‘தாயத்து’ அது, ஒரு ஆபத்து!

இன்று முஸ்லிம் சமுதாய பாமரர்களைச் செல்லரித்துக் கொண்டிருக்கும் பல ஷிர்க்கான சம்பிரதாயங்களில் தாயத்தும் ஒன்னறு. இன்று சிலர் தங்களின் தொப்பையை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் ஒரு குறுக்கு வழி தான் தாயத்து, தகடு, கயிறு முடியுதல் போன்ற பித்தலாட்டச் செயல்கள். இச்செயல்கள் யாவும் அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல்களாகும். இச்செயல்களை குர்ஆனும், ஹதீசும் வன்மையாகக் கண்டிருக்கின்றன. அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) நீர் சொல்வீராக! அதிகாலையின் ரப்பிடம் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும், இருள் பரவும் போது ஏற்படும் (இரவின்) தீங்கை விட்டும், இன்னும் முடிச்சகளில் மந்திரித்து ஊதக் கூடிய பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது உண்டாகும் நீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்) (அத்தியாயம் :113)

சஹாபி அப்துல்லாஹ்பின் மஸ்ஊது(ரழி) அவர்கள் ஒரு நாள் மனைவி ஸைனப்(ரழி) அவர்களின் கழுத்தில் ஒரு கயிறு தொங்குவதைக் கண்டு, “இது என்ன கயிறு”? என்று கேட்டார்கள். அதற்கு “இது ஒரு முடிச்சக் போடப்பட்ட கயிறு” என்ற கூறினார்கள். உடனே அந்த கயிற்யை அப்துல்லாஹ்பின் மஸ்வூத் (ரழி) அவர்கள் அறுத்து எறிந்துவிட்டு என்னுடைய குடும்பத்தினர் இது போன்ற ஷிர்க்கை விட்டும் எச்சரிக்கையாக இருக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். “மந்திர வேலைகள் செய்வது, தாயத்துப் போடுவது, முடிச்சப் போடுவது இவை யாவும் ஷிாக்கான செயல்” என்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று அப்துல்லாஹ்பின் மஸ்வூத்(ரழி) கூறினார்கள்.

(ஆதாரம் : அபூதாவுது, ஹதீஸ் எண் 3883, மிஷ்காத்: பக்கம் 389)

“மந்திரிப்பதைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அது ஷைத்தானுடைய வேலை என்று கூறினார்கள்.

(அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஆதாரம் : அபுதாவூது, எண் 3878)

ஆயத்துக்களை தாயத்துக்களாக தொங்கவிடுவது ஷிர்க்காகும் என்று இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் சொன்னார்கள். (ஆதாரம் : ஜாமிஉல் உசூல் பாகம் 7, பக்கம் 576)

இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து தாயத்து போடுதல் தல்ஸமாத் வேலைகள் செய்வது எல்லாம் ஷிர்க்கான, இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட செயலாகும் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. எனவே அல்லாஹ், அவனது ரசூலுக்கு மாற்றமான இது போன்ற செயல்களை விட்டும் தவிர்ந்து குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை அமைத்து சுவர்க்கத்திற்கு தகுதியானவர்களாக உங்களை ஆக்கிக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகின்றேன்.

மெளலவி O.N. முஹம்மது பஷீர் மிஸ்பாஹி பாஜில் மன்பஈ

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.