புனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்

“இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சம் பெறவேண்டும் என்பதற்காக!” ( அல்குர்ஆன் 2:183)

நபி (ஸல்) கூறினார்கள்: இதோ! ரமழான் மாதம் உங்களிடம்வந்துவிட்டது. அம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன்உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். இம்மாதத்தில்ஓர் இரவு உண்டு. அதுஆயிரம் மாதங்களை விட மேலானது. அந்தஇரவில் பாக்கியம் பெறாதவர் ஒட்டு மொத்த பாக்கியத்தையும்இழந்தவராவார். (நஸயீ)

 ரமழானின் சிறப்பு இறைவன் ரமழானுக்கென்று சில சிறப்புகளை வழங்கியுள்ளான்அவற்றுள் சில:

 இம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது, – ஷைத்தான்களின் சூழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நன்மைகளைபெருக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. – ஆயிரம் மாதங்களைவிட மேலான இரவு இம்மாதத்தில்தான்உள்ளது. எனவே குறைந்த வழிபாடுகளை செய்து நிறைந்த நன்மைகளைஅடைய முடிகிறது, – நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை இறைவனிடம்கஸ்தூரியை விட அதிக மணமுடையது, – இம்மாதத்தில் நோற்கும் நோன்பு 700 மடங்குக்கும் அதிகமாக கணக்கிலடங்காத நன்மைகளைவாரித்தருகிறது.

மேற்கண்ட அனைத்தும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களிலிருந்து தெரியவரும்உண்மைகளாகும்

ரமழானில் அமல்கள் ரமழானில் செய்ய வேண்டிய சிலமுக்கிய அமல்கள் பின்வருமாறு:

1. தூய்மையானநோன்பு

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக் கருதி ரமழானில் நோன்புநோற்பவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.”(புகாரி, முஸ்லிம்)

வெறுமெனே உண்ணாமல், பருகாமல் இருப்பதன் மூலம் மட்டும் இந்நநன்மையை ஒரு நோன்பாளி அடைந்துவிட முடியாது. ஏனெனில் நபி(ஸல்)கூறினார்கள்:

“பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும்ஒரு நோன்பாளி தவிர்த்துக் கொள்ளவில்லையெனில் அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும்இறைவனக்கு எந்தத் தேவையுமில்லை.” (புகாரி)

“நோன்பு ஒரு கேடையமாகும். எனவேஉங்களில் நோன்பிருப்பவர் தீய வார்த்தைகளை பேசக்கூடாது,பாவச்செயல்கள் செய்யக்கூடாது. முட்டாள்தனமாக நடக்கக்கூடாது. யாரேனும் அவரை திட்டினால் “நான்ஒரு நோன்பாளி’ என்பதை மட்டுமே பதிலாகக்கூறவேண்டும். (புகாரி, முஸ்லிம்)

2. இரவுநேரத் தொழுகை

நபி (ஸல்) கூறினார்கள்:

“இறை நம்பிக்கையுடன் நன்மையைக்கருதி ரமழானில் இரவு நேரத் தொழுகையைநிறைவேற்றுபவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”(புகாரி, முஸ்லிம்)

இரவு நேரத்தொழுகை ரமழானல்லாத காலங்களிலும் செய்யப்படும் வழிபாடாக இருந்தாலும் ரமழானில் அது அதிக முக்கியத்துவத்தைப்பெறுகிறது.

“ரமழானிலும் ரமழானல்லாத காலங்களிலும் இரவுத்தொழுகையை நபி(ஸல்) அவர்கள்11 ரக்அத்களுக்கு மேல் தொழுததேயில்லை” எனஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)

3. தருமம்

“நபி (ஸல்) அவர்கள் காற்றைவிடவேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.மேலும் ரமழானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்”என்று கூறினார்கள். (திர்மிதி) தருமத்தை பணமாகவோ அல்லது உணவாகவோதரலாம். நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளிப்பதும் இதில் அடங்கும்.

“நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்’என நபி(ஸல்) கூறியுள்ளார்கள்(அஹ்மத்)

4. குர்ஆன்ஓதுதல்

ரமழான் குர்ஆன் இறங்கிய மாதமாதலால்இதில் குர்ஆனை அதிகமாக ஓதுவதும்அதன் பொருளுணர்ந்து சிந்திப்பதும், செயல்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். ஒவ்வொருரமழானிலும் ஜிப்ரீல் (அலை) வந்து நபி(ஸல்) அவர்களிடம் குர்ஆனை படித்துக் காண்பிப்பார்கள்.இது குர்ஆனுக்கும் ரமழானுக்குமுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

5.இஃதிகாஃப்

நபி(ஸல்) ஒவ்வொரு ரமழானிலும்கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில்இஃதிகாஃப் (தங்கி வழிபடுதல்) செய்துள்ளார்கள்.

இந்த வழிபாடு ஆண், பெண்இருபாலாருக்கும் பொதுவானதாகும். எனவே இருபாலாருமே இதில்அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

6. உம்ரா

“ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

7. லைலத்துல்கத்ரை அடைய முயற்சிப்பது

லைலத்துல் கத்ரின் சிறப்பு மேலேகூறப்பட்டுள்ளது. அது பிந்திய பத்துஇரவுகளில் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.எனவே ரமழானின் பிந்திய 10 நாட்களில் அதிக வழிபாடுகள் செய்துஅந்த பாக்கியத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.இஃதிகாஃப் இருப்பது இதற்கு சிறந்த வழியாகும்.

8. பாவமன்னிப்புக்கோருதல்

“நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கப்படும் துஆ நிராகரிக்கப்படமாட்டாது’ என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். மேலும்ஸஹர் நேரத்தில் பாவமன்னிப்புக்கோருதல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 51:18)

எனவே இந்த நல்ல நேரங்களில்இஸ்திஃபார்களையும், துஆக்களையும் அதிகப்படுத்த வேண்டும். ஸஹர் நேரத்தில் டி.வி. சானல்களில் மூழ்கியிருப்பதைவிட இதுவே மேலானது என்பதைசிந்திக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்டவை

நோன்பாளிகளுக்கு கீழ்கண்டவை குர்ஆன் சுன்னா அடிப்படையில்அனுமதிக்கப்பட்டவையாகும். இவற்றை மறுக்கும் உரிமைஎவருக்கும் இல்லை.

-குளிப்பு கடமையான நிலையில் நோன்புநோற்கலாம். நபி(ஸல்) அவர்கள் (ரமலான்இரவுகளில்) உடலுறவு கொண்ட பின்அதிகாலையில் குளிப்பு கடமையானவர்களாகவே ரமலான் நோன்பை நோற்பார்கள்என ஆயிஷா(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

– பல்துலக்குவதில் ரமழான், ரமழானல்லாத காலம்என நபி(ஸல்) அவர்கள்வேறுபடுத்திக் கூறவில்லையென்பதால் ரமழான் காலங்களில் நன்குபல்துலக்குவதில் தவறேதுமில்லை.

– உளுவின் போது வாய்க்கொப்பளிப்பதிலும் நாசிக்கு தண்ணீர்செலுத்துவதிலும் தண்ணீர் உள்ளே சென்றுவிடாதவகையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். (பார்க்க : அபூதாவூத்)

– எல்லை தாண்டாத அளவிற்கு சுயக்கட்டுப்பாடுஉள்ளவர் நோன்பு நேரத்தில் மனைவியைஅணைப்பதும் முத்தமிடுவதும் கூடும். (பார்க்க : அஹ்மத்)

– இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பில்மருந்து செலுத்துதல், கண், காதுக்கு சொட்டுமருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குழிக்குள்சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்த்தல்,வாந்தி எடுத்தல், பகல் வேளையில் குளித்தல்,தலைவலி போன்றவற்றிற்கு களிம்பு தடவிக் கொள்ளுதல், வாசனை திரவியங்கள் பூசுதல்,நகம் களைதல், முடி வெட்டுதல்,ஸ்கலிதம் ஏற்படுதல் ஆகிய எவையும் நோன்பைமுறிக்கும் என்பதற்கு எந்த சரியான ஆதாரமும்இல்லை.

அனுமதிக்கப்படாதவை – உண்ணுதல், பருகுதல், உடலுறவுக்கொள்ளுதல் ஆகிய மூன்றும் நோன்பைமுறிக்கின்ற செயல்களாகும். (பார்க்க அல்குர்ஆன் 2:187)

எனவே இவற்றை ரமலானின் பகல்வேளையில் நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். எனினும் ஒரு நோன்பாளிமறந்து உண்பதாலோ, பருகுவதாலே அவரது நோன்பு முறிந்துவிடாது. தொடர்ந்து நோன்பை நிறைவு செய்யவேண்டும். (ஆதாரம் : புகாரி முஸ்லிம்)

– இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர்வேண்டுமென்றே செய்து நோன்பை முறித்துவிட்டால்அதற்கு பரிகாரமாக தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்புநோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். பரிகாரம் செலுத்த சக்தியற்றவர்கள் முறிந்தநோன்பை மீண்டும் நோற்க வேண்டும். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்)

– வீண் விளையாட்டுகள், கேளிக்கைகள், சண்டையிடுதல் மற்றும் தீய வார்த்தைகள்ஆகியவற்றை நோன்பாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சலுகையளிக்கப்பட்டவர்கள்

நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பிரயாணிகள், தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில்தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும்நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பைவிட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாகஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். (பார்க்க அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம்,அஹ்மத், நஸயீ)

தடைசெய்யப்பட்டவர்கள்

மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள்மீது நோன்பு நோற்பது தடையாகும்.விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகுமற்ற நாட்களில் நோற்க வேண்டும். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

நன்மைகளைஅள்ளித்தரும்ரமழானில்சட்டவிதிகளைப்பேணிவழிபாடுகள்அதிகம்செய்துஈருலகிலும்வெற்றியடையமுயற்சிப்போம், அல்லாஹ்மிகஅறிந்தவன்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s