்க

கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே!

அன்னையர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் வாசிக்க

கலாசார சீர்கேட்டுக்கு தினங்களை உண்டாக்கிய கழிசடைகள் …

உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது.

இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன.

# முத்தமிடுவோர் தினம்,

# நிர்வாணமாக இருப்போர் தினம்,

# இறுகக் கட்டியணைப்போர் தினம்,

# ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம்,

# பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் .

மேலும் வாசிக்க

காம காதலர் தினம்

காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்.

ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் பிரித்து சுகம் காண துடித்துக் கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து நாம்மை பாதுகாப்பதற்காகவே அல்லாஹ் நமக்கு தனது புறத்திலிருந்து நபிமார்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களை கொடுத்து மக்களை விழிப்புணர்வு பெறச் செய்துள்ளான் ஆனால் நாம் இவற்றை சிந்திக்காமல் குருடர்களாக ஷைத்தானின் மாயவலையில் சிக்கிக்கொள்கிறோம்.  மேலும் வாசிக்க

பித்அத் ஒரு ஆய்வு!!

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாகி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்ககூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (அல் குர்ஆன் 42:21)

(நபியே நீர்கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ
வானங்களிலுள்ளவற்றையும், பூமியுலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 48:16)

மேலும் வாசிக்க

நபி வழியைப் பின்பற்றுவதின் அவசியமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவன் தான் நமக்கு மார்க்கமாக இஸ்லாத்தைத் தேர்வு செய்து, அதைப் பூரணப்படுத்தித் தந்து, தனது பேரருளையும் புரிந்தவன். அடுத்து அவனுக்கு முழுமையாக அடிபணிவதன் மூலம் வீண் விரயம், புதியன பின்பற்றல், கீழ்ப்படியாமை போன்றவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி மக்களுக்கு அழைப்புவிடுத்து, எச்சரிக்கை செய்த அவனுடைய அடிமையும் திருத்தூதருமாகிய ரசூல்(ஸல்) அவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. மேலும் அவர்களுடைய சந்ததியினர், தோழர்கள், அவர்களது அடிச்சுவட்டில் தீர்ப்பு நாள் வரை நடப்பவர்கள் ஆகிய
அனைவருக்கும் அவனது அருள் கிட்டுமாக.

மேலும் வாசிக்க

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா!

பொருளடக்கம்

இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம். அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒரு புதுமையான விஷயமே நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா – சிறிய வரலாற்றுக் கண்ணோட்டம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களை ஏன் கொண்டாடக் கூடாது?

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களின் வாதங்கள்: –

மேலும் வாசிக்க

பித்அத்துல் ஹஸனா???

பித்அத்துகளில் நல்லவை கெட்டவை என்ற பாகுபாடே கிடையாது. அனைத்து பித்அத்துகளும் வழிகேடு என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: – ‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்:புகாரி, முஸ்லிம்.

மேலும் கூறினார்கள்: – ‘(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான்’ என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்எனவே அனைத்து பித்அத்களும் நரகத்திற்குரிய வழிகேடுகளேயன்றி வேறில்லை. மேலும் வாசிக்க

பித்அத் என்றால் என்ன?

இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத் தராத புதிய அமல்களை செய்வதற்கு பித்அத் என்று பெயர். மார்க்கத்தில் உருவாக்கப்படும் அல்லது நுழைக்கப்படும் இந்த புதிய அமல்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

இன்று நமது இஸ்லாமிய சமுதாயம் இத்தனைக் கூறுகளாக பிரிந்து சிதறுண்டுக் கிடப்பதற்கு மூலக்காரணம் புதிய பித்அத்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வதேயாகும். அல்லாஹ் தனது மார்க்கத்தை  முழுமைப்படுத்திவிட்டதாகக் தன்னுடைய திருமறையில் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் சென்றிருந்த போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்.

மேலும் வாசிக்க

பராஅத்தும் மத்ஹபுகளும்

நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும். மேலும் வாசிக்க

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவோம்

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?[அல் குர்ஆன் 2:107 ]

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்![அல் குர்ஆன் 7:194 ]

மேலும் வாசிக்க

சிலைகளை போட்டுடைத்த ஏகத்துவவாதி!!!

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு  அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள்.  மற்றொன்று தியாகத் திருநாள். இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில்  அமைந்துள்ளன.

மேலும் வாசிக்க

மரணித்தவருக்காக என்ன செய்ய வேண்டும்?

ஒரு முஸலிம் மரணித்து  விட்டால் அவரை நல்ல முறையில் குளிப்பாட்டி கபனிட்டு , தொழுவித்து அடக்கம்  செய்ய வேண்டும் மரணித்தவருக்காக முஃமின்கள், குடும்பத்தார், பிள்ளைகள்  செய்ய வேண்டிய இன்னும் சில கடமைகளும் இருக்கின்றன அவையாவன :-

மேலும் வாசிக்க

அவ்லியாக்களின் சிறப்பு

இந்தக்  கட்டுரை, சகோதரர் பி.ஜனுலாப்தீன் அவர்கள் இருபது வருடங்களுக்கு   முன்பு  தாம் ஆசிரியராக இருந்த ஒரு மாத இதழில் எழுதிய கட்டுரையாகும். அதை இப்போது    சில கூடுதல் குறிப்புகளுடன் வாசகர்களின் சிந்தனைக்குத்  தருகிறோம்.புராணங்களில்   வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக்  கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும்   வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத்  ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள்   அமைந்திருக்கின்றன.  அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள்.   புத்தி  பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று    கூறலாம்.தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக்    குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க

தடை செய்யப்பட்ட தீமைகள்

இந்த பட்டியலில் உள்ள தீமைகளை நமக்கு நாமே சுயபரிசோதனை செய்துக்கொண்டு, இவற்றிலிருந்து விலகி வல்ல இறைவனின் பொருத்தத்தை பெற முயற்ச்சிப்போம்…

1) ஷிர்க் எனும் இணைவைத்தல்!

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)

மேலும் வாசிக்க

இஸ்ராயீல்????

‘மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றிட இஸ்ராயீல்’ என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான்; அவர் தான் உயிர்களைக் கைப்பற்றுகின்ற வானவர்’ என்று பரவலாக நம்புகிறார்கள்.

ஆனால் இஸ்ராயீல்’ என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள்நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை.

ஒரே ஒரு வானவர் தான் அனைவருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.

மேலும் வாசிக்க

786 என்பதைப் பயன்படுத்தலாமா ?

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1 , பே 2 , ஜீம் 3 , தால் 4)

‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ‘ என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும்.

மேலும் வாசிக்க

பித்அத்கள்

மரணித்தவரின் மறுமை நன்மைக்காக நாம் செய்யவேண்டிய அனைத்தையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு நிறைவாக சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும்.

இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா , ஏழாம்ஃபாத்திஹா , நாற்பதாம் ஃபாத்திஹா , கத்தம் , வருட ஃபாத்திஹாக்கள் , இறந்தவருக்காக ஹல்கா , திக்ருகள் , ராத்திபுகள் என்று பலவிதமான சடங்குகளையும் தமிழக முஸ்லிம்களில் பலர் செய்து வருகின்றனர். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் வாசிக்க

ஜனாஸாவில் செய்யக் கூடாதவைகள்

தல்கீன் ஓதுதல்:

ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர்.

உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம் எது? எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு ‘ என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள். மேலும் வாசிக்க

திருமண துஆ

நமது நாட்டில் வழக்கமாக திருமணத்தின் போது ஒரு துஆ ஓதி வருகின்றனர். அல்லாஹும்ம அல்லிப் பைனஹுமா….. என்று ஓதப்படும் அந்த துஆ நபிகள்நாயகம்(ஸல்) காலத்திலோ ஸஹாபாக்கள் காலத்திலோ, தாபியீன்கள் காலத்திலோ, நான்கு இமாம்களின் காலத்திலோ நடைமுறையில் இருந்ததில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த சிலரது கண்டுபிடிப்பாகும் இது. ஆதம்-ஹவ்வா போல் வாழ்க! அய்யூப்- ரஹிமா போல் வாழ்க! என்ற கருத்தில் பல நபிமார்களின் இல்லறம் போல் வாழுமாறு பிரார்த்திக்கும் விதமாக இந்த துஆ அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க

தரீக்காவின் திக்ருகள்

சபையில் வட்டமாக அமர்ந்து லாயிலாஹ இல்லல்லாஹ் 100 தடவை பின்னர் எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு அல்லாஹ் என்று 100 தடவை அஹ் ‘ என்று 100 தடவை கூறுகிறார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பாடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஆடுவதால் கழுத்து , வயிறு , தோள்பட்டை ஆகியவை சுருங்கி சுருங்கி விரிகின்றன. இதை நடத்தி வைக்க ஒருவர் தமது உள்ளங்கைகளைத் தரையை நோக்கி வைத்து கைகளை வேகமாக அசைத்து திக்ருக்கு வேகமூட்டுகிறார். திக்ரு முடிந்ததும் சபையில் இருந்த அனைவரும் அவருடைய கைகளை முத்தமிடுவதற்காக முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர். இதில் காணப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நபிவழியா ? இந்தக் கூத்துக்கள் திருக்குர்ஆனுக்கும் , நபிவழிக்கும் முரணானவை. இந்த திக்ரு பற்றி விரிவாக நாம் அலச வேண்டும்.

மேலும் வாசிக்க

மவ்லூது கிருத்தவ நடைமுறை!

மவ்லூது எகிப்து நாட்டு கிருத்தவர்களின் கலாச்சாரம் (எச்சரிக்கை)

 மவ்லூது பொருள் விளக்கம், மவ்லூது என்ற வார்த்தைக்கு பிறந்த நாள் என்பது பொருள்.

மவ்லூது என்ற பிறந்த நாளை புனிதர்களுக்கு கொண்டாடுவது எகிப்து நாட்டில் வாழும் கிருத்தவர்களின் வழக்கம்! இந்த எகிப்து நாட்டு கிருத்தவர்கள் மவ்லூது விழாவை தங்கள் கிருத்தவ புனிதர்களின் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடி வருகின்றனர்.  வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காப்டிக் கிருத்தவர்களால் மவ்லூது பாடல்களும் விழாக்களும் நைல் நதிக்கரை முதல் அஸைட் என்ற பகுதிவரை கொண்டாதுவது வாடிக்கையாகும்!  இதை மையமாக வைத்தே குர்ஆன் ஹதீஸ்களை விளங்காத முஸ்லிம்களில் சிலர் கொண்டாடி மவ்லூதை கொண்டாடி வருகின்றனர். (கைசேதமே!)

மேலும் வாசிக்க

யூதர்களை மிஞ்சிய ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி கூட்டம்

அன்பிற்கினிய சகோதர, சகோதரரிகளே அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று தவ்ஹீத் சகோதரர்களும், அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று இணைவைப்பாளர்களும் விவாதிக்கின்றனர்.

இந்த இரு அணியினரில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று கூறுபவர்கள் குர்ஆன் மற்றும் நபிமொழி ஹதீஸ் ஆதாரங்களை முன்வைத்து உண்மை பேசுகிறார்கள் மாறாக உருவம் இல்லை என்று கூறும் இணைவைப்பாளர்களும் அவர்களது தலைவருமான உஸ்தாத் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களை மறுத்துப் பேசி அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்றும் அவ்வாறு இருந்தால் அவன் ஒற்றைக் கையனா, ஒரு கால் மட்டும்தான் உள்ளதா? அவன் ஆடை அணிகிறானா? நிர்வாணியா? என்றெல்லாம் பேசி இஸ்லாத்தின் ஆணிவேரான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மறுத்து பேசுகிறார். மேலும் வாசிக்க

நபிகள் நாயகம்தான் இறுதி நபியா? – காதியாணிகளின் கேள்வி

 கேள்வி எழுப்பியது காதியாணிகள், எழுப்பியவர் Sabar ( jafarla@yahoo.co.in )

கேள்வி: ஈசா (அலை) வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களே இது கிறிஸ்தவ நடைமுறை இல்லையா?

பதில்: காதியாணி அமைப்பை சேர்ந்த சகோதரர் சபர் அவர்களே நீங்கள் கேட்ட கேள்வியில் இரண்டு விபரீதமான கேள்விகள் அடங்கி யுள்ளன. உங்கள் கருத்துப்படி இதோ அந்த 2 விபரீதங்கள்;

1)      ஈஸா நபி வானில் உயர்த்தப்படவி்ல்லை!

2)      ஈஸா நபி கொல்லப்பட்டார் அல்லது மரணித்துவிட்டார்!

மேலும் வாசிக்க

அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது

மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

 முன்னுரை

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல் நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே இந்த கட்டுரையின் உட்கருத்தாகும்! மேலும் வாசிக்க

நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ

தலைப்பை படித்தவுடன் உங்களில் சிலர் கதிகலங்கிப் போயிருப்பீர்கள் ஆம் இப்படிப்பட்ட கலக்கம் எனக்கு ஏற்பட்டதன் விளைவுதான் இந்த கட்டுரை.

 சகோதர, சகோதரிகளே பயப்படவேண்டாம்! இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதையை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவே பொறுமையாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)!

மேலும் வாசிக்க

மரம் ருக்கூ செய்கிறதா? மலை சஸ்தா செய்கிறதா?

ஒரு முஸ்லிமுக்கு உண்டான அழகிய பண்பு என்னவெனில் அவன் அல்லாஹ்வையும், மலக்குமார்களையும், தூதர்களையும், வேதங்களையும், மறுமை நாளையும், சுவர்கம், நரகம் ஆகிய வற்றையும் முழுமையாக நம்ப வேண்டும்.  அதே போன்று அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக விளக்கிக் கூறும் மறைவான ஞானம் பற்றிய செய்திகளையும் ஆதாரம் இல்லையென்றாலும் அல்லாஹ்வும் அவனது நபிமார்களும்  கூறுவதால் நம்ப வேண்டும்!

 ஆனால் நம்மில் பலர் அருள்மறை குர்ஆனை படித்தவுடன் அதில் கூறப்பட்டுள்ள மறைவான ஞானம் பற்றிய தகவல்களை உணர்கிறார்கள் ஆனால் அதை எவ்வாறு அணுக வேண்டுமோ அவ்வாறு அணுகாமல் விழிபிதுங்கி வழிதவறிவிடுகிறார்கள. இதற்கு காரணம் என்ன என்று சிந்தித்துப்பார்த்தால் அவர்கள் அல்குர்ஆனை ஒழுங்காக விளங்காததுதான் என்பது தெளிவாகிறது.  மேலும் வாசிக்க

அப்துல் காதர் ஜீலானி Vs ஷைகு ஹம்மாத் (சபாஷ் சரியான போட்டி)

முன்னுரை

 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கக்கூடிய முஸ்லிம்களுக்கு மத்தியில் உயிருடன் உள்ள மனிதர்களான ஷைகுமார்களையும்  வணங்கலாம் இறந்த மனிதர்களது சமாதியையும் வணங்கலாம் என்று கூறி இறைவனுக்கு இணையாக வைத்து தர்காஹ் வழிபாடுகள் இன்று பட்டிதொட்டி எங்கும் பின்பற்றப்படுகின்றன. இந்த தர்காஹ் வழிபாடுகள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீறிய செயல் மட்டுமல்லாது நிரந்தர நரகத்திற்கும் உரிய செயலாகும் இதை நாம் கூறவில்லை அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் வாசிக்க