மனைவியை நேசிப்போம்!

கண்ணியத்துக்குரிய அல்லாஹூதஆலா தன் திருமறையில்:
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துனைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (30:21)
அல்லாஹூதஆலா மனித சமுதாயத்தில் பல உறவுகளை ஏற்படுத்தித் தந்துள்ளான்.அத்தகைய உறவுகளில் மிக முக்கியமான உறவாக, குடும்பத்தில் பாலமாக இருக்கக் கூடிய உறவாக கணவன் மனைவி உறவு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இன்றைய நவீன உலகில், இப்பேர்ப்பட்ட உன்னதான உறவுக்கு இடையில் பிரச்னைகளும், சச்சரவுகளும் ஏற்படுவதையும், அதனால் அந்த இருவருக்கிடையே பிரிவுகள் ஏற்படுவதையும் கண்டு வருகிறோம். இப்படிப்பட்ட நிலைகளில் ஆண்களுக்கு பாதிப்பு உண்டு என்றாலும் அதிகம் பாதிப்புள்ளாக்காவது மனைவிமார்கள்.
அதேப்போல் பல மனைவிமார்கள் தங்கள் கணவன் ;மார்களால் கொடுமைக்குள்ளாப்படுவதும், சித்திரவதைகளை அனுபவிப்பதும் சர்வசாதரணமாக நடந்து வருவதையும் கண்டு வருகிறோம்.
திருமணத்தின் மூலம் மனைவி என்பவளை மட்டும் பெறாமல், நமது வாழ்நாளில் ஏற்படும் அணைத்து சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்ளக்கூடிய வாழ்க்கைத் துனைவி! இல்லத்தரசி! நீங்கள் நோயுறும்போது உங்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் ஜீவன்! உங்களை தேவைகளை நிறைவேற்றி தரும் தோழியாவாள்!
அதனால் தான் அல்லாஹூதஆலா மனைவியைப் பற்றி கூறும் போது, அவர்களிடம் உங்களுக்கு ஆறுதல் இருக்கின்றன என்று கூறுகின்றான். எப்படி நம் அணியும் ஆடை நம் உடலை மறைத்து பாதுகாக்கின்றதோ அதைப் போல் தான் மனைவி என்றும் குர்ஆன் கூறுகின்றது.
அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. (அல்குர்ஆன்: 2:187)
திருமண வாழ்வு மகிழ்சியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டுமென்றால் இருவரும் கூட்டாக பங்களிப்பு செய்ய வேண்டும்.
திருமண பந்தம் என்கிற மரம் தழைத்தோங்க வேண்டுமென்றால், செடியை மட்டும் நட்டிவிட்டு, அப்படியே விட்டு விடக்கூடாது. அந்த மரம் வளர உரமிட்டு, நீரிட்டு பராமரிக்க வேண்டும். அப்போது தான் திருமணவாழ்க்கை சிறப்பாக அமையும்.கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வாழ்விலிருந்து நமக்குப் படிப்பினை உள்ளது.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (33 : 21)
மனைவி தான் சிறந்த பொக்கிஷம்:
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள். அறிவிப்பவர்: உமர் (ரலீ) அபூதாவூத் 1412
இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே! என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் முஸ்லிம் 2911
வீட்டில் சிறந்தவர் தான் வெளியில் சிறந்தவர்:
”இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ{ஹரைரா (ரலி) திர்மதி 1082
மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்:
ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) அபூதாவூத் 1830, அஹ்மத் 19162
நிறைகளை மட்டும் பார்ப்போம்: ”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ{ஹரைரா (ரலீ) முஸ்லிம் 2915
பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மண விலக்கச் செய்வதாகும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்:அபூ{ஹரைரா (ரலி): முஸ்லிம் 2913
குடும்பத்தாருக்கு செலவு செய்வதும் நன்மை:
”அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)புகாரி 56
அடிமை அல்ல! வாழ்க்கை துணை! நம்மில் சிலர் மனைவியை ஆடுமாடுகளை அடிப்பதுபோல் அடிப்பதும், மிதிப்பதும் ஒரு கட்டாய கடமைப்போல் நினைத்து செயல்படுத்தியும் வருகின்றனர். அவர்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன. அவர்களும் நம்மைபோல் மனித இனம் தான் என்பதை மறந்து விடுகின்றனர்.
”நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) புகாரி 5204

மனைவியை திருப்தியடைய செய்த நபிகளார்:

நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்.அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) புகாரீ 2481
(ஒரு முறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், ”என் தலைவலியே!” என்று சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நான் உயிரோடு இருக்கும் போதே அது (இறப்பு) ஏற்பட்டு விட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள்.அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ”அந்தோ! அல்லாஹ்வின் ஆணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே சென்று நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ”இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது) நான் தான் (இப்போது), ‘என் தலைவலியே!’ என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனால் தான் உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநிதியாக செயல்படும் படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லி விடவோ (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்பட்டு விடவோ கூடாது என்பதற்காகவே (அவ்வாறு விரும்பினேன்) ஆனால் பின்னர் ‘(அபூபக்ரைத் தவிர வேறொருவரை பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான். இறை நம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள்’ என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் புகாரி
குடும்பத்தை கவனிக்காதவன் பாவி:
”தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ) அபூதாவூத் 1442
குடும்பத்தாருக்கு சத்தியத்தை எடுத்துரைத்தல்: நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். ( அல்குர்ஆன் : 66 :6)
உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் குலத்தாரே!’ என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), ‘ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை(மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது’ என்று கூறினார்கள். (புகாரி 2753)
குடும்பப் பொறுப்பை பற்றி கேள்வி உண்டு:
பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலமாக அப்பெண்களைப் பெற்றிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டே அவர்களின் கற்புகளை சொந்தமாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்களின் படுக்கையில் படுக்க வைக்காமல் இருப்பதே அவர்கள் உங்களுக்குச் செய்யும் கடமையாகும். அதை அவர்கள் செய்தால் காயமின்றி அவர்களை அடியுங்கள். உணவும் உடையும் வழங்குவதே நீங்கள் அவர்களுக்கு நல்ல முறையில் செய்ய வேண்டிய கடமையாகும். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய இறுதி உரையாகும்.அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) : முஸ்லிம் 2137, அபூதாவூத் 1628
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) புகாரீ 5200
ஆகவே அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் காட்டி தந்த வழியில் நம்முடைய மனைவிமார்களை கவனித்து, அவர்களுக்குரிய உரிமைகளை கொடுத்து, அவர்களுக்கு அன்பையும் பாசத்தையும் பொழிந்து. அவர்களின் மனம் நோகாமல் நடந்து, இவ்வுலக வாழ்வில் அவர்களிடம் பெறக்கூடிய இன்பங்களை பெறுவதை முக்கியக் குறிக்கோளாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி மறுமையிலும் மனைவி கொடுமைப்படுத்துவதன் மூலம் நஷ்டவாளியாகி விடாமல், அவர்களை நல்லமுறையில் நடத்தி வெற்றி பெற முயல வேண்டும்.
Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.