திருமண பந்தல் கால் ஊன்றப் போகிறோம்! அவசியம் வாருங்கள்”

கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் முஸ்லிம் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் ‘பந்தல் கால் ஊன்றுதல்’ பக்தி சிரத்தையோடு நடை பெறுகிறது! அதாவது திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னதாக திருமண வீட்டார், ஊர்த் தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் “இத்தனை மணிக்கு பந்தல் கால் ஊன்றப் போகிறோம்! அவசியம் வாருங்கள்” என்று அழைப்பு விடுப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் ஊர் பெரியவர்கள் எல்லோரும் திருமண வீட்டிற்கு வந்து விடுவார்கள். அவர்களில் சிலரை கம்பீரமான தலைப்பாகைத் தோற்றத்தோடும் காணலாம்.

மேதகு ஆலிம்சா அவர்கள் அவசியம் போயாக வேண்டும். வந்தவர்களுக்கெல்லாம் தேனீர் அளித்து முடித்தபின், வீட்டுக்காரர் ஆலிம்சாவைப் பார்க்க, ஆலிம்சா நாட்டாண்மையைப் பார்க்க நாட்டாண்மையின் ‘சிக்னல்’ கிடைத்ததும் ஆலிம்சா வழக்கமாக “அல்பாத்திஹா” வை உரத்த குரலில் சொல்ல, துஆ ஓதி முடித்த பிறகு வீட்டு தலை வாசலின் முன்புறம் ஒரு குழியை வெட்டி அதில் சட்டத்தை ஊன்றுவார்கள். ஊர் பெரியவர்களெல்லாம் மிகுந்த பக்தியோடு அந்த சட்டத்தை (அல்லது மூங்கிலை) ஆளுக்கொரு கைக்கொடுத்து குழியில் இறக்கி மண் போட்டு ஊன்றி முடித்ததும், அங்கு தயாராக அரைத்து வைக்கப்பட்டிருக்கும் மஞ்சளை

ஒவ்வொருவரும் எடுத்து சட்டத்துக்கு தடவுவார்கள். அதிலும் கீழிருந்து மேல் நோக்கி தான் தடவ வேண்டும் என்பது கட்டாய விதிகளுள் ஒன்று.

பின்னர் வீட்டுக்காரர் ஒரு தட்டு கொண்டு வருவார். அதில் நூலில் கோர்க்கப்பட்ட மஞ்கள் துண்டங்களும், வெற்றிலைகளும் இருக்கும். அந்த மஞ்கள் வெற்றிலை மாலையை ஒரு பெரியவர் எடுத்து அந்த சட்டத்துக்கு சூட்டுவார். பின்னர் ஒரு தங்கச் சங்கிலியும் அந்த பந்தல் காலுக்கு அணிவிக்கப்படும்! பின்னர் சலாம் சொல்லி அனைவரும் புறப்பட்டு விடுவார்கள். ஓதிய பாத்திஹாவுக்குரிய “பலனோடு” மாண்புமிகு ஆலிம்சா அவர்களும் கிளம்பி விடுவார். இத்தனைக் கூத்துகளும் எதற்காக என்கிறீர்கள்! வெயிலுக்கு இளைப்பாற ஒரு பந்தல் போடத்தான். அதற்கு ஒரு வைபவம்! ஒரு பாத்திஹா! இதை விட அசிங்கம் சில ஊர்களில் திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு “ஷேவிங்” -சிரைப்பதற்குக் கூட ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திஹா ஓதித்தான் சிரைக்கிறார்கள்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய மெய்யான இஸ்லாத்தின் தூய வடிவத்தை மறந்து நாசகார ‘பித்அத்’களில் ஆழ்ந்திருக்கும் நமது சமுதாயம் விழிப்புறுவுது எந்நாள்?

– மெளலவி A. அலாவுதீன் பாக்கவி, ஆற்றங்கரை.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s