தாடி வைப்பது அவசியமா?

தாடி வைப்பது நபிவழி என்று மக்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள். ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வ­யுறுத்திக் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (5892)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு) களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­ரி)  நூல் : முஸ்­ம் (435)

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தாடிகளை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணைவைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறுசெய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.
ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணைவைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் (மாற்றுக்கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­) அவர்கள்
நூல் : அபூதாவுத் (3512)

எனவே தாடி வைப்பது வ­யுறுத்தப்பட்ட நபிவழி என்று இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நமது முயற்சியில்லாம் தானாக வளரும் தாடியை அகற்றாமல் இருந்தாலே சுன்னத்தை நிறைவேற்றிய நன்மை நமக்கு கிடைக்கின்றது.
அதுமட்டுமின்றி தாடியைப் பொறுத்தவரை அது நமது உட­ல் ஒரு அங்கமாக இருக்கின்றது. நமது வாழ்நாள் முழுவதும் இந்த சுன்னத்தை தொடர்ந்து நிறைவேற்றும் பாக்கியம் இதன் மூலம் நமக்குக் கிடைக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் தாடி வைக்க வேண்டும்.

தாடியை மழிப்பதும் ஒட்ட நறுக்குவதும்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இணைவைப்பாளர்கள் அதாவது மஜூசிகள் (நெருப்பு வணங்கிகள்) தங்களது தாடிகளை மழித்து வந்தனர். இச்செயலை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

இப்னு உமர் (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மஜூசிகளைப் பற்றி கூறப்பட்ட போது மஜூசிகள் தங்களது மீசைகளை அதிகமாக வைக்கிறார்கள். தாடிகளை மழிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேதமுடையவர்கள் அதாவது யூதர்களும் கிரிஸ்தவர்களும் தங்களது தாடிகளை (மழிக்காமல்) ஒட்ட வெட்டி வந்தனர். இவர்கள் தாடியை விட மீசையை அதிகமாக வளர்த்தார்கள். இதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அபூ உமாமா (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரை கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அன்சாரி கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறுசெய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் முழுகால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் முழுகால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள்.
வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தறித்துக்கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தறியுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது (21252)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (5892)

தாடிகளை வளர விட வேண்டும். மீசையை ஒட்ட நறுக்க வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்ட கட்டளை. இவ்வாறு செய்தால் தான் நாம் இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்ய முடியும். அப்படியானால் இணைவைப்பாளர்கள் தங்களது மீசையை வளரவிட்டு தாடியை ஒட்ட நறுக்கி வந்தார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

எனவே தாடியை வளரவிடுங்கள் என்ற கட்டளை தாடியை ஒட்ட வெட்டக்கூடாது என்ற காரணத்திற்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாடியை மழிப்பதற்கும் ஒட்ட வெட்டுவதற்கும் இடையில் வித்தியாசம் இருந்தாலும் இவ்விரு செயல்களால் தாடி அகற்றப்பட்டு தாடி வைக்கவில்லை என்ற தோற்றமே ஏற்படுகிறது. எனவே மார்க்கம் இவ்விருசெயல்களையும் தடை செய்கிறது.
தாடியை வெட்டுவதற்கு தடையில்லை

நபி (ஸல்) அவர்கள் தாடியை மழிப்பதையும் அதை ஒட்ட வெட்டுவதை மட்டுமே தடை செய்துள்ளார்கள். தாடியை வெட்டவே கூடாது என்று தடைவிதிக்கவில்லை. அப்படி ஒரு தடை மார்க்கத்தில் இருக்குமேயானால் அத்தடையை நபி (ஸல்) அவர்கள் நமக்கு பிறப்பித்திருப்பார்கள்.
ஒருவர் தாடியை ஒட்ட வெட்டமால் தாடியை சிறிது நீளமாக விட்டு வெட்டினால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை.
ஆனால் இன்றைக்கு இலங்கையைச் சார்ந்த சில அறிஞர்கள் தாடியை வெட்டவே கூடாது என்று கூறி வருகின்றனர். சில ஹதீஸ்களை தவறாகப் புரிந்துகொண்டே இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (5893)

மேற்கண்ட ஹதீஸில் தாடியை வளரவிடுங்கள் என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் அஉஃபூ என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. சில அறிவிப்புகளில் அவ்ஃபூ வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ன.

ஹதீஸில் கூறப்பட்டுள்ளஅஉஃபூ அவ்ஃபூ வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய வார்த்தைகளுக்கு தாடியை வெட்டவே கூடாது என அகராதியில் பொருள் இருப்பதாக தாடியை வெட்டக்கூடாது என்று கூறுவோர் வாதிடுகிறார்கள்.

மீசையை குறைப்பது போன்று தாடியை குறைக்கக்கூடாது

இவர்கள் கூறுவது போல் இச்சொற்களுக்கு இந்த அர்த்தம் இருப்பதாக எந்த அரபி அகராதி நூலும் கூறவில்லை. மாறாக தாடியை அதிகமாக வைக்க வேண்டும். மீசையை குறைப்பது போன்று குறைத்துவிடக்கூடாது என்றே ­சானுல் அரப் எனும் அரபு அகராதியில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தாடியை இஃபாச் செய்யுமாறு உத்தரவிட்டதாக ஹதீஸில் உள்ளது. இஃபா என்றால் தாடியை அதிகமாக வைப்பதும் மீசையை குறைப்பதைப் போன்று குறைக்காமல் இருப்பதாகும்.

சானுல் அரப் ஆசிரியர் தாடியை வெட்டக்கூடாது என்று கூறவில்லை. மீசையை குறைப்பது போன்று தாடியை குறைக்கக்கூடாது என்றே கூறியுள்ளார்.
இந்த விளக்கத்தையே நாமும் கூறுகிறோம். மீசையை ஒட்ட வெட்டுவதைப் போன்று தாடியை ஒட்ட வெட்டக்கூடாது. இதை விடவும் கூடுதலாக தாடியை வைக்க வேண்டும் என்றே நாம் கூறுகிறோம்.

மேலும் (வளரவிடுங்கள் என்ற அர்தத்தில்) தாடி தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள சொற்கள் வேறு சில ஹதீஸ்களில் வெட்டப்பட்ட தலை முடி விஷயத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நாங்கள் ‘இஹ்ராம்’ அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள் தடுத்துவிட்டிருந்தனர். எனக்கு (காது சோணை வரை) நிறைய தலைமுடி இருந்தது.
புகாரி (4191)

மேற்கண்ட ஹதீஸில் நிறைய தலைமுடி என்று பொருள் செய்துள்ள இடத்தில் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடி விஷயத்தில் கூறப்பட்ட வஃப்பிரூ என்ற சொல்லும் வஃப்ரத் என்ற இச்சொல்லும் ஒரே வேர்ச்சொல்­­ருந்து உருவானவை.

கஅப் (ர­) அவர்களுக்கு நிறைய தலைமுடி இருந்தது எனக் கூறப்பட்டிருப்பதால் கஅப் (ர­) அவர்கள் தலைமுடியை வெட்டவே இல்லை என்று விளங்கமாட்டோம். இதைப் போன்று தாடியை வளரவிடுங்கள் என்றால் தாடியை வெட்டவே கூடாது என்று விளங்கிவிடக்கூடாது.

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிரி­ருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்துவிடுவார்கள்.
முஸ்­ம் (533)

மேற்கண்ட ஹதீஸிலும் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. காதின் சோனை வரை இருக்கும் அளவுக்கு கத்தரிக்கப்பட்ட முடிக்கு இவ்வார்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதி­ருந்து இந்த வார்த்தைக்கு முடியை வெட்டவே கூடாது என்ற பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பது தெளிவாகிறது.
வேதமுடையவர்கள் மீசையை வெட்டவில்லையா?

அபூ உமாமா (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :

நாங்கள் அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தறித்துக்கொள்கிறார்கள் மீசைகளை வளரவிடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் கத்தறியுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது (21252)

மேற்கண்ட ஹதீஸில் வேதமுடையவர்கள் மீசையை வளரவிடுகிறார்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் யுவஃப்பிரூன என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேதமுடையவர்கள் தங்களது மீசையை வெட்டாமல் இருந்தார்கள் என்று நாம் புரிந்துகொள்ளமாட்டோம். ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைத்திருந்தார்கள் என்றே புரிந்துகொள்வோம்.

நபி (ஸல்) அவர்கள் இதே சொல்லை பயன்படுத்தி உங்களது தாடிகளை வளரவிடுங்கள் என்று கட்டளையிடுகிறார்கள். அப்படியானல் தாடியை ஒட்ட நறுக்கிவிடாமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

தாடி தொடர்பான ஹதீஸில் வளரவிடுங்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபூ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபா என்ற வார்த்தை ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் தலைமுடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபூ என்ற சொல்லும் அவ்ஃபா என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்­­ருந்து உருவானவை. இதை பின்வரும் ஹதீஸி­ருந்து புரியலாம்.

அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின் அலீலிரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கüடம் குüயல் பற்றிக் கேட்டோம். ”ஒரு ஸாஉத் தண்ணீர் போதும்” என்று ஜாபிர் (ர­ரி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ”அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது” என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ”உன்னைவிட அதிக முடியுள்ளவரும் உன்னைவிடச் சிறந்தவரு(மான அல்லாஹ்வின் தூதர் அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்தது” எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.
புகாரி (252)

அதிக முடியுள்ளவர் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்ற பொருள் இருக்குமேயானால் நபி (ஸல்) அவர்கள் தலைமுடியை வெட்டியதே இல்லை என்ற தவறான கருத்து ஏற்படும்.
ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தனது தலைமுடியை வெட்டியதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே இவ்வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்று பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பதை சந்தேகமற உணரலாம்.
இப்னு உமர் (ர­) அவர்களின் செயல் நபிமொழிக்கு எதிரானதா?

அஉஃபூ அவ்ஃபூ வஃப்பிரூ ஆகிய வார்த்தைகளைக் கொண்டு தாடியை வளரவிடுங்கள் என்றக் கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்களை இப்னு உமர் (ர­) அவர்களே அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவித்த இப்னு உமர் (ர­) அவர்களே தாடியை வெட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தமது தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.
புகாரி (5892)

இப்னு உமர் (ர­) அவர்கள் தாடியை வெட்டிய தகவல் தனியான செய்தி அல்ல. மாறாக நபி (ஸல்) அவர்களின் சொல்லுடன் இதுவும் இணைத்து அறிவிக்கப்படுகின்றது.

இப்னு உமர் (ர­) அவர்களைப் போல் இப்னு அப்பாஸ் (ர­) அவர்களும் முஹம்மது பின் கஅப் (ர­) அவர்களும் தாடியை வெட்டலாம் என்ற கருத்தை கொண்டுள்ளனர். இதையெல்லாம் நாம் இங்கே எடுத்துக்காட்டாமல் இப்னு உமர் (ர­) அவர்களின் செயலை மட்டும் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது.
இப்னு உமர் (ர­) அவர்களின் செயலை நாம் ஆதாரமாக இங்கே குறிப்பிடவில்லை. ஒருவரின் சொல்லையும் செயலையும் முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ள வாய்ப்பிருக்கின்ற போது அவ்விரண்டிற்கும் இடையே முரண்பாடு கற்பிக்கக்கூடாது என்பதே நமது வாதம்.

தாடியை வெட்டவே கூடாது என்று ஹதீஸ் கூறுகிறது என வாதிடுபவர்கள் இப்னு உமர் (ர­) அவர்கள் தனது தாடியை வெட்டிய செயல் இந்த ஹதீஸிற்கு எதிரானது என்றும் தவறானது என்றும் கூறுகிறார்கள்.

தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை ஹதீஸ் தரவில்லை என்பதை முன்பே நாம் நிரூபித்துவிட்டோம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு உமர் (ர­) அவர்கள் தனது தாடியை வெட்டியிருப்பது நமது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அந்த ஹதீஸைப் பற்றி நன்கறிந்தவராக இருப்பார் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி கூறப்படும். இந்த அடிப்படையில் பார்த்தாலும் இப்னு உமர் (ர­) அவர்களின் செயல் தாடியை வெட்டுவது தவறில்லை என்ற நமது கருத்தை உறுதிபடுத்துகிறது.
குறிப்பாக இப்னு உமர் (ர­) அவர்களை பொறுத்தவரை நபிமொழியை ஜானுக்கு ஜான் கடைபிடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இப்படிப்பட்ட ஒரு நபித்தோழரின் அறிவிப்புக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடை கொண்டு வருவது ஏற்புடையதல்ல.

சிக்கல்களை உருவாக்கும் கருத்து

தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தால் சில சிக்கல்களும் ஏற்படுகின்றன. சிலருக்கு தாடி எல்லையில்லாமல் மிக நீளமாக வளர்ந்துகொண்டே இருக்கின்றனது. இவர்கள் என்ன செய்வது? என்று கேட்டால் மாற்றுக்கருத்தில் இருப்பவர்களிடம் முறையான எந்த பதிலும் இல்லை.

மேலும் தாடியைப் பொறுத்தவரை அது ஒரே அளவில் சீராக வளருவதில்லை. ஓரிடத்தில் அதிகமாகவும் ஓரிடத்தில் குறைவாகவும் சில முடிகள் நீளமாகவும் சில முடிகள் நீளம் குறைவாகவும் வளருகின்றன.

தாடியை வெட்டக்கூடாது என்று கூறினால் அலங்கோலமாக இருக்கும் தாடியை சரி செய்ய முடியாது. நமது தோற்றத்தை அழகுற வைத்துக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் கூறும் ஒழுங்கு முறையை மீறும் நிலை தான் இதனால் ஏற்படும்.

பொருத்தமற்ற ஆதாரங்கள்

தாடியை வெட்டவே கூடாது என்றக் கருத்தை முகவை அப்பாஸ் என்பவரும் தற்போது பரப்பிக்கொண்டுவருகிறார். இது தொடர்பாக இவர் எழுதிய கட்டுரையில் இவர் ஆதாரமாக கருதும் வசனத்தையும் சில ஹதீஸ்களையும் குறிப்பிட்டிருந்தார்.

விபரம் உள்ளவர்கள் இவரது கட்டுரையை பார்த்த உடனே இவரது கருத்துக்கும் இவர் எடுத்துக்காட்டிய ஆதாரங்களுக்கும் எள்ளவு கூட சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொள்வார்கள்.

தாடியை வெட்டவே கூடாது என்பது இவரது நிலைபாடு. இந்த நிலைபாட்டிற்கு ஆதாரம் காட்டுவதாக இருந்தால் தாடியை வெட்டக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தாக ஒரு ஹதீஸையாவது இவர் கூறியிருக்க வேண்டும். இந்தக் கருத்துப்பட ஒரு ஆதாரத்தையும் அவர் சுட்டிக்காட்டவில்லை.
மார்க்கத்தில் ஒரு விஷயம் தடுக்கப்பட்டிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருக்கமாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்கüடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (7288)

ஒரு விஷயத்தை நாம் தவிர்ந்துகொள்ள வேண்டுமென்றால் அதை நபி (ஸல்) தடுத்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. எனவே தாடியை வெட்டுவதை நாம் தவிர்ந்துகொள்ள வேண்டுமென்றால் இதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதைத் தடுத்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடுக்காமல் இருக்கும் போது முகவை அப்பாஸ் அதைத் தடைசெய்தால் ஈமான் உள்ள யாரும் இத்தடையை ஏற்க மாட்டார்கள். ஏற்க முடியாது.

மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை சுட்டிக்காட்டி பின்வருமாறு தன்வாதத்தை வைக்கிறார்.
இந்தப் பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள். மற்றொன்றை வளரவிட சொல்கிறார்கள். எனில் தாடியில் கை வைக்கக்கூடாது என்பது தெளிவு.

ஹதீஸில் உள்ளவாறு விளங்காமல் தன் மனோஇச்சையின் அடிப்படையில் விளங்கியதால் இவர் தானும் குழம்பி மற்ற மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கிறார்.

ஹதீஸில் கூறப்பட்ட வாசகத்தையும் இவர் ஹதீஸிற்கு கூறிய தவறான விளக்கத்தையும் நன்கு கவனித்தால் இவர் எங்கே தவறுசெய்கிறார் என்பதை அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள் எனக் கூறி ஹதீஸில் இல்லாத கருத்தை சொருகப்பார்க்கிறார்.
மீசையை நறுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. மீசையை நன்கு ஒட்ட நறுக்க வேண்டும் என்றே உத்தரவிட்டார்கள்.
இந்த உத்தரவுடன் தாடியை வளரவிடுங்கள் என்ற உத்தரவும் இணைத்து கூறப்படுகிறது. அப்படியானால் மீசையை ஒட்ட நறுக்குவதைப் போன்று தாடியை ஒட்ட நறுக்கிவிடாதீர்கள் என்றத் தடையைத் தான் ஹதீஸ் கூறுகிறதேத் தவிர இவர் கூறுவது போல் தாடியை வெட்டவே கூடாது என்றத் தடையை ஹதீஸ் பிறப்பிக்கவே இல்லை.

எனவே தாடியில் கை வைக்கக்கூடாது என்று இவர் தன் மனோ இச்சையின் அடிப்படையில் தான் கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
அடுத்து இவர் தனது வாதத்திற்கு சில விஷயங்களை ஆதாரமாக முன்வைக்கிறார். ஹாரூன் (அலை) அவர்களின் தாடி பிடிக்கும் அளவுக்கு பெரிதாக இருந்தது. நபி (ஸல்) அவர்களின் தாடி பிடிக்கும் அளவிற்கும் பெரிதாக இருந்தது. மழை நீர் அத்தாடியில் வழிந்தோடும் அளவிற்கு அது அமைந்திருந்தது. ஓதும்போது அசையும் அளவிற்கு பெரிதாக இருந்தது. நபித்தோழர்களின் தாடியும் பெரிதாக இருந்தது. இவ்வாறு கூறி தாடியை வெட்டக்கூடாது என்று வாதிடுகிறார்.
தாடியில் கை வைக்கக்கூடாது என்பது இவரது வாதம். இவர் சுட்டிக்காட்டிய ஆதாரங்களில் ஏதாவது ஒன்றிலாவது தாடியை வெட்டக்கூடாது என்ற கருத்து அடங்கியிருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

இவர்கள் குறிப்பிட்ட நபர்கள் தாடியை பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருப்பதால் இவர்கள் யாரும் தாடியை வெட்டவே இல்லை என்று எப்படி கூற முடியும்? இவர்கள் தாடியை வெட்டியும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆதாரங்களை வைத்து தாடியை வெட்டக்கூடாது என்று இவர் கூறுவது ஏற்புடையதல்ல.

ஒரு பேச்சிற்கு இவர்கள் குறிப்பிட்ட ஹாரூன் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்கள் அயோக்கியன் அபூ ஜஹ்ல் ஆகியோர் தாடியை வெட்டியதே இல்லை என்று வைத்துக்கொண்டாலும் அப்போதாவது தாடியை வெட்டக்கூடாது என்று இதி­ருந்து சட்டம் எடுக்க முடியுமா? என்றால் அதுவும் முடியாது.
தாடியை வெட்டித்தான் ஆக வேண்டும் பெரிதாக வைக்கக்கூடாது. தாடியை பிடிக்கும் அளவிற்கு வைக்கக்கூடாது என்று நாம் கூறவில்லை. இவையெல்லாம் கூடாது என்று நாம் கூறினாலே மேற்கண்ட ஆதாரங்களை காட்டி நமது நிலைபாடு தவறு என்று கூற முடியும்.
ஒருவர் தாடியை வெட்டாமல் இருப்பதும் அதை பிடிக்கும் அளவுக்கு பெரிதாக வளர்ப்பதும் அவரவரது விருப்பம். இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்றே நாம் கூறுகிறோம்.

எனவே இவர் சுட்டிக்காட்டிய ஆதாரங்கள் எதுவும் நமது நிலைபாட்டிற்கு எதிரானைவை அல்ல. மாறாக தாடியை இவ்வாறெல்லாம் வைத்துக்கொள்ளலாம் என்ற நமது நிலைபாட்டிற்கு இவை சான்றுகளாக உள்ளன.

ஹதீஸ்களி­ருந்து எவ்வாறு சட்டம் எடுக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை இவர் அறியாத காரணத்தினால் தன் வாதத்திற்கு சம்பந்தமில்லாத செய்திகளை எல்லாம் கூறியுள்ளார்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்டக் காரியத்தை மட்டும் தடை செய்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட பல விஷயங்களில் அவர்கள் ஒன்றை தேர்வு செய்கிறார்கள். இப்போது ஒரு அறிவாளியின் முடிவு எப்படி இருக்க வேண்டுமென்றால் நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததைத் தவிர்த்து மற்ற அனைத்தும் அனுமதியாகும். நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்றை தனது விருப்பப்படி தேர்வு செய்துள்ளார்கள் என்றே இருக்க வேண்டும்.

ஆனால் ஒருவர் இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்தது மட்டும் தான் அனுமதிக்கப்பட்டது. மற்றனைத்தும் தடுக்கப்பட்டது என்று கூறினால் அவரது நிலைபாடு தவறு என்று கூறுவோம்.

ஏனென்றால் எது தடைசெய்யப்பட்டது என்பதை நபி (ஸல்) அவர்கள் இடும் தடையின் மூலமே அறிய முடியும். எது அனுமதிக்கப்பட்டது என்பதை அவர்களின் உத்தரவின் மூலமும் அவர்களின் செய­ன் மூலமாகவும் அறிய முடியும். நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தை செய்திருப்பதை மட்டும் வைத்து மற்றனைத்தும் தடைசெய்யப்பட்டது என்று முடிவு செய்யக்கூடாது.

உதாரணமாக வேட்டியை தரையில் இழுபடாமல் கரண்டைக் கால் வரை உடுத்திக்கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன் கெண்டைக்கால் தெரியும் அளவிற்கு கீழாடையை உயர்த்தி அணிந்ததாக திர்மிதியில் இடம்பெற்ற 181 வது ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கெண்டைக்கால் தெரியும் அளவிற்கு ஆடை உடுத்தியிருப்பதால் இவ்வாறு தான் ஆடை உடுத்த வேண்டும் என்று நாம் கூறமாட்டோம். கரண்டை வரை ஆடை உடுத்திக்கொள்வதை ஹதீஸ்கள் அனுமதிப்பதால் கரண்டை வரை உடுத்தலாம். நபி (ஸல்) அவர்கள் உடுத்தியது போல் கெண்டைக் கால் தெரியும் அளவிற்கு உயர்த்தியும் உடுத்தலாம் என்றே கூறுவோம்.

மேலும் காவிநிற ஆடையை ஆண்கள் உடுத்தக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். எனவே மற்ற நிற ஆடைகள் அனுமதிக்கப்பட்டவை என்பதை நாம் இதி­ருந்து அறிந்துகொள்வோம்.

நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இப்போது நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணியாத காரணத்தால் அந்த நிற ஆடையை நாமும் அணியக்கூடாது என்று கூறமாட்டோம்.

இதேப் போன்று தான் தாடி விஷயத்திலும் நாம் கூறுகிறோம். அதாவது தாடியை ஒட்ட வெட்டக்கூடாது என்றே நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். வெட்டுவதை அவர்கள் தடுக்கவில்லை. எனவே ஒட்ட நறுக்காமல் கூடுதலாக தாடியை வைத்து வெட்டினால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. அது அனுமதிக்கப்பட்டது தான்.

நபி (ஸல்) அவர்கள் தாடியை பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருக்கிறார்கள் என்றால் இது அவர்களின் விருப்பம். இது போன்று நாமும் வைத்துக்கொள்ளலாம். இப்படித் தான் வைக்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு உத்தரவிடவில்லை என்பதால் இவ்வாறு வைக்க வேண்டும் என்று நாமும் கூறமாட்டோம்.
இதை முகவை அப்பாஸ் விளங்காத காரணத்தினால் தாடியை பிடிக்கும் அளவுக்கு பெரிதாகத் தான் வைக்க வேண்டும் என்று ஹதீஸில் கூறப்படாத உத்தரவை சுயமாக கூறிவருகிறார்.

தலை முடி சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரமாகுமா?

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறு பகுதி சிரைக்கப்படாம­ருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடை செய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாகச் சிரைத்து விடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­)
நஸயீ (4962)

தாடி தொடர்பான சட்டத்தை மக்களுக்கு நாம் விளக்கும் போது மேற்கண்ட ஹதீஸை நாம் குறிப்பிடுவதுண்டு.

மேற்கண்ட ஹதீஸில் தலை முடி தொடர்பாகத் தானே பேசப்படுகிறது. இதில் தாடியைப் பற்றி பேசப்படவில்லையே? எனவே தாடியை வெட்டலாம் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக முடியும்? என்று முகவை அப்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரது இக்கேள்வி அறியாமையின் வெளிப்பாடாக இருக்கிறது. மேற்கண்ட ஹதீஸை நாம் எதற்கு சுட்டிக்காட்டினோம் என்பதை இவர் விளங்காத காரணத்தால் இக்கேள்வியை கேட்டுள்ளார்.

மேற்கண்ட ஹதீஸை மட்டும் வைத்து தாடியை வெட்டலாம் என்று நாம் கூறவில்லை. அவ்வாறு யாராலும் கூற முடியாது.

மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளர விடுங்கள் என்பதே தாடி தொடர்பான ஹதீஸாகும். இந்த ஹதீஸி­ருந்தே தாடியை வெட்டலாம் என்று நாம் சட்டம் கூறுகிறோம். இவர் கூறுவது போல் தலை முடி தொடர்பான ஹதீஸி­ருந்து அல்ல.

தாடியை வளர விடுங்கள் என்றால் அதை வெட்டாமல் இருப்பது என்று சிலர் தவறாக விளக்கம் தருகிறார்கள். எனவே அக்கட்டளையின் உண்மையான பொருள் என்ன? அதை எவ்வாறு விளங்கிக்கொள்வது? என்பதை விளக்குவதற்காகவே தலைமுடி தொடர்பான செய்தியை நாம் குறிப்பிட்டோம்.

ஹதீஸில் தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை ஒரு காரணத்தை முன்னிட்டு கூறப்பட்டுள்ளது. அதாவது இணைவைப்பாளர்கள் தாடியை மழிப்பதாலும் வேதமுடையவர்கள் தாடியை ஒட்ட நறுக்குவதால் அவர்களுக்கு மாறு செய்யும் விதத்தில் வளர விட வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை அதை மழிக்கக்கூடாது. ஒட்டநறுக்கிவிடக்கூடாது என்ற கருத்தில் தான் கூறப்பட்டுள்ளது என்பதை சந்தேகமற உணரலாம்.

இந்த ஹதீஸ் தாடியை வெட்டுவதைப் பற்றி பேசவே இல்லை. அதை மழிப்பதைப் பற்றியும் ஒட்ட வெட்டுவதைப் பற்றியுமே பேசுகிறது. எனவே இந்த ஹதீஸ் எதைப் பற்றி பேசவில்லையோ அந்த விஷயத்திற்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது.

இந்த அடிப்படையயை விளக்குவதற்காகவே தலை முடி தொடர்பான செய்தியை நாம் குறிப்பிட்டோம். அந்த ஹதீஸில் தலைமுடியை முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற கட்டளையை மட்டும் கவனத்தில் கொண்டு தலைமுடியை வெட்டவே கூடாது என்று நாம் கூறமாட்டோம். ஏனென்றால் தலைமுடியை வெட்டுவதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை.

இக்கட்டளை எந்த காரணத்திற்காக பிறப்பிக்கப்பட்டது. எந்த சூழ்நிலையில் கூறப்பட்டது என்று பார்ப்போம். மழித்தால் முழுமையாக மழிக்க வேண்டும். வைத்தால் முழுமையாக வைக்க வேண்டும் என்ற கருத்திலே முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற வாசகம் கூறப்பட்டுள்ளது.

இதை புரிந்துகொள்வதைப் போன்றே தாடியை வளரவிடுங்கள் என்ற கட்டளையையும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது தாடியை ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளரவிடுங்கள் என்ற கட்டளையின் பொருள்.

தடுமாற்றங்கள்

தாடியை வெட்டவே கூடாது என்ற நிலைபாட்டின் காரணத்தால் இவரிடம் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இத்தடுமாற்றங்கள் இவரது நிலைபாடு தவறு என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

தாடியை வெட்டக்கூடாது என்று கூறிய இவர் அதை எவ்வளவு நீளமாக வைக்க வேண்டும் என்பதற்கு எந்த அளவையும் முறைப்படி இவரால் கூற முடியவில்லை. எனவே இவ்விஷயத்தில் இவரிடம் பல முரண்பாடுகள் வந்துள்ளது. இவர் கூறிய பின்வரும் வாசகத்தை கவனியுங்கள்.

எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம்.

மேற்கண்ட இவரது கூற்றுப்படி தரையை தொடும் அளவுக்கு தாடி வளர்ந்தாலே நிர்பந்தம். அப்போது மட்டுமே தாடியை வெட்டுவதற்கு அனுமதி உண்டு. நெஞ்சு வரை தாடி வளர்ந்தாலோ இடுப்பு வரை தாடி வளர்ந்தாலோ முட்டி வரை தாடி வளர்ந்தாலோ ஏன் கரண்டைக்கால் வரை தாடி வளர்ந்தாலோ அது நிர்பந்தம் இல்லை. அதை வெட்டவும் கூடாது என்று இவர் கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றை கவனியுங்கள்.

தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு பெரிதாக இருக்க வேண்டும் என அபூ ஜஹ்ல் விளங்கியது கூட குர்ஆன் ஹதீஸ் பேசும் இந்த மேதைக்கு விளங்கவில்லை.
அயோக்கியன் அபூ ஜஹ்லுக்கு வக்காலத்து வாங்கும் நிலைக்கு இவர் சென்றிருப்பது மிகவும் கேவலமான செயல். தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என அபூ ஜஹ்ல் விளங்கி இருந்தானாம்? அபூ ஜஹ்ல் இவ்வாறு விளங்கி தான் பிடிக்கும் அளவுக்கு தாடி வைத்தான் என்பதை இவர் எப்படி அறிந்துகொண்டார்?

அவன் வடிகட்டிய காஃபிராகவும் நரகவாதியாகவும் இருக்கும் போது அவனுடன் தூய நபிவழியை இவர் இணைத்து பேசுவதும் மதுரை ஆதீனம் நபி (ஸல்) அவர்களை அயோக்கியன் சங்கராச்சாரியாருடன் இணைத்து பேசியதும் ஒன்றே.

இவர் தனது வாதத்தை நிலைநாட்ட கேடுகெட்டவனையெல்லாம் முன்மாதிரியாக எடுத்துக்காட்ட தயங்கமாட்டார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

அத்துடன் இங்கே தாடி என்றால் அது பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று தாடிக்கு ஒரு அளவை கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றைப் பாருங்கள்.

நபித்தோழர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்கு தாடி வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மேற்கண்ட இவரது கூற்றை பாருங்கள். முகத்தில் தாடி இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் அளவுக்கு தாடி இருக்க வேண்டும் என வாதிடுகிறார்.
இவரது இக்கூற்று நமது நிலைபாட்டிற்கு எதிரானதல்ல. தாடி தெரியாத அளவிற்கு ஒருவர் ஒட்ட நறுக்கினாலேயே இந்த நிலை ஏற்படும். இவ்வாறு செய்வது கூடாது என்றே நாம் கூறுகிறோம்.

தரையில் படும் வரை தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதேக் கட்டுரையில் ஒரு பிடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதேக் கட்டுரையில் பார்த்தால் தாடி தெரியும் அளவிற்கு தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.

அரைகுறை மதியுடன் ஆய்வு செய்யப் புறப்பட்டவரின் நிலை இப்படித்தான் இருக்கும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாக ஆகிவிட்டார்.

ஆய்வின் சுருக்கம்

 தாடியை ஒட்ட வெட்டக்கூடாது என்ற காரணத்துக்காகவே தாடியை வளர விடுங்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாடியை ஒட்ட வெட்டாமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளரவிடுங்கள் என்ற கட்டளையின் கருத்து. எனவே தாடியை வெட்டுவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

தாடி இவ்வளவு அளவு கூடுதலாக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எந்த எல்லையும் இடவில்லை. அவர்கள் இதற்கு எந்த அளவையும் கூறாமல் விட்டிருப்பதால் நாமும் இதற்கு எந்த அளவையும் கூறக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்கüடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (7288)

தனது தாடியை எவ்வளவு நீளமாக வைக்கலாம் என்பதை அவரவரே முடிவு செய்துகொள்ள வேண்டும். ஆனால் தாடியை ஒட்ட நறுக்கி அதை அகற்றியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.

அல்லாஹ் மிக அறிந்தவன்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.