வாக்குறுதி மீறுதல்!

இன்று வாக்குறுதி மீறுதல் என்பது தாய், தகப்பன், கணவன், மனைவி என்ற உறவு முறைகளிலும் தொழிலாளி, முதலாளி, ஏழை, பணக்காரன், நண்பன் என்ற அனைத்து மட்டங்களிலும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை.

இதனால் ஏற்படும் விளைவுகள் ஏராளம். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளியைக் காப்பாற்ற மருத்துவர் வரவில்லையென்றால் நோயாளியின் உயிர் போகிறது. நேரம் தவறி பேருந்து நிலையத்திற்கோ இரயில்வே ஸ்டேஷனுக்கோ நாம் சென்றோம் என்றால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் போகிறது. இதனால் நம்மை நம்பி, காத்துக் கொண்டிருப்பவர்களின் நேரமும் காலமும் பொருளும் பணமும் விரையமாகிறது. இதனால் நம்மீதுள்ள நம்பிக்கை பிறரிடத்தில் குறைந்துவிடுகிறது. இந்த வாக்குறுதி மீறுவதால் நம்முடைய வாழ்வில் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீதைப் பேசக்கூடிய நம்மவர்கள் வாக்கு மீறுவதை அல்வா சாப்பிடுவதைப் போல நினைக்கிறார்கள். ஆலோசனைக் குழு இத்தனை மணிக்கு நடக்கும் என அறிவித்துவிட்டு அவர்கள் இஷ்டத்திற்கு ஒரு நேரத்தில் வருவார்கள், ஒரு காரியத்திற்கு வாக்களித்து விட்டு, இதோ செய்து முடித்து தருகிறேன் என்பார்கள். ஆனால் ஒருக்காலும் அந்த வேலையை முடித்துத் தந்தபாடிருக்காது. இவ்வாறு வாக்குறுதி கொடுத்து மாறு செய்பவர்களுக்கு நபியவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறார்கள்.

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (33)
இன்னொரு அறிவிப்பில் இன்னும் சில விஷயங்களை சேர்த்து நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்கல் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்கத்தால் மாறுசெய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்: புகாரி (2459)

இந்தப் பண்புகளில் ஒன்று இருந்தாலும் நயவஞ்சகத்தனத்தின் அடையாளம் என்று கூறியுள்ளார்கள். இந்தத் தவறான ஒரு பண்பு மட்டும் தான் நம்மிடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வோம். ஆனால் நயவஞ்சகத்தனத்தின் மற்ற பண்புகள் நம்மை அறியாமலே நம்மிடத்தில் வந்து விடும். எப்படியென்றால் ஒரு காரியத்தைச் செய்வதாக நாம் வாக்களித்துவிட்டு செய்யவில்லையென்றால் வாக்குறுதி மீறுகின்ற பண்பு நம்மிடத்தில் வந்துவிடும். வாக்குறுதி மீறுவதால் அதை மறைப்பதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி பொய் பேசுவதற்கு நம்முடைய நாவு கூசாது. இப்பொழுது பேசினால் பொய் பேசுதல் என்று பண்பும் நம்மிடத்தில் வந்துவிடுகிறது. இதிலேயே நம்பிக்கை மோசடி செய்தவர்களாகவும் ஆவோம். இறுதியில் அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்; கிட்டதட்ட நயவஞ்சகர்களின் ஒட்டுமொத்த குணங்களும் நம்மிடத்தில் வந்து விடும்.

எனவே நயவஞ்சகத்தனத்தின் ஒரு குணம் இருந்தாலும் புற்று நோயைப் போல ஊடுருவி, நம்முடைய ஈமானை அழித்து விடும். உலக விஷயங்களில் இருந்த இந்த நயவஞ்சகத்தனம் வணக்க வழிபாடுகளிலும் சோம்பல் என்ற பெயரில் ஊடுருவுகிறது. சுப்ஹு தொழுகையை எட்டு மணிக்குத் தொழுவதை வழமையாகக் கொண்டிருக்கிறோமே! ஜமாத் தொழுகையை விடுகிறோமே! இதற்கெல்லாம் காரணம் உலக விஷயத்தில் நம்முடைய வாக்குறுதியை மீறி பழகிப் போன நாம் இங்கேயும் அதைத் தொடர்கிறோம்.

அல்லாஹ் முனாஃபிக்குகளின் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடும் போது…..

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறி களாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன் 4:142)

இன்னும் நபியவர்கள் கூறுகிறார்கள்:

நயவஞ்சகர்களுக்கு மிகச் சிரமமான தொழுகை இஷாவும் ஃபஜ்ரும் தான். அவற்றின் நன்மைகளை அறிந்திருந்தால் அவர்கள் தவழ்ந்தாவது வந்திருப்பார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (1041)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்களின் மறுமை வேதனை பற்றி அல்லாஹ் குறிப்பிடும்…..

நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர். (அல் குர்ஆன் 4:145)

காஃபிர்களின் வேதனையைக் குறிப்பிடும் போது கூட இறைவன் நரகத்தின் அடித்தட்டைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
நயவஞ்சகர்களாக நாம் மாறாமல் இருப்பதற்கு நாம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். முதலில் நம்மால் முடிந்தால் வாக்குக் கொடுக்க வேண்டும். நமக்குத் தகுதி இல்லையென்றால் வாக்கு கொடுக்கக் கூடாது.

வாக்குறுதி கொடுத்து நாம் அதைக் காப்பாற்றவில்லையென்றால் இந்த அளவுக்குப் பாவமா? என்று கேட்டு விட்டுச் சிலர் பொறுப்பைக் கண்டு விரண்டு ஓடுகிறார்கள்.

அதுவும் ஒரு தவறான எண்ணமாகும். அப்படிப் பார்த்தால் யாரும் எந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளாமல் தான் இருக்க வேண்டும். மார்க்கத்திற்காக நாம் ஏற்றுக் கொள்ளும் பொறுப்பு பல நன்மைகளைப் பெற்றுத்தரக் கூடியது. நபியவர்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவம்: மதீனாவைச் சுற்றி வளைத்து எதிரிப் படைகள் நிற்கும் போது, நபியவர்கள் தோழர்களிடத்தில் எதிரிகளை உளவு பார்ப்பதைப் பற்றி கேட்டார்கள்.

‘அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நால் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ர) அவர்கள், ‘நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)’ என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், ‘அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?’ என்று கேட்க, ஸுபைர் (ர) அவர்கள், ‘நான்’ என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத் தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைர் ஆவார்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி (2846)

அந்த காலத்தில் எதிரிப் படைகளிடத்தில் உளவு பார்ப்பது என்பது சாதாரண வேலையில்லை. இப்பொழுது இருப்பது போன்று சாட்டிலைட் வைத்துப் பார்க்கும் விஷயமில்லை. எதிரிப் படைகளுக்கு மிக அருகில் சென்று உயிரைப் பணயம் வைத்துப் பார்க்கும் மிகவும் இக்கட்டான வேலை. தன்னுடைய உயிரையும் மதிக்காமல் அந்த நபித்தோழர் பொறுப்பேற்றுக் கொள்கிறார். அதற்கு நபியர்கள், அவருக்குக் கொடுக்கும் பட்டம் ஹவாரீ. ஹவாரீ என்றால் நபிமார்களுக்கு மிகவும் நெருங்கிய உயிர்த்தோழர்கள் ஆவார்கள். அவர்களின் பட்டியலில் மிகவும் நெருக்கமான தோழராக நபியர்கள் அவரை அறிவிக்கிறார்கள். எனவே மார்க்கத்திற்காக வாக்குறுதி கொடுத்து அதைச் சரியான முறையில் பேணும் போது செயல்களுக்கு ஏற்ற வகையில் கூலி கிடைக்கும்.

அது போல நபியவர்களின் காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நால் ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும்,

அல்லாஹ்வினுடையவும் அவனுடைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப் போகிறேன் அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்’ என்று கூறினார்கள். அந்தக் கொடி தங்கல் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். மறுநாள் காலையில் அவர்கல் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அலீ பின் அபீ தாப் எங்கே?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்’ என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்ட போது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காக பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வ எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்கடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ரலி)அவர்கள், ‘நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த வர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நிதானமாகச் சென்று, அவர்களுடைய களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள் மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழி யளிப்பது (அரபுகளின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விட, அல்லது அவற்றை தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்’ என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: புகாரி (4210)

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாம் விரும்புகிறோம். அல்லாஹ்வும் அவனது தூதரும் நம்மை விரும்புவது தான் மிகப் பெரிய விஷயம். ஆனால் அலீ (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்ட பொறுப்பினால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவரை விரும்பும் மிகப் பெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இன்னும் இவ்வளவு பெரிய சிறப்புக்காக மற்ற நபித்தோழர்களும் போட்டி போடுவதையும் காண முடிகிறது. இவ்வாறு பொறுப்பை ஏற்று, அதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்து, அதை உரிய முறையில் பேணுவதால் இத்தகைய சிறப்புகளைப் பெறலாம். எனவே வாக்குறுதி விஷயத்தில் இது நாள் வரைக்கும் நாம் அலட்சியமாக இருந்தாலும் இதைப் படித்த பிறகாவது திருந்திக் கொள்வதற்கு அல்லாஹ் உதவி புரிவானாக!

– எஃப். அர்ஷத் அலீ, நன்றி – கடையநல்லுார் அக்ஸா
Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.