கருந்துளை மர்மங்கள் ( BLACK HOLE)

அறிவார்ந்த நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை உலக மக்களுக்குக் கூறி நேர்வழிக்கு அல்லாஹ் அழைக்கின்றான். போலி பொய்த் தெய்வங்களைப் புறந்தள்ளி, உங்களையும், உலகத்தையும், மாபெரும் பிரபஞ்சத்திலுள்ள சூரிய சந்திர, நட்சத்திரங்கள், கலாக்ஸிகளைப் படைத்தவனை மட்டும் வணங்குங்கள் என்று அறிவியல் உண்மைகளைக் கொண்டு உரைக்கின்றான்.  மேலும் வாசிக்க

Advertisements

இடி மின்னல் வழங்கும் இயற்கை உரம்.

அல்குர்ஆன் வழியில் அறிவியல்…

அல்லாஹ்வின் நெறிநூலான அல்குர்ஆனில் அறிவியல் உண்மைகள், ஆய்வு வழிகாட்டு தல்கள் ஏராளமாக உள்ளன. அல்குர்ஆனை அறிவியல் நோக்கோடு ஆராயும்பொழுது அனேக நன்மைகளை மனித சமுதாயத்திற்கு அளிக்க முடியும். இதன் மூலம் நேர்வழியில் மக்கள் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது. ஆனால் துர்பாக்கியமாக, இன்று அல்குர்ஆன் வெறும் வணக்க வழிபாட்டு நூலாக மதரஸா முல்லாக்களிடம் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!

இம் மண்ணில் வாழும் உயிர்ப் பிராணிகள் எவ்வாறு உருவாயின என்பதனை பலர் பலவிதமானக் கருத்துக்கள் கூறுவதைக் காண முடிகிறது. அல்குர்ஆன் கூறுவதையும், ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் கூறுவதையும் பார்ப்போம்.

“”அனைத்து உயிர்ப் பிராணிகளையும், அல்லாஹ் நீரிலிருந்து படைத்தான். அவற்றில் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு கால்களில் நடப்பவையும் உண்டு.(இவ்வாறு)தான் நாடியதை நாடியதிலிருந்து அல்லாஹ் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு படைக்கும் பொருட்டு யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். (அல்குர்ஆன் 24:45) மேலும் வாசிக்க

கால்நடைகள் வழங்கும் கதகதப்பு WOOL ஆடை

அல்குர்ஆன் வழியில் அறிவியல்…..
அல்லாஹ் மனிதர்களைப் படைத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்குப் பயன் தருபவைகளாக அமைத்துள்ளான். இந்த வகையில் கால் நடைகளைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

(மனிதர்களே!) ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காக படைத்திருக்கின்றான். அவற்றில் உங்களுக்காக (குளிரைத் தடுத்துக்கொள்ளக்கூடிய) கத கதப்புண்டு; இன்னும்(அநேக) பயன்களுமுண்டு; மேலும் நீங்கள் அவற்றிலிருந்து புசிக்கிறீர்கள்.”
அல்குர்ஆன் 16:5 மேலும் வாசிக்க

அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்

அகில உலக மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அல்குர்ஆன் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறியுள்ள காலத்தில் பல அறிஞர்களை சிந்திக்கவும், ஆராய்ந்து பார்க்கவும் வைத்துள்ளது. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருவியலை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் மனிதன் எப்படி படைக்கப்படுகிறான் என்பதனை ஆய்வு செய்தனர். வல்ல இறைவன் தன் வல்லமையை புனித குர்ஆனில் மனிதன் படைக்கப்படும் ஒவ்வொரு அசைவுகளின் நிலைப்பாட்டை மிக தெள்ளத் தெளிவாகவும், துல்லியமாகவும் விளக்கியுள்ளான்.

மேலும் வாசிக்க

முஸ்லிம்களில் விஞ்ஞானிகள் யாரேனும் உண்டா?

கேள்வி: இன்றைய உலகில் கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும் முழுவதும் காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள் மேற்கத்திய நாட்டினர்தான். இவர்களால் உலகில் சில தீமைகள் ஏற்பட்டிருக்கலாம் அதை விடப் பன்மடங்கு நன்மைகளை உலகிற்குச் செய்துள்ளனர். இன்று அரபு தேசங்களில் மக்கள் வசதியாக வாழ்வதற்கு வழி வகுத்தவர்கள் மேற்கத்திய நாட்டினர். எண்ணைய்க் கண்டு பிடிப்பு, கடல் நீரைக் குடிநீராக மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். ஆனால் முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றவில்லை மாறாக உலத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு தானும் அழிந்து மற்ற நாட்டினரையும் அழித்து தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் செய்து கொண்டு இந்த உலகத்தை நிம்மதியிழக்கச் செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி உலகத்திற்கு எந்த நன்மையும் செய்யாத இவர்களை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஆதரிப்பது ஏன்? மேலும் வாசிக்க

விண்ணில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?

ஓர் ஆன்மீக அறிவியல் கண்ணோட்டம்.

 உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் என்று நாளுக்கு நாள் இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இந்த உலகின் வின்வெளி பற்றிய ஆய்வுகளும் அபூர்வங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வின்வெளியின் அமைப்பு அதன் செயற்பாடு பற்றியெல்லாம் பல ஆய்வுகளை அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் செய்தாலும் இதுவரை இந்த வின்வெளி ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

மேலும் வாசிக்க

எயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே! மீண்டும் நிரூபித்தது பி.பி.ஸி உலக சேவை.

இயற்கை மார்க்கம் தான் உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தர முடியும். இஸ்லாம் என்பது இறைவனால் அருளப் பெற்ற இயற்கை மார்க்கமாகும்.

இந்த இயற்கை மார்க்கம் மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகத் தெளிவான பதில்களைத் தருகிறது என்றால் அது மிகையில்லை. உலகையை ஆட்டம் காணச் செய்யும் மிகக் கொடிய நோயான ஹெச்.ஐ.வி. எய்ட்ஸை விட்டும் மனிதனைக் காப்பாற்ற பல நாடுகளும் தங்களால் முடிந்த மருத்துவக் கண்டுபிடிப்புக்களில் இறங்கியுள்ளன.

மேலும் வாசிக்க

இஸ்லாமும், ஆரோக்கிய வாழ்வும். ஓர் அறிவியல் பார்வை.

ஆரோக்கியம் என்றால் என்ன?

ஒரு மனிதனைப் பொருத்தளவில் ஆரோக்கியம் என்பது இரு வகைப்படும். ஒன்று உடல் ஆரோக்கியம். மற்றையது உள ஆரோக்கியம்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வும், மன அமைதியுமே சிறந்த வழி. இன்று பெரும்பாலான மனிதர்கள் தம் உடலையும், சுற்றுப் புறச்சூழலையும் சுத்தமாக வைத்திராததால் தங்களுக்கும், தங்கள் அயலவர்களுக்கும் கேடு விளைவிக்கும் விதத்தில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு உடல்,உள ரீதியான ஆரோக்கியத்தையே இழந்து விடுகின்றனர்.

மேலும் வாசிக்க

விரியும் பிரபஞ்சம்

(நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவு படுத்துவோராவோம்.

திருக்குர்ஆன் 51:47

இவ்வசனத்தில் வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

நாம் வாழ்கின்ற பிரபஞ்சம் அது தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் வாசிக்க

அல்குர்ஆன் கூறும் சூராவளி எச்சரிக்கைகள்!

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266) மேலும் வாசிக்க

கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்

அன்புச் சகோதர சகோதரிகளே!  ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வின் வல்லமையை நாம் சிந்திப்பதில்லை இதைப்பற்றி சிந்திக்க முற்பட்டுவிட்டால் இணைவைத்தலை தவிர்த்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடக்கூடிய இறைவிசுவாசியகாகவும் அல்லாஹ்வுக்கு உண்மையான அடியானாகவும் மாறிவிடுவோமே! மேலும் வாசிக்க

குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினைஇருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்துகலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.அல்குர்ஆன் 16:66

இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை  (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.

மேலும் வாசிக்க

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்!

குர்ஆனை ஆராய்ச்சி செய்துப்பார்க்கும் போது அது பல்வேறு அரிய தகவல்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது அவைகளின் வரிசையில் மருத்துவப் படிப்புகள் பற்றி இஸ்லாம் கூறும் பல அறிய தகவல்களை உங்கள் முன் பதிக்கிறோம்.  மேலும் வாசிக்க

அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?

கேள்வி: உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான். திருக்குர்ஆன் 16:15என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. சுற்றுவதும் அசைவுகளால் நிகழ்வது தானே. ஆனால் இறைவன் அசையாதிருப்பதற்காக மலைகளை நிறுத்தியுள்ளோம் என இறை வசனத்தில் வருகிறதே! குழப்பமாக உள்ளது. விளக்கம் தரவும். -ஜீ. முஹம்மது ஜலீல், நாகப்பட்டிணம்.  மேலும் வாசிக்க

கரு வளர்ச்சிப்பற்றி அல்குர்ஆன்!

கனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித  திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார். ”

மேலும் வாசிக்க

கடல்கள் இடையே உள்ள திரைகள்

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா. (55:19,20)

    அரபி மூலத்தில் பர்ஸக் எனும் சொல் இடம் பெறுகின்றது.இதன் பொருள் ஒரு தடுப்பு அல்லது பிரிவினை என்பதாகும். இந்தத் தடுப்பு என்பது ஜடரீதியான (Material) அல்லது ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்ட தடுப்பு அல்ல. ‘மரஜா’ எனும் அரபிச் சொல்லின் அசலான அர்த்தம் அவர்கள் இருவரும் சந்தித்து கலந்து கொண்டனர் என்பதாகும்.

மேலும் வாசிக்க

நிலவின் ஒளி பிரதிபலிப்பு

நிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்…

மேலும் வாசிக்க

விரிவடையும் பிரபஞ்சம்

“மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்” (51:47)

நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து, நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.

மேலும் வாசிக்க