முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கான காரணங்கள்…

தற்போது மனிதன் கல்விலும் நாகரீகத்திலும் உயர்ந்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கின்றான். மனிதநேயம் மற்றும் மனித உரிமைகளின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றான்.

ஆனால் தன்னைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதிலும் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறையிலும் அவன் தவறான போக்கை தொடர்ந்து கடைபிடித்துக்கொண்டிருக்கின்றான்.

இதன் விளைவால் ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் முளைக்கின்றன. சிலர் ஊருக்கு பயந்து பெற்றோர்களை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டாலும் மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் பெற்றோர்களை நோவினை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

பெற்றோர்களின் கணிவிலும் அன்பிலும் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நன்றிகெட்ட கல்நெஞ்சக்காரர்களாக மாறுவதற்கு சில விஷயங்கள் தூண்டுகோலாக இருக்கின்றது. பிள்ளைகள் இவற்றை அறிந்து எச்சரிக்கையாக இருந்தால் பெற்றோர்களை அவமதிக்கமாட்டார்கள். அனாதையாக விடமாட்டார்கள்.

சதிசெய்யும் மனைவி

பெரும்பாலும் பிள்ளைகள் தங்களுக்குத் திருமணம் ஆகுவதற்கு முன்பு வரை பெற்றோர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். பாசத்தில் பங்குபோட ஒருத்தி வந்த உடன் சரியான விகிதத்தில் பாசத்தை பகிர்ந்தளிக்கத் தெரியாத மகன்கள் முழுவதுமாக மனைவியிடம் சாய்ந்துவிடுவார்கள். மனைவி போடும் தாளங்களுக்கு தலையாட்டுவார்கள்.

இறுதியில் அவளது சதியில் சிக்கி தன்னை உருவாக்கிய பெற்றோர்களை உதாசீனப்படுத்தும் அளவிற்கு முட்டாலாக மாறுகிறார்கள்.
இந்த உலகத்தில் எத்தனையோ உறவுகள் நமக்கு இருக்கின்றது. நெருக்கமானவர்களும் விருப்பமானவர்களும் பலர் உண்டு. இந்த மனித குலத்தில் நாம் நல்லவிதமாக நடந்துகொள்வதற்கான முதல் தகுதி நம்மை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கே உண்டு.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”உன் தாய்” என்றார்கள். அவர், ”பிறகு யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”உன் தாய்” என்றார்கள். அவர், ”பிறகு யார்?” என்றார். ”உன் தாய்” என்றார்கள். அவர், ”பிறகு யார்?” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”பிறகு, உன் தந்தை” என்றார்கள்.
நூல் : புகாரி (5971)

நல்ல கணவன் நல்ல தந்தை நல்ல சகோதரன் நல்ல உறவினர் நல்ல அண்டைவீட்டுக்காரர் போன்ற நற்பெயர்களை ஒரு மனிதன் எடுப்பதற்கு முன்னால் நல்ல மகன் என்றப் பெயரையே அவன் முத­ல் எடுக்க வேண்டும்.

பெற்றோர்களுக்கு நல்ல மகனாக இல்லாத ஒருவர் எத்தனை நற்பெயரை எடுத்தாலும் அவன் சிறந்தவன் என்றத் தகுதியை பெற முடியாது.
பின்வரும் சம்பத்தை நன்கு கவனியுங்கள். தன்னை விடவும் தன் மனைவி மக்களை விடவும் பெற்றோர்களை ஒருவர் நேசிப்பாராயின் அவருக்கு இறைவன் இவ்வுலகத்திலயே உதவிக்கரம் நீட்டுவான் என்பதை இச்சம்பவத்தில் புரியமுடிகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(முன் காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், “நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றனர்.

அவர்களில் ஒருவர், “இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓரிடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­) அவர்கள்
நூல் : புகாரி (2215)

சகிப்புத் தன்மை இல்லாமை

பெற்றோர்கள் வயது முதிர்ந்த பருவத்தை அடையும் போது அவர்களால் பிள்ளைகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை சகித்துக்கொள்ள இயலாத பிள்ளைகள் பெற்றோர்களை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்நேரத்தில் நம்மால் பெற்றோர்கள் அடைந்த கஷ்டங்களை சற்று நினைத்துப்பார்த்தால் அவர்களால் நமக்கு ஏற்படுகின்ற சிரமங்கள் ஒன்றும் பெரிதல்ல.
இந்நேரத்தில் பிள்ளைகள் பின்வருமாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அல்லாஹ் போதனை செய்கிறான்.

”என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ”சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்று கேட்பீராக!
அல்குர்ஆன் (17 : 23)

வயது முதிர்ந்த பெற்றோர்கள் மூலம் சொர்க்கம் செல்ல முடியும் என்று இஸ்லாம் கூறுகிறது.
அபூஹுரைரா (ர­ரி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள், ”மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” என்று கூறினார்கள். ”யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)” என்று பதிலளித்தார்கள்.
நூல் : முஸ்­ம் (4987)

பொருளாசை

பெற்றோர்களை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டால் அவர்களின் மருத்துவச் செலவு உணவு உடைக்கான செலவுகள் எல்லாம் தன்னையேச் சாரும் என்பதால் பலர் பெற்றோர்களை புறக்கணிக்கிறார்கள்.

பெற்றோர்கள் மூலமே பிள்ளைகள் உருவானார்கள் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. எனவே நாம் சம்பாதித்த செல்வங்களை பெறுவதற்கான முதல் தகுதி பெற்றோர்களுக்கே உண்டு.

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ”நல்லவற்றி­ருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் (2 : 215)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கொடுக்கும் கை உயர்ந்ததாகும். உனது தாய் உனது தந்தை உனது சகோதரன் உனது சகோதரி ஆகிய நெருங்கிய உறவினர்களி­ரிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! பிறகு உனக்கு நெருக்கமானவர்கள்.
அறிவிப்பவர் : தாரிக் அல்முஹாரிபீ (ர­) அவர்கள்
நூல் : நஸயீ (2485)

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s