தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு

தராவீஹ் தொழுகை என்று ஓர் தொழுகை இல்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானில் இருபது ரக் அத் தொழுததில்லை என்பதை தெளிவான சான்றுகளூடனும், இருபது ரக்அத்தை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விரிவான மறுப்புடனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் தலைப்புகளில் தராவீஹ் பற்றி முழுமையாக அலசும் நூல் தராவீஹ் என்ற சொல்லே இல்லை தஹஜ்ஜத் வேறு, தராவீஹ் வேறு என்ற வாதம் இரவுத் தொழுகையின் நேரம் ரக்அத்களின் எண்ணிக்கை 4+5=9 ரக்அத்கள் ஏழு அல்லது ஒன்பது ரக்அத்கள் 8+3 ரக்அத்கள் வித்ரையும் சேர்த்து 11 ரக்அத்கள் 10 ரக்அத்கள் மட்டும் தொழுதல் 12 ரக்அத்துடன் வித்ரும் தொழுதல் வித்ரையும் சேர்த்து 13 ரக்அத்கள் 5 ரக்அத் வித்ருடன் 13 ரக்அத்கள் ஒரு ரக்அத் வித்ருடன் 11 ரக்அத் வித்ரு தொழுகையின் ரக்அத்கள் 1, 3, 5 ரக்அத்கள் 7 ரக்அத்கள் வித்ரு தொழும் முறை நபிவழி மீறப்படுதல் 20 ரக்அத்கள் பற்றிய ஆய்வு நபியவர்கள் இருபது தொழுதுள்ளார்களா?

மேலும் வாசிக்க

Advertisements

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்!

ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல் உரிய கவுரவத்தைக் கொடுக்காமல் அவர்களிடம் பொய் சொல்லி அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம்.எனவே நாம்,நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

மாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் மத்ஹபு எனும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறது. ‘மத்ஹபுகளும் குர்ஆன், ஹதீசுக்கு  உட்பட்டவை தான்; குர்ஆன், ஹதீஸிலிருந்து தொகுக்கப் பட்டவை தான்” என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஆனால் மத்ஹபுகளுக்கும் குர்ஆன், ஹதீசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
மேலும் மத்ஹபு நூற்களில், ஒவ்வொரு மத்ஹபினரும் தங்கள் மத்ஹபைப் பற்றி உயர்த்தியும், மற்ற மத்ஹபுகளைத் தாழ்த்தியும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். தங்கள் மத்ஹபு மீது வெறியை ஊட்டி, மக்களைத் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் நோக்கம். மேலும் வாசிக்க

இன்பமும் துன்பமும்!

உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும்  இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான். மேலும் வாசிக்க

மீலாதும் மவ்லூதும்.

ரபியுல் அவ்வல் மாதம் ஊர் எல்லாம் ஒரே விழாக்கோலம் தான்! தெருவெங்கும் மீலாது விழா! (இறை) இல்லங்களில் மவ்லீதுகள்….. கொண்டாட்டங்களுக்கு குறையே இருக்காது. மீலாதுகளையும் மவ்லீதுகளையும் செயல்படுத்தினால் இறை திருப்தியும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பரிந்துரையும் கிட்டும் என்பது இன்றைய பல முஸ்லிம்களின் நம்பிக்கை. இவை இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தராத புதிய கலாச்சாரம், (பித்அத்) இறைத்தூதரும், அவர் தம் தோழர்களும் நடைமுறைப் படுத்தாத இந்த மீலாது – மவ்லீது ஹிஜ்ரி 600-ல் எகிப்து அரசன் இர்பல்’ என்பவரால் சில மூட முஸ்லிம்களின் கோரிக்கை மூலம் உருவானது.

இயேசு நாதருக்கு பிறந்த நாள் கொண்டாடும் போது, நமது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏன் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது? என்ற எண்ணத்தில் பிறந்ததே இந்த மீலாத் விழா! மவ்லீது பாடல்கள்!!!
நாம் உமது புகழை உயர்த்தி விட்டோம்! திருக்குர்ஆன் 94:4

மேலும் வாசிக்க

செவிகளை பேணுவோம்!

இறைவன் மனிதனுக்கு எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். மனிதர்களின் நல்வாழ்விற்காக வெளியுலகில் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருப்பதை போன்று மனிதனுக்குள்ளாகவும் பல அருட்கொடைகளை பரிசளித்திருக்கின்றான். அந்த வகையில் மனித உடலுறுப்புகளில் அழங்கரித்து கொண்டிருக்கும் இரு செவிகள் மிகச் சிறந்த அருட்கொடையே.

அமானிதம் பாழ்படுத்தப்படும்…

மனைவியுடைய நகைகளையும் சொத்துக்களையும் விற்று கடன் வாங்கி கொடுத்தப் பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக்கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலைநிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள். வாங்கியக் கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டுவிட்டு ஓடி ஒழியும் கல்நெஞ்சக்காரர்களை கணக்கில் அடக்கிவிட முடியாது. நிலத்தை விற்பதாகக் கூறி பொய்யான பத்திரத்தைக் காட்டி ஏமாற்றும் நெஞ்சில் ஈரமில்லாத ஆசாமிகள் அலைகடலென திரண்டுவிட்டார்கள். இன்றைக்கு நாம் கண்கூடாகப் பார்க்கும் இந்த கயவர்களை பற்றி நபி (ஸல்) அவர்கள் அன்றைக்கே எச்சரித்துள்ளார்கள். மேலும் வாசிக்க

தாடி வைப்பது அவசியமா?

தாடி வைப்பது நபிவழி என்று மக்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள். ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வ­யுறுத்திக் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (5892)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு) களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­ரி)  நூல் : முஸ்­ம் (435) மேலும் வாசிக்க

செல்போன்களால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகள்…

அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை பயன்படுத்தி மனிதன் பல வியத்தகு சாதனைகளை புரிகின்றான். கற்பனைக்கு எட்டாத புதிய புதிய கண்டுபிடிப்புகளை கணக்கின்றி தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். வெறும் நூறு வருட கால இடைவெளியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை எண்ணிப்பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. உலக வாழ்வில் பல இன்னல்களை அகற்றி நேரத்தையும் வேலையையும் இவனது கண்டுபிடிப்புகள் மிச்சப்படுத்தித் தருவதால் உலக மக்கள் அனைவரும் இக்கருவிகளை பெரிதும் விரும்புகிறார்கள்.  மேலும் வாசிக்க

ஒவ்வொரு ஜும்ஆ உரையிலும் கஃப் சூரா ஓத வேண்டுமா?

தற்காலத்தில் சிலர் ஜும்ஆ உரையின்போது காஃப் அத்தியாத்தை ஓதுவது நபிவழி என்றும் ஒவ்வொரு ஜும்ஆவிலும் இதை கட்டாயம் ஓத வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். இதற்கு இவர்கள் பின்வரும் செய்தியை ஆதாரமாகக்கொள்கின்றனர்.

நான் வெள்ளிக்கிழமை அன்று ‘காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிரி­ருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரரி­) நூல் : முஸ்­ம் (1580) மேலும் வாசிக்க

நட்பின் பயன்கள்!

ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும் மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான். இதுபோன்ற உறவுகளில் சிலதை அவன் பெறாவிட்டாலும் கண்டிப்பாக நட்பு என்ற உறவை பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை.

நட்பினால் பல பயன்களை மனிதன் அடைவதால் நாம் எல்லோரும் நட்புகொள்கிறோம். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் தனிமையை விரும்புவதில்லை. துணைக்கு நண்பன் வந்துவிட்டால் நேரம் போவதே தெரியாமல் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் அதிகமாக கூடிவிட்டால் நம்முகத்தில் கவலையையே பார்க்க இயலாது. சந்தோஷமாக காலத்தை கடத்துவதற்கு ஒரு சாதனமாக நட்பு இங்கு பயன்படுகிறது. மேலும் வாசிக்க

அரஃபா நோன்பு ஓர் ஆய்வு…

துல் ஹஜ் மாதம் 9 ஆது பிறை அன்று நோன்பு நோற்கும் வழக்கம் நமது சமுதயாத்தில் உள்ளது. இந்த நோன்பு நோற்றால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கருத்தில் ஹதீஸ் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் இந்த நோன்பை நோற்று வருகின்றனர்.
அரஃபா நோன்பு தொடர்பான இந்த செய்தி பலவீனமானது என்று சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இவர்கள் கூறுவது போல் இந்த செய்தி பலவீனமானதா? அல்லது பலமானதா? என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக அறிந்துகொள்ள இருக்கின்றோம்.
இந்த செய்தி பலவீனமானது என்று கூறுவோர் இதற்கு கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தி என்பது நமது ஆய்வின் முடிவாகும். மேலும் வாசிக்க

பெண் தனியே பயணம் செய்யலாமா?

ஒரு பெண் திருமணம் முடிக்கத்தகாத ஆண் உறவினர் இல்லாமல் பயணம் செய்வது பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றது.

பொதுவாக ஒரு பெண் எந்த சூழ்நிலையிலும் இவ்வாறு பயணம் செய்யக்கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். பெண்ணின் உயிர் உடைமை கற்பு ஆகியவற்றுக்கு பாதுகாப்பு இருக்கும் காலத்தில் இவ்வாறு அவள் பயணம் மேற்கொள்ளலாம் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர். மேலும் சிலர் பெண் குறிப்பிட்ட தூரம் வரை தனியே பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு மேல் பயணம் மேற்கொண்டால் மஹ்ரமான துணை அவசியம் என்று கூறுகின்றனர். மேலும் வாசிக்க

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத அனாச்சாரங்கள் வணக்கவழிபாடுகள் என்ற பெயரில் நம் சமுதாயத்தில் ஊடுருவி இருந்தது. ஹதீஸ் கலையை படிக்காத அல்லது படித்தும் அதனை செயல்படுத்தாதவர்கள் இந்த அனாச்சாரங்களுக்கு பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டினர்.

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் ஏகத்துவம் வந்த பிறகு இந்த ஹதீஸ்களின் உண்மை நிலை மக்களுக்கு விளக்கப்பட்டு ஓரளவுக்கு இந்த அனாச்சாரங்கள் ஒழிந்துவிட்டது. இது போன்று பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து இஷ்ராக் தொழுகை என்ற வணக்கத்தை மக்கள் செய்து வருகின்றனர். மேலும் வாசிக்க

பேச்சின் ஒழுங்குகள்!

ஒருவனுடைய நடை உடை பாவனைகள் அவனிடத்தில் பொதிந்துள்ள பண்புகளை படம்பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவரது பேச்சுக்களும் படம்பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமைகாட்டுபவனாகவும் பிரதிப­க்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சிற்கு உண்டு. சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளை கூறிவிடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்ளாமல் கே­க்காக கூறியபோதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார். மேலும் வாசிக்க

அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம்

நன்மை பயக்கும் மார்க்கம்

இஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச்சிறப்புகளை இஸ்லாத்தில் மட்டும் நம்மால் காணமுடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்கிறது.

திருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் ஒருவர் கடைபிடித்து வாழ்ந்தால் இந்த உலகத்திலேயே அவர் நன்மைகளை அடையமுடியும். இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும்.

பேய் பிசாசு நம்பிக்கையுள்ளவர்களால் இரவில் தன்னந்தனியாக செயல்படமுடியாது. யாரும் இல்லாத தெருவில் தனியே நடமாடமுடியாது. பயம் இவர்களை கவ்விக்கொள்ளும். நிம்மதியை இழந்து கோழகளாக திரிவார்கள். மேலும் வாசிக்க

முஹர்ரம் மாதம் வணக்கங்கள்!

நன்மைகளை அதிகம் பெற்று மறுஉலக வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடத்திலே அதிகம் இருக்கிறது. இந்த பேராவ­னால் மார்க்கத்தில் இல்லாத காரியங்களை நன்மை தரக்கூடியவைகள் என்று எண்ணிக்கொண்டு தங்களது முயற்சிகளை பாழகாக்கிக்கொள்கிறார்கள். இந்நிலைக்கு முதற்காரணமாக மார்க்கத்தை கற்ற அறிஞர்களைத் தான் குறிப்பிட வேண்டும். இஸ்லாம் எவற்றையெல்லாம் நன்மையான காரியங்கள் என்றும் புனிதமானவை என்றும் சொல்­த்தந்திருக்கிறதோ அவற்றை அனைத்தையும் மக்களுக்கு இவர்கள் எடுத்துச் சொல்­யிருந்தால் ஏராளமான பித்அத்கள் என்றைக்கோ ஒழிந்திருக்கும். மேலும் வாசிக்க

பெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

ஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது. பெண்கள் அணிந்துகொள்ளலாம் என்பதே மார்க்கச் சட்டம் என்று பரவலாக மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள். பலவருடங்களாக நாமும் இதேக் கருத்தையே சொல்­க்கொண்டுவருகின்றோம்.

இந்த நமது நிலைபாட்டிற்கு எதிராக சில அறிஞர்கள் பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்று கூறியுள்ளனர். இந்த கருத்துவேறுபாடு நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களிடமும் இருந்துள்ளது.

தற்காலத்தில் இமாம் அல்பானீ அவர்கள் இந்தக் கருத்தை வாதப் பிரதிவாதங்களோடு அழுத்தமாக கூறியுள்ளார். இவரது கருத்தை அமோதித்து இன்றைக்கு சிலர் பெண்கள் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்று கூறிவருகின்றனர். மேலும் வாசிக்க

சொர்க்த்தில் துணைகள்!

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!
இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே —

“சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்” என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண்துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.  மேலும் வாசிக்க

புத்தாண்டு!

இஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது. பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அல்லாஹ்(ஜல்) தனது இறுதித்தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை அவர்களது 40வது வயதில் தேர்ந்தெடுத்தான். அவர்களது 40வது வயதிலிருந்து 63வது வயதுவரை அல்லாஹ் தன்புறத்திலிருந்து வஹீ இறக்கி சிறிது சிறிதாக அல்குர்ஆன் வசனங்களை அருளி அதை நிறைவு செய்தான். மேலும் வாசிக்க

இறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்!

ஒழுக்கக் கேடு, அநீதி, துயரம், தோல்வி மனப்பான்மை, தொந்தரவு, தனிமை, பயம், பதற்றம், ஏமாற்றம், அவநம்பிக்கை, பழியஞ்சாமை, கவலை, கடுங்கோபம், பொறாமை, மனக்கசப்பு, போதை மருந்துக்கு அடியாமையாதல், பரத்தமை (விபச்சாரம்), சூதாட்டம், பசி, வறுமை, மரணம் பற்றிய பயம், ஆகிய அனைத்தையும் பற்றிய செய்திளை நாள்தோறும் நாளிதழ்களில் வாசிக்கின்றோம்; தொலைக் காட்சிகளிலும் கேட்கின்றோம். பிரபலமான பத்திரிக்கைகள் இந்தச் செய்திகளுக்கு முழுப்பக்கங்களை ஒதுக்குகின்றன; இவை மனோதத்துவ ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் விளைவிக்கும் பாதிப்புகளைப் பற்றி சில பத்திரிக்கைகள் இடையறாது எழுதி வருகின்றன. ஆனாலும் மேலே கூறியவைப் பற்றி நாம் இந்த ஊடகங்கள் மூலம் மட்டும் அறிந்து கொள்கிறோம் என்று சொல்ல முடியாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இத்தகையப் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம்; அவற்றை நாம் வாழ்க்கையில் அடிக்கடி அனுபவிக்கிறோம்.

மேலும் வாசிக்க

மார்க்கம் வழங்கப்பட்டது ஏன்?

படைக்கப்பட்ட கணம் முதல் ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒரு வன் இருக்கிறான் எனும் உண்மை யை, அவனது மனச்சான்று மற்றும் அறிவுமூலம் உணரும் ஆற்றல் அருளப்பட்டுள்ளான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும், மிகச் சிறிய நுட்பமான கூறு வரை இறைவனின் படைப்பே என்பது தெளிவு. இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு நம்மைச் சுற்றிக் காணப்பெறும் ஒவ்வொன்றும் உறுதி யான சான்று ஆகும். வானவீதியில் பறக்கும் பறவை, ஆழ்கடலில் நீந்தும் மீன்கள், பாலைவனங்களில் திரியும் ஒட்டகைகள், தென்துருவத்தில் வசிக்கும் பறக்கவியலாத ஆனால் நீந்தக்கூடிய கடற்பறவைகள், பென்குயின்கள், மனித உடலில் உள்ள கண்ணுக்குப் புலப் படாத நுண்கிருமிகள், பழங்கள், செடிகள், மேகங்கள், கோளங்கள், முழுமையாக நிறைவான நிலையில் சஞ்சரிக்கும் விண்மீன்கள், பால்மண்ட லங்கள், ஆகிய யாவற்றையும் மிக நுண்ணிய அமைப்புகளோடும் மிகச் சிறந்த இயல்புகளோடும் இறைவன் படைத்தான். மேலும் வாசிக்க

ஹலாலான உழைப்பின் சிறப்பு!

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ) உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ) மேலும் வாசிக்க

சமுதாய வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம்!

இறை நம்பிக்கையின்மை மனித வர்க்கத்தின் மீதும் சமுதாயங்கள் மீதும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மார்க்கத்திலிருந்து அகன்று அல்லது அதைப் புறக்கணித்து வாழும் சமுதாய மக்களிடையே அநீதியும், தன்னலமும், ஒருவரை ஒருவர் நம்பாத நிலையுமே நிறைந்து காணப்பெறும். இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களின் இயல்பும் இவ்விதமே காணப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மார்க்க நடைமுறைகளும் பண்புகளும் தாம் தனி மனிதர்களுடையவும் சமுதாயங்களுடையவும் ஒழுக்க மேம்பாட்டை உறுதி செய்யத் தக்கவை. இறைவன் மீதும் மறுமையிலும் நம்பிக்கையுடையவர்களே, அவர்கள் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே வாழ்வதால் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். இறைவனுக்குப் பயந்து மிக்கக் கவனத்துடன் தீயச் செயல்களைத தவிர்த்துக் கொள்வார்கள்; இறைவன் விரும்பாத மனப்பான்மையையும் நடத்தையையும் விலக்கிக் கொள்வார்கள். இத்தகைய மக்களைக் கொண்ட சமுதாயம் பிரச்சினைகளுக்கு உள்ளாகாது.

மேலும் வாசிக்க

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை!

(“ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மையுடைய வேதத்தை இறக்கி வைத்தான், எனினும் அவ்வேதம் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மாறுபட்டு, புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்”. (அல்குர்ஆன் 2:213) மேலும் வாசிக்க

மார்க்கக் கல்வி!

எந்தக் கல்வி கற்க வேண்டும், எந்தக் கல்வி கற்கக்கூடாது, என்று மார்க்கத்தில் எத்தகைய கட்டுப்பாடும் இல்லை. இறை நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய கல்வியைக் கற்கவேண்டும். இறைவசனம் – இறைத் தூதர்(ஸல்) அவர்கள் விதித்த மார்க்க வரம்பை மீறாத தன்மையுடைய கல்வியைக் கற்க வேண்டும், மார்க்கத்திற்கு முரணாக எக்கல்வியாலும், அதனைக் கற்கக்கூடாது. மேலும் வாசிக்க

அழிவுப் பாதையில் மனிதன்!

இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன. மேலும் வாசிக்க

குறுக்கு வழியும், நேர் வழியும்!

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துக்களைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது. மேலும் வாசிக்க

ஸலவாத்

நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்காகப் பாடுபட்டதற்காகவும், அவர்களின் மூலமாகவே அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான் என்பதற்காகவும், நாம் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அவர்களுக்காக நாமும் துஆச் செய்கிறோம். அதுவே ஸலவாத் எனப்படும். என்று சென்ற இதழில் கண்டோம். ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும், அதன் சிறப்பையும் நாம் காண்போம். மேலும் வாசிக்க

நண்டு சாப்பிடுவோம்!

அல்லாஹ்வின் கூற்றையும், அவன் திருத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் மதிப்பவர்கள் அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பொருந்தாதக் காரணங்களையும், உதவாத தத்துவங்களையும், ஒரு சில அரபிப் புத்தகங்களின் கருத்துக்களையும், அல்லாஹ்வின் கூற்றுக்கு எதிராகப் பயன்படுத்துவது முஸ்லிம்களின் நடைமுறையாக இருக்கக் கூடாது. நம் முன்பே அளித்துள்ள விளக்கங்களையும் ஆதாரங்களையும் மீண்டும் படித்துப் பாருங்கள்!

மேலும் வாசிக்க

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!

இன்று இஸ்லாமின சமுதாயத்தின் பெரும் பகுதியினர் ‘தக்லீத்’ என்ற பெயரில் மரியதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கைக் கொண்டு, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணானவற்றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழி தவறிச் செல்வதால் , ‘தக்லீத்’ தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரண்பட்டிருப்பவை மார்க்கமாகி விட்டதற்கான முக்கிய காரணங்களை நாம் கவனிப்போம்.

மேலும் வாசிக்க

பொருளியல் எல்லாம் உனக்காக! நீ மறுமைக்காக!!

தனி மனிதன் வாழ்விலிருந்து, குடும்பம், சமுதாயம், ஊர், நாடு, உலகம் என அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து உறவாடி வருவது காசு, பணம் என்ற பொருட் செல்வங்களாகும். அவரவரிடமுள்ள பொருட் செல்வத்தினால் அவனுக்கு, குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு, ஊருக்கு, நாட்டிற்கு சிறப்பு ஏற்படுவதாக உலகியல் ரீதியாக கணிக்கப்படுகிறது. பொருட் செல்வத்தின் ஆதாரத்தில் தனி மனிதன் முன்னேற்றம் முதல் உலக முன்னேற்றம் வரை கணிக்கின்றனர். மேலும் வாசிக்க

ஸலவாத்!

“ஸலவாத்துன்னாரிய்யா” என்பது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தது அல்ல, மிகவும் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்டது என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அது எவ்வளவு நல்ல கருத்தை உள்ளடக்கி இருந்தாலும், “பித்-அத்” -பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது – என்ற காரணத்தினாலேயே அது ஸலவாத்தாக ஆக முடியாது என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அதன் பொருளை நாம் கவனித்தாலும் மார்க்கம் அனுமதிக்கின்ற விதத்தில் அமைந்திருக்கவில்லை என்பதை இந்த இதழில் காண்போம்.

“கிறித்தவர்கள் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். மேலும் வாசிக்க

கதைகளின் பின்னணியில்!

உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை):   இத்ரீஸ் அலைஹீஸ் ஸலாம் அவர்கள் ‘மலக்குல் மவ்த்’துக்கு நண்பராக இருந்தார்களாம்! “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக” மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம்! “தான் நரகத்தை கண்கூடாகக் காண வேண்டும்” என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம்! மேலும் வாசிக்க

நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

“இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் ஆராய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு காரணங்களைப் பார்ப்போம். மேலும் வாசிக்க

புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா?

தடை என்றும் அதை காட்டுமிராண்டித்தனம் என்றேக் கூறி வருகின்றனர் ! யார் இதை அதிகமாகக் கூறுகின்றனர் ?
கண்ணியத்தைப் பேணக் கூடிய பொதுவான மக்கள் அல்ல, மாறாக பெண்களை மூலதனமாகக் கொண்டு தொழில் நடத்தும் கேளிக்கை நிருவனத்தார்கள் மட்டுமே பர்தா சம்மந்தமான சர்ச்சசைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகையாக கிளம்பினால் கூட அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள். மேலும் வாசிக்க

கனவில் வராத நபி(ஸல்) அவர்கள்

ஒரு மனிதர் இறை நேசராக ஆகுவதற்குரிய அடையாளங்களில் ஒன்று நபி(ஸல்) அவர்களைக் கனவில் காண்பதாகும் என்று முஸ்லிம்களில் பலர் நினைத்துக் கொண்டிக்கிறார்கள். சில புத்தங்களில் கூட இந்தக் கருத்தை எழுதியும் வைத்துள்ளார்கள்.

ஒரு மனிதர் ‘நான் நபி(ஸல்) அவர்களை கனவில் கண்டேன்’ என்று கூறினால் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு மத்தியில் அவர்மீது மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் கூட கூடுகிறது. அவர் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று கூட முஸ்லிம்களில் பலர் எண்ணிக் கொள்கிறார்கள்.

மண் கேட்ட படலம்!

அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரில்(அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரில்(அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரில்(அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில்(அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங் கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல்மவ்தை அல்லஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

மேலும் வாசிக்க

இறைவனுக்கு இணை வைத்ததினால், இறுதித் தூதரின் பெற்றோருக்கும் நரகமே!

இந்த உலக மக்கள் நேர்வழி பெற்று மறுமையில் வெற்றியடைந்து சுவர்க்கச் சோலையில் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும் என்பதற்காக இறைவனால் இந்த உலகுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த நபியின் பெற்றோர்களின் மறுமை நிலை என்ன என்பதைப் பற்றி நாம் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

ஏன் என்றால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த நபியவர்கள் முதன்மையாக இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாக லா இலாக இல்லல்லா முஹம்மதுன் ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபியவர்கள் இறைவனின் தூதராவார் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தார்கள்.

மேலும் வாசிக்க

கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

ஒரு செய்தியைச் சொல்வதற்கு பலவிதமான முறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றுவார்கள்.பேச்சின் மூலம், செய்கையின் மூலம், எழுத்தின் மூலம் என்று பலவிதங்களிலும் நம் மனதில் தோன்றும் செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.

சிலர் சில செய்திகளை கவிதை மூலம் சொல்வார்கள். இந்தக் கவிதை முறை தகவல் எத்திவைப்பைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். கவிதை எழுதுவதையோ அல்லது பாடுவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் அவைகள் இஸ்லாத்திற்கு மாற்றமில்லாத கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

தற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அனுமதியுண்டா?

உலகம் இன்று பல பிரச்சினைகளையும், சிக்கள்களையும் நாளுக்கு நாள் அதிகமாக சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்தப் பிரச்சினைகளின் பின் விளைவுகள் அல்லது குறிப்பிட்ட பிரச்சனைகளினால் மக்களுக்கு ஏற்படும் சிக்கள்களைப் பற்றி பலா் சிந்திக்காமல் இருக்கிறார்கள்.

இன்று பல நாடுகளில் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டுப் போர்கள் வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்தப் போர்களில் முஸ்லீம் முஸ்லீம் அல்லாத பல நாட்டவரும் தொடர்புபட்டுத்தான் இருக்கிறார்கள்.

மேலும் வாசிக்க

பெண்கள் காது, மூக்கு குத்துதல் பற்றிய தெளிவு.

மனிதப் படைப்பில் மிக முக்கியமானவர்களாக ஆண்,பெண் என்ற இரண்டு சாராரை இறைவன் படைத்திருக்கிறான். படைக்கும் ஆற்றலை தனக்கு மாத்திரமே சொந்தமாக்கியிருக்கும் இறைவன் தனது படைப்பை மிகவும் அழகாகவும், நேரத்தியாகவும் உருவாக்கியிருக்கிறான்.

ஆனால் ஆணுக்குத் துணையாக படைக்கப்பட்ட பெண்கள் இன்று தங்கள் காதுகளை துளையிட்டு அதிலே ஆபரணங்களை அணிகிறார்கள். இது மார்க்க அடிப்படையில் ஆகுமாக்கப்பட்டதா? இது இன்று நமக்கு மத்தியில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை பிரச்சினைகளில் ஒன்றாகும்.

மேலும் வாசிக்க

நிர்வாணமாக குளிக்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?

இன்றைய நாட்களில் பல சகோதரர்கள் இந்தக் கேள்வியை முன்வைக்கிறார்கள்.அதாவது ஒருவர் தனிமையில் குளிக்கின்ற நேரங்களில் உடம்பில் துணியின்றி நிர்வானமாக குழிக்க முடியுமா?

இந்தச் கேள்வியை பொருத்தவரை இரண்டு விதமான கருத்துக்கள் அறிஞர்களால் முன்வைக்கப் படுகின்றது.

முதலாவது :தனிமையில் நிர்வாணமாக குளிக்களாம்.

இரண்டாவது :எந்தக் காரணம் கொண்டும் தனிமையில் கூட நிர்வாணமாக குளிக்கக் கூடாது.

மேலும் வாசிக்க

பெண்களுக்கான மார்க்க பிரச்சாரத்தின் போது திரை போட வேண்டுமா?

இன்றைய காலகட்டத்தில் நாம் இஸ்லாமியப் பிரச்சாரத்தை செய்கின்ற நேரங்களில் அதிகமான மக்களால் பரவலாக கேற்கப்படும் ஒரு கேள்விதான் பெண்களுக்கு பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் ஏன் நீங்கள் திரை போடுவதில்லை? இந்தக் கேள்வியைக் பொருத்த மாத்திரத்தில் திரையைப் பற்றிய சரியான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். திரை என்றால் என்ன?

மேலும் வாசிக்க

இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!

இன்றைய நவீன உலகில் பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி பல வழிகளிலும் மனிதன் முயன்று கொண்டிருக்கிறான் ஆனால் அவனால் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாமல் அவதிப் படுகிறான். ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்றால் ஒன்றுண்டென்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான் என்பதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள்.

மேலும் வாசிக்க

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் நபிதானா?

உலகின் முதல் மனிதர் என்று திருக்குர்ஆன் குறிப்பிடும் ஆதம்(அலை)அவர்கள் தான் உலகிற்கு அனுப்பப் பட்ட முதல் நபி என்றும் நம்பப் படுகிறார்கள்.

உலகின் முதல் மனிதர் ஆதம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் ஆதம்(அலை)அவர்கள் தான் உலகின் முதல் நபி என்பதை சிலர் மறுக்கிறார்கள். இதற்கான காரணத்தையும் அவர்கள் தெளிவு படுத்தவில்லை. ஆனால் உலகின் முதல் மனிதர்தான் முதல் நபி என்பதற்கு திருமறைக் குர்ஆனில் தெளிவான ஆதாரம் இருக்கிறது.

பொதுவாக நபிமார்களை இறைவன் குறிப்பிடும் போது நபி என்ற வாசகத்தை குறிப்பிட்டு சொல்வதைப் போல் அல்லாமல் ஆதம் நபியவர்களை நபிமார்களுக்கு பயன்படுத்தும் ஒரு வார்த்தையைக் கொண்டு இறைவன் பயண்படுத்துவதின் மூலம் அவர் நபிதான் என்பதை நமக்குத் தெளிவு படுத்துகிறான்.

மேலும் வாசிக்க

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

இன்றைய நவீன உலகத்தில் பல பிரச்சினைகளை நாம் முன்னோக்கிக் கொண்டிருக்கிறோம்.அதிலும் குடும்ப வாழ்கை தொடர்;பாக பல பிரச்சினைகளை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த குடும்பப் பிரச்சினைகளில் மிக முக்கியமானதுதான் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை.

தமக்கு குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் தம்பதியினர் குழந்தையை பெற்றெடுக்காமல் இருப்பதற்காக மருத்துவத்தின் மூலம் குடும்பக்கட்டுப்பாட்டை செய்து கொள்கின்றனர். சீனா போன்ற நாடுகள் இரண்டு குழந்தைகளை ஒரு தம்பதியினர் பெற்றெடுத்தால் அதன் பின் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என சட்டமே உருவாக்கியுள்ளது.

மேலும் வாசிக்க

பெண்கள், பெண்களுக்கு இமாமத் செய்வதற்கு தடையா?

தொழுகை என்பது முஃமின்கள் மீது நேரம் குறிக்கப் பட்ட கடமையாகும்.அந்த கடமையை ஜமாத்தாக நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கட்டளையிடுகிறது.

தொழுகையில் ஆண்கள் இமாமத் செய்கிறார்கள்,பெண்களும் ஆண்களின் பின்னால் இருந்து தொழுகிறார்கள்.அப்படி தொழும் தொழுகை விஷயத்தில் பெண்கள் தொடர்பான இரண்டு முக்கிய சர்சைகள் நமது சமுதாயத்தில் இருக்கிறது அதில் ஒன்று பெண்கள்,ஆண்களுக்கு இமாமத் செய்ய முடியுமா? என்பதாகும் மற்றையது பெண்களுக்கு,பெண்கள் இமாமத் செய்ய முடியுமா? என்பதாகும் இந்த இரண்டு கேள்விகளுக்குமான தெளிவான பதிலை நாம் இப்போது பார்ப்போம்.

நாளின் ஆரம்பம் எது?

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?

கேள்வி பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும் அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள். அவர்கள் எடுக்கும் உதாரணம், நார்வே போன்ற நாட்டைத் தான். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக இருப்பதால் எப்படி பிறையைக் கணக்கிடுவார்கள்? தயவு செய்து நல்ல ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன். (ரஃபீக் நாகர்கோவில்)

மேலும் வாசிக்க

அரபா நோன்பு உண்டா?

அரபா நாளை குறித்து அந்த நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றாத மற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும் அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். இங்கு அந்த நாள் என்பது ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடியிருக்கும் அந்த நாளை தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்று தான் அரபாவுடைய நாள் என்று கூறி அன்று நோன்பு வைக்க சொல்கிறீர்கள். (வஹீதுஸ் ஸமான்)

மேலும் வாசிக்க