இறைவனால் இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்!

    (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெருகிறீர்கள். (7:3)

    அல்லாஹ் இவ்வசனத்தின் கருத்தின்படி நாம் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும் அவனால் அனுப்பப்பட்ட நபிصلى الله عليه وسلم அவர்களை மாத்திரமே பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக மற்றவர்களைப் பாதுகாவலர்களாக நம்பி பின்பற்றுவோமேயானால் நிச்சயமாக நாம் பகிரங்கமாக வழிகேட்டிலேயே ஆகிவிடுவோம்.

மேலும் வாசிக்க

Advertisements

ஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்!

புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான்.

மேலும் வாசிக்க

சகுனம் பார்த்தல்

ஜோதிடம் , நல்லநாள் , கெட்டநாள்  , நட்சத்திரம் பார்த்தல் , சகுனம் பார்த்தல் ஆகியவற்றை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்கின்றது. நாட்களிலோ,நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியதும் கிடையாது. முற்றிலும் தீமை பயக்கக் கூடியதும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். ஒரு குறிப்பிட்ட நாள் நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும் சாகக் கூடாது. யாருக்கும் நோய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவலையோ , துக்கமோ நிம்மதியின்மையோ ஏற்படக்கூடாது. இப்படி ஒரு நாள் கிடையாது என்பது சாதாரண உண்மை.

மேலும் வாசிக்க

இஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்

அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.

பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.

மேலும் வாசிக்க

இஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்!

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது.

வாழ்வில் பிரச்சனையா? செல்வம் சேர்க்க வேண்டுமா? ஆண்மை சக்தி குறைவா? மண வாழ்வில் பிரச்சனையா? வெளி நாடு செல்ல வேண்டுமா?

“இப்படி எண்ணற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிருஷ்டக் கல் மோதிரம் அணியுங்கள்” என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் தங்கள் சரக்குகளை விற்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் மோசடிகள் பல செய்து ஏழை எளியவர்களின் உழைப்பில் தங்களின் வயிறுகளைக் கழுவி வருகின்றனர்.

மேலும் வாசிக்க

மன்னிக்கப்படாத பாவம்…

அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை  ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி  பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை  அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை  சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய  இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.

    எனவே மனிதன்  தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ்  கூறுகின்றான். இப்பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதற்காக பரிகாரம் கோரக்  கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகின்றான். ஒருவன் தான்   செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்பு கோரி பச்சாதாபப் படுவானாயின்,  அப்பாவங்கள்  அனைத்தயும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். சில பாவங்களுக்காக  மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால்  அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம்; மன்னிக்காமலும் இருக்கலாம். இது அல்லாஹ்வின்  நாட்டத்தை பொருத்தாகும். மேலும் வாசிக்க

ஜின்களை வசப்படுத்த முடியுமா?

இறைவனுடைய படைப்பில் ஜின்கள் என்று ஒரு வகையினர் இருப்பதாக திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். மனிதர்களைப் போன்றே இவர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக்கொள்பவர்கள் அவனை மறுப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய செயல்களுக்கு ஏற்ப மறுமை நாளில் இவர்களில் நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் தீயவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள். ஆனால் இவர்களை மனிதர்கள் கண்ணால் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மேலும் வாசிக்க

மறுமை வெற்றிக்கு வழி…

இஸ்லாம் என்ற தூய மார்க்கத்தை நமக்கு எத்திவைப்பதற்காக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை தூதராக அனுப்பினான். நாம் அல்லாஹ்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டும்? எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது போன்ற எல்லா விசயங்களையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். நமது கொள்கை கோட்பாடுகள் வணக்க வழிபாடுகள் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அமைத்துக்கொண்டால் தான் மறுஉலக வாழ்க்கையில் நாம் வெற்றி பெற முடியும். மேலும் வாசிக்க

அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம்

நன்மை பயக்கும் மார்க்கம்

இஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச்சிறப்புகளை இஸ்லாத்தில் மட்டும் நம்மால் காணமுடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்கிறது.

திருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் ஒருவர் கடைபிடித்து வாழ்ந்தால் இந்த உலகத்திலேயே அவர் நன்மைகளை அடையமுடியும். இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும்.

பேய் பிசாசு நம்பிக்கையுள்ளவர்களால் இரவில் தன்னந்தனியாக செயல்படமுடியாது. யாரும் இல்லாத தெருவில் தனியே நடமாடமுடியாது. பயம் இவர்களை கவ்விக்கொள்ளும். நிம்மதியை இழந்து கோழகளாக திரிவார்கள். மேலும் வாசிக்க

ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்!

மனிதனுக்கு சைத்தானால் சில இடஞ்சல்கள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களி­ருந்து அறிந்துகொள்ளலாம்.
‘ஆதமின் மக்கüல் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவருடைய மகனையும் தவிர’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்”
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ர­) நூல் : புகாரி (3431) மேலும் வாசிக்க

குறுக்கு வழியும், நேர் வழியும்!

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துக்களைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது. மேலும் வாசிக்க

கதைகளின் பின்னணியில்!

உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை):   இத்ரீஸ் அலைஹீஸ் ஸலாம் அவர்கள் ‘மலக்குல் மவ்த்’துக்கு நண்பராக இருந்தார்களாம்! “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக” மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம்! “தான் நரகத்தை கண்கூடாகக் காண வேண்டும்” என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம்! மேலும் வாசிக்க

நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

“இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் ஆராய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு காரணங்களைப் பார்ப்போம். மேலும் வாசிக்க

முஹையத்தீன் பெயரால் மூட்டைமூட்டையாக

சுன்னத்வல்ஜமாஅத் கதை பரங்கிப்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக மீலாது விழா, குத்பு முஹையதீன் நினைவு சொற்பொழிவு மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அலுவலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா கும்மத்பள்ளித்தெருவில் நடைபெற்றது. ஷேக் அப்துல்லா ஜமாலி, முதலானோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கூட்டத்தில் முன்னதாக பேசிய முஹம்மது காஸிம் என்பவர் தனது உரையில் முஹம்மது நபி ரசூல் (ஸல்) அவர்களின் கால் செருப்பு அல்லாஹ்வின் அர்ஷைவிட உயர்வானது, அன்னை ஆமினாவின் மணிவயிறு அல்லாஹ்வின் அர்ஷைவிட மகத்தானது என்றெல்லாம் அடிமுட்டாள்களை விடகேவலமாக உளறிக் கொட்டினார். சுன்னத் வல் ஜமாஅத் என்றப் பெயரில் அறங்கேறிய இந்த கொடுமையை தாங்க முடியாத சில ஓரளவு விபரம் உள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினர் முகம் சுலித்தனர். பிற முஸ்லிம் பெயர் தாங்கிகள் இது குறித்தெல்லாம் எதுவும் கண்டுக் கொள்ளாமல் ‘ஜம்’மென்று சுன்னத் பேஜ் குத்திக் கொண்டு அலைந்தனர்.

பில்லி சூனியம் செய்வினை

ஆன்மீக சிந்தனையுள்ளவர்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று சூனியமாகும். இந்த நம்பிக்கை வேரூன்றிய இடங்களில் அதன் பாதிப்புகள் குறித்த பேச்சும் பிரச்சாரமும் அதிகமாகவே இருக்கும். ஆன்மீக வாதிகள் சூனியத்தை நம்புகிறார்கள் என்ற பொதுவான கருத்திலிருந்து முஸ்லிம்களும் விடுபட வில்லை. இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் நிலைப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சூனியம் பற்றி பேசும் குர்ஆன் வசனங்களும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு அதன் காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று வரும் ஹதீஸ்களும் அவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ‘இறைத்தூதருக்கே சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்’ என்று தமது சூனிய நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம்களைப் பார்க்கிறோம். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாத்தியமா.. என்ற சாதாரண சிந்தனைக்கூட இவர்களிடம் எட்டுவதில்லை.

மேலும் வாசிக்க

மண் கேட்ட படலம்!

அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரில்(அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரில்(அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரில்(அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில்(அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங் கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல்மவ்தை அல்லஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

மேலும் வாசிக்க

கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே!

அன்னையர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் வாசிக்க

இஸ்ராயீல்????

‘மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றிட இஸ்ராயீல்’ என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான்; அவர் தான் உயிர்களைக் கைப்பற்றுகின்ற வானவர்’ என்று பரவலாக நம்புகிறார்கள்.

ஆனால் இஸ்ராயீல்’ என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள்நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை.

ஒரே ஒரு வானவர் தான் அனைவருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.

மேலும் வாசிக்க

786 என்பதைப் பயன்படுத்தலாமா ?

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்களைக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1 , பே 2 , ஜீம் 3 , தால் 4)

‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ‘ என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும்.

மேலும் வாசிக்க

ஜனாஸாவில் செய்யக் கூடாதவைகள்

தல்கீன் ஓதுதல்:

ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர்.

உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம் எது? எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு ‘ என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள். மேலும் வாசிக்க

நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ

தலைப்பை படித்தவுடன் உங்களில் சிலர் கதிகலங்கிப் போயிருப்பீர்கள் ஆம் இப்படிப்பட்ட கலக்கம் எனக்கு ஏற்பட்டதன் விளைவுதான் இந்த கட்டுரை.

 சகோதர, சகோதரிகளே பயப்படவேண்டாம்! இந்த கட்டுரையில் வழிகேட்டின் பாதையை தோலுறித்துக்காட்டி அதன்மூலம் வழிதவறிவிடாதீர்கள் என்று அழகிய முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது எனவே பொறுமையாக சிந்தித்து படியுங்கள் நீங்கள் உண்மையாளர்களாக மாற இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். (அல்ஹம்துலில்லாஹ்)!

மேலும் வாசிக்க

மரம் ருக்கூ செய்கிறதா? மலை சஸ்தா செய்கிறதா?

ஒரு முஸ்லிமுக்கு உண்டான அழகிய பண்பு என்னவெனில் அவன் அல்லாஹ்வையும், மலக்குமார்களையும், தூதர்களையும், வேதங்களையும், மறுமை நாளையும், சுவர்கம், நரகம் ஆகிய வற்றையும் முழுமையாக நம்ப வேண்டும்.  அதே போன்று அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக விளக்கிக் கூறும் மறைவான ஞானம் பற்றிய செய்திகளையும் ஆதாரம் இல்லையென்றாலும் அல்லாஹ்வும் அவனது நபிமார்களும்  கூறுவதால் நம்ப வேண்டும்!

 ஆனால் நம்மில் பலர் அருள்மறை குர்ஆனை படித்தவுடன் அதில் கூறப்பட்டுள்ள மறைவான ஞானம் பற்றிய தகவல்களை உணர்கிறார்கள் ஆனால் அதை எவ்வாறு அணுக வேண்டுமோ அவ்வாறு அணுகாமல் விழிபிதுங்கி வழிதவறிவிடுகிறார்கள. இதற்கு காரணம் என்ன என்று சிந்தித்துப்பார்த்தால் அவர்கள் அல்குர்ஆனை ஒழுங்காக விளங்காததுதான் என்பது தெளிவாகிறது.  மேலும் வாசிக்க

ஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்…   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பாதீர்கள் இது முழுக்க முழுக்க அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது விபரமரியாத மனிதர்களை ஏமாற்றும் குருட்டு வித்தையாகும்.

 உதாரணமாக உங்கள் அன்பு மகனுக்கோ அல்லது மகளுக்கு திருமணம் செய்ய நாடுவீர்கள் ஆனால் இந்த ஜோதிடர்கள் செவ்வாய்தோஷம் என்று கூறி அந்த இளம் ஆண், பெண்ணின் திருமணத்தை தடை செய்வார்கள் இதனால் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி ஆணும், பெண்ணும் 35 வயது வரை இல்லற சுகத்திற்கு ஏங்கி அறை கிழட்டு பருவத்தை அடைந்த பிறகு திருமணம் செய்து குழந்தை பேறு இல்லாதவர்களாகவும், வயது முதிர்ந்த நிலையில் தங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு கணவன், மனைவி பொருத்தம் அமையாமலும் காணப்பட்டு வாழ்க்கை முழுவதும் அலங்கோளமாக காணப்படுவார்கள். மேலும் 35 வயதில் தகப்பனை இழந்தும், தாயை இழந்தும் அநாதைகளாக திருமணம் செய்துக்கொள்பவர்கள் எத்தனை பேர் சிந்தியுங்கள் ஏன் இந்த அவலம்.

மேலும் வாசிக்க

சிலை வணக்கம் ஒரு கண்ணோட்டம்!

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! படைத்த இறைவன் (அல்லாஹ்) மனிதனுக்கு அறிவைக் கொடுத்தான் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்தான் மனவலிமை மற்றும் உடல் வலிமையையும் கொடுத்தான் ஆனால் இந்த பாக்கியங்கள் அனைத்தையும் பெற்ற மனிதன் படைத்த இறைவனை மறந்துவிட்டு அவனை வணங்குகிறோம் என்று கூறிக்கொண்டு சிலைகளையும் சிற்பங்களையும் வணங்குகிறான்.

மேலும் வாசிக்க

நல்ல நேரம்(?)

நமது வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற சுப காரியங்களுக்கான தினத்தை முடிவு செய்யும் போது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறு என்னவெனில் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து அந்த தேதிகளை முடிவு செய்வதாகும்.

மேலும் வாசிக்க

ஆவி உலகம்! ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்!

ஆவி இருக்கு என நம்பினால் சிர்க்-ல் விழுந்து விடுவீர்கள் (எச்சரிக்கையாக இருக்கவும்)

ஆவி இருப்பதாக நம்பினால் அது மனிதனுக்குள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை வளரும். ஆவி புகுந்த மனிதனை குணப்படுத்த ஒரு சக்தி வேண்டும் அதற்காக ஏர்வாடி தர்காஹ் உங்கள் நினைவுக்கு வரும்! ஏர்வாடி தர்காஹ்வில் உள்ள சமாதிக்கு சக்தி இருப்பதாக நம்ப வேண்டிவரும்! தர்காஹ் நம்பிக்கை வளர்ந்தால் கத்தம் ஃபாத்திஹா,  சந்தனகூடு மற்றும் சமாதி கும்பிடு போட வேண்டிய நிலை வளரும்! இறுதியாக அல்லாஹ்வுக்கு இணையாக அவ்லியாக்களை வணங்கி வழிதவறி ஷிர்க்கில் வீழ்ந்து விடுவீர்கள்!

  மேலும் வாசிக்க

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்

இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம். இஸ்லாம் ஒரு தூய மார்க்கம். இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும் உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம். மேலும் வாசிக்க

ஜோதிடப் பிரியருக்கு…

மாற்றுமத சகோதரரின் கேள்வி: ஜோதிடத்தால் ஒருவன் லாபமும் மற்றொருவன் நட்டமும் அடையும் நிலையிருந்தால் அது ஏமாற்றும் கலையாகவும், ஏன் குற்றமாகவும் அமையும்?

 பதில்: மாற்றுமத சகோதரர் அவர்கள் இவ்வாறு கூறுவதன் மூலம் ஜோதிடத்தால் யாருக்கும் ஏமாற்றம் ஏற்படுவது கிடையாது என்ற மாயையை ஏற்படுத்துகிறார் மேலும் இந்த ஜோதிடத்தை ஒரு கலையாக வர்ணிக்கவும் முற்படுகிறார்.

மேலும் வாசிக்க

இஜ்ராயீலா? யார் அவர்!

இஜ்ராயீல் என்ற மலக்கு இருப்பதாகவும் அவர்தான் உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு என்றும் பொதுவாக நம்பப்படுகிறது அப்படி ஒரு மலக்கு இருக்கிறாரா?  நல்லோர் தீயோர் மரண நேரம் பற்றிய கருத்து என்ன?

பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள் أَللَّهُمَّ رَبَّ جِبْرَائِيْلَ، وَمِيْكاَئِيْلَ، وَرَبَّ إِسْرَافِيْلَ، أَعُوْذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ

பொருள்: யாஅல்லாஹ்! ஜிப்ரயீல், மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இறைவா! நரக வெப்பம் மற்றும் மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதார நூற்கள்: திர்மிதி, நஸயீ) நல்லவர் தீயவர் ஆகியவர்களின் மரண வேலையில் மலக்குகளின் அணுகுமுறை இதுதான்! முஃமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து மறுமையை நோக்கிக் கொண்டிருக்கையில் சூரிய ஒளிக்கொப்பான, பிரகாசமுள்ள முகத்துடன் சில மலக்குகள் அவனிடம் வருவார்கள் சுவர்க்கத்தின் நறுமணத்துடன் கூடிய துணியையும் எடுத்து வருவார்கள், அவர்களில் உயிர் பறிக்கும் மலக்கு அவனிடத்தில் வந்தமர்ந்து உயிரை வெளியேறும்படி கட்டளையிடுவார். அது (உயிர்) தோல்பை யிலிருந்து (சுலபமாக) நீர் வெளியேறுவதைப் போல் (மிகச்சுலபமாக) வெளியேறிவிடும்.

மேலும் வாசிக்க

மூடப் பழக்கங்களை தவிர்த்து வாழ்வதே அல்லாஹ் காட்டிய நேர்வழி!

அன்று அரபு நாட்டில் ஒருவனுக்கு நோய் ஏற்பட்டு விட்டால் அனேகமானோர் மூடத்தனமான வழிகளினாலே நிவாரணங்களை மேற்கொண்டனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வைத்தியம் செய்ய வில்லை. போலிச் சிலைகளுக்கு நேர்ச்சை செய்தனர்; சூன்யகாரர்களிடம் சரணடைந்தனர்; சோதிடர்களை நம்பினர்; தாயத்துகளை அணிந்தனர்; சகுனம் பார்த்தனர்; இது போன்ற போலி நம்பிக்கைகளினால் பகைமையை வளர்த்தனர். சில சமூகத்தவர்கள் பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிருடன் புதைத்தனர். இவ்வாறான பெரும் பாவங்களிலிருந்து மக்களை மீட்பதற்கு அல்லாஹ் இறுதித் தூதரை அனுப்பி அல்குர்ஆனின் ஒளியில் நேர்வழி காட்டினான். நோய் வாய்ப்பட்டவன் செய்ய வேண்டிய நிவாரணத்தை இறைத் தூதர்(ஸல்) பின்வருமாறு போதித்தார்கள்.

மேலும் வாசிக்க

சாமியார்கள்!

நாட்டின்  பல பாகங்களிலுருந்தும் போலிச் சாமியர்களைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன.  துறவறத்தைக் கடை பிடிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்கள் தங்களிடம் வரும்  பெண்களையும் ஆசிரமங்களில் தங்கியிருக்கும் பெண்களையும் கற்பழிப்பது சர்வ சாதரணமாகி  விட்டது. சாமியார்களின் இழிச் செயல்களினால் பக்தி பகல் வேஷமாகி வருகிறது. அறிவில்  குறைந்த அடிமட்ட மனிதர்கள் தங்கள் அறியாமையாலும் சுய சிந்தனையற்ற போக்காலும் இந்தச்  சாமியார்களை இறைவனின் பக்தர்களாக அவதாரங்களாக நம்பி மோசம் போகிறார்கள்.

மேலும் வாசிக்க

மண் கேட்ட படலம்

அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயீல் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயீலும் தோல்வியோடு திரும்பி சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால்தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

மேலும் வாசிக்க

ரகசிய ஞானம்…

சில ரகசிய ஞானத்தை, சிலருக்கு மட்டும் நபிصلى الله عليه وسلم அவர்கள் கற்றுக்கொடுத்தாக ஹதீஸ் உள்ளதாக முரீது கொடுப்போர் கூறுகின்றனர். ரகசிய ஞானம் என்று கூறிப்பாமர மக்களை ஏமாற்றுவது அதிகரித்துள்ளது.  அதனால் இது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

மேலும் வாசிக்க