மார்க்கக் கல்வி!

எந்தக் கல்வி கற்க வேண்டும், எந்தக் கல்வி கற்கக்கூடாது, என்று மார்க்கத்தில் எத்தகைய கட்டுப்பாடும் இல்லை. இறை நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய கல்வியைக் கற்கவேண்டும். இறைவசனம் – இறைத் தூதர்(ஸல்) அவர்கள் விதித்த மார்க்க வரம்பை மீறாத தன்மையுடைய கல்வியைக் கற்க வேண்டும், மார்க்கத்திற்கு முரணாக எக்கல்வியாலும், அதனைக் கற்கக்கூடாது.

“இறைவா பயனளிக்காத கல்வியைவிட்டு உன்பால் காவல் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.

அறிவிப்பாளர் : ஜைதுப்னுஅர்கம்(ரழி) நூல் : முஸ்லிம்

கல்விகளில் மார்க்கக் கல்வி முதலிடம் வகிக்கிறது. தூய இஸ்லாத்தின் ஆதாரமாக இருப்பது, திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளுமே, எனவே ஒவ்வொரு முஸ்லிமான, ஆணும், பெண்ணும், திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதி, விளங்கி அதன்படி செயல்படுவது கட்டாயக் கடமை. திருக்குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியது. இது மனித உள்ளத்துக்கு நிம்மதியையும், இம்மை மறுமை ஈடேற்றத்தையும் கொடுக்கக்கூடியது. இதனையே இறைவனும் “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து நல்லுபதேசமும், மனித உள்ளத்துக்கு நன் மருந்தும், நம்பியவர்களுக்கோர் நல்வழியும், ரஹ்மத்தும், உங்களிடம் வந்துவிட்டது, எனத் தெளிவுபடுத்துகின்றான். (அல்குர்ஆன் 10:57)

இதனை வலியுறுத்தி அல்லாஹ்வின் திருத்தூதர்(ஸல்) அவர்களும் “திருக்குர்ஆனை நியமமாக ஓதுவதுடன், அதன் கருத்துக்களின் பக்கமும் சிந்தனையைச் செலுத்துங்கள். ஏனெனில், அது மனித உள்ளங்களிலிருந்து விடுதலை பெறுவதில், கட்டிவைக்கப்பட்டுள்ள கயிற்றைத் தானாகவே அவிழ்த்துக் கொண்ட கால்நடைகளைப் பார்க்கிலும் வேகமானதாக இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமுஸல்அஷ்அரி(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

மேலும் சொன்னார்கள் குர்ஆனை உடையவருக்கு உதாரணம் கட்டப்பட்ட ஒட்டகத்தின், பாகனைப் போலாகும். அவன் அதன் மீது கவனம் செலுத்தி வரும்வரை அவனிடம் அது நிலைத்திருக்கும். அவனிடம் கவனம் மாறும் பொழுது அது தானாகவே கட்டைத்தளர்த்திக் கொண்டு தப்பிப்போய்விட இடமளித்துவிடும். அது போன்று குர்ஆனை உடையவரும், அதன் மீது கவனத்தைச் செலுத்தி வரும்வரை, அது அவரிடம் இடம் பெற்றிருக்கும். அவரின் கவனம் மாறும் பொழுது அதுவும் தானாகவே அகன்றுவிட இடமளிப்பது போன்றதாகும்”. அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

வல்ல அல்லாஹ்வும், “எனது உபதேசத்தைப் புறக்கணிப்போனுக்கு நெருக்கடியான வாழ்க்கையுண்டு” என சூரத்துல் முர்ஸலாத்தில் பல இடங்களில் எச்சரிக்கிறான்.

உத்தம சஹாபாக்கள்(ரழி) நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தின்படி, சிறிதளவு கூட தவறாதபடி நடந்து வந்தனர். எனவே உலகை ஆண்ட பெரிய மன்னர்களுக்கெல்லாம் கிடைக்காத மாபெரும் சிறப்புகள் அவர்களுக்குக் கிடைத்தன. இன்றும் போற்றப்படுகிறார்கள்; என்றும் போற்றப்படுவார்கள். வல்ல அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக் கொண்டான். ஆனால் இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்கள் நிலையோ வேதனைக்குரியது. நமது உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களது வழி முறைகளை முழுமையாகப் பின்பற்றாதவரை நமது சகோதர, சகோதரிகளின் நிலை இவ்வாறுதான் இருந்து கொண்டிருக்கும்.

முஸ்லிம் பொதுமக்களையும், குறிப்பாக இளைஞர்களையும் இஸ்லாமிய கொள்கைகளிலிருந்து திசை திருப்புவதற்காக சிலர் பல ஆண்டுகளாக திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். இவை இறையச்சம் இன்மையால் ஏற்படுவனவே. தீயவர்களின் சூழ்ச்சிமிகு வலையில் சிக்காமலிருக்க, அல்லாஹ் ரசூல் கட்டளைகளுக்கு மாற்றமாக முஸ்லிம்கள் செயல்படுவதைத் தடுக்க கேடயமாக இருப்பது, திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களது உண்மை ஹதீதுகளுமேயாகும்.

மனித அபிப்பிராயங்கள் கலக்காத மாசு மறுவற்ற இவ்விரண்டுமே இரு உலக ஈடேற்றத்திற்கு வழிகோலும், நபி(ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களின் அடையாளங்களைப் பற்றிக் கூறும் பொழுது “பேசினால் பொய்யே பேசுவான்” அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் மோசம் செய்து விடுவான்.” வாக்களித்துவிடடு மாறு செய்வான்” எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்.

“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள், உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:42)

மேலே கூறிய இறை வசனத்தின் கூற்றையும், இறை தூதரின் எச்சரிக்கையையும் தூக்கி எறிந்து விட்டு, கண்டும் காணாதவர்கள் போல் உலாவரும் சில போலிகளின் நிலையைக் காணும் போது இவர்களின் மூலதனம் மக்களின் மார்க்க அறிவின்மையே என்பது தெளிவாகிறது.

இந்த வெளி வேஷதாரிகள், மேடைப் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும், குர்ஆன் ஹதீஸ் வெளிச்சமில்லாத பச்சைப் பொய்யையே பெரும்பாலும் பேசியும், எழுதியும் வருகிறார்கள். வல்ல அல்லாஹ்வால் அமானிதமாக கொடுக்கப்பட்ட மார்க்கக் கல்வியை உள்ளது உள்ளபடி உரிய முறையில் ஒப்படைப்பதில்லை. அதிலும் கூட்டல், கழித்தல் செய்து , ஒட்டியும் , வெட்டியும் மோசடி செய்கிறார்கள். “குர்ஆன் ஹதீஸ்” தான் மார்க்கம், இதைத்தான் நாங்கள் -ரசூல் எளிமையாக புரிய வைத்த மார்க்கத்தை, கஷ்டம் உங்களால் புரிய முடியாது என்று நயமாகச் சொல்லி, கண்ணியமிக்க நான்கு இமாம்கள் பேரால் இவர்களே பிற்காலத்தில் எழுதிக் கொண்ட கட்டுக்கதைகளை, குர்ஆன் ஹதீஸுக்கு முரணானவைகளை மார்க்கமாக ஆக்கி போதிக்கிறார்கள். அதோடு விட்டார்களா? இந் நயவஞ்சகர்கள்! அல்லாஹ்வையும், ரசூலையும் பின்பற்றினால் தான் ஈடேற்றம் என்று திருமறையும் ஹதீஸ்களும் பறை சாற்றிக் கொண்டிருக்க, கண்ணியமிக்க நான்கு இமாம்களும் கண்மூடித்தனமாக எங்களைப் பின்பற்றாதீர்கள் என்று சொல்லிய சொல்லையும் மீறி, முஸ்லீம்கள் நான்கு இமாம்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாசூக்காக வலைவீசி பெருன்பான்மை முஸ்லிம்களைப் பிரித்து விட்டார்கள்.நீதி வழங்கும் சட்டத்தையாவது ஒன்றாக வைத்தார்களா? ஈவு இறக்கமில்லாதவர்கள். அதிலும் நான்கு சட்டங்கள். இதோடு மட்டுமின்றி தங்களது வயிற்றுப் பிரச்சினைகளையும் நிறைவு செய்யும் நோக்கத்துடன் மீலாது, மவ்லூது, கத்தம், பாத்தியா, தச்சணை, கறிசோறு, பிரியாணி, கேக், மூரீது வியாபாரம், தாயத்து, தட்டு , மந்திர தந்திர பால்கிதாபு வியாபாரங்கள் கந்தூரி, கூடு, கொடியேற்றம் முதலியவற்றையும் மிகச் சிறப்பாக இஸ்லாத்தின் பேரால் அரங்கேற்றம் செய்கிறார்கள். நம்மிடமே காசு பறித்துக் கொண்டு நம்மையே நரகத்தில் தள்ள எண்ணி விட்டார்களே! என்னே! இவர்களது இழி செயல்!

இவர்கள் இப்படியெல்லாம் நம்மை ஏமாற்ற முக்கிய காரணம், நாம் குர்ஆன் ஹதீதை விளங்க முயற்சி செய்யாமல் இருப்பதே! சடங்காக முழு குர்ஆனையும் ஓதி வருகிறொம்.

நபி(ஸல்) அவர்கள் இறுதி நாளுக்குச் சமீபமாகத் தோன்றும். இறையச்சமின்மை குறித்து விளக்கும் போது, உண்மை மார்க்கக் கல்வி உலகிலிருந்து எடுபட்டுப் போய்விடும்” என்று கூறினார்கள். அதைக் கேட்ட ஜியாத் பின் லுபைத் அன்ஸார்(ரழி) அவர்கள் “யாரசூலுல்லாஹ் நாங்களும் குர்ஆனை ஓதுகிறோம். எங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் கற்பிக்கிறோம், நம்மிடம் கற்றவர்களும் பிற சகோதர சகோதரிகளுக்குப் போதிப்பார்கள் இம்மாதிரி காலம், காலமாகத் தொடராக நடந்து வந்தால் எப்படி இறைவனின் போதனைகள், உலகைவிட்டு அகலும்?” எனக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஓ ஜியாதே யூதர்களும், கிறிஸ்தவர்களும் முறையே தவ்ராத்தையும், இஞ்ஜீலையும் ஓதவில்லையா? (அதன்படி செயல்கள் இல்லை) அறிவிப்பவர் : ஜியாதுப்னுலுபைத்(ரழி) நூல்கள் : திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்

இவ்வாறு தான் பின்வரும் மக்களின் நிலையாகிவிடும் என்பதை நபி(ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள்.

உபதேசம் புரிதல், கல்வியைக் கற்றல் ஆகியவை மனிதன் நேர்வழியடைந்து, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பொருத்தமான முறையில் நடப்பதற்குத்தான்! வெறும் உலகப்புகழ் பெறுவதற்காக அல்ல. எந்தக் கல்வியின் மூலம் அதே கல்வியின் மூலம் உலகப் புகழையும், செல்வங்களையும் அடைய முற்பட்டு மார்க்கக் கல்வி கற்கும் மனிதன் சுவர்க்கம் செல்ல மாட்டான். அதுமட்டுமல்ல, கியாமத் நாளையில் சுவர்க்கத்தின் வாடை கூட அவனது மூக்கினுள் ஏறாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா, அஹ்மத்.

மேற்கூறிய நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை உணர்ந்து, இதுவரை அறிந்தும், அறியாமலும் தவறு செய்தவர்கள் அனைவரும் தவறை உணர்ந்து திருந்தி செயல்பட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறொம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவரும் மார்க்கம் நிலை நிறுத்தப்பட்ட குர்ஆனையும், ஹதீஸையும் முறைப்படி விளங்கிக் கற்று அதன்படி செயல்பட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வல்ல அல்லாஹ் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இம்மை மறுமை வெற்றிக்கு வழி வகை செய்யும் மார்க்கக் கல்வியாகிய குர்ஆன், ஹதீஸ் அறிவைத் தந்தருள்வானாக! ஆமீன்.

– அபூ உவைஸ்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.