அல்லாஹ்வின் நல்லடியானாக வாழ்வது எப்படி என்பதை குர்ஆன் விளக்குகிறது…

மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67)

ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)  

இறைவன் தன் அடியார்கள் எப்படித் தன்னை வணங்கி வழிபட வேண்டும் என்று கோருகிறான் என்பதைப் குர்ஆன் விரிவாக விளக்குகிறது. தொழுகை, வணக்க வழிபாடு, கடமையாக்கப்பட்ட ஈகை, போன்றவற்றைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு குர்ஆன் பதில் அளிக்கிறது. இறை நம்பிக்கையாளருக்கு உரிய பண்பாடுகள் பற்றி மட்டும் கூறுவதோடல்லாமல், இறை நம்பிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டியவை, அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், ஆகிய யாவும் குர்ஆனில் விவரிக்கப்படுகின்றன. தன்னடக்கம், தியாகமனப்பான்மை, நேர்மை, நீதி, இரக்கம், சகிப்புத்தன்மை, உறுதி மற்றும் இவை போன்ற ஒழுக்கச் சிறப்பியல்புகள் இறைவனின் நல்லடியாளர்களிடம் அமைய வேண்டிய பண்புகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இறை நம்பிக்கையாளர்கள் இவற்றைக் தவிர்க்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.

இப்பிரபஞ்சத்தையும் மனிதனையும் இறைவன் ‘ஒன்றுமில்லாமை’ யிலிருந்து படைத்தான். உயிரினங்களில் மனிதன் குறிப்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறான். அவற்றுள் மிக முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தது ‘ஆன்மா’ ஆகும். இதுதான் மனிதனை உணர்வுடையனாக்குகிறது. மனிதனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானவை எனில் அவற்றை மனிதன் எண்ண ஆரம்பித்தால் அவனால் எண்ணி முடிக்க முடியாது, என்று இறைவன் அறிவிக்கின்றான். (அந்நஹல்:18). எனவே மனிதன் இந்தச் சலுகைகள் எல்லாம் தனக்கு வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் பிரதிபலனாக இறைவன் மனிதனிடம் கோருவது என்னவென்பதையும் ஆலோசித்து அறிய முற்பட வேண்டும்.

அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயனளிப்பவற்றை ஏற்றிக் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும், வறண்டு காய்ந்த பூமியை செழிப்படையச் செய்ய வானத்திலிருந்து இறைவன் பொழியச் செய்யும் மழையிலும், எல்லாவிதமான படைப்பினங்களையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்று வீசும் பல திசைகளிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் (நல்ல நோக்கங்கள் நிறைவேற உதவும்படி) நிலைபெற்றிருக்கச் செயதிருக்கச் செய்திருக்கும் கருமேகத்திலும் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக சான்றுகள் இருக்கின்றன. (2:164)

தான் நுகரும் எல்லாச் சலுகைகளும் இறைவனால் வழங்கப்பட்டவை என்பதை உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன் மனிதன். எனவே தான் இறைவனுக்கு நன்றியுள்ளவனாக விளங்கவேண்டும் என்பதை உணர்ந்தவனாக மனிதன் விளங்குகின்றான். ஆனாலும் அந்த நன்றியுணர்வு எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியமாட்டான். இதிலும் மனிதனுக்கு வழிகாட்டுகிறது குர்ஆன்.

குர்ஆனில் இறைவன், மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு காரியத்திற்கும் தன் அனுமதியைப் பெற வேண்டுமென்று கோருகிறான். மனிதனுடைய வாழ்வில் ஒவ்வொரு கணமும் இறைவனுடைய விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டுமேயல்லாது தன்னுடைய விருப்பத்திற்கும் இச்சைக்கும் ஏற்ப செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் தன் இச்சைக்கு அடிமையாகி விடுவான். ( 25:43)

தன் இச்சையை தன்னுடைய இறைவனாக எடுத்துக்கொண்டிருப்பவனை பார்த்தீருக்கிறீரா?

இறைவனின் இந்த எச்சரிக்கைக்குச் செவி சாய்த்து, இறை நம்பிக்கையாளர் தன்னுடைய வாழ்நாளில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை நிறைவேற்ற பலவழிகள் தோன்றும்போது, இறைவனின் திருப்தியைப் பெற்று தரும் வழிமுறைகளையே தேர்ந்தெடுப்பான்; அஃதொரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு கருத்தாகவோ மனப்பான்மையாகவோ இருந்தாலும் சரி.

இதன் விளைவாக, தன் இறைவனின் திருப்தியைப் பெறும்வகையில் தன் வாழ்நாளில் எல்லா நடவடிக்கைககளையும் மேற்கொள்ளும் இறைநம்பிக்கையாளன் என்றும் அழியாத பேறுகளை அடைய அருகதை உடையவனாகிறான். எனவே,மனிதன் இறைவனின் அடிமையாக இருப்பதன் மூலம் தனக்கே பலன் தேடிக் கொள்கிறான் என்பது தெளிவாகிறது. மனிதனுடைய வணக்க வழிபாடுகளும் நல்ல நடவடிக்கைகளும் எல்லாம் இறைவனுக்குத் தேவையே இல்லை. குர்ஆன் இதனை, அல்லாஹ் என்றுமே தேவைப்படாத வளமிக்கவன் (29:6)

-நன்றி, அந்நஜாத்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.