முதியோர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறைகள்…

மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு இறைவன் அறிவை அதிகமாகக் கொடுத்திருந்தாலும் அவனை நல்வழிப்படுத்த பிறரின் வாயிலாக உபதேசங்களும் விதிமுறைகளும் அவனுக்குத் தேவைப்படுகின்றது. எனவே தான் எல்லா நாடுகளிலும் குடிமக்கள் பேணவேண்டிய ஒழுக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அவ்வப்போது அந்நாடு அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. மனிதனுடைய அறிவை நம்பி அந்நாடு அவற்றை வ­யுறுத்தாமல் விட்டுவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

அவனுடைய அறிவு நல்லதையும் தீயதையும் தனித்தனியே பிரித்துக்காட்டினாலும் அவன் தன் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு தவறான வழியில் செல்பவனாக இருக்கிறான். இவற்றை கவனித்தில் கொண்டு தான் இஸ்லாமிய மார்க்கம் ஆன்மீகரீதியில் பிள்ளைகள் பெற்றோர்களிடத்திலும் பெற்றோர்கள் பிள்ளைகளிடத்திலும் கணவன் மனைவியிடத்திலும் மனைவி கணவனிடத்திலும் இப்படி ஒவ்வொருவரிடத்திலும் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்களை அவனுக்கு பட்டிய­ட்டு கூறுகிறது. இதன் அடிப்படையில் முதியவர்களிடத்தில் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

முதுமை என்பது மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு பலவீனமாகும். முதுமையை எட்டியவர்கள் சாப்பிட முடியாமல் நடக்க முடியாமல் தன்னுடைய இயற்கைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் மூளைக் குழும்பி முழுக்க முழுக்க ஒரு குழந்தை எப்படி பெற்றோரைச் சார்ந்து வாழுமோ அது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடகிறார்கள். இதனால் இவர்களும் சிரமப்படுவதோடு மற்றவர்களும் இவர்களுக்காக சிரமப்பட வேண்டிய நிலை உருவாகிறது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தள்ளாத வயதை தான் அடைந்துவிடக் கூடாது என்று இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ‎ýம்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கஸ­ வல்ஜ‎ýப்னீ வல்ஹரமீ. வஅஊது பிக்க மின் அதாபில் கப்ற். வஅஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத் என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள் : இறைவா இயலாமையி­ருந்தும் சோம்ப­­ருந்தும் கோழைத்தனத்தி­ருந்தும் தள்ளாமையி­ருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையி­ருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையி­ருந்தும் இறப்பின் சோதனையி­ருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மா­க் (ர­) அவர்கள்
நூல் : புகாரி (6367)

நாமும் ஒரு நாள் இது போன்ற நிலையை அடைந்தால் பிறருடைய உதவி நமக்கும் தேவைப்படும் என்பதை உணராமல் இன்றைக்கு முதியவர்களை கண்டும் காணாமல் பலர் இருக்கிறார்கள். தான் சிறுகுழந்தையாக இருக்கும் போது தன்னை எவ்வளவு சிரமப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல் வயது முதிர்ந்த உடன் அவர்களுடைய சொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல் அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தராமல் பலர் தங்கள் பெற்றோரை கொடுமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைகளின் கவனிப்பில்லாமையால் ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் பலர் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட ஒரு கோரமான நிகழ்வு ஏற்பட்டது. இரயில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை இளைஞர்கள் தூக்கி இரயிலுக்கு வெளியே எரிந்ததால் அம்மூதாட்டி இறந்து போனதை செய்திகள் வாயிலாக நாம் அறிந்தோம்.

முதியவர்களால் ஏற்படும் சிரமங்களைக் கருதி அவர்களை இப்படி கவனிப்பற்று விட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வயோதிகத்தை குறிப்பிட்டுக் கூறி அவர்கள் நலம் பேணுவதை மறந்து விடக்கூடாது என்று வ­யுறுத்தியுள்ளார்கள்.

”என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!
அல்குர்ஆன் (17 : 23)

வயதான பெற்றோரைப் பெற்று யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவருடைய மூக்கு மண்ணைக்கவ்வட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­) அவர்கள்
நூல் : முஸ்­ம் (4627)

சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறார்கள். இந்த முதியோர் இல்லங்கள் தோன்றுவதற்கு பெரும்பாலும் வீட்டிற்கு மணமகளாக வரும் மறுமகள்கள் தான் காரணமாக இருக்கிறார்கள். தாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது தங்களை தங்கள் பெற்றோர்கள் சிரமம் கருதி அனாதை இல்லத்தில் சேர்த்திருந்தால் தங்களுடைய நிலை என்ன? என்பதை அவர்கள் உணருவதில்லை. மாமியார் மாமியாரை தன்னுடைய தாய் தந்தையினரைப் போல் நினைத்து அவர்களுக்கு பணிவிடை செய்தால் அல்லாஹ் கொடுக்கும் நன்மைக்கு நம்மால் அளவு சொல்ல இயலாது. ஒரு நாய்க்கு இரக்கப்பட்டதற்காக ஒரு விபச்சாரம் செய்துகொண்டிருந்தப் பெண்ணுக்கு அல்லாஹ் சொர்க்கத்தைப் பரிசாக்கினான்.

நம்மைப் போன்ற ஒரு மனிதருக்கு அதுவும் பலவீனமான மனிதருக்கு இரக்கப்பட்டால் அவன் தரும் பசிசு என்ன என்பதை அவனே மிகஅறிந்தவன்.

சில பெண்கள் மார்க்கச் சட்டங்களை கரைத்து குடித்துவிட்டதைப் போல் கணவனின் பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவா செய்கிறது? என்று கேட்கிறார்கள். வயது முதிர்ந்த மாமனார் மாமியாரை ஓய்வெடுக்க விடாமல் எதாவது வேலைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். பலவீனமானவர்களுக்கு உதவ வேண்டும் முதியவர்களுக்கு மதிப்பு வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறும் பொதுவான உபதேசத்தை மறந்துவிடுகிறார்கள்.

முதியவர்களின் நலம் பேணுதல்

பேருந்தில் மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள போது உட்கார இடமில்லாமல் வயதானவர்கள் தள்ளாடிக்கொண்டிருக்க பலமிக்க உடல் உள்ளவர்கள் ஈவு இரக்கமின்றி சொகுசாக பயனம் செய்துவருகிறார்கள். இதுபோன்ற இறுகிய உள்ளம் உள்ளவர்களால் தான் அரசு பேருந்துகளில் முதியவர் மட்டும் ஊனமுற்றோர் மட்டும் என்று இருக்கைகளை தனியாக அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் இப்படி ஒரு நிலையை அடைந்தால் நமது கதி என்ன? என்று இவர்கள் சற்று யோசிப்பார்க்க வேண்டும்.

தான் சொகுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களேத் தவிர வயதானவர்கள் படும் கஷ்டங்களை அவர்கள் உணருவதில்லை. வயது முதிர்ந்தவர் நீண்ட நேரம் நிண்டால் அது அவர்களுக்கு கஷ்டத்தை அளிக்கும் என்பதால் மக்களுக்கு தொழவைப்பவர் சுருக்கித் தொழவேண்டும். அவர் தனியாக தொழும்போது விரும்பியவாறு நீட்டிக்கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சுயநலத்தைப் பார்க்காமல் பலவீனமானவர்களை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு நடக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

உங்களில் ஒருவர் மக்களுக்கு தொழவைத்தால் அவர் சுருக்கித்தொழ வைக்கட்டும். ஏனென்றால் அவர்களில் பவலீனரும் நோயாளியும் வயதுமுதிர்ந்தவரும் இருப்பார்கள். உங்களில் யாரேனும் தனியாக தொழுதால் அவர் விரும்பியவாறு அவர் நீட்டிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­) அவர்கள்
நூல் : புகாரி (703)

சஹாபாக்களில் அபூபக்கர் (ர­) அவர்கள் வயதில் மூத்தவராக இருந்தார்கள். அபூபக்கர் (ர­) அவர்களுக்கே முடி நரைத்திருந்தது என்றால் அவருடைய தந்தை எவ்வளவு முதியவராக இருந்திருப்பார்கள்? மக்கா வெற்றியின் போது அபூபக்கர் (ர­) அவர்கள் தன்னுடைய தந்தையான அபூ குஹாஃபாவை நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ர­) அவர்களிடம் இந்த வயதானவரை நீங்கள் வீட்டிலே வைத்திருந்தால் நான் வந்து அவரை பார்த்திருப்பேன் என்று கூறினார்கள். பின்பு அபூகுஹாஃபா (ர­) அவர்களின் முடி நரைத்திருந்ததால் அதனுடைய நிறத்தை மாற்றும் படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மா­க் (ர­) அவர்கள்
நூல் : அஹ்மத் (12174).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த மனிதர். மக்காவை வெற்றி கொண்ட அந்நேரத்தில் மக்காவிற்கும் மதீனாவிற்கும் மன்னர் அவர்கள் தான். இந்த நிலையிலும் முதியவரைப் பார்க்க நான் வந்திருப்பேனே என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் முதியவர் நலம் பேண வேண்டும் என்று கூறுகிறது.

இந்த உலகத்தில் ஒருவர் இன்னொருவரைச் சார்ந்து வாழும் இயல்பிலேயே மனிதனை இறைவன் படைத்துள்ளான். அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை பல கட்டங்களில் அவன் பிறரைச்சார்ந்துள்ளான். இவனுக்கும் இவன் யாரைச்சார்ந்து இருக்கின்றானோ அவனுக்கும் இந்த சார்புவாழ்வினால் இவ்வுலகில் பலன் ஏற்படுவதால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். முஸ்­ம்கள் மறுமைநாளை நம்பியவர்கள். எனவே நம்மைச் சாôந்து வாழும் முதியவர்களுக்கு உதவிபுரிவதால் இவ்வுலகத்தில் நமக்கு பலன் கிடைக்காவிட்டாலும் மறுஉலகத்தில் பலன் கிடைக்கும் என்று நம்பினால் நிச்சயம் அல்லாஹ்விடத்தில் இதற்கான கூ­ கிடைக்கும்.

யார் ஒரு முஸ்­மின் கவலையை அகற்றுகிறாரோ மறுமைநாளில் அவருடைய கவலையை அல்லாஹ் அகற்றுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர­) அவர்கள்
நூல் : புகாரி (2442)

யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் (மார்க்க) அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத்தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி‎விப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ர­) அவர்கள்
நூல் : அஹ்மத் (21693)

மார்க்கத்திற்கு முரணாக முதியவர்கள் கூறும் போது அதற்கு நாம் கட்டுப்படவேண்டியதில்லை. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் கொள்கையில் வேறுபாடு இருப்பதினால் அவர்களிடத்தில் நாம் காட்ட வேண்டிய பணிவை சற்றும் குறைத்துவிடக் கூடாது. கொள்கை வேறுபாட்டினால் சிலர் அறியாமல் முதியவர்களை கே­செய்து கொண்டும் அவர்களிடத்தில் கடினமாக நடந்துகொண்டும் இருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய செயல். நம்மை விரும்பாதவர்களாக அவர்கள் இருந்தாலும் அவர்கள் நோய்வாய்ப்படும் போது அவர்களை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டும்.

ஒரு முஸ்­ம் இன்னொரு முஸ்­மிற்கு செய்யும் கடமைகளை முழுமையாக அவர்கள் விஷயத்திலும் நிறைவேற்ற வேண்டும். கொள்கை வேறுபாட்டால் முதியவருக்கு இளையவர் சலாம் சொல்லவதை விட்டுவிடக்கூடாது. பெரியவருக்கு சிறியவர் சலாம் சொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஒரு வழிமுறையை கற்றுத் தந்துள்ளார்கள். பெரியவருக்கு மரியாதை செய்து பணிவாக நடக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்த ஒழுங்குமுறையை கற்றுத்தந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
சிறியவர் பெரியவருக்கும் நடந்துசெல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும் குறைவானவர்கள் அதிகமானவர்களுக்கும் சலாம் சொல்லட்டும்.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­) அவர்கள்
நூல் : புகாரி (6231)

சில குடும்பங்களில் பெரியவர்கள் பெரும்பாலான விஷயங்களி‎ல் ஒதுக்கப்படுகின்றார்கள். வயதாகிவிட்ட காரணத்தினால் அவர்களை யாரும் பொருட்படுத்தாமல் முன்னுரிமை அளிப்பதில்லை. அவர்களிடத்தில் ஆலோசனை செய்யாமல் பல காரியங்கள் நடத்தப்படுகின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் பல விஷயங்களில் வயதை கவனித்து பெரியவர்களை முற்படுத்தியுள்ளார்கள். வயதில் மூத்தவர்களாக இருப்பதால் இவ்வாறு செய்வது அவர்களுக்கு கண்ணியம் சேர்ப்பதாகவும் அவர்கள் அனுபவம் மிகுந்தவர்களாக இருப்பதால் நல்ல ஆலோசனையை தருவார்கள் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

குர்ஆன் மற்றும் ஹதீஸிற்கு அடுத்து வயதில் மூத்தவர் தொழவைக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒரு கூட்டத்திற்கு அவர்களில் அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத்தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர்கள் ஓதுவதில் சமமாக இருந்தால் அவர்களில் சுன்னாவை நன்கு அறிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர்கள் சுன்னாவில் சமமாக இருந்தால் அவர்களில் முத­ல் ஹிஜ்ரத் செய்தவர் இமாமத் செய்யட்டும். ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமமானவர்களாக இருந்தால் அவர்களில் மூ‎த்தவர் இமாமத் செய்யட்டும்.
அறிவிப்பவர் : அபூ மஸ்ஊத் (ர­) அவர்கள்
நூல் : முஸ்­ம் (1079)

கருத்து தெரிவிக்கும் போது முத­ல் பெரியவர் பேச வேண்டும்

ஒரு கூட்டம் முக்கியமான நபரைப் பார்த்துப் பேசுவதற்காகச் சென்றால் அக்கூட்டத்தில் பெரியவர் முத­ல் பேச வேண்டும். பெரியவர்களை பின் தள்ளிவிட்டு இளையவர்கள் முந்திக் கொள்ளக் கூடாது.

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹ‎ýவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் பெரியவர்களைப் பேசவிடு. பெரியவர்களைப் பேசவிடு என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் (வாய் மூடி) மௌனமாகிவிட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹ‏þவைய்யிஸா அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலீ) அவர்கள்
நூல் : புகாரி (3173)

வயதில் மூத்தவருக்கு முத­டம்

சாப்பாடு, பானம் போன்று ஏதேனும் பொருட்களை கொடுக்கும் போது முத­ல் வயதில் மூத்தவருக்கு வழங்க வேண்டும். பின்பு அவரை விட வயது குறைந்தவருக்கு வழங்கவேண்டும். பெரியவர்களுக்கு கண்ணியம் கொடுப்பதற்காக இவ்வழிமுறையை இஸ்லாம் பேணச் சொல்கிறது. நமக்கு தேனீர் வழங்கப்படும் போது முத­ல் நம்மை விட மூத்தவருக்கு மரியாதைக்காக கொடுத்துவிட்டு பின்பு நாம் குடிக்கின்றோம். நம்மைவிட மூத்தவர்கள் வந்திருக்கும் போது அவர்களை காக்கவைத்து இளையவர்கள் உண்டால் அது மரியாதைக் குறைவாக கருதப்படும். ஆனால் மூத்தவர்கள் உண்ண இளையவர்கள் காத்திருந்தால் இதை மரியாதைக் குறைவு என்று யாரும் கூறமாட்டார்கள்.
மூத்தவரோடு இளையவர் சரிக்கு சமமாக ஏதேனும் ஒரு விஷயத்தில் போட்டிபோட்டால் என்னதான் இருந்தாலும் அவர் வயதில் மூத்தவரில்லையா? என்று நாம் கேட்கிறோம். பெரியவர் மீது தவறே இருந்தாலும் சிறியவன் நீ பணிந்து தான் போக வேண்டும் என்று உபதேசம் செய்கிறோம். பெரியவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறோம். இந்த ஒழுங்கு முறையைத் தான் நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் உணர்த்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் பல்துலக்கும் குச்சியால் பல்துலக்கிக் கொண்டிருந்தவாறு கனவு கண்டேன். அப்போது இரண்டு மனிதர்கள் (பல்துலக்கும் குச்சி வேண்டி) என்னிடத்தில் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரை விட பெரியவர். அவர்களில் சிறியவருக்கு அக்குச்சியை நான் கொடுத்தேன். அப்போது பெரியவருக்கு முத­ல் கொடுங்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. எனவே அதை நான் பெரியவரிடத்தில் கொடுத்தேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர­)
நூல் : முஸ்­ம் (5324)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் பானம் கொண்டுவரப்பட்டால் அதை அருந்திவிட்டு மீதத்தை வலது புறத்தில் இருப்பவருக்குத் தருவார்கள். ஆனால் ஒரு முறை பெருமானாரிடத்தில் குவளையில் பானம் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்களின் வலது புறம் சிறுவனும் இடது புறம் பெரியவர்களும் அமர்ந்திருந்தார்கள். பெரியவர்களுக்கு முத­ல் தர வேண்டும் என்று எண்ணி அந்த சிறுவனிடத்தில் இதை நான் இந்த பெரியவர்களுக்குத் தரட்டுமா? என்று அனுமதி வேண்டினார்கள். ஆனால் அந்த சிறுவன் அல்லாஹ்வின் தூதரே தங்களிடமிருந்து எனக்கு கிடைக்கக்கூடிய மீதத்தை நான் எவருக்கும் விட்டுகொடுக்கமாட்டேன் என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவனுடைய கையில் வைத்துவிட்டார்கள்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ர­) அவர்கள்
நூல் : புகாரி (2351)

வழமையாக நபி (ஸல்) அவர்கள் வலது புறத்தில் உள்ளவருக்குத் தான் தருவார்கள். ஆனால் இடது புறத்தில் பெரியவர்கள் இருந்ததால் அவர்களுக்குத் தர வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் அந்த சிறுவர் பெருமானாரின் மீது வைத்திருந்த அன்பினால் அவர்கள் வைத்த மீத பானத்தை நான் தான் குடிப்பேன் என்று கூறினார். இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுக்கு இரக்கப்பட வேண்டும் என்று கூறியதால் விபரம் தெரியாத சிறுகுழந்தைகளின் உள்ளம் உணவை எதிர்பார்த்து ஏங்காமல் இருப்பதற்காக முத­ல் அக்குழந்தைகளுக்கு கொடுப்பதில் குற்றம் இல்லை.

சில ஊர்களில் பெரியவர்கள் முத­ல் உண்ட பின்பு தான் குழந்தைகள் உண்ண வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்கள் பசியால் அழுது துடித்தாலும் அவர்கள் அதை கண்டுகொள்வதில்லை. இந்த இடத்தில் பெரியவர்களை விட சிறு குழந்தைகள் பலவீனர்களாக இருப்பதால் முத­ல் சிறுகுழந்தைகளுக்கு உணவை கொடுக்க வேண்டும். சிறியவர்களை விட பெரியவர்களை முற்படுத்த வேண்டும் என்ற ஒழுங்கு முறை சிறியவர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டி விபரம் தெரிந்தவர்களாக இருக்கும் போது தான். இன்னும் இந்தச் சட்டம் பெரியவர்களும் சிறியவர்களும் ஒரே நேரத்தில் இருக்கும் போது தான் பொருந்தும். பெரியவர்கள் விருந்திற்கு இன்னும் வரவில்லை என்ற போது சிறியவர்கள் காத்திருக்கு வேண்டியதில்லை.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.