அரஃபா நோன்பு ஓர் ஆய்வு…

துல் ஹஜ் மாதம் 9 ஆது பிறை அன்று நோன்பு நோற்கும் வழக்கம் நமது சமுதயாத்தில் உள்ளது. இந்த நோன்பு நோற்றால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கருத்தில் ஹதீஸ் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் இந்த நோன்பை நோற்று வருகின்றனர்.
அரஃபா நோன்பு தொடர்பான இந்த செய்தி பலவீனமானது என்று சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இவர்கள் கூறுவது போல் இந்த செய்தி பலவீனமானதா? அல்லது பலமானதா? என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக அறிந்துகொள்ள இருக்கின்றோம்.
இந்த செய்தி பலவீனமானது என்று கூறுவோர் இதற்கு கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தி என்பது நமது ஆய்வின் முடிவாகும்.

விமர்சனம்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?” என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரரி­) அவர்கள், ”அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திரி­ருந்தும் அவனுடைய தூதரின் கோபத்திரி­ருந்தும் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினார்கள். உமர் (ரரி­) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும் வரை இவ்வாறு பல முறை சொல்­க்கொண்டிருந்தார்கள். பிறகு ”அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று உமர் (ர­ரி) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்’ அல்லது ‘அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

உமர் (ர­ரி) அவர்கள், ”இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்க, ”இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ர­ரி) அவர்கள், ”ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, ”அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்” என்று விடையளித்தார்கள்.

உமர் (ர­ரி) அவர்கள், ”ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்” என்று கூறினார்கள். பிறகு, ”மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகத்தாதா அல்அன்சாரி (ர­ரி)
நூல் : முஸ்­ம் (2151)

முஸ்­மில் இடம்பெற்றுள்ள இந்த செய்தி திர்மிதீ அபூதாவூத் இப்னு மாஜா அஹ்மது இப்னு குஸைமா இப்னு ஹிப்பான் ஹாகிம் ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் இதை விமர்சனம் செய்பவர்கள் உட்பட யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை.

இந்த செய்தியை அபூகத்தாதா (ர­) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் மஅபத் அஸ்ஸம்மானீ என்பவர் அறிவிக்கின்றார்.

இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் நபித்தோழர் அபூகத்தாதா (ர­) அவர்களை சந்திக்கவில்லை. எனவே இதன் அறிவிப்பாளர் தொடரில் அபூகத்தாதா (ர­) அவர்களுக்கும் அப்துல்லாஹ் பின் மஅபத் அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார். விடுபட்ட அந்த நபர் யார்? எப்படிப்பட்டவர்? என்ற தகவல் நமக்கு கிடைக்கவில்லை. தொடர்பு அறுந்த இந்த செய்தி பலவீனமானது என்று குறைகூறுகின்றனர்.

அப்துல்லாஹ் பின் மஅபத் நபித்தோழர் அபூகத்தாதா (ர­) அவர்களிடமிருந்து எதையும் செவியுறவில்லை என இமாம் புகாரி அவர்கள் கூறியிருப்பதை இதற்கு ஆதாரமாக மேற்கொள் காட்டுகின்றனர்.

ஆனால் இவர்களின் இக்குற்றச்சாட்டு பல காரணங்களால் தவறானது.
முதல் காரணம் (இமாம் புகாரி சொன்னது என்ன?)

அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகத்தாதா (ர­) அவர்களை சந்திக்கவில்லை என இமாம் புகாரி கூறவில்லை. மாறாக இவர் அபூகத்தாதா (ர­) அவர்களிடம் நேரடியாக கேட்டதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றே கூறியுள்ளார்.
அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகத்தாதா (ர­) அவர்களிடம் நேரடியாகக் கேட்டதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
நூல் : அத்தாரீகுல் கபீர் பாகம் : 3 பக்கம் : 68

இவர் அபூகத்தாதாவை சந்திக்கவில்லை என்றால் அதற்குரிய வாசகத்தை இட்டு இமாம் புகாரி சந்திக்கவில்லை என்று கூறியிருப்பார். ஆனார் அவர் அவ்வாறு கூறாமல் நேரடியாகக் கேட்டதாக தகவல் கிடைக்கவில்லை என்றே கூறுகிறார்.

அப்துல்லாஹ்வும் அபூகத்தாதா (ர­) அவர்களும் ஒரே காலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் தான் இவர் அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூற முடியும். ஏனென்றால் ஒரே காலத்தைச் சார்ந்தவர்கள் விஷயத்தில் தான் இவர் அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டாரா? இல்லையா? என்பது பற்றி பேச முடியும்.

காலத்தால் வேறுபட்டவர்கள் விஷயத்தில் இவர் அவரிடம் நேரடியாக செவியுறவில்லை என்று கூறுவது பொருத்தமற்றதும் அர்த்தமற்றதுமாகும்.
எனவே இமாம் புகாரி அவர்கள் இவ்வாறு கூறியதி­ருந்து இவ்விருவரும் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
நேரடியாகக் கேட்டதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என இமாம் புகாரி அவர்கள் ஏன் குறிப்பிட வேண்டும் என்ற சந்தேகம் இங்கே எழுகின்றது.

ஒரு அறிவிப்பாளரிடமிருந்து இன்னொரு அறிவிப்பாளர் ஒரு செய்தியை அறிவிக்கின்றார். இச்செய்தியை இவர் அவரிடமிந்து நேரடியாகச் செவியுற்றதாகக் கூறவில்லை. மேலும் இவர் தத்லீஸ் என்ற இருட்டடிப்புச் செய்பவரும் அல்ல. அதாவது தான் நேரடியாக செவியுறாத செய்திகளை நேரடியாக செவியுற்றதைப் போன்று கூறக்கூடி வழக்கம் உள்ளவர் அல்ல.

இப்போது இவர் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தும் வாசகத்தை கூறாவிட்டாலும் இவ்விரண்டு அறிவிப்பாளர்களும் சந்தித்துக்கொள்ள வாய்ப்பிருக்குமேயானால் இந்த செய்தியை இவர் யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரிடமிருந்து நேரடியாகவே செவியுற்றார் என்ற அடிப்படையில் இது தொடர்பு முறியதாக அறிவிப்பாக கருதப்படும்.

அதே நேரத்தில் நேரடியாக செவியுறாத செய்திகளை நேரடியாக செவியுற்றது போல் அறிவிக்கும் வழமை உள்ளவர் தான் நேரடியாக செவியுற்றதை தெளிவுபடுத்திக் கூறினாலே இவருடைய அறிவிப்பு ஏற்கப்படும். இல்லையென்றால் இவர் யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரிடம் நேரடியாகச் செவியுறவில்லை என்ற அடிப்படையில் இது தொடர்பு அறுந்த செய்தியாக முடிசெய்யப்பட்டு நிராகரிக்கப்படும்.

இந்த அளவுகோ­ன் அடிப்படையில் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானது என்றும் பலவீனமானது என்றும் தரம்பிரிக்கப்படுகின்றது.
இமாம் புகாரி அவர்கள் தனது புத்தகமான சஹீஹுல் புகாரியில் ஒரு ஹதீஸை பதிவு செய்வதற்கு இந்த அளவுகோலைக் காட்டிலும் கூடுதலாக ஒரு நிபந்தனையை சேர்த்துள்ளார்.

இரண்டு அறிவிப்பாளர்களில் ஒருவர் இன்னொருவரை சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பதுடன் ஒரு முறையாவது இவர்கள் நேரடியாக சந்தித்துக்கொண்டதற்கு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதே அந்த கூடுதல் நிபந்தனை. இந்த நிபந்தனைக்கு உட்பட்டு இருந்தாலே அந்த செய்தியை புகாரி பதிவு செய்வார்.

ஆனால் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று முடிவுசெய்ய இந்த கூடுதல் நிபந்தனை தேவையில்லை. அறிவிப்பாளர்கள் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்பிருந்தால் போதுமானது. ஒருமுறையாவது சந்தித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அப்துல்லாஹ் பின் மஅபத் மற்றும் அபகத்தாதா (ர­) ஆகிய இருவர் விஷயத்தில் இந்த கூடுதல் நிபந்தனை இல்லை என்பதையே புகாரி குறிப்பிடுகின்றார்.

 

இரண்டாவது காரணம்

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ள அரஃபா நோன்பு தொடர்பான செய்தியை இமாம் முஸ்­ம் அவர்கள் தனது நூலான சஹீஹு முஸ்­மில் பதிவுசெய்துள்ளார்கள்.

தொடர்பு முறிந்த பலவீனமான செய்தியை இமாம் முஸ்­ம் தனது நூ­ல் பதிவு செய்யமாட்டார். அறிவிப்பாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதற்கு வாய்ப்பு இருந்தால் தான் அதை இமாம் முஸ்­ம் ஏற்றுக்கொள்வார். சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றால் அந்த செய்தியை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகத்தாதா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பதற்கு வாய்ப்பு இருந்ததால் தான் இவர்கள் அறிவிக்கும் செய்தியை இமாம் முஸ்­ம் ஏற்றுக்கொண்டு தனது நூ­ல் பதிவு செய்துள்ளார்.

 

மூன்றாவது காரணம்

அபூகத்தாதா (ர­) அவர்களின் இறப்பையும் அப்துல்லாஹ் பின் மஅபத் அவர்களுடைய இறப்பையும் கவனித்தால் இவ்விருவரும் சந்தித்துக்கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதை தெளிவாக அறியலாம்.

அபூகத்தாதா (ர­) அவர்கள் ஹிஜ்ரீ 38 வது வருடத்தில் மரணித்தார் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் 54 வது வருடத்தில் மரணித்தார் என்பதை சரியானத் தகவல் என இமாம் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்.

 

அபூகத்தாதா (ர­) அவர்கள் 38 வது வருடத்தில் இறந்தார் என்றத் தகவல் தவறானது. அவர்கள் 54 வது வருடத்தில் மரணித்தார் என்றே அதிகமானோர் கூறுகின்றனர்.
அப்துல்லாஹ் பின் மஅபத் ஹிஜ்ரீ 100க்கு முன்பு மரணித்தார் என இமாம் தஹபீ குறிப்பிடுகின்றார்.
அப்துல்லாஹ் பின் மஅபத் நூறுக்கு முன்பு மரணித்துவிட்டார்.
நூல் : சியரு அஃலாமிந் நுபலாஃ பாகம் : 4 பக்கம் : 206
இவர்களின் இந்த வரலாற்றுக் குறிப்பு இவர்கள் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

 

நான்காவது காரணம்

இமாம் இப்னு அபீ ஹாதிம் அவர்கள் அப்துல்லாஹ் பின் மஅபதைப் பற்றி விவரிக்கும் போது இவர் உமர் அபூகத்தாதா அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் பின் உத்பா ஆகிய நபித்தோழரிடமிருந்து அறிவிப்பதாக தெரிவிக்கின்றார்.

பின்பு அப்துல்லாஹ் பின் மஅபத் உமர் (ர­) அவர்களை சந்திக்கவில்லை என இமாம் அபூஸுர்ஆ கூறியதை குறிப்பிடுகின்றார்.
அப்துல்லாஹ் பின் மஅபத் உமர் அபூகத்தாதா அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் பின் உத்பா ஆகிய நபித்தோழரிடமிருந்து அறிவிக்கின்றார். இவரைப் பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் கேட்கப்பட்ட போது இவர் உமர் (ர­) அவர்களை சந்திக்கவில்லை என்று பதிலளித்தார்.
நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் : 5 பக்கம் : 173

அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகத்தாதா (ர­) அவர்களை சந்திக்கவில்லை என்றால் அல்லது அவருடைய காலத்தை அடையவில்லை என்றால் அதைக் குறிப்பிடவேண்டிய இடம் இது தான்.

இவர் உமர் (ர­) அவர்களை சந்திக்கவில்லை என்றத் தகவலை குறிப்பிடும் இமாம் இப்னு அபீ ஹாதிம் இவர் அபூகத்தாதாவை சந்திக்கவில்லை என்று குறிப்பிடவில்லை.

எனவே அப்துல்லாஹ்வும் அபுகத்தாதா (ர­) அவர்களும் ஒருவரையொருவர் சந்திக்கும் காலத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது இதன் மூலமும் தெளிவாகின்றது.

மேலும் அப்துல்லாஹ் அபூகத்தாதா (ர­) அவர்களிடமிருந்து அறிவித்திருப்பது போல் அபூஹுரைரா (ர­) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளார். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூற்றுப்படி அபூ ஹுரைரா (ர­) ஹிஜ்ரீ 57 வது வருடத்தில் மரணிக்கின்றார். ஏறத்தாழ அபூகத்தாதா (ர­) அவர்களின் மரணமும் (54) அபூஹுரைரா (ர­) அவர்களின் மரணமும் (57) நெருக்கத்தில் உள்ளது. ஆனால் அப்துல்லாஹ் அபூஹுரைரா (ர­) அவர்களிடமிருந்து அறிவிப்பது குறித்து யாரும் எந்த விமர்சனமும் செய்யவில்லை. எனவே இவர் அபூஹுரைரா (ர­) அவர்களை சந்திப்பது சாத்தியம் என்றால் அபூகத்தாதா (ர­) அவர்களை சந்திப்பதும் சாத்தியம் தான்.

 

அப்துல்லாஹ் இருட்டடிப்புச் செய்பவரா?

அப்துல்லாஹ் பின் மஅபத் உமர் (ர­) அவர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் இவர் உமர் (ர­) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக சில அறிவிப்புகள் வந்துள்ளது.

எனவே இவர் தத்லீஸ் என்ற இருட்டடிப்புச் செய்பவர் அதாவது தான் நேரடியாக கேட்காதச் செய்தியை நேரடியாகக் கேட்டது போல் அறிவிப்பவர் என்ற குற்றச்சாட்டை சிலர் எழுப்புகின்றனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கும் அப்துல்லாஹ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அப்துல்லாஹ் உமர் (ர­) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக கூறப்படும் செய்தி தனியொரு செய்தியல்ல. மாறாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ள அரஃபா நோன்பு பற்றிய ஹதீஸாகும்.

உமர் (ர­) அவர்களை குறிப்பிட்டது அப்துல்லாஹ் பின் மஅபதல்ல. மாறாக உமர் (ர­) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் அறிவிப்பதாக அபூஹிலால் என்ற அறிவிப்பாளரே தவறுதலாக கூறியுள்ளார்.

அப்துல்லாஹ் உமர் (ர­) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக அபூஹிலால் மட்டுமே கூறுகிறார். இவரல்லாத ஷுஃபா போன்ற பல வலுமையான அறிவிப்பாளர்கள் அப்துல்லாஹ் அபூகத்தாதா (ர­) அவர்களிடமிருந்து அறிவிப்பதாகவே தெரிவிக்கின்றனர்.
அப்துல்லாஹ் உமர் (ர­) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் அறிவிப்பாளர் தொடர் தவறானது என்று அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகத்தாதா (ர­) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் அறிவிப்பாளர் தொடரே சரியானது.

நூல் : அல்மதா­பு ஆ­யா (1153)

மேலும் இமாம் தாரகுத்னீ அவர்கள் அல்இலலு என்ற தனது நூ­ல் உமர் (ர­) அவர்களைக் குறிப்பிட்டு வரும் அறிவிப்பாளர் தொடர் தவறானது என்றும் அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகத்தாதா (ர­) அவர்களிடமிருந்து அறவிப்பதாக வரும் அறிவிப்பாளர் தொடரே சரியானது என்றும் கூறியுள்ளார்.

நூல் : அல்இலலு பாகம் : 2 பக்கம் : 106
எனவே அப்துல்லாஹ் உமர் (ர­) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் தவறான அறிவிப்பாளர் தொடரை வைத்துக்கொண்டு அப்துல்லாஹ் தத்லீஸ் என்ற இருட்டடிப்புச் செய்பவர் என்று குறைகூற முடியாது.
தகவ­ல் செய்யப்படும் விமர்சனங்கள்

 

விமர்சனம் : 1

அரஃபா நாளில் நோன்பு நோற்பதை சிறப்பித்து வரும் இந்த செய்தி பலவீனமானது என்று வாதிடுபவர்கள் இதன் தகவ­ல் சில விமர்சனங்களை செய்கின்றனர்.

துல் ஹஜ் மாதம் பிறை 9 வது நாளான அரஃபாவுடைய நாள் நோன்பு வைப்பதற்கு தடைசெய்யப்பட்ட நாள் என்று கூறுகின்றனர். இதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அரஃபாவுடைய நாள் (பிறை 9) நஹ்ருடைய நாள் (பிறை 10) தஷ்ரீக்குடைய நாட்கள் ஆகியவை முஸ்­ம்களே நமது பெருநாட்களாகும். இவை சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­)
நூல் : திர்மிதீ (704)

பிறை 9 வது நாளன்று நோன்பு நோற்கக்கூடாது என இந்த செய்தி கூறுகின்றது. அரஃபாவுடைய நாளில் நோன்பு நோற்பதை சிறப்பித்து வரும் ஹதீஸ் இந்த ஹதீஸிற்கு முரணாக அமைந்துள்ளதால் அதை ஏற்கக்கூடாது என்று விமர்சனம் செய்கின்றனர்.

மேலுள்ள ஹதீஸில் மூசா பின் அலீ என்பவர் இடம்பெறுகிறார். இவர் நம்பகமானவர் என்றாலும் இச்செய்தியில் இவர் ஒரு தவறை செய்துள்ளார். அரஃபாவுடைய நாளை கூறியிருப்பதே அவர் செய்த தவறாகும்.

ஏனென்றால் நம்பகமான பல அறிவிப்பாளர்கள் அரஃபாவுடைய நாளைக் குறிப்பிடாமல் ஹஜ்ஜுப் பெருநாள் நோன்புப் பெருநாள் தஷ்ரீக்குடைய நாட்கள் இவை தான் பெருநாட்கள் என்று அறிவித்துள்ளனர். பல நபித்தோழர்கள் வழியாக இவ்வாறே அரஃபாவுடைய நாள் கூறப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மூசா பின் அலீ என்பவர் மட்டுமே தனது அறிவிப்பில் அரஃபாவுடைய நாளை சேர்த்து அறிவிக்கின்றார். பல நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இவருடைய அறிவிப்பு உள்ளதால் இது பலவீனமானதாகும். இதை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

உக்பா பின் ஆமிருடைய ஹதீஸை மூசா பின் அலீ என்பவர் மட்டும் தனித்து அறிவிக்கின்றார். இந்த செய்தியை பல வழிகளில் அதிகமானவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களில் இவரைத் தவிர வேறு யாரும் அரஃபாவுடைய நாள் என்ற வார்த்தையை சேர்க்கவில்லை.
நூல் : நாசிகுல் ஹதீஸ் வமன்சூகுஹு பாகம் : 1 பக்கம் : 180

மூசா பின் அலீ தனித்து அறிவித்தால் (அதை ஏற்றுக்கொள்வதற்கு) அவர் வலுமையானவர் அல்ல. இந்த செய்தியில் அரஃபாவுடைய நாள் கூறப்பட்டிருப்பது தவறாகும். நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் தஷ்ரீக்குடைய நாட்கள் ஆகியவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பல வழிகளில் வரும் செய்தியே சரியானது.

நூல் : தம்ஹீத் பாகம் : 21 பக்கம் : 163

எனவே பலவீனமான இந்த செய்தியை வைத்து ஆதாரப்பூர்வமான முஸ்­மில் இடம்பெற்றுள்ள செய்தியை பலவீனப்படுத்த முடியாது.

ஒரு பேச்சுக்கு இதை ஆதாரப்பூர்வமானது என்று ஏற்றுக்கொண்டாலும் இந்த செய்தி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தியுடன் முரண்படாது.
ஹாஜிகள் பிறை 9 வது நாளன்று நோன்பு நோற்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். எனவே ஹாஜிகளை கவனித்தே அரஃபா நாள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாள் என்று கூறப்பட்டுள்ளது என்று முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ள இயலும்.

 

விமர்சனம் : 2

அடுத்து முஸ்­முடைய ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு நோற்றால் முன்பு உள்ள ஒரு வருடத்துக்கும் அடுத்து வரக்கூடிய ஒரு வருடத்துக்கும் அந்த நோன்பு பாவப்பரிகாரமாகிவிடும் என்று கூறப்படுகின்றது.

முன் பாவங்களும் பின் பாவங்களும் மன்னிக்கப்படுவது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்புத் தகுதி. ஆனால் இந்த செய்தி இச்சிறப்பு அரஃபா நோன்பு வைப்பவர்களுக்கு உண்டு என இதற்கு மாற்றமாக கூறுகின்றது என இந்த ஹதீஸை விமர்சிப்பவர்கள் குறைகூறுகின்றனர்.

ஆனால் இந்த விமர்சனம் ஏற்புடையதல்ல. ஏனென்றால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்படுவது நபி (ஸல்) அவர்களுக்கும் மட்டும் உரிய சிறப்பு. வேறு யாருக்கும் இறைவன் இந்த பாக்கியத்தை தரமாட்டான் என்று இறைவனோ இறைத்தூதரோ கூறவில்லை.

நபியவர்களுக்கு இந்த பாக்கியத்தை இறைவன் வழங்கினான் என்பது உண்மை. இதனால் இவர்களுக்கு மட்டுமே இச்சிறப்பு உண்டு. மற்றவர்களுக்கு இது வழங்கப்படாது என்று கூற முடியாது.

மேலும் நபி (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்டதற்கும் இந்த ஹதீஸில் கூறப்படும் மன்னிப்பிற்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய அனைத்து பாவங்களையும் ஒன்றுவிடாமல் மன்னித்துவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இந்த செய்தி இப்படிப்பட்ட எல்லையில்லாத மன்னிப்பைக் கூறவில்லை. மாறாக முன்புள்ள ஒரு வருடத்தின் பாவங்கள் பின்புள்ள ஒரு வருடத்தின் பாவங்கள் என எல்லையை நிர்ணயிக்கின்றது. இது முதல் வித்தியாசம்.

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பைப் பொறுத்தவரை அது குறிப்பிட்ட ஒரு நபருக்கு வழங்கப்பட்ட சிறப்பு என்ற அடிப்படையில் உள்ளது. ஆனால் இந்த செய்தியில் கூறப்படும் மன்னிப்பு என்பது குறிப்பிட்ட நபருக்குரியதல்ல. மாறாக குறிப்பிட்ட நல்லறத்திற்கு உரியதாகும். இந்தக் காரியத்தை செய்யும் அனைவருக்கும் இந்த மன்னிப்பு கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது.

ஏனென்றால் எண்ணம் சரியில்லாத காரணத்தால் அல்லது வேறு காரணத்தால் இந்த நோன்பை வைத்தவருக்கு இந்த சிறப்பு கிடைக்காமல் போகலாம். இது இரண்டாவது வித்தியாசம்.

 

விமர்சனம் : 3

உமர் (ர­ரி) அவர்கள், ”ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதற்கு இறைவன் தரப்பி­ருந்து ஆற்றல் தரப்பட்டு அவ்வாறு நோன்பு நோற்றதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் மேற்கண்ட செய்தி ஒரு நாள் நோன்பு வைத்து இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிட நபியவர்களுக்கு ஆற்றல் இல்லை எனக் கூறுகின்றது. இந்த அடிப்படையில் இது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கு மாற்றமாக உள்ளது என்று வாதிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சில நேரங்களில் இறைவன் தரப்பி­ருந்து சிறப்பு ஆற்றல் வழங்கப்பட்டாலும் பல நேரங்களில் அவர்கள் சாதாரண மனிதர்களைப் போலவே இருந்துள்ளார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் நோன்பு நோற்க சில நேரங்களில் அவர்களுக்கு இறைவனால் ஆற்றல் வழங்கப்பட்டது. பல நேரங்களில் மற்ற மனிதர்களைப் போன்று இதற்கு இயலாதவர்களாக இருந்தார்கள் என்று முரண்பாடில்லாமல் புரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு நோன்பு நோற்பதற்கு சக்தி அளிக்கப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியது தன் விஷயத்தில் அல்ல. பொதுவான மக்களை கவனத்தில் கொண்டு இது மக்களுக்கு சிரமமானது என்ற கருத்தில் தன்னையும் அத்துடன் சேர்த்துக் கூறியுள்ளார்கள்.

இதே செய்தி முஸ்­மில் ஷுஃபா வழியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள வாசகம் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விடுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ”இதற்கான வ­லிமையை அல்லாஹ் நமக்கு அளித்தால் நன்றாயிருக்கும்!” என்றார்கள்.
முஸ்­ம் (2152)

 

விமர்சனம் செய்யப்படாத செய்திகள்

அரஃபா நாளில் நோன்பு வைப்பதை சிறப்பித்து வரும் இந்த செய்தி பல வழிகளில் வந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான அறிவிப்புகள் பலவீனமாக இருந்தாலும் பின்வரும் அறிவிப்புகள் எந்தக் குறையும் இல்லமாமல் ஆதரப்பூர்வமாக அமைந்துள்ளது. இந்த அறிவிப்புகளில் அப்துல்லாஹ் பின் மஅபத் இடம்பெறவில்லை.

அரஃபாவுடைய நோன்பு கடந்துவிட்ட வருடம் வரக்கூடிய வருடம் ஆகிய இருவருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷூராவுடைய நோன்பு ஒரு வருடப்பாவங்களுக்குப் பரிகாரமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகத்தாதா (ர­)
நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (2752)
இந்த அறிவிப்பு அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா என்பவர் வழியாக வந்துள்ளது.

ஸைத் பின் ஸாபித் (ர­) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதரே அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி தாங்கள் என்னக் கூறுகின்றீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் (துல்ஹஜ் ஒன்பதாவது நாள்) அரஃபா அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ர­)
நூல் : முஸ்னதுத் தயா­சி பாகம் : 1 பக்கம் : 84

அப்துல்லாஹ் பின் மஅபதுடைய அறிவிப்பு பலவீனமானது என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டாலும் இந்த ஹதீஸ் பலவீனமாகாது. ஏனென்றால் அவர் இடம்பெறாத மேற்கண்ட ஆதாரப்பூர்வமான வழிகளில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்றுமொரு ஆதாரம்

அரஃபா நாளில் நோன்பு நோற்பது மார்க்கத்தில் உள்ள அம்சம் என்பதை பின்வரும் செய்தி நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உணர்த்துகின்றது.

அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பானம் அனுப்பிவைத்தேன். அதையவர்கள் குடித்தார்கள்.
அறிவிப்பவர் : உம்முல் ஃபள்ல் (ரரி­)
நூல் : புகாரி (1658)

அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது சம்பந்தமாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்துகொண்டிருந்தனர். சிலர் ‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்’ என்றும் மற்ற சிலர், ‘இல்லை’ என்றும் கூறிக்கொண்டிருந்தனர். எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பால் கொடுத்தனுப்பினேன்; அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்துகொண்டே அதைக் குடித்தார்கள்.
அறிவிப்பவர் : உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ர­ரி)
நூல் : புகாரி (1661)

அரஃபா நாளில் நோன்பு நோற்கும் வழக்கம் நபித்தோழர்களிடம் இருந்துள்ளது. எனவே தான் அன்றைய தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்களா? என அவர்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. இந்த நாளில் நோன்பு நோற்பது அவர்களின் வழக்கில் இல்லை என்றால் இவ்வாறு அவர்கள் சந்தேகப்பட்டிருக்கமாட்டார்கள்.

இந்த நோன்பு அரஃபாவில் உள்ள ஹாஜிகளுக்குக் கிடையாது என்பதை நபி (ஸல்) அவர்கள் பாலருந்தி நபித்தோழர்களின் சந்தேகத்தை நிவர்த்திசெய்கிறார்கள்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.