அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம்

நன்மை பயக்கும் மார்க்கம்

இஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச்சிறப்புகளை இஸ்லாத்தில் மட்டும் நம்மால் காணமுடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்கிறது.

திருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் ஒருவர் கடைபிடித்து வாழ்ந்தால் இந்த உலகத்திலேயே அவர் நன்மைகளை அடையமுடியும். இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும்.

பேய் பிசாசு நம்பிக்கையுள்ளவர்களால் இரவில் தன்னந்தனியாக செயல்படமுடியாது. யாரும் இல்லாத தெருவில் தனியே நடமாடமுடியாது. பயம் இவர்களை கவ்விக்கொள்ளும். நிம்மதியை இழந்து கோழகளாக திரிவார்கள்.

பில்­ சூனியத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் தனக்கு ஏதாவது சிறிய சிரமம் வந்துவிட்டாலும் யாராவது சூனியம் வைத்துவிட்டார்களோ என்று பதறுவார்கள். அறிவை இழப்பதோடு சம்பாதித்த பொருளையும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.

பேய் பிசாசு பில்­ சூனியம் தகடு தாயத்து போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் எள் அளவு கூட அனுமதியில்லை. பில்­ சூனியம் தர்ஹா வழிபாடு போன்ற அனாச்சாரங்களை நம்பாதவர்கள் தங்களது பொருளாதாரத்தையும் அறிவையும் பாதுகாத்துக்கொள்கிறார்கள். சுயமரியாதையுடன் வீரார்களாக வலம்வருகிறார்கள். இது ஏகத்துவக்கொள்கையால் இந்த உலகத்தில் நமக்கு கிடைக்கின்ற நன்மைகளாகும்.

அனாச்சாரங்களுக்கு ஆணிவேர்

மூடநம்பிக்கைகளை நிலைநாட்டுவதற்காக புனையப்பட்ட கற்பனைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இவை உண்மை என்று பலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஏமாற்றுப் பேர்வழிகள் செய்து காட்டும் தந்திர வித்தைகளை உண்மை என்று நம்பி ஏமாறுபவர்களும் உண்டு.

லாஜிக் இல்லா மேஜிக் என்று கூறி தந்திர வித்தைகளை மக்களுக்கு பலர் செய்துகாட்டுகிறார்கள். இவர்களுடைய வித்தைகளை பார்க்கும் போது ஏதோ அற்புதங்களை செய்வது போல் நமக்குத் தோன்றுகிறது.

வித்தைகளை செய்துகாட்டுபவர் இது கண்கட்டி வித்தை தான். இதில் எந்த அற்புதமோ மறைமுகமான சக்தியோ இல்லை என்று கூறும் போது இது பொய்யான வித்தைதான் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இதே வித்தைகளை பில்­ சூனியம் மறைமுகமான சக்தி என்று கூறி செய்தால் மக்கள் அப்போதும் நம்பத்தயாராக இருக்கிறார்கள். ஏமாற்றப்பட்ட தங்களின் கண்களை நம்புகிறார்கள். இந்த இடத்தில் குர்ஆன் ஹதீஸை வைத்து உரசிப்பார்க்காமல் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள்.

தங்களுடைய நோக்கங்களை அடைவதற்காக பேய் பிசாசு தன் மீது வந்துவிட்டதாக கூறி நாடகமாடுபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருப்பதால் இவர்களின் மீதுள்ள நம்பிக்கையில் மூடநம்பிக்கையை உண்மை என்று பலர் கருதுகிறார்கள்.

இந்த மூடநம்பிக்கைகள் பொய்யானவை என்பதற்கான போதிய ஆதாரங்களை குர்ஆனி­ருந்தும் ஹதீஸி­ருந்தும் அறிந்த பிறகும் சிலருக்கு சந்தேகம் வருகிறது. எனது தாய்க்கு பேய்பிடித்திருக்கிறது. எனது சகோதரிக்கு சூனியம் செய்யப்பட்டிருக்கிறது. தர்ஹாக்களுக்குச் சென்ற உடன் நோய் குணமாகிவிட்டது. இதுவெல்லாம் எப்படி பொய்யாக இருக்க முடியும்? என்று இவர்கள் கூறுவதே இவர்களின் சந்தேகத்திற்கு காரணம்.

இவையெல்லம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவறான நம்பிக்கைகளாக இருப்பதை மட்டும் கவனத்தில் கொண்டு கண்மூடிக்கொண்டு இவையெல்லாம் பொய்யானவை என்று உறுதியான ஈமான் உள்ளவன் நம்புவான்.
இறைவன் எப்படி பொய் சொல்வான்? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்படி பொய் சொல்வார்கள்? என்று ஒருவன் நினைத்தால் தவறான நம்பிக்கைகளுக்கு இடமளிக்கமாட்டான்.

மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மருத்துவம்

தங்களுக்கு அற்புத சக்தி இருக்கிறது என்று மக்களை நம்பவைத்தால் தான் அதிகமான செல்வத்தை கொள்ளையடிக்கலாம் என்று போ­ மந்திரவாதிகள் நினைக்கிறார்கள். வெறுமனே மருத்துவம் என்று கூறி சிகிச்சை செய்தால் பெரிய அளவில் இலாபத்தை ஈட்டமுடியாது என்று இவர்கள் கருதுகிறார்கள்.

எனவே மருத்துவம் செய்துவிட்டு நோய் நீங்கியதற்கு தன்னுடைய தனிப்பட்ட ஆற்றல் என்று மக்களை நம்பவைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் மந்திரவாதி கொடுத்த மருந்தாலும் சிகிச்சையாலும் தான் நோய் குணமாகிறது.

எந்த மருந்தும் இல்லாமல் வைத்தியம் செய்யும் முறை இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உட­ல் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து அந்த உறுப்பை செயலுறச் செய்யும் நரம்பை தூண்டினால் கோளாறு சரியாகிவிடும்.

இதை மருத்துவம் என்று கூறி செய்தால் பிரச்சனையில்லை. ஆனால் பில்­ சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து செய்கிறார்கள். இவர்களது முயற்சியால் பலன் கிடைப்பதால் இவர்கள் கூறுவது உண்மை என்று நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள்.
ஈமானை இழந்த கூட்டம்
மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரான இஸ்ரவேலர்கள் இறைவன் புறத்தி­ருந்து பல சான்றுகளை கண்கூடாக பார்த்தார்கள். வல்ல இறைவனைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்ற ஏகத்துவக்கொள்கையை உறுதிபடுத்தும் பல அற்புதங்களை கண்டார்கள்.

மன்னு சல்வா என்ற வானுலக உணவு இறைவன் புறத்தி­ருந்து இலவசமாக இவர்களுக்கு கொடுக்கப்பட்டது. மூஸா (அலை) அவர்களையும் அவர்களுடன் இருந்த ஈமான் கொண்டவர்களையும் காப்பாற்றுவதற்காக அல்லாஹ் கட­ல் ஒரு பாதையை ஏற்படுத்தினான். இதை கண்கூடாக கண்டு இறைவனது அற்புத உதவியால் உயிர் பிழைத்தவர்கள் தான் இந்த இஸ்ரவேலர்கள்.

தண்ணீருக்கு வ­யில்லாமல் தாகத்தால் இவர்கள் வாடியபோது தனது கைத்தடியை பாறையின் மீது அடித்து அதில் பன்னிரண்டு நீரூற்றுக்களை மூஸா (அலை) அவர்கள் இறைவனுடைய உதவியால் வரவழைத்தார்கள். இந்த அற்புதத்தையும் கண்ணால் கண்டு பயனடைந்தவர்கள் தான் இந்த இஸ்ரவேலர்கள்.
கொலைசெய்யப்பட்ட ஒருவர் இறைவனால் உயிரூட்டப்பட்டு கொலை செய்தவர் யார் என்பதை தன் வாயினால் தெளிவுபடுத்திய அற்புதத்தையும் கண்கூடாக இவர்கள் கண்டார்கள். இறைநம்பிக்கையை அதிகப்படுத்தும் பல அற்புதங்களை இவர்கள் கண்கூடாக கண்டிருந்தும் சாமிரீ என்பவன் செய்து காட்டிய அற்பமான வித்தையை நம்பி இறைநிராகரிப்பாளர்களானார்கள்.

இஸ்ரவேலர்கள் வைத்திருந்த நகைகளை சேகரித்து அவற்றை உருக்கி ஒரு காளைக் கன்றை சாமிரீ செய்தான். மூஸா (அலை) அவர்களின் காலடி மன்னை எடுத்து உலோகத்தால் ஆன மாட்டிற்குள் எரிந்தான். அந்த மாட்டி­ருந்து ஒரு சப்தம் வந்தது.

சப்தம் வந்ததை அடிப்படையாக வைத்து இது தான் நமது கடவுள் என்று இஸ்ரவேலர்கள் நம்பி சாமிரீயின் சதியில் விழுந்தார்கள். நமது அறிவுக்குப் புலப்படாத காரியங்களை செய்து இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமான கருத்துக்களை இவன் விதைக்கும் போது இதில் ஏதோ பித்தலாட்டம் உள்ளது என்று புரிந்துகொண்டு ஈமானில் உறுதியாக இஸ்ரவேலர்கள் இருந்திருக்க வேண்டும்.

சப்தமிட்ட இந்த போ­ பிராணியால் நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியுமா? என்று இவர்கள் சிந்தித்தித்துப் பார்த்திருந்தால் சாமிரியால் உருவாக்கப்பட்ட சிலையை அவர்கள் கடவுளாக ஏற்றிருக்க மாட்டார்கள்.

”உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான்” என்று (இறைவன்) கூறினான்.
”உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப் பட்டவராகவும் திரும்பினார். ”என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகிவிட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா?” என்று கேட்டார்.

”நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் ”இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்” என்றான்.

அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

”என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!” என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.
”மூஸா, எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்” என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் (20 : 85)

”உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம் என்று அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் கூறுகிறான். இஸ்ரவேலர்கள் காளைக் கன்றை கடவுளாக ஆக்கிக்கொண்ட போது இதன் மூலம் நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள் என்று ஹாரூன் (அலை) அவர்களும் எச்சரிக்கை செய்கிறார்கள்.
நமது இறைநம்பிக்கையை இறைவன் சோதிப்பதற்காக சாமிரீ போன்ற பொய்யர்கள் உருவாகுவார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றும் வித்தைகளை காட்டி இறைமறுப்பின் பக்கம் மக்களை இழுத்துச் செல்வார்கள். இந்த நேரத்தில் இவர்கள் கூறும் பொய்யான வித்தைகளை உண்மை என்று நம்பி பேய் பிசாசு பில்­ சூனியம் ஏவல் போன் மூடநம்பிக்கைகளில் நாம் விழுந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
இதைத் தான்மேற்கண்ட சாமிரியின் சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

தஜ்ஜாலுடைய குழப்பம்

பிற்காலத்தில் தஜ்ஜால் என்பவன் தோன்றுவான். அவன் பல அற்புதங்களை மக்களுக்கு முன்னிலையில் செய்துகாட்டி தன்னை கடவுளாக ஏற்றுக்கொள்ளுமாறு கூறுவான். ஈமானில் பலவீனமானவர்கள் இவன் சொல்வதை உண்மை என்று நம்பி இவனை கடவுள் என்று ஏற்றுக்கொள்வார்கள்.

அற்பமான கண்கட்டி வித்தைகளை கண்டு ஏமாறுபவர்கள் கண்டிப்பாக தஜ்ஜாலுடைய குழப்பத்தில் விழாமல் இருக்கமாட்டார்கள். தஜ்ஜால் செய்கின்ற அற்புதம் மிகவும் வியக்கத்தக்க விதத்தில் இருக்கும். இறைவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாத காரியங்களைக் கூட செய்து காட்டி மக்களை நம்பவைப்பான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது : நான் உங்கüடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகின்றானோ அது தான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3338)

நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), ”உமது கேள்வி என்ன?” என்று கேட்டார்கள். நான், ”தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் இறைச்சியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்” என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”(இது என்ன பிரமாதம்? அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அவற்றைவிட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையே” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரரி­)
நூல் : முஸ்­ம் (5634)

உறுதியான இறைநம்பிக்கை உள்ளவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தஜ்ஜால் புறப்பட்டு வரும்போது இறைநம்பிக்கையாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வார். அப்போது அவரை ஆயுதமேந்திய தஜ்ஜாரின் பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்டு, ”எங்கே செல்கிறாய்?” என்று கேட்பார்கள். அந்த மனிதர், ”(இப்போது) புறப்பட்டிருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கிறேன்” என்று பதிலளிப்பார். அதற்கு அவர்கள், ”நம் இறைவனை (தஜ்ஜாலை) நீ நம்பவில்லையா?” என்று கேட்பார்கள். அந்த மனிதர், ”நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்ல” என்று கூறுவார். அதற்கு அவர்கள், ”இவனைக் கொல்லுங்கள்” என்று கூறுவார்கள்.

அப்போது அவர்களில் சிலர் சிலரிடம், ”உங்கள் இறைவன் (தஜ்ஜால்), யாரையும் தானின்றி கொல்லக் கூடாதென உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?” என்று கூறுவார்கள். ஆகவே, அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜா­ரிடம் கொண்டுசெல்வார்கள். அந்த இறைநம்பிக்கையாளர் தஜ்ஜாலைக் காணும் போது, ”மக்களே! இவன்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான்” என்று சொல்வார்.

உடனே தஜ்ஜா­ரின் உத்தரவின்பேரில், அவர் பிடித்துக் கொண்டுவரப்பட்டு (தூண்களுக்கிடையே) நிறுத்தப்படுவார். ”இவனைப் பிடித்து இவனது தலையைப் பிளந்துவிடுங்கள்” என்று அவன் கட்டளையிடுவான். அப்போது அவர், முதுகும் வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார்.

பிறகு தஜ்ஜால், ”என்மீது நீ நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், ”நீ பெரும் பொய்யன் ‘மசீஹ்’ ஆவாய்” என்று கூறுவார். பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவருடைய இரு கால்கள்வரை தனித் தனியே பிளக்கும்படி கட்டளையிடப்படும். அவ்வாறே செய்து (அவரது உடலை இரு துண்டுகளாக்கியதும்) அவ்விரு துண்டுகளுக் கிடையில் தஜ்ஜால் நடந்து வருவான்.

பிறகு அந்த உடலைப் பார்த்து, ”எழு” என்பான். உடனே அந்த மனிதர் (உயிர் பெற்று) நேராக எழுந்து நிற்பார். பிறகு அவரிடம், ”என்மீது நம்பிக்கை கொள்கிறாயா?” என்று தஜ்ஜால் கேட்பான். அதற்கு அந்த மனிதர், ”உன்னைப் பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்துகொண்டேன்” என்று சொல்வார். பிறகு அந்த மனிதர், ”மக்களே! (இவன் இவ்வாறெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என நம்பிவிடாதீர்கள்.) இவன் எனக்குப் பிறகு மக்களில் வேறெவரையும் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவார்.

உடனே தஜ்ஜால் அவரை அறுப்பதற்காகப் பிடிப்பான். ஆனால், அப்போது அவரது பிடரியிரி­ருந்து காறை எலும்புவரையுள்ள பகுதி செம்பாக மாறிவிடும். ஆகவே, அவனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையும் பிடித்துத் தூக்கியெறிவான். அந்த மனிதரை தஜ்ஜால் நெருப்பில் தூக்கியெறிந்துவிட்டான் என மக்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆனால், அவர் சொர்க்கத்தில்தான் வீசப்பட்டிருப்பார்.

”இந்த மனிதர்தான் அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களிலேயே மகத்தான உயிர்த்தியாகம் செய்தவர் ஆவார்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரரி­)
நூல் : முஸ்­ம் (5632)

மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களால் புகழ்ந்து சொல்லப்பட்ட மனிதரிடமிருந்து நம் சமுதாயம் பாடம் பெற வேண்டும். உயிரை எடுப்பதும் உயிரை கொடுப்பதும் இறைவனின் ஆற்றல். இந்த ஆற்றலை இறைவன் சோதனைக்காக தஜ்ஜா­ற்கு வழங்கியுள்ளான். இவற்றை பயன்படுத்தி தஜ்ஜால் அற்புதம் செய்த போதிலும் அவனுடைய வழிகேட்டில் அந்த மனிதர் விழுந்துவிடவில்லை.

எனவே போ­ வித்தைகளை நம்பி இறைநம்பிக்கையை இழந்துவிடக்கூடாது.

பொய்யர்கள் என நிரூபிக்கும் சான்றுகள்

தவறான கருத்துக்களை விதைப்பவர்கள் எத்தனை தந்திர வித்தைகளை செய்தாலும் அவர்கள் பொய்யர்கள் என்பதற்கான சான்றுகளை அல்லாஹ் வைத்திருப்பான். கொஞ்சம் சிந்தனையை தூண்டினால் இந்த சான்றுகளை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

தஜ்ஜால் பாரதூரமான பல விஷயங்களை செய்துகாட்டினாலும் அவன் இறைவன் கிடையாது என்பதை நிரூபிப்பதற்கு அவனிடத்தில் சில பலவீனங்களை அல்லாஹ் வெளிப்படுத்தி காண்பிப்பான்.

அவனுடைய ஒரு கண் குறையுள்ளதாக இருக்கும். அவனது நெற்றியில் காஃபிர் இவன் இறைமறுப்பாளன் என்று எழுதப்பட்டிருக்கும். உலகின் எல்லா பகுதிகளுக்கும் அவனால் சென்றுவர முடியும். ஆனால் மக்காவிற்கும் மதீனாவிற்கும் அவனால் செல்ல முடியாது.

இது போன்ற பலவீனங்கள் இறைவனுக்கு இருக்காது. எனவே சிந்தனையுள்ளவர்களும் இறைநம்பிக்கையாளர்களும் இவற்றை வைத்து இவன் பொய்யன் என்பதை தெளிவாக அறிந்துகொள்வார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்கüன் நடுவே அமர்ந்தபடி ‘தஜ்ஜால்’ என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ”அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், ‘தஜ்ஜால்’ என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி (3439)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால்வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்துகொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிரிருந்து) வெளியேற்றிவிடுவான்!
அறிவிப்பவர் : அனஸ் பின் மா­க் (ர­)
நூல் : புகாரி (1881)

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.