ஆவி உலகம்! ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்!

ஆவி இருக்கு என நம்பினால் சிர்க்-ல் விழுந்து விடுவீர்கள் (எச்சரிக்கையாக இருக்கவும்)

ஆவி இருப்பதாக நம்பினால் அது மனிதனுக்குள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை வளரும். ஆவி புகுந்த மனிதனை குணப்படுத்த ஒரு சக்தி வேண்டும் அதற்காக ஏர்வாடி தர்காஹ் உங்கள் நினைவுக்கு வரும்! ஏர்வாடி தர்காஹ்வில் உள்ள சமாதிக்கு சக்தி இருப்பதாக நம்ப வேண்டிவரும்! தர்காஹ் நம்பிக்கை வளர்ந்தால் கத்தம் ஃபாத்திஹா,  சந்தனகூடு மற்றும் சமாதி கும்பிடு போட வேண்டிய நிலை வளரும்! இறுதியாக அல்லாஹ்வுக்கு இணையாக அவ்லியாக்களை வணங்கி வழிதவறி ஷிர்க்கில் வீழ்ந்து விடுவீர்கள்!

  மேலும் வாசிக்க

Advertisements

அல்லாஹ்வின் சாபம்!

சகோதர சகோதரிகளே! நம்மில் எத்தனைபேர் சுவனம் சென்று அங்குள்ள சந்தோஷத்தை அடையவார்கள் என்பதை என்னிப்பார்த்தால் மனதிற்கு கவலையளிக்கிறது! நாம் சுவனம் செல்லவேண்டாமா? அங்குள்ள சுவையை அடையவேண்டாமா?

நீங்கள் அல்லாஹ்வின் எந்த நபியையாவது தங்கள் கண்களால் கண்டிருக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை என்பதுதான் தங்கள் பதிலாக இருக்கும், சரி நாம் நல்ல அமல்களை செய்து மரணித்த பிறகாவது (அல்லாஹ்வின் விருப்பப்படி) சுவனம் சென்று நம் அழகிய நபிமார்களை சந்திக்க வேண்டாமா? அவர்களுடன் உறையாட வேண்டாமா?

மேலும் வாசிக்க

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்

இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம். இஸ்லாம் ஒரு தூய மார்க்கம். இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும் உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம். மேலும் வாசிக்க

இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!

உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம்.  மேலும் வாசிக்க

ஷைத்தானின் அடிச்சுவடுகள்!

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான்அடிக்கு அடிபின்பற்றுவீர்கள்.எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள்சென்றால் நீங்களும்செல்வீர்கள். (புகாரி : 7319    3456)

என் இனிய தர்காஹ்வாதிகளே மேற்கண்ட நபிமொழிக்கு ஏற்றாற்போன்று நடந்துக்கொள்கிறீர்களே கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?

மேலும் வாசிக்க

பள்ளிவாசல்களில் கப்றுகள் கட்டலாமா?

ஒரு மனிதனை கப்ரில் அடக்கம் செய்த பின் அந்த கப்ரைஅடையாளம் காட்டு வதற்காக ”ஒரு சாண் அளவுக்கு” மட்டுமே உயர்த்துவதற்க இஸ்லாத்தில் அனுமதியுண்டு. அதற்கு மேல் கப்ரை உயர்த்தக் கூடாது. கப்ரை கட்டக்கூடாது. கப்ரின் மேல் எழுதுவதோ அல்லது பூசுவதோ கூடாது. உயர்த்தப்பட்ட கப்ருகளை உடை த்து தரைமட்டமாக்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். நூல் அபூதாவூத்)   மேலும் வாசிக்க

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்

 அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)  மேலும் வாசிக்க

கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்

பொதுவாகக் கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் காரணமாக இருந்தது மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல் தான். கடவுளுக்குக் காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும், கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதையும் மனிதன் நேரடியாகப் பார்க்கிறார்கள்.  மேலும் வாசிக்க

இடைத் தரகருக்கு இடமில்லை

மனிதனுக்கேற்ற மார்க்கம்; பொதுவாகவே மதங்கள் என்றால் மனிதனை ஏமாற்றும் ஒரு வழி என்று ஆகி விட்டது. இதற்கு அடிப்படையாக அமைவது மதங்களில் காணப்படும் இடைத் தரகர் கோட்பாடாகும். எந்த மதமாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக நெருங்க முடியாது. அதற்குரிய மத குருமார்களிடம் போய் அவர்களுடைய துணையுடன் தான் கடவுளிடம் நெருங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும் வாசிக்க

கடவுளின் பெயரால் வரம்பு மீறுதல்

மனிதனுக்கேற்ற மார்க்கம்; யாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக இருந்தாலும் அதில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்கிறேன் என்ற பெயரில் மனைவி மக்களுக்குச் செய்யும் கடமைகளில் இருந்து கூட ஒருவன் விலகக் கூடாதென்று சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம். கடவுளை நான் வழிபடுகிறேன். பள்ளிவாயிலில் 24 மணி நேரமும் இருக்கின்றேன் என்று கூறிக்கொண்டு மனைவியைத் தெருவில் விட்டுவிட்டுச் சென்றால் அவன் கூட இஸ்லாமியப் பார்வையில் ஒரு குற்றவாளியே.  மேலும் வாசிக்க

முஹர்ரம் மாதம்

முஹர்ரம் பண்டிகையும் இணைவைப்பாளர்கள் கடைபிடிக்கும் அநாச்சாரங்களும்

இது இஸ்லாத்திற்கு முரணானது!

முஹர்ரம் மாதம் வந்துவிட்டாலே ஏதோ வானமே இடிந்து தங்கள் தலைகளின் மீது விழுந்துவிட்டது போன்றும் வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் உதிர்ந்துவிட்டது போன்றும் ஒருவகையான சோகம்தான் பெரும்பாலும் இணைவைப்பு முஸ்லிம்கள் மத்தியில் வந்துவிடுகிறது. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று காரணம் கேட்டால் முஹர்ரம் மாதம் மாபெரும் துக்ககரமான மாதம் என்றும் இந்த மாதத்தில்தான் நபிகளார் (ஸல்) அவர்களின் அருமைப் பேரப்பிள்ளைகளான ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோர் கர்பலா போர்க்கல மைதானத்தில் வீரத்தியாகம் செய்தார்கள் என்றும் அதற்காகத்தான் தாங்கள் துக்கம் அணுசரிப்பதாகவும் கூறுகிறார்கள். இவர்களுடைய மூடநம்பிக்கை மற்றும் அநாச்சாரங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இது முழுக்க முழுக்க மார்க்க விரோதமான செயல்கள் மட்டுமல்லாது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே தகர்த்தெரியும் காரியங்களில் ஒன்றுமாகும். ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி) ஷஹீதானார்கள் என்று ஒருநாளை ஒதுக்கி அந்த நாளை மாபெரும் துக்க-நாளாக அனுசரித்து, நெஞ்சில் அடித்துக்கொண்டு ஒப்பாரிவிட்டு அழக் கூடிய தவறான கொள்கைவாதிகள் தங்களது கொள்கையின் மூலம் இஸ்லாத்தின் அடிப்படையே உடைக்கிறார்கள் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன இதோ உங்கள் பார்வைக்கு சில:

மேலும் வாசிக்க

இஜ்ராயீலா? யார் அவர்!

இஜ்ராயீல் என்ற மலக்கு இருப்பதாகவும் அவர்தான் உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு என்றும் பொதுவாக நம்பப்படுகிறது அப்படி ஒரு மலக்கு இருக்கிறாரா?  நல்லோர் தீயோர் மரண நேரம் பற்றிய கருத்து என்ன?

பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள் أَللَّهُمَّ رَبَّ جِبْرَائِيْلَ، وَمِيْكاَئِيْلَ، وَرَبَّ إِسْرَافِيْلَ، أَعُوْذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ

பொருள்: யாஅல்லாஹ்! ஜிப்ரயீல், மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இறைவா! நரக வெப்பம் மற்றும் மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதார நூற்கள்: திர்மிதி, நஸயீ) நல்லவர் தீயவர் ஆகியவர்களின் மரண வேலையில் மலக்குகளின் அணுகுமுறை இதுதான்! முஃமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து மறுமையை நோக்கிக் கொண்டிருக்கையில் சூரிய ஒளிக்கொப்பான, பிரகாசமுள்ள முகத்துடன் சில மலக்குகள் அவனிடம் வருவார்கள் சுவர்க்கத்தின் நறுமணத்துடன் கூடிய துணியையும் எடுத்து வருவார்கள், அவர்களில் உயிர் பறிக்கும் மலக்கு அவனிடத்தில் வந்தமர்ந்து உயிரை வெளியேறும்படி கட்டளையிடுவார். அது (உயிர்) தோல்பை யிலிருந்து (சுலபமாக) நீர் வெளியேறுவதைப் போல் (மிகச்சுலபமாக) வெளியேறிவிடும்.

மேலும் வாசிக்க

தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு!

தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?

 தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!  மேலும் வாசிக்க

ஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா? பிராமணரா?

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே!

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – (அல்குர்ஆன் 6:108)

பிற மதத்தவர்கள் வணங்குபவற்றை ஏசக்கூடாது என்று நம் மார்க்கம் நமக்கு வலியுறுத்துகிறது. இஸ்லாம் என்ற எளிமையான மார்க்கம் அல்லாஹ்வைத் தவிர எதையும் வணங்கக்கூடாது என்று ஓரிரைக்கொள்கையை போதிக்கிறது ஆனால் இந்த கொள்கையை தகர்க்கும் விதமாக வரம்பு மீறி மாற்றுமதத்தவர்கள் நம் மார்க்கத்தை தங்கள் வழிபாட்டுத்தளங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதில் சபரிமலை ஐயப்ப கோவில் அதற்கு உதாரணமாக விளங்குகிறது. எனவே உண்மையை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்ன நிர்பந்தத்தின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவற்றை பற்றி ஏசவில்லை மாறாக விளக்கிக்கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். (மாற்றுமதத்தவர்கள் மன்னிக்கவும்)

மேலும் வாசிக்க

மூடப் பழக்கங்களை தவிர்த்து வாழ்வதே அல்லாஹ் காட்டிய நேர்வழி!

அன்று அரபு நாட்டில் ஒருவனுக்கு நோய் ஏற்பட்டு விட்டால் அனேகமானோர் மூடத்தனமான வழிகளினாலே நிவாரணங்களை மேற்கொண்டனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வைத்தியம் செய்ய வில்லை. போலிச் சிலைகளுக்கு நேர்ச்சை செய்தனர்; சூன்யகாரர்களிடம் சரணடைந்தனர்; சோதிடர்களை நம்பினர்; தாயத்துகளை அணிந்தனர்; சகுனம் பார்த்தனர்; இது போன்ற போலி நம்பிக்கைகளினால் பகைமையை வளர்த்தனர். சில சமூகத்தவர்கள் பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிருடன் புதைத்தனர். இவ்வாறான பெரும் பாவங்களிலிருந்து மக்களை மீட்பதற்கு அல்லாஹ் இறுதித் தூதரை அனுப்பி அல்குர்ஆனின் ஒளியில் நேர்வழி காட்டினான். நோய் வாய்ப்பட்டவன் செய்ய வேண்டிய நிவாரணத்தை இறைத் தூதர்(ஸல்) பின்வருமாறு போதித்தார்கள்.

மேலும் வாசிக்க

அவ்லியாக்கள்

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அவர் சாதரண மனிதனாக இருந்தாலும் அல்லது அவர் அவுலியாவாக இருந்தாலும் இறப்பை தழுவிதான் ஆக வேண்டும். ஆனால் மக்களில் சிலர் அவ்லியாக்கள் வெளி உலகத்துக்குத்தான் இறந்தவர்கள். உண்மையில் அவர்கள் கப்ருக்குள் உயிருடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறி சமாதி வழிபாடு செய்கிறார்கள்.

மேலும் வாசிக்க

பையத்தா? மையத்தா?

தெள்ளத் தெளிவாக குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும் முரணாக மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே பிர்- முரீது வியாபாரம் நடந்து வருகிறது. அந்த வியாபாரத்தில் இரகசியம்! இரகசியம்! என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அந்த ரகசியம் என்ன? என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்துகிறது. யாரையும் கேவலப்படுத்தும் நோக்கத்துடன் அல்ல. மக்களுக்கு சத்திய மார்க்கத்தை உணர்த்த இக்கட்டுரை இடம் பெறுகிறது.

மேலும் வாசிக்க

தலைவர்களுக்கு சிலை தேவையா?

மக்களுக்கு தொண்டு செய்து, அதன் முலம் மக்களிடையே  பிரபலமானவர்களுக்கு, அவர்கள் இறந்தபின், சிலருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே  அவர்களது உருவத்தை மாலையாக வடித்து, பல இடங்களில் நிறுத்தி மாலையிட்டு மரியாதை  செய்து வருவதைப் பார்த்து வருகிறோம்.

மேலும் வாசிக்க

சாமியார்கள்!

நாட்டின்  பல பாகங்களிலுருந்தும் போலிச் சாமியர்களைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன.  துறவறத்தைக் கடை பிடிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்கள் தங்களிடம் வரும்  பெண்களையும் ஆசிரமங்களில் தங்கியிருக்கும் பெண்களையும் கற்பழிப்பது சர்வ சாதரணமாகி  விட்டது. சாமியார்களின் இழிச் செயல்களினால் பக்தி பகல் வேஷமாகி வருகிறது. அறிவில்  குறைந்த அடிமட்ட மனிதர்கள் தங்கள் அறியாமையாலும் சுய சிந்தனையற்ற போக்காலும் இந்தச்  சாமியார்களை இறைவனின் பக்தர்களாக அவதாரங்களாக நம்பி மோசம் போகிறார்கள்.

மேலும் வாசிக்க

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்

ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளைவிட, இவர்கள் பெயரால்தான் அதிகமாக பொய்யான கதைகள் உலவுகின்றன. இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய தகாத சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப்  பிரச்சாரமும் செய்யப்படுகின்றது.

மேலும் வாசிக்க

தர்ஹா மாயை?

இன்றைய முஸ்லிம்கள் பெரும் தொகையினர் தர்கா மாயையில் சிக்கி கத்தம் பாத்திஹா, மெªலூது, கந்தூரி போன்ற சடங்குகள் என்று மூழ்கியுள்ளனர். தர்ஹா என்ற பெயரில்  இறந்தவர்களின் அடக்கஸ்த்தலங்கள் இல்லாத ஊரே இல்லை என்ற அளவுக்கு முஸ்லிம்கள் தர்ஹாக்களை கட்டி நிரப்பி இருக்கிறார்கள். ஒரு சில ஊர்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தர்ஹாக்கள் இருப்பதையும் காணலாம். அதே போல் மாதம் ஏதாவது ஒரு அவுலியாவின் பெயரால் மெªலூதோ, பாத்திஹாவோ ஓதத் தவறுவதில்லை.

மேலும் வாசிக்க

மத வியாபாரம்!

இஸ்லாத்தில் ஜோதிடம் இல்லை; அதே நேரத்தில் இஸ்லாமியர்களிடம் இந்த ஜோதிடம் எந்த அளவுக்கு இடம் பெற்றுள்ளது என்பதை நாம் அலசக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் வாசிக்க

இறை நேசர் என்பவர் யார்?

இறைவனால் நேசிக்கப்படும் நேசர்களே இறை நேசர்களாவர்! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரன்புக்கு உகந்தவர்கள் யார் என்பது இறுதித் தீர்ப்பு நாளில் அன்றோ தெரியும்! இவர், இவர் தாம் இறைநேசச் செல்வர்கள் என்னும் பட்டியலை இறுதி தீர்ப்பு நாளன்று தானே அல்லாஹ் வெளியிடுவான்.

மேலும் வாசிக்க

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!

நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்! புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.

மேலும் வாசிக்க

முரீது வியாபாரிகள்

பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர். ‘ஆன்மீகப் பாட்டை’ என்பார்கள், ‘ஆத்மீகப் பக்குவம்’ என்பார்கள், ‘அந்தரங்கக் கல்வி’ என்பார்கள், ‘ரகசிய ஞானம்’ என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள். எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.

மேலும் வாசிக்க

‘பித்அத்’ ஓரு ஆய்வு

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாகி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு  இருக்கின்றனரா?  மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்ககூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (அல் குர்ஆன் 42:21)

மேலும் வாசிக்க

எது நபி வழி?

மனிதன் சிந்தனை செய்யக்கூடியவன். சிந்தித்து தெளிவு பெறாத எவரும் முழு மனிதராகார். இப்புவியையும் விண்ணையையும் படைத்து அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் படைத்து பயன் பெற மனிதனையும் படைத்து அம்மனிதனுக்கு தலையாய முதன்மையான கடமையான உணர்வுடன் தன்னை வணங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றான் எல்லாம் வல்ல இறைவன்!

மேலும் வாசிக்க

பட்டதாரிகள் முதல் பாமரர்கள் வரை

மனிதரில் எவரும் தன்னை அறிவற்றவர் என்று ஒப்புக் கொள்வதில்லை. அறிவு வளர வளரத்தான் தன்னுள் எந்த அளவு அறியாமை குடி கொண்டுள்ளது என்பது புலப்படும். விண்ணையும் மண்ணையும் தன்னையும் படைத்து போஷித்துப் பரிபாலித்து வரும் இணை துணையற்ற ஒரே ஒரு இறைவன் இருக்கிறான் என்பதை பகுத்தறிய முடியாதவர்கள் தங்களை அறிவு ஜீவிகள் என்று அலட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை. அதே போல் அந்த இறைவனை ஒப்புக்கொண்ட பின்னர் அவனது தனித்தன்மைகளை, தெய்வாம்சங்களை இறந்து போன மனிதப் புனிதர்களுக்கும் மற்றும் படைப்பினங்களுக்கும் கொடுத்து மரியாதை செய்பவர்களும் அறிவாளிகளாக இருக்க முடியாது.

மேலும் வாசிக்க

நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை

நபி (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்படி நம்புவதற்கும் அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆராய்வதற்கு முன் இது ஒரு மூட நம்பிக்கைதான் என்பதற்குறிய காரணங்களைப் பார்ப்போம்.

மேலும் வாசிக்க

குறுக்கு வழியும், நேர் வழியும்

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துகளைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது.

மேலும் வாசிக்க

“பித்அத்” அனைத்தும் வழி கேடு

நபிஅவர் கூறுகிறார்கள்:- எனக்குமுன் அல்லாஹ்       அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும்  இருந்திருக்கிறார்கள்.  அவர்கள்       அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள்       செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன்       தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது       செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும்  மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னு       மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்)

மேலும் வாசிக்க

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!

நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்! புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.

மேலும் வாசிக்க

திக்ர் என்ற பெயரால்…..

திக்ர் என்ற பெயரால் அரங்கேற்றப்படும் அணாச்சாரங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மா பரிசுத்தப்பட வேண்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் தீமை, பாவங்களின் கரைகள் கழுவப்பட்டு அதிலிருந்து பாதுகாப்பும் பெறவேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது. மிகக் கெட்டவனாக இருந்தபோதிலும் எப்போதவது அவன் உள்ளம் இப்படி சிந்திப்பதுண்டு. இறைநினைவு ஒன்று மட்டுமே இத்தீய நிலைகளிலிருந்து காப்பாற்றி… தன்னை மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழச்செய்யும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மேலும் வாசிக்க

ரபீஉல் அவ்வல்

ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி صلى الله عليه وسلم அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.

மேலும் வாசிக்க

ஸலவாத்துன்னாரிய்யா

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அருமை ஸஹாபாக்கள் ‘உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவது’ என்று கேட்டபோது, நபி அவர்கள் ‘ஸலவாத்’ கூறும் முறைகளை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் எவற்றை ‘ஸலவாத்’ என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து நாமாகப் புதிய ‘ஸலவாத்’ களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக ‘பித்அத்’ஆக அவை கருதப்படும். இதற்கு உதாரணமாக ‘இப்னு அபீ ஜைது’ என்ற அறிஞர் ‘வர்ஹம் முஹம்மதன் வஆல முஹம்மத்’ என்று ஒரு புதிய ஸலவாத்தை அவராக தயாரித்தபோது அன்றைய அறிஞர் உலகம் அவரை வன்மையாகக் கண்டித்து ‘அவர் மார்க்கத்தை அறியாதவர்’ என்றும் முடிவு கட்டியது.

மேலும் வாசிக்க

தர்காஹ் வழிபாடு

சகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்கள் கேட்ட கேள்வி?

நான் ஒரு தீராத குழப்பத்தில் இருகிறேன்! தர்கா போவது சரியா தவறா.. ? கப்ரு கட்டிடமாக எழுப்ப வேண்டாம் என்று முகம்மது[SAW] சொல்லி இருக்கிறார் ..அனால் தர்கா செல்ல கூடாது என்று ஹதீஸ் இருகிறதா.. இல்லை குரான் வசனங்கள் இருகிறதா..?

மேலும் வாசிக்க