சுன்னத் ஜமாஅத்? பெயரை மாற்றுங்கள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை.

தங்களை சுன்னத் ஜமாஅத் என்று கூறி்க்கொள்ளும் தர்காஹ்வாதிகளே இது சுன்னத்தா? ஷிர்க்கா?

சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது. சுன்னத்  என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும்  ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள்  வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும்  பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.

சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

இங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.

 • அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும்.
 • அல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்

மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்

அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான் நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம்! இங்கு அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிறோம்!

நபிமார்களுக்கு கட்டுப்படுதலுக்கு உதாரணம்

எந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கை ஏந்தி பிரார்த்தித்ததில்லை! தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும்  மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.

இந்த நபிமார்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம் மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல் அல்லாஹ்வை பிரார்த்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை சுன்னத் ஜமாஅத் என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா?

சுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்

சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக நான் முன்பே கூறியிருந்தேன் அதை வெளிச்சம் போட்டு காட்டவா?  சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா?

நபி வழி சுன்னத் சுன்னத் ஜமாஅத்
எப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது. சாதாரண எறும்பு கடித்தால் கூடா யா! கவுஸ், நாகூர் ஆண்டவரே, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது
அல்லாஹ்விடம் மட்டுமே அழுது துவா செய்வது அவ்லியாவிடம் அழுது துவா கேட்பதை தெய்வீகமாக கருதுவது
இணைவைப்பு வழிபாடு கிடையாது சமாதி வழிபாடு முக்கியத்துவம்
மார்க்கத்தில் புதுமையை புகுத்துவதை தடுப்பது! மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைத்தான் புகுத்துவது
நபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வை சார்ந்தவர்கள் என்றும் நம்புவது! அதில் உண்மையாக நிலைத்து நிற்பது பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரிது, பைஅத்,  தீட்சை என்று நம்பி மோசம் போவது!
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துவாக்கள், வணக்க வழிபாகளை மட்டும் மேற் கொள்வது ஸலவாத்துன்நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி மோசம் போவது!
இணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்று பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைகொடுப் பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது!
அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது! இணைவைத்து அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது

சுன்னத்ஜமாஅத் என்று பெயர் வைத்துக்கொண்டோரே இது சுன்னத்தா?

 • தர்காஹ் போவது சுன்னத்தா?
 • அவ்லியாவை வணங்குவது சுன்னத்தா?
 • கப்ரு வணங்கம் சுன்னத்தா?
 • மவ்லூது சுன்னத்தா?
 • மீலாது சுன்னத்தா?
 • ஸலவாத்துன்நாரியா சுன்னத்தா?
 • தாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா?
 • முரீது சுன்னத்தா?
 • ஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா?
 • கத்தம் ஃபாத்திஹா சுன்னத்தா?
 • 10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா?
 • 1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா
 • ஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா?
 • வரதட்சனை வாங்குவது சுன்னத்தா?
 • வளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா?
 • நாகூர் மொட்டை சுன்னத்தா?
 • தப்ருக் தட்டுக்கள் சுன்னத்தா?
 • மரணித்தால் ஜியாரத் பொறி வழங்குவது சுன்னத்தா?
 • சமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா?
 • விபுதிக்கு பதிலாக தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா?
 • உருஸ், படையல் சுன்னத்தா?
 • சந்தனகூடு சுன்னத்தா?
 • கொடிமரம் சுன்னத்தா?
 • அவ்லியாக்களுக்கு நேர்ச்சை சுன்னத்தா?
 • கப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா?
 • தஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா?
 • கவ்வாலி இசைக்கச்சேரிகள் சுன்னத்தா?
 • யானை குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா?
 • ஜோதிட நம்பிக்கை சுன்னத்தா?
 • கருமணி தாலி கட்டுதல் சுன்னத்தா?
 • மஞ்சள் நீராட்டுவிழா சுன்னத்தா?
 • சுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா?

அல்லாஹ் ஓவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்களை  அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான் எந்த நபியாவது மேற்கண்ட இழிசெயல்களை செய்து காட்டினார்களா? குர்ஆன் ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்!

சுன்னத் ஜமாஅத் என்பது முழுக்க முழுக்க சுன்னத்தை தவறவிடுவதேயாகும்!

அல்லாஹ்வுக்கு இணைவைத்துக்கொண்டு தங்களை அழகான சுன்னத் ஜமாஅத்தினர் என்று பெயரை சூட்டிக்கொண்டால் மட்டும் சுவனம் சென்றுவிடமுடியுமா? கீழ்கண்ட வசனத்தை உணர்ந்திருக்க கூடாதா?

இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது

‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும்.

நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)

இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

அல்லாஹ் கூறுகிறான்: -“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

சுன்னத் ஜமாஅத் என்ற பெயரை மாற்ற கோரிக்கை விடுப்போமே

நபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை அஹ்லே சுன்னத் வல்-ஜமாஅத் என்ற பெயர்  வைத்திருப்பது அந்த சுன்னத்தை அதாவது நபிவழியை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது எனவே அஹ்லே சுன்னத்வல்ஜமாஅத் என்ற பெயரை மாற்ற இவர்கள் முன்வரவேண்டும் அல்லது நாமாக இவர்களை சுன்னத் ஜமாஅத்தார் என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை இத்துடன் முன்வைக்கிறேன்!

என்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள்

(ஒரு சகோதரர் இந்த பெயர்தாங்கிகளுக்கு அஹ்லே ஷிர்க் வல் ஜமாஅத் என்று சரியா பொருந்தக்கூடிய பெயரை முன்மொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்!

நன்றி: IslamicParadise சிராஜ் அப்துல்லாஹ்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.