மனிதநேயம்…

மனிதனிடத்தில் அவசியம் இருக்கவேண்டிய பண்புகளில் மிக முக்கியமானப் பண்பு மனிதநேயம். மனிதநேயம் என்றால் மனிதன் மற்ற மனிதர்களை ஆடுமாடுகளைப் போன்று எண்ணாமல் மனிதர்களாக நடத்துவதாகும். தனக்கு விரும்பும் நன்மைகளை பிறருக்கு விரும்புவதும் தான் விரும்பாததை பிறருக்கும் விரும்பாமல் இருப்பதுமாகும். இப்பண்பு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை விட மோசமான நிலையை அடைவதை அன்றாட வாழ்வில் அதிகம் அதிகமாக கண்டுவருகிறோம். இறைவன் மனிதனுக்கு பயன்படக்கூடிய உறுப்புகளை ஏற்படுத்தி வெறும் உடலாக மட்டும் அவனைப் படைக்கவில்லை. உலகம் இயங்க வேண்டும் என்பதற்காக உடலுடன் பல நல்ல குணங்களையும் தன்மைகளையும் சேர்த்தே மனிதனை உருவாக்கியுள்ளான்.

நன்மைகளும் தீமைகளும்

 மனித நேயம் மட்டும் மனிதனிடத்தில் எடுபட்டுப்போயிருந்தால் என்றைக்கோ இந்த உலகம் அழிந்திருக்கும். இக்குணத்தை இறைவன் சிலரிடத்தில் இயற்கையாகவே அமைத்திருப்பதால் மனிதநேயம் அற்றவர்கள் செய்யும் கொடுமைகளின் போது மனிதநேயம் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருந்து அவர்கள் இந்த உலகில் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கிறார்கள். உலகத்தில் அனைவரிடத்திலும் மனிதநேயம் இல்லாமல் போனால் என்ன ஏற்படும் என்பதை சிறிது நேரம் சிந்தித்துப்பாருங்கள்.

எல்லோரும் கொள்ளையர்களாகவும் கொலைசெய்பவராகவும் இருந்தால் நாம் நிம்மதியாக இந்த உலகத்தில் உலாவர முடியுமா? மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருக்கக்கூடிய காட்டுமிராண்டிகள் செய்யும் அக்கிரமங்களையே மக்களால் தாங்கமுடியவில்லை. எல்லோரும் இவர்களைப் போன்று இருந்தால் என்ன ஏற்படும் என்பதை சொல்லவா வேண்டும்?

மனிதநேயத்தின் நன்மைகளையும் அது இல்லாமல் போனால் ஏற்படுகின்ற தீமைகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளவதற்கு சில வருடங்களுக்கு முன்னால் நேரிட்ட சுனாமி சம்பவம் சிறந்த உதாரணம். வீட்டை இழந்து குடும்பத்தை இழந்து நடுத்தெருவில் பல குடும்பங்கள் நின்றன. இத்துயரத்தை மனிதநேயம் படைத்த எவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நம்மால் முடிந்த அளவு உதவிகளை செய்தோம். அரசு உத்தியோகத்தில் பணிபுரிந்தவர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கினார்கள்.

பல அமைப்புகள் களமிறங்கி மக்களிடத்தில் வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைத்தன. இந்த உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காயத்தில் போடப்படும் களிம்புகளைப் போல் உதவின. இந்நிகழ்வுகள் நமக்குத் தரும் பாடம் என்னவென்றால் ஒருவன் எல்லாவற்றையும் இழந்து நிண்டாலும் அவனைக் காப்பதற்கு சில மனிதர்கள் இருப்பார்கள். அவன் மேலும் இந்த உலகத்தில் தன் வாழ்க்கையை தொடர முடியும் என்பதாகும்.

அதே நேரத்தில் இதே சம்பவத்தை வேறொரு கோணத்தில் நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல் சுனாமியி­ருந்து தப்பித்து காப்பாற்றும் படி வேண்டிக்கொண்டிருந்த இளம்பெண்களை கற்பழித்து கொன்ற மனிதநேயம் அற்றவர்களையும் இந்த சுனாமி அடையாளம் காட்டியது. ஒரு பக்கம் சுனாமியின் அட்டகாசம் மறுபக்கம் இந்த கள்நெஞ்சக்காரர்களின் அட்டகாசம். ஈவு இரக்கம் கொஞ்சம் கூட இல்லாமல் இறந்துகிடக்கும் பிணங்களின் நகைகளை திருடினார்கள். கையில் போட்டிருந்த மோதிரத்தை கிளற்ற முடியாதபோது விரலோடு சேர்த்து வெட்டி எடுத்தார்கள் கள்நெஞ்சக்காரர்கள். மக்களிடம் வசூ­த்த பணத்தை உரியவர்களிடத்தில் கொடுக்காமல் சுருட்டிக் கொள்ளவும் செய்தார்கள்.

தன்னுடைய கவனக்குறைவால் எதிரில் வந்த வாகனத்தின் மீது ஒருவர் மோதிவிடுகிறார். இப்போது மனிதநேயம் அற்றவர்கள் காயப்பட்டு உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவதற்காக முயற்சிக்காமல் எப்படியாவது இதி­ருந்து நாம் தப்பிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். உயிர் என்று கூடப் பாராமல் அது துடிப்பதை பார்த்து விட்டு ஓடிவிடுகிறார்கள். அதைக் கடந்து செல்பவர்களாவது அவர்களுக்கு உதவுவார்களா என்றால் இல்லை. இவரை நாம் காப்பாற்றச் சென்று இவர் இறந்துவிட்டால் நாம் தான் காவல்நிலையத்திற்கு அழைய வேண்டும் என்று நினைத்து வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய நலனைப் பார்க்கிறார்களேத் தவிர பிறர் நலம் பேணுவதில்லை.

மனிதநேயமற்ற பட்டதாரிகள்

படிக்காதவனிடத்தில் இருக்கும் மனிதநேயத்தை விட படித்தவனிடத்தில் அதிகம் மனிதநேயம் இருக்க வேண்டும். ஆனால் இன்று இதற்கு தலைகீழாக படித்தவர்கள் நடந்துகொண்டு இருக்கிறார்கள். கல்லூரிகளில் பழைய மாணவர்கள் புதிய மாணவர்களை கே­ செய்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியாக பேசுகிறார்கள். அரை நிர்வானமாக கல்லூரியை சுற்றச் சொல்கிறார்கள். இன்னும் இதுபோன்று நிறையக் கொடுமைகள் நடக்கின்றது. மக்களுக்கு மனிதநேயத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய இவர்கள் இப்படி மனிதநேயம் அற்று நடக்கிறார்கள். இதற்காகத்தான் இவர்கள் படித்தார்களா? கல்வியின் நோக்கம் என்னவோ அதை குழிதோண்டி புதைக்கும் வகையில் இவர்களுடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

மருத்துவர் நோயாளிகளிடம் கூறும் பணிவான வார்த்தைகள் நடத்தைகள் பாதி நோயை குணப்படுத்திவிடும். ஆனால் இன்று மனிதநேயம் இல்லாத சில மருத்துவர்கள் நோயாளிகளை குணப்படுத்தும் நோக்கில் மருத்துவமணைகளைக் கட்டாமல் அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் எண்ணத்தில் கட்டுகிறார்கள். ஆத்திர அவசரத்திற்கு வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவமணைகளில் வந்து நோயாளிகளை சேர்த்துவிடுகிறார்கள். இதை பயன்படுத்திக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆயிரம் பத்தாயிரம் என்று பிள்ளை சரமாறியாக அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மருத்துவர்கள் மருத்துவப்படிப்பை நோயாளிகளிடமிருந்து கொள்ளையடிப்பதற்காகத் தான் படித்தார்களா? எவ்வளவு தான் படிப்பு இருந்தாலும் மனிதநேயம் இல்லாவிட்டால் அவன் மிருகத்தை போன்று ஆகிவிடுவான் என்பதை இவர்களுடைய செயல் உணர்த்துகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் எண்ணத்தில் உள்ளது. நியாயமான சிந்தனையுடைய எவர்களும் இதைத் தவறு என்று சொல்லமாட்டார்கள். ந­வடைந்தவர்கள் வலுமையானவர்களுடன் போட்டிப் போட இயலாது. ஒரு பேருந்தில் எல்லோரும் சமமாக நடத்தப்படுவது கிடையாது. பலம் குன்றிய முதியவர்கள் பெண்கள் ஊனமுற்றவர்கள் ஆகியோர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுடைய இடத்தில் மற்றவர்கள் யாரும் அமர முடியாது. இப்படி இடம் ஒதுக்குவது தவறு என்று சொன்னால் நிச்சயமாக அவர் மனிதநேயம் அற்றவராகத்தான் இருப்பார். தான் நன்றாக அரசுப்பதவிகளில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களேத் தவிர எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுவதில்லை. மருத்துவத்தைப் படித்தவர்கள் கூட இதை விளங்கிக்கொள்ளவில்லை.

மனிதநேயம் இல்லாமல் போனால் மனிதன் மனிதனாக மதிக்கப்பட மாட்டான். நிம்மதியாக நாம் வாழ முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகிறது. மொத்தத்தில் மனிதநேயத்தினால் உலகத்திற்கு மாபெரும் நன்மை உண்டு என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிகிறோம். பொதுவாக இஸ்லாமிய மார்க்கம் மனித சமுதாயத்திற்கு பலன் தரக்கூடியது ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி வலுயுறுத்தாமல் இருக்காது. அதேப் போல் மனிதர்களுக்கு தீமை தரக்கூடியது ஏதேனும் இருந்தால் அதை எச்சரிப்பதில் இஸ்லாத்தை மிஞ்சுவதற்கு உலகில் எதுவும் இல்லை. மனிதநேயத்தினால் உலகத்திற்கு மாபெரும் நன்மை இருக்கிறது என்றால் இஸ்லாம் இதைப்பற்றி பேசாமல் இருக்குமா என்ன? இதோ இஸ்லாம் கூறும் மனிதநேயத்தைப் பாருங்கள்.
இஸ்லாமும் மனிதநேயமும்
மக்களிடத்தில் மனிதநேயத்தை ஊட்டவேண்டும் என்பதற்காக இறைவன் மனிதர்களுக்கு நாம் உதவி செய்வதை அவனுக்கு உதவி செய்வதைப் போன்றும் மனிதனுக்கு நாம் இரக்கம் காட்டாவிட்டால் அவனை வெறுத்துத் தள்ளியதைப் போன்றும் எடுத்துக் கொள்கிறான். இதை உணராத மக்கள் செல்வங்களை உண்டிய­ல் போடுகிறார்கள். பிச்சைக்காரனாக இருந்தாலும் அவனிடத்திலும் மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. ஏழைக்கு உதவுவது இறைவனுக்கு உதவுவதைப் போன்றது என்று இஸ்லாம் நமக்கு பின்வரும் செய்தியின் மூலம் உணர்த்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா நீ அகிலத்தின் இறைவன் உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம்விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம்விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதை செய்ததாக கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்று கூறுவான். அதற்கு அவன் என் இறைவா நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­)
நூல் : முஸ்­ம் (4661)

பாதையில் துன்பம் தரக்கூடிய பெரிய கல்லோ அல்லது முல்லோ அல்லது கண்ணாடிச் சில்லோ கிடந்தால் அதை நாம் அகற்ற வேண்டும். ஆனால் இவற்றை நம் கண்ணால் பார்த்தும் கூட அதை கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகிறோம். சிலர் இவைகளால் காயப்படுவார்கள். இதன் பின்பாவது அவர்களுக்கு புத்தி வருமா என்றால் வராது. கல்­ல் இடித்து விட்டு காலைத் தடவிவிட்டுச் செல்வார்களேத் தவிர அதை அகற்ற முன்வர மாட்டார்கள். சிலர் புகைப்பிடித்து விட்டு நெருப்புக்கங்கை அனைக்காமல் அப்படி தெருவில் போட்டுவிடுகிறார்கள். செருப்பு போடாத சிறுவர்கள் அதை மிதித்து துடிதுடித்துப் போகிறார்கள். எனவே இஸ்லாம் மனிதநேயத்தைக் கருதி பாதையில் கிடக்கும் இடையூறு அளிக்கும் பொருட்களை அகற்றுவது ஈமானில் ஒரு பகுதி என்று கூறுகிறது. அல்லாஹ்வை நம்பியவர்களிடத்தில் அவசியம் இச்செயல் இருக்க வேண்டும் என்று வ­யுறுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஈமான் என்பது எழுபத்து சொச்ச கிளைகளாகும். அவற்றில் உயர்ந்தது வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் கடைசி நிலை பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவதாகும்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­)
நூல் : முஸ்­ம் (51)

அழகிய முன்மாதிரி

நம்முடைய உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதநேயத்தின் தந்தையாகத் திகழந்து நாம் அனைவரும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு அழகான முன்மாதிரியாக வாழ்ந்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் வாழ்நாளில் நடந்த பின்வரும் சம்பவம் நம் மனதை நெகிழச் செய்கிறது.
(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத (அரை) நிர்வாணிகளாய் வட்டமாய் கிழிந்த கம்பளி ஆடை அல்லது நீளங்கி அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முளர் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை. அவர்கள் அனைவரும் முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

அவர்களுடைய ஏழ்மையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு வித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ர­) அவர்களிடம் உத்தரவிட பிலால் (ர­) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது மக்களே உங்களை ஒரே ஆன்மாவி­ருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள் எனும் (4.1) வது இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள நம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளதை என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள் எனும் (59.18)வது வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி) னார்கள்.

அப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளி­ருந்தும் வெள்ளிக்காசுகளி­ருந்தும் ஆடைகளி­ருந்தும் ஒரு ஸாஉ கோதுமையி­ருந்தும் ஒரு ஸாஉ பேரித்தம்பழத்தி­ருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப்பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் கண்டேன்.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர­)
நூல் : முஸ்­ம் (1691)

இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களிடத்திலும் அவர்களுடைய தோழர்களிடத்திலும் இருந்த மனிதநேயத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. வறுமையால் பீடிக்கப்பட்ட அந்த மக்களைப் பார்த்த உடன் பெருமானாரின் முகம் மாறி அவர்கள் தவித்ததும் பொருட்கள் குவிந்த பின்பே அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டதும் அவர்களிடத்தில் அளவில்லா மனிதநேயம் இருப்பதைக்காட்டுகிறது.

இன்றைக்கு எத்தனையோ நாடுகளில் வாழும் மக்கள் உணவுக்கு வழியில்லாமல் வாடிக்கொண்டிருக்கிறார்கள். பசிக்கொடுமையினால் சாகவிருக்கும் ஒரு சிறுவனை திண்பதற்கு கழுகு காத்திருந்த சம்பவம் கொடிய நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளத்தைக் கூட கரையச் செய்துவிடும். செல்வாக்கில் உயர்ந்து நிர்க்கின்ற மேலை நாடுகள் தங்களுடைய தேவைக்குப் போக டன்கணக்கில் பாலையும் மாவையும் வீணாக கட­ல் சென்று கொட்டுகிறார்கள். லாரிலாரியாக தக்காளிகளையும் திராட்சைகளையும் கொண்டு வந்து மகிழ்ச்சி என்ற பெயரில் எரிந்து விளையாடுகிறார்கள்.

உலகத்தில் கிடைக்கின்ற எல்லாப் பழங்களையும் ஓரிடத்தல் ஒன்றுசேர்த்து அதில் குரங்குகளை விட்டு அவை அவற்றை நாசப்படுத்துவதைப் பார்த்து பூரிப்படைகிறார்கள். ஒரு பக்கம் உணவு இல்லாமல் மனிதஉயிரினம் வாட ஆடம்பர பிசாசுகள் இப்படி வீண்விரயம் செய்கிறார்கள். உண்மையில் மனிதநேயம் இருந்தால் இதுபோன்று இவர்கள் செய்வார்களா? அரும்பாடுபட்டாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதாவம் இருப்பார்களா? நபி (ஸல்) அவர்களிடம் இருந்த மனிதநேயத்தைப் போல் இவர்களிடமும் இருந்தால் இவர்கள் இப்படி உணவுப்பொருட்களை வீணாக்குவார்களா? உலகம் இதை தீவிரமாக கண்காணிக்க கடமைப்பட்டிருக்கிறது.

எதிரிகளிடத்தில் மனிதநேயம்

பொதுவாக மனிதநேயம் என்பது இஸ்லாத்தை ஏற்றவர்களிடத்திலும் ஏற்காதவர்களிடத்திலும் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் நம்மை எதிர்க்காத நமக்குத் துன்பம் தராத ஒருவரிடத்தில் தான் மனிதநேயத்துடன் நடந்துகொள்வோம். ஆனால் இஸ்லாம் பரமஎதிரியிடத்தில் கூட மனிதநேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகிறது. இது தான் இஸ்லாம் கூறும் மனிதநேயத்திற்கும் மற்றவர்கள் கூறும் மனித நேயத்திற்கும் உள்ள வித்தியாசம்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழுகும் பள்ளிவாச­ல் நின்று கொண்டு சிறுநீர்கழிக்க ஆரம்பித்தார். இதைப்பார்த்த அவர்களது தோழர்கள் நிறுத்து நிறுத்து என்று கூறி தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து அவர் சிறுநீர் கழிக்க இடையூராக இருக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும் என்று கூறிவிட்டு ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்த கிராமவாசி சிறுநீர் கழித்தப் பின்பு நபியவர்கள் அவரை அழைத்து பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக்கூடாது. இங்கு இறைவனை நினைக்கவேண்டும். தொழுக வேண்டும். குர்ஆன ஓத வேண்டும் என்று கூறி உபதேசம் செய்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மா­க் (ர­)
நூல் : முஸ்­ம் (429)

இன்றைக்கு யாராவது ஒரு கோவி­லோ அல்லது சர்ச்சிலோ அல்லது பள்ளிவாச­லோ சென்று அந்த கிராமவாசி செய்தது போல செய்தால் அவர் உயிருடன் வெளியே வருவதில் சந்தேகம் தான். நாம் புனிதமாக மதிக்கும் ஆலயத்தை ஒருவர் அசுத்தம் செய்யும் போது யாரும் பொருத்துக்கொண்டு இருக்கமாட்டோம். சஹாபாக்களும் கோபப்பட்டு அவரை அடிப்பதற்குச் சென்றார்கள். ஆனால் மனிதநேயத்தின் மறுஉருவாய் திகழ்கின்ற நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்கள் அவரை சிறுநீர்கழிக்க விடாமல் தடுப்பதினால் அவருக்கு சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை இடைமறிக்கச் சென்ற தன்னுடையத் தோழர்களைத் தடுத்தார்கள்.

தன் வீட்டை ஒருவர் அசுத்தம் செய்தால் அவரை நாம் அடிக்காமல் விடமாட்டோம். வீட்டை விட புனிதமான பள்ளிவாச­ல் ஒருவர் சிறுநீர் கழித்தபோதும் கூட அவர் துன்புற்றுவிடக்கூடாது என்று நபிகள் நாயகம் நினைத்திருக்கிறார்கள் என்றால் இந்த மனிதநேயத்தை வர்ணிக்க உலகில் வார்த்தைகள் உண்டா?

நபி (ஸல்) அவர்கள் உண்மைமார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்ன போது அவர்களுக்கு எதிரிகள் பஞ்சமில்லாமல் இருந்தார்கள். பெருமானாரைத் துன்புறுத்தியதில் யூதர்களுக்கும் பங்கு உண்டு. அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று சொல்வதற்கு பதிலாக அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று நேருக்குநேராக சபித்தவர்கள் அந்த யூதர்கள். நபி (ஸல்) அவர்கள் நம்பிக்கையானவர் என்று தெரிந்து கொண்டே அவர் நம் பொருளை பறித்துவிடுவார் என்று கூறி மக்களிடத்தில் கேவளமாகப் பேசியவர்கள் அந்த யூதர்கள். என்றாலும் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடத்தில் அன்போடு நடந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப் பற்றி நலம் விசாரிப்பதற்காக அவனிடத்தில் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமர்ந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர­)
நூல் : புகாரி (1356)

நபி (ஸல்) அவர்களை ஒரு பிரேதம் கடந்துசென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடத்தில் இது ஒரு யூதனின் பிரேதம். (இதற்காகவா நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்?) என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதுவும் ஒரு உயிர்தானே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் ஹ‎ýனைஃப் மற்றும் கைஸ் பின் சஃத் (ர­)
நூல் : புகாரி (1313)

நபி (ஸல்) அவர்கள் யூதன் கிரிஸ்தவன் என்று பாராமல் மனிதன் என்று பார்த்துள்ளார்கள். உயிரை உயிராக மதிக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஒரு துக்ககரமான காரியம் ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது நாம் அமரமாட்டோம். நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் மனிதநேயத்தை கடைபிடிப்பதில் படித்தவர்களுக்கு கற்றுத்தரும் ஆசானாகத் திகழ்ந்துள்ளார்கள்.

போர்களத்தில் மனிதநேயம்

போர் என்று வந்துவிட்டால் நாட்டில் அனைவரும் நிம்மதியின்றி தவிப்பதைப் பார்க்கின்றோம். இலங்கையில் நடக்கும் போரால் அங்கிருந்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அகதிகளாக நம் நாட்டிற்கு வருகிறார்கள். இதற்குக் காரணம் போர் நடக்கும் போது அங்கு பெண்கள் முதியவர்கள் சிறுவர்கள் என்று பாராமல் சரமாரியாக தாக்குதல்கள் தொகுக்கப்படுவதாகும். போரின் போது யார் யாரின் மீதும் இரக்கப்படமாட்டார்கள். இப்படித் தான் இன்று கூட நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இஸ்லாம் போரில் சிறுவர்களையும் பெண்களையும் கொல்லக்கூடாது என்று கட்டளையிடுகிறது. இன்றைக்கு நாட்டுக்குள் தாக்குதல் தொடுக்கப்படுவதைப் போல் அன்றைக்கு தாக்குதல்கள் தொகுக்கப்படவில்லை. போரிடும் இருசாராரும் வெட்டவெளிக்கு வந்து போரிட்டார்கள். இங்கு சிறுவர்களும் பெண்களும் ஏன் வர வேண்டும்? என்ற கேள்வி ஞாயமாக இருந்தாலும் அவ்விருவர்களை ஒன்றும் செய்யக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக்கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­)
நூல் : புகாரி (3015)

தீங்குசெய்தோருக்கு மனிதநேயம்

 நிறைய இன்னல்களை கொடுத்த யூதர்களிடத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மனிதநேயத்திற்கு அளவே இல்லை. தீமைசெய்தோருக்கும் நன்மை செய் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதை முழுமையாகக் கடைபிடித்தார்கள்.

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.
அல்குர்ஆன் (41 : 34)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று திருக்குறள் கூறுகிறது. தீமை செய்தோரை தண்டிக்கவேண்டுமானால் இவருக்கா நாம் தீமை செய்தோம் என்று அவர் என்னும் அளவிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பது இதன் கருத்து. இதை அன்றைக்கே நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்வில் கடைபிடித்துவிட்டார்கள்.

ஒரு யூதப் பெண்மனி நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டை கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டுவிட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து இவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மா­க் (ர­)
நூல் : புகாரி (2617)

அப்பெண்மனி வைத்த விஷத்தின் தாக்கம் நீண்ட நாட்கள் பெருமானாருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மாத்திரம் ஒரு கட்டளை போட்டிருந்தால் அப்பெண்மனியை சஹாபாக்கள் கொன்றிருப்பார்கள். அவளை கொலைசெய்தால் அதை யாரும் குற்றம் என்று கூறவும் மாட்டார்கள். என்றாலும் மனிதநேயம் அவர்களிடத்தில் மிகைத்திருந்ததால் தன்னைக் கொல்ல நினைத்தவளை கொலை செய்ய நபி (ஸல்) அவர்களின் உள்ளம் இடம்கொடுக்கவில்லை. இதேப் போன்று இன்னொரு சம்பவமும் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்துவிட்டு தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாக சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள். திடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களை கொலை செய்வதற்காக தன் கையில் வாளை எடுத்துக்கொண்டு முஹம்மதே இப்போது உன்னை யார் காப்பாற்றுவார் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் காப்பாற்றுவான் என்று கூறினார்கள்.

பின்பு அவர் கையில் இருந்த வாள் கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிடமாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரை தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். அவர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமி‎ருந்து நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­)
நூல் : அஹமத் (14401)

கொலை செய்ய வந்தவரை தண்டிக்காமல் நபி (ஸல்) அவர்கள் மன்னித்து விட்டது அவர்களின் பரந்த மனப்பான்மைûயும் அவர்கள் எதிரிகளிடத்தில் காட்டிய மனிதநேயத்தையும் காட்டுகிறது. அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சப்தமிட்டு அனைத்துத் தோழர்களையும் வரவழைத்து அவரை ஒரு கை பார்த்திருக்கலாம். ஆனால் நபியவர்கள் அப்படி செய்யவில்லை. இஸ்லாத்தை அவர் ஏற்க மறுத்த போதிலும் எதிராக இனிமேல் போர் செய்யமாட்டேன் என்ற உறிதிமொழி அளித்தவுடன் அவரை தண்டிக்கவில்லை. இது இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று கூறுபவர்களுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது. தன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்து இஸ்லாம் போரிட்டதேத் தவிர போரில் ஈடுபடாத அப்பாவிகளை தாக்ககுவதை இஸ்லாம் விரும்பவில்லை.

உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற அமேரிக்கா ஈராக் எதிரிகளை நடத்திய விதத்தைப் பார்த்து உலகம் முழுவதி­ருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. கொஞ்சம் கூட மனித உணர்வுகள் இல்லாமல் நாய்களை விட்டு வெறுமேனியில் அவர்களை கடிக்கவிட்டது. இன்னும் மோசமான கொடுமைகளைச் செய்தது. நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள் அனைவரும் அவர்கள் முன்னிலையில் நிண்டார்கள். கருணை வடிவான நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அனைவரைக்கும் மன்னிப்பு வழங்கிவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ர­) அவர்களை வஹ்ஷீ என்ற கருப்புற நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ர­) அவர்களை கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்காவை அவர்கள் கைப்பற்றியப் போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து நீ தான் வஹ்ஷீயா? ஹம்ஸாவை கொன்றவர் நீ தானா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ர­) அவர்களின் ஞாபகம் வந்ததால் அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள் தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா? என்று பணிவுடன் வேண்டிக்கொண்டார்கள். இதன் பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தை தழுவிக்கொண்டார்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் அதீ (ரஹ்)
நூல் : புகாரி (4072)

நியாயத் தீர்ப்பும் மனிதநேயமும்

 இன்றைக்கு நீதி என்பது அநீதியாக மாறிக்கொண்டிருக்கிறது. நீதிவழங்குவதாகக் கூறிக்கொண்டு தனக்குப்பிடித்தவருக்குச் சாதகமாகவும் பிடிக்காதவருக்கு எதிராகவும் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றது. வெறுப்பும் பகைமையும் நீதம் செலுத்தவிடாமல் தடுத்துவிடுகிறது. ஆனால் இஸ்லாம் பகைவர்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் மனிதநேயத்தை கருத்தில் கொண்டு நீதம் செலுத்த வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காம­ருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் (5 : 8)

நபி (ஸல்) அவர்களை வெறுத்தவர்கள் கூட நபியவர்களிடத்தில் வந்து தீர்ப்புக் கேட்டார்கள். இதற்குக் காரணம் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையே காரணம். நபி (ஸல்) அவர்களும் யூதன் கிரிஸ்தவன் முஸ்­ம் என்று பார்க்காமல் மனிதநேயத்துடன் நடந்துகொண்டார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சிறந்த சான்றாக உள்ளது.

யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டிய போது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர் மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக (நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன் என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்துகொண்டிருக்க மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனின் மீது சத்தியமாக என்றா கூறுகிறாய்? என்று கேட்டார்.

உடனே அந்த யூ‎தர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அபுல்காசிம் அவர்களே (என் உயிர் உடைமை மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்துள்ளீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்­மை நோக்கி நீ ஏன் இவருடைய முகத்தில் அறைந்தாய்? என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­)
நூல் : புகாரி (3414)

யூதர் எடுத்துவைத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு அந்த அன்சாரித்தோழரிடம் ஏன் அடித்தாய் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் பின்பு அவரைக் கண்டித்ததும் மாற்றார்களிடத்தில் பெருமானார் காட்டிய மனிதநேயத்தை எடுத்துரைக்கிறது.
அடிமைகளிடத்தில் மனிதநேயம்

இன்றைக்கு அடிமை நிலை இல்லாவிட்டாலும் சிலர் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் வேலையாட்களை அடிமைகளைப் போன்று நடத்துகிறார்கள். வேலையாட்களை அடித்தும் கெட்டவார்த்தைகளால் அவர்களைத் திட்டியும் துன்பம் கொடுக்கிறார்கள். இதைத் தட்டிக்கேட்க யாருக்கு வேண்டுமானால் உரிமையுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அடிமைகள் ஆடுமாடுகளைப் போன்று நடத்தப்பட்டார்கள். மார்க்கட்டில் காய்கறிகள் விற்கப்படுவதைப் போன்று அடிமைகள் விற்கப்பட்டார்கள். நம்முடைய ஆட்டை நாம் அறுத்தால் அடித்தால் யாரேனும் கேள்விகேட்பார்களா? இல்லை. அதுபோல் ஒருவரது அடிமையை அவர் அடித்தால் அவரை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது.

இப்படிப்பட்ட கொடூரமான காலத்தில் நபியாகத் தோன்றிய முஹம்மத் (ஸல்) அவர்கள் அடிமைகளும் மனிதர்கள் தான் என்பதை உலகிற்கு உணர்த்தினார்கள். அவர்களிடத்திலும் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுத்தந்தார்கள். அடிமைகளுக்கு கொடுமைகள் இழைக்கப்படும் போதெல்லாம் அதை எதிர்த்து குரல் கொடுத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகள் உறுதிபடுத்தும்.

நான் ஒருவரை (அவருடையத் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா? என்று கேட்டார்கள். பிறகு உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கின்றாரோ அவர் தன் சகோதரருக்கு தான் உண்பதி­ருந்து உண்ணத்தரட்டும். தான் உடுத்துவதி­ருந்தே உடுத்தத்தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படியே அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ர­)
நூல் : புகாரி (2545)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டுவந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் கொடுக்கட்டும். ஏனெனில் அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டிருப்பார்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­)
நூல் : புகாரி (2557)

நாகரீகம் வளர்ந்து சமத்துவம் பேசப்படுகின்ற இந்தக்காலத்தில் கூட நபி (ஸல்) அவர்கள் சொல்­த் தந்த மனிதநேயம் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் அன்றைக்கே எஜமான் தான் எதை உண்ணுகிறாரோ எதை உடுத்துகிறாரோ அதையே தன் அடிமைக்கு உண்ணக்கொடுக்கட்டும் உடுத்தக்கொடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்­யிருக்கிறார்கள் என்றால் இதை விட பெரிய மனிதநேயம் யாரிடத்தில் இருக்க முடியும்?

ஆண்மீகத்தில் மனிதநேயம்

 இஸ்லாம் எல்லாநிலைகளிலும் மனிதநேயத்தை கடைபிடிக்கிறது. ஆண்மீகத்தில் கூட மனிதநேயத்துடன் நடந்துகொள்கிறது. இன்றைக்கு ஆண்மீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான இறைவழிபாடுகள் தினந்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. மொட்டைத் தலையில் தேங்காயை உடைப்பதை இறைவன் விரும்புகிறான் என்று நினைக்கின்றனர். மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டு வருவதைப் பார்த்தும் அர்ச்சகருக்கு இரக்கம் வரவில்லை.

கடவுளுக்காக வெறுமேனியில் சாட்டையைக் கொண்டு அடித்துக்கொள்கிறார்கள். நெருப்பில் குதித்து காலைப் புண்ணாக்கிக்கொள்கிறார்கள். கடவுளை நெருங்க வேண்டும் என்பதற்காக தன்னைத் தாதனே துன்புறுத்திக் கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் விரும்பவே விரும்பாது. ஆண்மீகத்தையும் மனிதநேயப்பார்வையுடன் பார்க்கிறது. எனவே தான் இதுபோன்ற வழிபாடுகளுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.
நபி (ஸல்) அவர்கள் உரைநிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். எனவே அவரைப் பற்றி (மக்களிடத்தில்) விசாரித்தார்கள். மக்கள் அவர் அபூஇஸ்ராயீல் ஆவார். உட்காராமல் வெயி­ல் நிற்பதாகவும் பேசாமல் இருப்பதாகவும் நோன்புவைப்பதாகவும் அவர் நேர்ச்சை செய்துள்ளார் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரை பேசச் சொல்லுங்கள். அவர் நிழ­ல் வந்து அமரட்டும். நோன்பை பூர்த்தி செய்யட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­)
நூல் : புகாரி (6704)

இந்த செய்தி ஆண்மீகம் என்றப் பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆண்மீகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாபெரும் மகானாக ஆக வேண்டும் என்றால் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். சாதாரண மனிதனுக்கு இருக்கின்ற ஆசைகள் அவனிடத்தில் இருக்கக்கூடாது என்று எண்ணுகிறார்கள். ஆனால் இஸ்லாம் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட மார்க்கம் அல்ல என்பதால் அவசியம் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பின்வரும் சம்பவம் ஆண்மீகத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய மனிதநேயத்தை தெளிவாகக் காட்டுகிறது.

நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி (ஸல்) அவர்களுடன் வந்தேன். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்கக்குணமுடையவராகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டும் என்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக்கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்துவிடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மா­க் பின் ஹ‎ýவைரிஸ் (ர­)
நூல் : புகாரி (628)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையை துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதினால் தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ர­)
நூல் : புகாரி (707)

மக்களிடத்தில் மனிதநேயம்

இத்தகைய அரும்பெரும் மார்க்கத்தை பெற்றும் கூட சில இஸ்லாமியப் பேர்தாங்கிகள் நடத்தும் கொடூரத்தாக்குதல்களினால் இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்பட்டுவிடுகின்றது. இஸ்லாமியப் பெயர்தாங்களான இவர்கள் மருத்துவமனைகளிலும் மக்கள் கூடும் மார்க்கெட்டுகளிலும் ஈவு இரக்கமின்றி குண்டுகளை வைத்துவிடுகின்றார்கள். அவர்கள் இதை சரி என்று எண்ணிக்கொண்டு செய்கிறார்கள். இதைப் பார்ப்பவர்கள் இஸலாம் தீவிரவாதத்தை போதிக்கின்ற மார்க்கம் போல என்று தவறாக எண்ணிவிடுகிறார்கள்.

ஒரு அயோக்கியன் செய்யும் குற்றத்திற்கு அவன் தான் பொறுப்பாளியேத் தவிர அவன் சார்ந்துள்ள மதமோ இனமோ அல்ல. என்னருமை மாற்றுமத அன்பர்களே உங்களிடத்தில் நாங்கள் ஒன்றைக்கூறிக் கொள்கிறோம். இஸ்லாமியர்களின் செயல்பாடுகளைப் பார்த்து இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாதீர்கள். இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிந்தியுங்கள். தீவிரவாதத்தை இஸ்லாம் கண்டிப்பதைப் போல் எந்த மதமும் கணிடிக்கவில்லை.

மனிதநேயம் இல்லாமல் ஒருவன் செயல்பட்டால் அவன் முஸ்­மாக இருந்தாலும் இஸ்லாம் அவனை ஒருபோதும் அங்கீகரிக்காது. அவன் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் அப்பாவி மக்களைக் கொன்றதற்கு நிச்சயம் அவன் இறைவனிடத்தில் பதில் சொல்­யே ஆக வேண்டும். ஒரு உயிரை அநியாயமாக பறிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் யாருக்கும் வாங்கவில்லை. அப்படி அவன் பறித்தால் அவனுக்கு இறைவன் விடும் எச்சரிக்கையைப் பாருங்கள்.

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.
அல்குர்ஆன் (5 : 32)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர­)
நூல் : புகாரி (7376)

இஸ்லாம் ஒரு படி மேலேச் சென்று மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது. அவைகளிடத்தில் நன்முறையில் நடந்துகொள்வதின் மூலமும் இறைவனை நெருங்கலாம் என்று கூறுகிறது. மிருகத்திடம் நேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகின்ற இஸ்லாம் மனிதநேயத்தை எவ்வளவு பெரிய அந்தஸ்த்தில் வைத்துள்ளது என்று பாருங்கள்.

ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே அவர் (அங்கிருந்த) கிணற்றில் இறங்கி அதி­ருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு (கிணற்றி­ருந்து) அவர் வெளியே வந்தபோது நாய் ஒன்று தாகத்தால் தவித்து நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) எனக்கு ஏற்பட்டதைப் போன்று (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும் என்று எண்ணிக்கொண்டார். உடனே (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு அதை வாயால் கவ்விக்கொண்டு மேலே ஏறிவந்து அந்த நாய்க்குப் புகட்டினார்.

அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை மன்னித்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை செவியுற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே கால்நடைகளுக்கு (உதவுவதினாலும்) எங்களுக்குப் பலன் கிடைக்குமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­)
நூல் : புகாரி (2363)

இஸ்லாம் கூறுகின்ற இத்தகைய மனிதநேயத்தை உலக மக்கள் தெரிந்து உண்மையை உள்ளதுபடி அறிந்து அவர்கள் நேர்வழிபெற இறைவன் அருள்புரிவானாக.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.