பெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

ஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது. பெண்கள் அணிந்துகொள்ளலாம் என்பதே மார்க்கச் சட்டம் என்று பரவலாக மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள். பலவருடங்களாக நாமும் இதேக் கருத்தையே சொல்­க்கொண்டுவருகின்றோம்.

இந்த நமது நிலைபாட்டிற்கு எதிராக சில அறிஞர்கள் பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்று கூறியுள்ளனர். இந்த கருத்துவேறுபாடு நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களிடமும் இருந்துள்ளது.

தற்காலத்தில் இமாம் அல்பானீ அவர்கள் இந்தக் கருத்தை வாதப் பிரதிவாதங்களோடு அழுத்தமாக கூறியுள்ளார். இவரது கருத்தை அமோதித்து இன்றைக்கு சிலர் பெண்கள் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்று கூறிவருகின்றனர்.

குறிப்பாக இலங்கையில் சில அறிஞர்களால் இப்பிரச்சனையை கிளப்பப்பட்டு இது தொடர்பாக அறிஞர்களுக்கிடையில் விவாதம் நடைபெருகின்ற அளவிற்கு இப்பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. முரண்பட்ட இருவேறுக்கருத்துக்கள் வந்துள்ளதால் அந்நாட்டு மக்களுக்கு இது தொடர்பான தெளிவு கட்டாயம் தேவைப்படுகிறது.
இது ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டப்பிரச்சனை என்பதால் இதில் சரியான நிலைபாடு எது என்பதை எல்லோரும் ஆதாரங்களோடு அறிந்துகொள்வது அவசியம்.

இந்த ஆய்வில் இறங்கி அனைத்து ஆதாரங்களையும் அலசிப்பார்க்கும் போது தங்கம் அணிவது ஆண்களுக்கு மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தே சரியானது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

இமாம் அல்பானீ அவர்களைப் பொறுத்தவரை அவர் சிறந்த அறிஞர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மார்க்க விஷயங்களில் சிறப்பான முறையில் ஆய்வு செய்யக்கூடியவர். என்றாலும் நாம் பேசிக்கொண்டிருக்கின்ற இந்த குறிப்பிட்ட விஷயத்தில் அவர் தவறான முடிவை எடுத்துள்ளார்.

தங்க ஆபரணங்களை பெண்களும் அணியக்கூடாது என்று கூறுபவர்கள் தங்கள் கூற்றுக்கு திருமறைக் குர்ஆனி­ருந்து எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. மூன்று ஹதீஸ்களையே இதற்கு அவர்கள் ஆதாரங்களாக குறிப்பிடுகிறார்கள்.

பெண்கள் தங்கம் அணியக்கூடாது என்றக் கருத்தில் பல பலவீனமான ஹதீஸ்கள் வருகின்றன. ஆனால் இவற்றில் இரண்டு ஹதீஸ்களைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் பலவீனமானவை என்று இக்கருத்துடையவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். அந்த பலவீனமான இரு ஹதீஸ்களை சரியானது என்று இவர்கள் நம்புவதால் தங்கள் கூற்றிற்குரிய ஆதாரங்களாக இவற்றை குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள் குறிப்பிடும் மூன்று ஹதீஸ்களில் இரண்டு பலவீனமாக இருப்பதுடன் இம்மூன்றிலும் இவர்களது வாதத்தை வலுப்படுத்துகின்ற எந்த அம்சமும் இடம்பெறவில்லை. மாறாக அவைகள் வேறு கருத்துகளுக்கு இடமளிக்கின்ற வகையில் பல இடம்பாடுகளைக் கொண்டதாக அனமந்துள்ளன.
ஒருவர் தனது கருத்திற்கு சான்றாகக் காட்டக்கூடிய ஆதாரங்கள் மாற்றுக்கருத்திற்கு இடம்தராமல் அவரது கருத்தை மட்டுமே பிரதிப­க்கக்கூடிய வகையில் இருந்தால் தான் அது ஆதாரத்திற்கு தகுதியாகும்.

அந்த ஆதாரம் பல இடம்பாடுகளுக்கு உரியதாக இருக்கும் போது தனது கருத்திற்கு தோதுவான ஒரு இடம்பாடு அதில் இருந்தாலும் அதை ஆதாரமாக காட்ட முடியாது.
பெண்களும் தங்கம் அணியக் கூடாது என்று கூறுபவர்கள் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் இதுபோன்றே அமைந்துள்ளது. அவற்றின் விபரங்களை ஒவ்வொன்றாகக் காண்போம்.
எதிர் கருத்தில் உள்ளவர்கள் வைக்கும் முதல் ஆதாரம்

25460حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنَا عَطَاءٌ عَنْ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ جَعَلَتْ شَعَائِرَ مِنْ ذَهَبٍ فِي رَقَبَتِهَا فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْرَضَ عَنْهَا فَقُلْتُ أَلَا تَنْظُرُ إِلَى زِينَتِهَا فَقَالَ عَنْ زِينَتِكِ أُعْرِضُ قَالَ زَعَمُوا أَنَّهُ قَالَ مَا ضَرَّ إِحْدَاكُنَّ لَوْ جَعَلَتْ خُرْصًا مِنْ وَرِقٍ ثُمَّ جَعَلَتْهُ بِزَعْفَرَانٍ رواه أحمد

உம்மு சலமா (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :
எனது கழுத்தில் தங்கத்தால் ஆன கழுத்து மாலைகளை நான் அணிந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என் அறைக்குள்) வந்தார்கள். என்னை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். நான் (அவர்களிடம்) என் அலங்காரத்தை நீங்கள் பார்க்கமாட்டீர்களா? என்று வினவினேன். அதற்கு அவர்கள் உனது அலங்காத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருத்தி வெள்ளியால் ஆபரணத்தை செய்து பிறகு அதனுடன் குங்குமச் சாயத்தை சேர்த்துக்கொள்வதில் என்ன சிரமம் இருக்கிறது? என்று கூறியதாக இதன் அறிவிப்பாளர்கள் கருதினார்கள்.
அஹ்மத் (25460)

தங்கத்தை நபி (ஸல்) அவர்கள் புறக்கணித்துவிட்டு வெள்ளியால் செய்துகொண்டால் என்ன? என்று கேள்வி எழுப்புவதால் பெண்களும் தங்கம் அணியக்கூடாது என்று இதி­ருந்து வாதிடுகிறார்கள்.

இந்த ஹதீஸ் பலவீமானது
அஹ்மதில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை உம்மு சலமாவிடமிருந்து அதாஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் உம்மு சலமா (ர­) அவர்களிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியை கூட செவியுறவில்லை என்று இமாம்கள் கூறியுள்ளார்கள்.
علل المديني ج: 1 ص: 66
88 قال علي عطاء بن أبي رباح لقي عبدالله بن عمر وراى أبا سعيد الخدري رآه يطوف بالبيت ولم يسمع منه وجابرا وابن عباس ورأى عبدالله بن عمرو ولم يسمع من زيد بن خالد الجهني ولا من أم سلمة ولا من أم هانيء وسمع من عبدالله بن الزبير وابن عمر ولم يسمع من أم كرز شيئا وروى عن أم حبيبة بنت ميسرة عن أم كرز وسمع من عائشة وجابر بن عبدالله حبيب بن ثابت
المراسيل لابن أبي حاتم ج: 1 ص: 155
567 حدثنا محمد بن أحمد بن البراء قال قال علي يعني ابن المديني عطاء بن أبي رباح رأى أبا سعيد الخدري يطوف بالبيت ولم يسمع منه ورأى عبدالله بن عمرو ولم يسمع منه ولم يسمع من زيد بن خالد الجهني ولا من أم سلمة ولا من أم هانىء ولا من أم كرز شيئا
நூல் : இலலுல் மதீனீ பாகம் : 1 பக்கம் : 66
நூல் : அல்மராசீலு ­இப்னி அபீ ஹாத்தம் பாகம் : 1 பக்கம் : 155

எனவே உம்மு சலமா (ர­) அவர்களுக்கும் அதாவிற்கும் இடையே அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். அவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் நமக்குத் தெரியாவிட்டாலும் அறிவிப்பாளர் விடுபட்டிருப்பது உறுதியாகத் தெரிவதால் இது தொடர்பு முறிந்த பலவீனமான செய்தியாகும். இதை ஆதாரமாகக் கொண்டு பெண்கள் தங்கம் அணிவது ஹராம் என்றக் கருத்தை நிறுவ முடியாது.

இதை ஆதாரமாகக் காட்டக்கூடிய இமாம் அல்பானீ அவர்களும் இந்த ஹதீஸ் தொடர்பு முறிந்தது என்பதை ஒத்துக்கொள்கிறார். ஆனால் பல பலவீனமான ஹதீஸ்கள் ஒன்று சேர்ந்தால் அவை சரியானதாகிவிடும் என்ற தவறான நிலைப்பாட்டின் காரணமாக இந்த பலவீனமான ஹதீஸை அவர் சரிகண்டுள்ளார்.
இத்தடை நபியவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் உரியது

ஒரு பேச்சிற்கு இந்த செய்தியை சரியானது என்று ஏற்றுக்கொண்டாலும் இதை வைத்து எல்லாப் பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்று கூற முடியாது. ஏனென்றால் தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்ற சட்டம் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் உரிய பிரத்யேகமான சட்டமாகும். இதை பின்வரும் ஹதீஸ்களி­ருந்து அறிந்துகொள்ளலாம்.

5046أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَنْبَأَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ أَبَا عُشَّانَةَ هُوَ الْمَعَافِرِيُّ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ يُخْبِرُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْنَعُ أَهْلَهُ الْحِلْيَةَ وَالْحَرِيرَ وَيَقُولُ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ حِلْيَةَ الْجَنَّةِ وَحَرِيرَهَا فَلَا تَلْبَسُوهَا فِي الدُّنْيَا رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது குடும்பத்தாருக்கு ஆபரணங்களையும் பட்டையும் தடை செய்தார்கள். மேலும் சொர்க்கத்தின் ஆபரணங்களையும் பட்டையும் நீங்கள் விரும்பினால் இவ்வுலகில் இவற்றை அணியாதீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­) அவர்கள்
நூல் : நஸாயீ (5046)

நஸாயீயில் இடம்பெற்றுள்ள மேலுள்ள செய்தி ஆதாரப்பூர்வமானதாகும். இந்த ஹதீஸில் பொதுவாக ஆபரணங்களைத் தடுத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பின்னால் வரும் ஹதீஸை பார்க்கும் போது தங்க ஆபரணம் மட்டுமே அவர்களுக்கு தடைசெய்யப்பட்டது. வெள்ளி ஆபரணங்கள் அனுமதிக்கப்பட்டது என்பதை அறியலாம்.

مشكل الآثار للطحاوي லி باب بيان مشكل ما روي عن رسول الله صلى الله عليه
كما حدثنا محمد بن علي بن داود قال : حدثنا علي بن بحر القطان قال : حدثنا هشام بن يوسف , عن معمر , عن الزهري , عن عروة أو عن عمرة عن عائشة كذا قال قالت : رأى النبي صلى الله عليه وسلم في يدي عائشة قلبين ملويين بذهب ، فقال : ‘ ألقيهما عنك ، واجعلي قلبين من فضة ، وصفريهما بزعفران

ஆயிஷா (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :
தங்க முலாம் பூசப்பபட்ட இரண்டு வளையல்கள் எனது கையில் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் இவ்விரண்டையும் கழற்றிவிடு. வெள்ளியால் இரு வளையங்களை செய்து அதில் குங்குமச் சாயத்தை சேர்த்து மஞ்சள் நிறமாக மாற்றிக்கொள் என்று கூறினார்கள்.

இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தங்க ஆபரணத்தை மட்டுமே தனது மனைவி ஆயிஷா (ர­) அவர்களுக்குத் தடை செய்கிறார்கள். வெள்ளி நகைகளை அவர்களுக்கு அனுமதிக்கிறார்கள்.

மேலுள்ள இவ்விரண்டு ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்ற சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் உரியதல்ல. நபியவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் உரிய பிரத்யேகமான சட்டம் என்பதை அறியலாம்.
தனது மனைவிமார்கள் அல்லாத மற்ற பெண்களுக்கு தங்கம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். இதை பின்வரும் ஆதாரங்களி­ருந்து அறியலாம்.
மற்றப் பெண்களுக்கு நபியவர்கள் வழங்கிய அனுமதி

ஆதாரம் : 1

5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي رواه النسائي

அலீ பின் அபீ தா­ப் (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் பட்டை தனது வலக்கரத்திலும் தங்கத்தை தனது இடக்கரத்திலும் பிடித்து இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறினார்கள்.
நூல் : நஸாயீ (5055)

இந்த செய்தி தங்கமும் பட்டும் ஆண்களுக்கு மட்டுமே ஹராம். பெண்களுக்கு ஹலால் என்றக் கருத்தைத் தருகின்றது. இது ஆதாரப்பூர்வமானதாகும்.
இமாம் அல்பானீ அவர்கள் உட்பட பெண்கள் தங்கம் அணிவது கூடாது என்று கூறுபவர்கள் இந்த ஹதீஸை மறுக்கவில்லை. மாறாக இதை ஏற்றுக்கொண்டு இதற்கு தவறான விளக்கத்தைத் தருகிறார்கள். அந்தத் தவறான விளக்கம் என்ன என்பது பின்னால் விளக்கப்படும்.

ஆதாரம் : 2

2434أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ حُسَيْنٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ امْرَأَةً مِنْ أَهْلِ الْيَمَنِ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِنْتٌ لَهَا فِي يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ أَتُؤَدِّينَ زَكَاةَ هَذَا قَالَتْ لَا قَالَ أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ هُمَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه النسائي
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ர­) அறிவிக்கிறார்கள் :
யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தனது மகளுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தால் ஆன தடிமனான இரு காப்புகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் இதற்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவிட்டாயா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் இல்லை என்று கூறினார். இவ்விரண்டு காப்புகளுக்கு பதிலாக மறுமை நாளில் நெருப்பால் ஆன இரு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே அப்பெண் அவ்விரண்டு காப்புகளையும் கழற்றி நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்துவிட்டு இவ்விரண்டும் சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விற்கு உரியதாகும். மேலும் அவனது தூதருக்கும் உரியாதாகும் என்று கூறினார்.
நஸயீ (2434)

இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதாகும். இமாம் அல்பானீ அவர்களும் தங்கம் விஷயத்தில் இவரது கருத்தை ஏற்றவர்களும் இந்த ஹதீஸை குறைகாணவில்லை. மாறாக ஏற்றுக்கொள்கின்றனர்.

பெண்கள் தங்கம் அணிவது கூடாதென்றால் அச்செயலை நபி (ஸல்) அவர்கள் தன் கண்முன்னே காணும் வேளையில் அதை கண்டிக்காமல் விட்டுவிட்டு ஸகாத் கொடுத்து விட்டாயா? என்று கேட்கமாட்டார்கள்.

பெண்கள் தங்கம் அணிவதில் அவர்களுக்கு ஆட்சியேபனை இல்லாத காரணத்தால் அதைப் பற்றி கண்டிக்காமல் அதை ஆமோதித்துவிட்டு ஸகாத் கொடுத்துவிட்டாயா? என்றக் கேள்வியை கேட்கிறார்கள்.

பெண்கள் தங்கத்தை அணியக்கூடாதென்றால் அதையே நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். எனவே பெண்கள் தங்களது ஆபரணங்களுக்குரிய ஸகாத்தை கொடுத்துவிட்டால் அணிவதில் தவறில்லை என்பதற்கு இந்த செய்தி ஆதாரமாகத் திகழ்கிறது.
ஆதாரம் : 3

3697حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادٍ عَنْ أَبِيهِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِلْيَةٌ مِنْ عِنْدِ النَّجَاشِيِّ أَهْدَاهَا لَهُ فِيهَا خَاتَمٌ مِنْ ذَهَبٍ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ قَالَتْ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعُودٍ مُعْرِضًا عَنْهُ أَوْ بِبَعْضِ أَصَابِعِهِ ثُمَّ دَعَا أُمَامَةَ ابْنَةَ أَبِي الْعَاصِ ابْنَةَ ابْنَتِهِ زَيْنَبَ فَقَالَ تَحَلَّيْ بِهَذَا يَا بُنَيَّةُ رواه أبو داود

ஆயிஷா (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :

நஜ்ஜாஷி அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு சில ஆபரணங்கள் வந்தது. அவற்றை நஜ்ஜாஷி நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அவற்றில் அபிசீனிய நாட்டு கல் பதிக்கப்பட்ட தங்கமோதிரம் ஒன்று இருந்தது. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வெறுத்து) புறக்கணித்த நிலையில் ஒரு குச்சியால் அல்லது தனது விரலால் அதை எடுத்தார்கள். பிறகு தனது பேத்தியும் அபுல் ஆஸ் அவர்களின் மகளுமான உமாமா (ர­) அவர்களை அழைத்து என்னருமை மகளே இதை நீ அணிந்துகொள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­) அவர்கள்
நூல் : அபூதாவுத் (3697)

தங்க மோதிரத்தை நபி (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள். அதே நேரத்தில் தனது பேத்தி உமாமா (ர­) அவர்களுக்கு தானே எடுத்துக்கொடுத்து அதை அணிந்துகொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.

தங்க ஆபரணங்களை பெண்கள் அணிவது கூடாதென்றால் தனது பேத்திக்கு இதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கமாட்டார்கள். அதே நேரத்தில் அந்த மோதிரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வெறுத்து) புறக்கணித்தார்கள் என்று ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் ஆண்கள் தங்கமோதிரம் அணிவது புறக்கணிக்கப்பட வேண்டியது என்பதை அறியலாம்.

ஆதாரம் : 4

4536 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ شُعْبَةَ حَدَّثَنِي خُلَيْدُ بْنُ جَعْفَرٍ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَتْ امْرَأَةٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ قَصِيرَةٌ تَمْشِي مَعَ امْرَأَتَيْنِ طَوِيلَتَيْنِ فَاتَّخَذَتْ رِجْلَيْنِ مِنْ خَشَبٍ وَخَاتَمًا مِنْ ذَهَبٍ مُغْلَقٌ مُطْبَقٌ ثُمَّ حَشَتْهُ مِسْكًا وَهُوَ أَطْيَبُ الطِّيبِ فَمَرَّتْ بَيْنَ الْمَرْأَتَيْنِ فَلَمْ يَعْرِفُوهَا فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا رواه مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் குட்டையான பெண் ஒருத்தி இருந்தாள். அவள் உயரமான இரு பெண்களுடன் நடந்து செல்லக்கூடியவளாய் இருந்தாள். (அவளைப் பார்த்து மக்கள் பரிகசிப்பார்கள்.) ஆகவே, அவள் மரக்கட்டையாலான கால்களை(ப் பொருத்தி உயரமான அவ்விரு பெண்களுக்குச் சமமாக தன்னை) ஆக்கிக் கொண்டாள்.
மேலும், தங்கத்தாலான மோதிரம் ஒன்றையும் அவள் அணிந்துகொண்டாள். அது (ஒரேயொரு உட்குழி கொண்டு) மூடப்பட்டதாக இருந்தது. (அந்தக் குழியைத் தவிர வேறு துவாரங்கள் எதுவும் அதில் இருக்கவில்லை.) பிறகு அவள் அக்குழிக்குள் கஸ்தூரியை இட்டு நிரப்பினாள். லிகஸ்தூரி நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்ததாகும்.லி (இவ்வாறு செய்து கொண்ட) பின்னர் அவள் அவ்விரு பெண்களுக்கிடையே நடந்து சென்றாள். ஆகவே, அவளை மக்கள் (அடையாளம்) அறிந்து கொள்ளவில்லை. அப்போது அவள் (மோதிரத்தி­ரிருந்து கஸ்தூரியை கமழச் செய்வதற்காக) தமது கையை இவ்வாறு அசைத்து சைகை செய்தாள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ர­ரி)
நூல் : முஸ்­ம் (4536)

நபி (ஸல்) அவர்களின் சொல்லும் செயலும் ஆதாரமாக இருப்பதைப் போன்று அவர்களின் அங்கீகாரமும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். நபி (ஸல்) அவர்களின் கவனத்திற்கு ஒரு விஷயம் கொண்டுவரப்பட்டு அதை அவர்கள் கண்டிக்காமல் விட்டுவிட்டால் இதுவே அவர்களின் அங்கீகாரமாகும்.
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் செய்த காரியங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பேசுகிறார்கள். இப்பெண் தங்க மோதிரத்தையும் நறுமணப்பொருளையும் பயன்படுத்தியிருக்கிறார்.

பெண்கள் தங்கமோதிரம் அணிவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியமாக இருந்தால் இப்பெண் தங்க மோதிரத்தை அணிந்தது தவறு என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். அல்லது இப்படி ஒரு சம்பவத்தை அவர்கள் கூறியிருக்கவே மாட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எதையும் தேவையில்லாமல் பேசமாட்டார்கள். இந்த சம்பவத்தில் நாம் சிந்திக்க வேண்டிய அம்சங்கள் இருப்பதால் தான் இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களின் வாயி­ருந்து வந்துள்ளது.
பெண்கள் தங்க ஆபரணங்களையும் நறுமணப்பொருட்களையும் அணியலாம். மேலும் நமது உட­ல் குறைகள் ஏதும் இருந்தால் அக்குறையை மறைப்பதற்கான வழிகளில் இறங்குவது தவறல்ல. இது போன்ற சட்ட நுனுக்ககங்களை இந்த சம்பவம் உள்ளடக்கி இருக்கின்றது.
ஆதாரம் : 5
இப்னு அப்பாஸ் (ர­ரி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரரி­) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலி­றுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ர­ரி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.
நூல் : புகாரி (98)

இந்த செய்தியில் பெண்கள் காதணிகளையும் மோதிரங்களையும் அணிந்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த அணிகலன்கள் எந்த உலோகத்தால் ஆனவை என்று தெளிவாக சொல்லப்படவில்லை.

என்றாலும் காதணிகள் என்ற வார்த்தையை குறிக்க மேற்கண்ட ஹதீஸில் குர்ஸ் என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தங்கம் மற்றும் வெள்ளி வளையங்களைக் குறிக்கின்ற வார்த்தையாகும்.

இவ்விரு உலோகங்களையும் குறிக்கின்ற வார்த்தை என்பதால் இந்த காதணிகள் தங்கமாக இருக்கவில்லை. வெள்ளியாக மட்டுமே இருந்தன என்று வாதிட முடியாது.

தங்கத்தால் ஆன ஆபரணங்களை அணியக்கூடிய வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்களிடம் இருந்துள்ளது என மேலே நாம் சுட்டிக்காட்டிய அனைத்து ஹதீஸ்களும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

எனவே இந்த சம்பவத்தில் பெண்கள் தங்க ஆபரணங்களை அணிந்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதால் பெண்கள் தங்கம் அணியலாம் என்பதற்கு இந்த செய்தியும் ஆதாரமாக உள்ளது.

உம்மு சலமா (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியாக இருப்பதால் தங்கம் அணியக்கூடாது என்ற இச்சட்டம் அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமானது. அவர்கள் அறிவிப்பதாக வரும் இந்த ஹதீஸை வைத்து அனைத்துப் பெண்களுக்கும் தங்கம் ஹராம் என்று கூறுவது தவறு.
எதிர் கருத்தில் உள்ளவர்கள் வைக்கும் இரண்டாவது ஆதாரம்

3698حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسَْمَةَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ عَنْ أَسِيدِ بْنِ أَبِي أَسِيدٍ الْبَرَّادِ عَنْ نَافِعِ بْنِ عَيَّاشٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يُحَلِّقَ حَبِيبَهُ حَلْقَةً مِنْ نَارٍ فَلْيُحَلِّقْهُ حَلْقَةً مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُطَوِّقَ حَبِيبَهُ طَوْقًا مِنْ نَارٍ فَلْيُطَوِّقْهُ طَوْقًا مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُسَوِّرَ حَبِيبَهُ سِوَارًا مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ سِوَارًا مِنْ ذَهَبٍ وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ فَالْعَبُوا بِهَا رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

தனது பிரியமானவருக்கு நெருப்பால் ஆன வளையத்தை ஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன வளையத்தை அவருக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவருக்கு நெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன மாலையை அவருக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவருக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவருக்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­) அவர்கள்
நூல் : அபூதாவுத் (3698)

தங்க நகைகள் பெண்களுக்கும் ஹராம் என்பதற்கு எதிர்தரப்பினர் வைக்கும் முக்கியமான ஆதாரம் இதுவாகும். இந்த ஹதீஸை தவறாகப் புரிந்து தவறான முடிவை எடுத்துள்ளனர்.

பெண்கள் தங்கம் அணிவதை அனுமதிக்கின்ற மேலே நாம் சுட்டிக்காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு தவறான வியாக்கியானங்களை இவர்கள் தருவதற்கு இந்த ஹதீஸைப் பற்றி சரியான நிலைபாட்டை எடுக்காததே காரணம்.

இந்த செய்தி பலவீனமானது
இந்த செய்தியில் மூன்றாவது அறிவிப்பாளராக அசீத் பின் அபீ அசீத் அல்பர்ராத் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் நம்பகமானவர் என்று முடிவு செய்வதற்கு ஏற்கத்தகுந்த இமாம்களின் கூற்று எதுவும் இல்லை.

இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் இவரை நம்பகமானவர்களின் பட்டிய­ல் கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் அறிவிப்பாளர்களை நம்பகமானவர்கள் என்று முடிவு செய்வதில் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவரது கூற்றை நாம் எடுக்க முடியாது.
மேலும் இந்த ஹதீஸில் பெண்களைப் பற்றி பேசப்படவே இல்லை. இதில் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் ஆண்பாலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நமது விளக்கம்

பொதுவாக மார்க்கத்தில் ஆண்களை நோக்கிச் சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் பெண்களுக்கும் பொருந்தும். இதை அடிப்படையாக வைத்து மேலே உள்ள செய்தி ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்பதால் ஆண்களைப் போன்று பெண்களும் தங்கம் அணிவது கூடாது என்று வாதிடுவது சரியல்ல.

ஏனென்றால் மார்க்கத்தில் பெரும்பாலன விஷயங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரேமாதிரியாகவே அமைந்துள்ளன. என்றாலும் சில விஷயங்களில் இருபாலருக்கும் தனித்தனியான சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக பெண்கள் காவிநிற ஆடையை அணியலாம். ஆனால் ஆண்கள் அணியக்கூடாது. ஆண்கள் ஜும்ஆத் தொழுகைக்கு வருவது கட்டாயம். ஆனால் பெண்களுக்கு இது கடமையில்லை.

தங்கத்தைப் பொறுத்தவரை நபி (ஸல்) அவர்கள் ஆண்களுக்கு கூடாதென்றும் பெண்களுக்கு அனுமதி என்றும் வேறுபட்ட சட்டங்களை கூறியிருக்கிறார்கள். இதற்கான ஆதாரம் முன்பே சென்றுவிட்டது. எனவே இவ்வாறு பிரித்து சட்டங்கள் கூறப்பட்டிருக்கும் போது ஒரு பொதுவான செய்தியை கொண்டு வந்து இது பெண்களையும் குறிக்கும் என்று வாதிடுவது தவறாகும்.

இந்த செய்தியில் பிரியமானவர் என்ற சொல்லுக்கு ஹபீப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்பாலாகும். இந்தப் பொருளுக்கு நிகரான பெண்பால் வார்த்தை ஹபீபா என்பதாகும். இந்த செய்தியில் பெண்கள் நாடப்பட்டிருந்தால் ஹபீபா என்ற வார்த்தை கூறப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு கூறப்படாமல் ஆண்பாலைக் குறிக்கும் ஹபீப் என்ற வார்த்தையே கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த ஹதீஸ் சரியானது என்று வைத்துக்கொண்டால் கூட ஆண்கள் தங்கம் அணியக்கூடாது என்றைக்கருத்தைத் தாண்டி வேறு எதையும் இதை வைத்து வாதிட முடியாது.

தவறான விளக்கம்

தங்கமும் பட்டும் ஆண்களுக்கு மட்டும் விலக்கப்பட்டது. பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்று கூறும் ஆதாரப்பூர்வமான செய்தியையும் மேலுள்ள பலவீனமான செய்தியையும் இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இந்த பலவீனமான செய்தி பெண்களைக் குறிக்கின்றது என்று இவர்கள் வ­ந்து வாதம் செய்வதால் இந்த ஆதாரப்பூர்வமான செய்தியுடன் இவர்கள் முரண்படுகின்ற நிலை வருகிறது.

ஆனால் அந்த பலவீனமான செய்திக்கு நாம் அளித்த விளக்கம் இந்த ஆதாரப்பூர்வமான செய்தியுடன் முரண்படாமல் அதன் கருத்தையே இதுவும் கூறுகின்ற இணக்கமான நிலை ஏற்படுகிறது.

இவர்களின் தவறான புரிதலால் ஏற்பட்ட இந்த முரண்பாட்டை நீக்குவதற்காக அந்த ஆதாரப்பூர்வமான செய்திக்கு தவறான விளக்கத்தைத் தருகிறார்கள்.
அது என்னவென்றால் இந்த செய்தியில் காப்பு வளையல் கழுத்து மாலை ஆகியவை ஹராம் என்று கூறப்பட்டிருப்பதால் இந்த செய்தி வளைய வடிவில் உள்ள தங்கம் தான் ஹராம் என்றக் கருத்தைத் தருகிறது. பெண்களுக்கு தங்கத்தை அனுமதிக்கின்ற ஹதீஸில் சொல்லப்பட்ட தங்கம் என்பது வளைய வடிவத்தில் இல்லாத தங்கமாகும்.

எனவே வளைய வடிவத்தில் உள்ள தங்கம் ஆகுமானது. வளையமாக இல்லாமல் செவ்வகமாகவோ சதுரமாகவோ முக்கோணமாகவே ஒரு கோடுபோன்றோ தங்கம் இருந்தால் அந்தத் தங்கத்தை உபயோகிப்பது தவறில்லை. இவ்வாறு குழப்பமான ஒரு விளக்கத்தைக் கூறி இவ்விரண்டு செய்திகளையும் தவறான முறையில் இணைக்க நாடுகிறார்கள்.

நமது விளக்கம்

இரண்டு ஆதாரப்பூர்வமான செய்திகள் முரண்பட்டால் தான் அவ்விரண்டிற்கு இடையில் இணைத்து விளக்கம் கூறும் முயற்சியில் இறங்க வேண்டும். ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் ஒரு பலவீனமான செய்தியும் முரண்பட்டால் இங்கு இணைத்து விளக்கம் கூற வேண்டிய அவசியம் இல்லை. சரியான செய்தி கூறும் கருத்தை ஏற்றுவிட்டு பலவீனமான செய்தியை விட்டுவிட வேண்டும்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது மேலுள்ள செய்தி பலவீனம் என்பதால் அதை ஒரு பொருட்டாக நாம் எடுக்க வேண்டியதில்லை. ஒரு பேச்சிற்கு அதை ஏற்றால் கூட முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்வதற்கான விளக்கத்தை நாம் முன்பே கூறியிருக்கின்றோம்.

வளைய வடிவில் உள்ள தங்கம் தான் ஹராம் என இவர்கள் கூறுகின்ற இந்த விளக்கம் பல சரியான ஆதாரங்களுக்கு முரண்படுவதுடன் இவர்கள் வைத்த ஆதாரங்களுடன் கூட பொருந்திப்போக மறுக்கிறது.

மற்ற பெண்களுக்கு நபியவர்கள் வழங்கிய அனுமதி என்றத் தலைப்பில் பெண்கள் தங்கம் அணியலாம் என்பதற்கு ஐந்து ஆதாரங்களைக் குறிப்பிட்டுள்ளோம். இந்த ஐந்து ஆதாரங்களும் இவர்களது இவ்விளக்கம் தவறு என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இதி­ருந்து நமக்கு விளங்குகிறது.

யமன் நாட்டைச் சார்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்க காப்புகள் இருந்தது. இக்காப்புகள் வட்ட வடிவமானவை. வட்ட வடிவத்தில் தங்கம் அணிவது கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வட்டமாக இருப்பதை கண்ணால் நபி (ஸல்) அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக்கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

பெண்கள் வட்ட வடிவத்தில் தங்கம் அணியக்கூடாதென்றால் வட்ட வடிவத்தில் இருந்த தங்க மோதிரத்தை தனது பேத்திக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்திருக்கமாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக்கொடுத்திருப்பது தங்கம் முழுவதும் பெண்களுக்கு ஹலால் தான். இதில் வடிவம் ஒரு பிரச்சனையில்லை என்பதையே காட்டுகிறது.

பனூ இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தங்க மோதிரத்தை அணிந்தாள் என்று நபி (ஸல்) அவர்கள் முன்னால் நடந்த சம்பவத்தை கூறுகிறார்கள். தங்கம் வளையமாக இருந்தால் எப்பிரச்சனையும் இல்லை என்பதை இதிலும் உணரமுடிகிறது.

ஏன்? இவர்கள் வைக்கும் ஆதாரங்களில் முதலாவதாக நாம் எடுத்துகாட்டிய உம்மு சலமா (ர­) அவர்கள் அறிவிப்பதாக வரும் ஹதீஸிலும் இரண்டாவதாக அபூஹுரைரா (ர­) அவர்கள் அறிவிப்பதாக வரும் ஹதீஸிலும் தங்கத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பிறகு அதற்கு மாற்று வழியாக வெள்ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறப்படுகிறது.

இவர்கள் கூறுவது போல் வட்டமில்லாத தங்கத்தை பெண்கள் அணியலாம் என்றால் அது கூறப்படவேண்டிய இடம் இது தான். ஆனால் இவர்கள் சரிகானும் பலவீனமான ஹதீஸ்கள் கூட இவர்கள் தரும் இவ்விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை விளங்கலாம்.

இவர்கள் கூறுகின்ற இவ்விளக்கத்தை கவனிக்கும் போது இது அறிவற்ற வாதம் என்பதை உணரலாம். வட்ட வடிவத்தில் உள்ள தங்கம் கூடாது. மற்ற வடிவத்தில் உள்ள தங்கம் கூடும் என்று கூறினால் தங்கம் ஆகுமானது தான். வடிவம் ஆகுமானதல்ல என்றக் கருத்து வருகிறது. எனவே வடிவம் தான் இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.

தங்கத்தில் இவர்கள் தடைசெய்கின்ற வடிவம் வெள்ளியில் இருந்தால் அதை இவர்கள் அனுமதிக்கிறார்கள். தடைசெய்வதில்லை. இந்தத் தடுமாற்றம் ஹலால் ஹராம் சம்பந்தமான விஷயத்தில் வந்திருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

எதிர் கருத்தில் உள்ளவர்கள் வைக்கும் மூன்றாவது ஆதாரம்
5050أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي زَيْدٌ عَنْ أَبِي سَلَّامٍ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ أَنَّ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُ قَالَ جَاءَتْ بِنْتُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا فَتَخٌ فَقَالَ كَذَا فِي كِتَابِ أَبِي أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْرِبُ يَدَهَا فَدَخَلَتْ عَلَى فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو إِلَيْهَا الَّذِي صَنَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْتَزَعَتْ فَاطِمَةُ سِلْسِلَةً فِي عُنُقِهَا مِنْ ذَهَبٍ وَقَالَتْ هَذِهِ أَهْدَاهَا إِلَيَّ أَبُو حَسَنٍ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالسِّلْسِلَةُ فِي يَدِهَا فَقَالَ يَا فَاطِمَةُ أَيَغُرُّكِ أَنْ يَقُولَ النَّاسُ ابْنَةُ رَسُولِ اللَّهِ وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ نَارٍ ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ فَأَرْسَلَتْ فَاطِمَةُ بِالسِّلْسِلَةِ إِلَى السُّوقِ فَبَاعَتْهَا وَاشْتَرَتْ بِثَمَنِهَا غُلَامًا وَقَالَ مَرَّةً عَبْدًا وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا فَأَعْتَقَتْهُ فَحُدِّثَ بِذَلِكَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْجَى فَاطِمَةَ مِنْ النَّارِ أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ سَلْمٍ الْبَلْخِيُّ قَالَ حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَّامٍ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ قَالَ جَاءَتْ بِنْتُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا فَتَخٌ مِنْ ذَهَبٍ أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ نَحْوَهُ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாக இருந்த ஸவ்பான் (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :
ஹுபைராவின் மகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது கையில் பெரிய வளையங்கள் இருந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையில் அடித்தார்கள். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளான ஃபாத்திமா (ர­) அவர்களிடம் வந்து தன்னிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்துகொண்ட விஷயத்தை முறையிட்டார். ஃபாத்திமா (ர­) அவர்கள் தனது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கி­யை கழற்றி இது ஹசனுடைய தந்தை(யும் எனது கணவருமான அலீ (ர­) அவர்கள்) எனக்கு அன்பளிப்பாக வழங்கியதாகும் என்று கூறினார்கள். அவர்களது கையில் அச்சங்கி­ இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே வந்தார்கள். ஃபாத்திமாவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் கையில் நெருப்பால் ஆன சங்கி­ உள்ளது என மக்கள் கூறிக்கொள்வது உனக்கு மகிழ்ச்சியைத் தருமா? என்று கேட்டுவிட்டு உட்காராமல் வெளியே சென்றுவிட்டார்கள். எனவே ஃபாத்திமா (ர­) அவர்கள் அச்சங்கி­யை கடைத்தெருவுக்கு கொடுத்தனுப்பி விற்றுவிட்டு அதன் கிரயத்தில் ஒரு அடிமையை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்ப்பட்ட போது நரகத்தி­ருந்து ஃபாத்திமாவை காப்பாற்றிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் என்று கூறினார்கள்.
நூல் : நஸாயீ (5050)

இந்த செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இது சரியான செய்தியாகும். எதிர்கருத்தில் உள்ளவர்கள் வைக்கும் ஆதாரங்களில் இது மட்டுமே சரியான செய்தியாக இருக்கிறது.

ஹுபைராவின் மகளுடைய கையில் தங்க வளையல்கள் கிடந்திருக்கின்றது. இவரது கையை நபி (ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள் எனவே பெண்கள் தங்கம் அணியக்கூடாது என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது என் எதிர் கருத்தில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ஃபாத்திமா (ர­) அவர்களின் கையில் தங்கச் சங்கி­ இருந்த போது அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் நெருப்பால் ஆனச் சங்கி­ என்று குறிப்பிட்டிருப்பதாலும் தங்க ஆபரணங்களை பெண்கள் அணியக்கூடாது என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.

நமது விளக்கம்

பெண்கள் வளைய வடிவில் தங்க நகைகளை அணியக்கூடாது என்பதே இவர்களின் வாதம். வேறு வடிவில் அணியலாம் என்பதும் அணியாமல் அதை வைத்துக்கொள்ளலாம் என்பதும் இவர்களின் நம்பிக்கையாகும்.

ஆனால் மேற்கண்ட செய்தி தங்கம் அணியலாமா? அணியக்கூடாதா? என்ற விஷயத்தைப் பற்றி பேசவில்லை. இதை நன்கு கவனித்தால் தங்கம் அணிவதென்ன? அதை வைத்துக்கொள்வதே கூடாது என்ற கருத்தையே இது பிரதிப­க்கின்றது.

ஹுபைராவின் மகளுடைய கையில் நபி (ஸல்) அவர்கள் அடித்தார்கள் என்று தான் ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கிறது. எதற்கு அடித்தார்கள் என்றக் காரணம் சொல்லப்படவில்லை.

எதிர்கருத்தில் உள்ளவர்கள் தங்களது கருத்தில் இருந்து கொண்டு இந்த செய்தியை அனுகுவதால் நபி (ஸல்) அவர்கள் அடித்ததற்குக் காரணம் பெண்கள் தங்கம் அணியக்கூடாது என்பது தான் என்று புரிகிறார்கள். ஆனால் இது தான் காரணம் என்று இந்த ஹதீஸில் சொல்லப்படவில்லை.

தங்கம் அணியக்கூடாது என்பதற்காக அடித்தார்களா? தங்கத்தை வைத்திருக்கவே கூடாது என்பதற்காக அடித்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக அடித்தார்களா? இவற்றில் எது சரியானக் காரணம் என்பதை அறிந்தால் தான் இந்த செய்தி எதை தடைசெய்கிறது என்பதை சரியாக உணர முடியும்.
இந்த ஹதீஸின் மீதமுள்ள தொடர்ச்சியை உற்று நோக்கினால் தங்கத்தை வைத்திருப்பதே கூடாது என்ற காரணத்திற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் அடித்தார்கள் என்பதை உணரலாம்.

ஃபாத்திமா (ர­) அவர்கள் தங்கச் சங்கி­யை அணிந்திருக்கும் போது அது நெருப்பால் ஆனச் சங்கி­ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுக்கவில்லை. ஃபாத்திமா (ர­) அவர்கள் அச்சங்கி­யை கழுத்தி­ருந்து கழற்றி கையில் வைத்துக்கொண்டிருந்த போது தான் இவ்வாசகத்தை நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே தங்கத்தை சேமித்து வைக்கக்கூடாது என்ற கருத்தையே இந்த செய்தி கூறுகிறது.

நபியவர்கள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்த உடன் ஃபாத்திமா (ர­) அவர்கள் அதை விற்று ஒரு அடிமையை விலைக்கு வாங்கி விடுதலை செய்கிறார்கள். இதுவும் தங்கம் வைத்துக்கொள்வதைத் தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதை வலுப்படுத்துகின்றது.

தங்கத்தை அணியாமல் வைத்துக்கொள்வது கூடும் என்றால் தனது கணவன் தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த அந்த ஆபரணத்தை ஃபாத்திமா (ர­) அவர்கள் விற்றிருக்கமாட்டார்கள்.

தங்கத்தை விற்று அடிமையை விடுதலை செய்த விஷயம் நபியவர்களுக்கு எட்டும் போது அல்லாஹ் நரகத்தி­ருந்து ஃபாத்திமாவை காப்பாற்றிவிட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே தங்கத்தை வைத்திருந்தால் நரகம். அதை விற்று நற்காரியங்களுக்கு செலவு செய்துவிட்டால் நரகத்தி­ருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தையே இந்த செய்தி அழுத்தமாக கூறிக்கொண்டிருக்கிறது.
அப்படியானால் இந்த செய்தி எதிர்தரப்பினர் கூறும் கருத்திற்கு ஆதாரமாக முடியாது. மாறாக தங்கத்தை சேமிப்பதில் தவறில்லை என்ற அவர்களது நிலைபாட்டிற்கும் நமது நிலைபாட்டிற்கும் எதிராக அமைந்துள்ளது. எனவே இந்த நமது நிலைபாடு சரி என்றால் இச்செய்திக்குரிய சரியான விளக்கத்தைத் தருவது நம்மீதும் அவர்கள் மீதும் கடமை.
மாற்றப்பட்ட சட்டம்
தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக்கூடாது என்றத் தடை இஸ்லாத்தின் ஆரம்பக்காலகட்டத்தில் இருந்தது. பொருளுக்குரிய கடமையாக ஸகாத் கடமையாக்கப்பட்ட பிறகு ஸகாத்தை கொடுத்துவிட்டால் தங்கம் வெள்ளியை வைத்துக்கொள்ளலாம் என்ற அனுமதி தரப்பட்டது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِنْ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ(34)يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ(35)9

”அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ”இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் (9 : 34)

இந்த வசனம் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைக்கக்கூடாது என்றக் கருத்தைத் தருகின்றது. இதை மட்டும் வைத்து ஒருவர் முடிவெடுப்பாராயின் பொருளாதாரத்தை சேமிப்பது கூடாது என்ற முடிவுக்கே வருவார். எதிர் கருத்தில் உள்ளவர்கள் வைக்கும் மேற்கண்ட மூன்றாவது ஹதீஸும் இதேக் கருத்தையேத் தருகின்றது.

ஆனால் இவ்வசனம் கூறும் இந்த சட்டம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் இருந்தது. ஸகாத் கடமையாக்கப்பட்ட பிறகு இச்சட்டம் மாற்றப்பட்டு பொருளுக்குரிய ஸகாத்தை கொடுத்துவிட்டால் அதை சேமிப்பது தவறில்லை என்று அனுமதிதரப்பட்டது. இதை பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றது.
1404 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا أَبِي عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ أَعْرَابِيٌّ أَخْبِرْنِي عَنْ قَوْلِ اللَّهِ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا مَنْ كَنَزَهَا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا فَوَيْلٌ لَهُ إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلْأَمْوَالِ رواه البخاري
கா­ரித் பின் அஸ்லம் கூறுகிறார் :

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ர­ரி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, ”யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ…” என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்’ எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ர­ரி) அவர்கள், “”யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமரி­ருக்கின்றாரோ அவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் சுத்தீகரிக்கக் கூடியதாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்றார்கள்.
புகாரி (1404)

1417حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا غَيْلَانُ عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ قَالَ كَبُرَ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا أُفَرِّجُ عَنْكُمْ فَانْطَلَقَ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الْآيَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضْ الزَّكَاةَ إِلَّا لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ فَكَبَّرَ عُمَرُ ثُمَّ قَالَ لَهُ أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ الْمَرْأَةُ الصَّالِحَةُ إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ رواه أبو داود

இப்னு அப்பாஸ் (ர­) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! (9 : 34)

இந்த வசனம் இறங்கிய உடன் இது முஸ்­ம்களுக்கு பெரும் பிரச்சனையாகிவிட்டது. உங்கள் பிரச்சனையை நான் அகற்றுகிறேன் என்று கூறி உமர் (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இறைத்தூதர் அவர்களே இவ்வசனம் உங்கள் தோழர்களுக்கு பெரும் பிரச்சனையாகிவிட்டது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் செல்வங்களில் எஞ்சி இருப்பதை தூய்மைப்படுத்துவதற்காகவேத் தவிர அல்லாஹ் ஸகாத்தை கடமையாக்கவில்லை.

உங்களுக்குப் பின் வருபவர்களுக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் வாரிசுரிமை சட்டத்தையே அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான். (எனவே ஸகாத் கொடுத்துவிட்டால் தங்கம் வெள்ளியை சேர்ப்பது குற்றமில்லை) என்று கூறினார்கள். உடனே உமர் (ர­) அவர்கள் இறைவன் மிகப்பெரியன் என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (1417)

எனவே மேற்கண்ட ஃபாத்திமா (ர­) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதை உணரலாம்.

மேற்கண்ட வசனத்திலும் ஃபாத்திமா (ர­) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸிலும் சொல்லப்பட்ட அதே எச்சரிக்கைகள் பிற்காலத்தில் ஸகாத் கொடுக்காதவர்கள் விஷயத்தில் மட்டும் கூறப்பட்டது. இதை பின்வரும் செய்திகள் உணர்த்துகின்றன.
ஸகாத் கொடுக்காவிட்டாலே தங்கம் வெள்ளி நெருப்பாக மாறும்

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ர­) அறிவிக்கிறார்கள் :
யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தனது மகளுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தால் ஆன தடிமனான இரு காப்புகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் இதற்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவிட்டாயா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் இல்லை என்று கூறினார். இவ்விரண்டு காப்புகளுக்கு பதிலாக மறுமை நாளில் நெருப்பால் ஆன இரு காப்புகளை அல்லாஹ் உனக்கு அனுவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே அப்பெண் அவ்விரண்டு காப்புகளையும் கழற்றி நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்துவிட்டு இவ்விரண்டும் சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விற்கு உரியதாகும். மேலும் அவனது தூதருக்கும் உரியாதாகும் என்று கூறினார்.
நஸயீ (2434)

ஸகாத்தை கொடுக்காவிட்டாலே மறுமையில் அந்த தங்கம் நெருப்பாக மாறும் என்று நபியவர்கள் இந்த செய்தியில் கூறியுள்ளார்கள்.
அபூஹுரைரா (ர­ரி) அவர்கள் கூறுகிறார்கள் :
1648و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْأُمَوِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ صَاحِبِ كَنْزٍ لَا يُؤَدِّي زَكَاتَهُ إِلَّا أُحْمِيَ عَلَيْهِ فِي نَارِ جَهَنَّمَ فَيُجْعَلُ صَفَائِحَ فَيُكْوَى بِهَا جَنْبَاهُ وَجَبِينُهُ حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَ عِبَادِهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ ثُمَّ يَرَى سَبِيلَهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ روه مسلم
”பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்­ம் (1803)

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) கூறுகிறார்கள் :
4. 1338حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الرَّازِيُّ حَدَّثَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ بْنِ طَارِقٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ أَنَّ مُحَمَّدَ بْنَ عَمْرِو بْنِ عَطَاءٍ أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ أَنَّهُ قَالَ دَخَلْنَا عَلَى عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى فِي يَدَيَّ فَتَخَاتٍ مِنْ وَرِقٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ فَقُلْتُ صَنَعْتُهُنَّ أَتَزَيَّنُ لَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَتُؤَدِّينَ زَكَاتَهُنَّ قُلْتُ لَا أَوْ مَا شَاءَ اللَّهُ قَالَ هُوَ حَسْبُكِ مِنْ النَّارِ رواه أبو داود
நபி (ஸல்) அவர்களின் துனைவியரான ஆயிஷா (ர­) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்த போது எனது கைகளில் வெள்ளி மோதிரங்கள் இருப்பதைக் கண்டு ஆயிஷாவே இதுவென்ன? என்று கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே உங்களுக்கு முன்னால் நான் அலங்காரத்துடன் காட்சி தருவதற்காக இவற்றை செய்துள்ளேன் என்று கூறினேன். இவற்றுக்கான ஸகாத்தை நிறைவேற்றிவிட்டாயா? என்று கேட்டார்கள். அதற்கு நான் இல்லை என்றோ அல்லது அல்லாஹ் (இன்னும்) நாடவில்லை என்றோ கூறினேன். நரகத்திற்கு(ச் செல்ல) இதுவே உனக்குப் போதுமானதாகும் என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (1338)

எனவே ஆதாரங்களை வைத்துப்பார்க்கும் போது தங்கம் அணிவது ஆண்களுக்கு மட்டுமே ஹராம். தங்கம் வளைய வடிவில் இருந்தாலும் வேறுவடிவில் இருந்தாலும் அதை பெண்கள் அணிவது தவறில்லை. அதற்குரிய ஸகாத்தை தவறாமல் கொடுத்துவிட வேண்டும் என்ற நிலைபாடே சரி என்பதை சந்தேக மற உணர முடிகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.