புர்கா அணிவது பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையா?

தடை என்றும் அதை காட்டுமிராண்டித்தனம் என்றேக் கூறி வருகின்றனர் ! யார் இதை அதிகமாகக் கூறுகின்றனர் ?
கண்ணியத்தைப் பேணக் கூடிய பொதுவான மக்கள் அல்ல, மாறாக பெண்களை மூலதனமாகக் கொண்டு தொழில் நடத்தும் கேளிக்கை நிருவனத்தார்கள் மட்டுமே பர்தா சம்மந்தமான சர்ச்சசைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகையாக கிளம்பினால் கூட அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள்.
பத்திரிகையாளர்கள்,
Ø  எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் தங்கள் பத்திரிகையின் முன்பக்கம், நடுப்பக்கம், கடைசிப்பக்கத்தில் கவர்ச்சி படங்களை இட்டு காசாக்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
தொலைகாட்சியாளர்கள்,
Ø  எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் சினிமா, சீரியல், தலுக்கு குலுக்கு நடணங்கள், மானாட மயிலாடப் போன்ற ( மயிர் கூச்செரியும்) இன்னும்பிற நிகழ்ச்சிகள் வரை ஆபாசங்களையும், அந்தரங்க சமாச்சாரங்களையும் அரங்கேற்றுவதற்கு கோடம்பாக்கம் வெறிச்சோடிப்போய் விட்டால் தங்களது தொலைகாட்சிகளை இயக்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
அழகிப் போட்டி நடத்தும் சேடிஷ்டுகள்.
Ø  எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் அழகிப் போட்டிகள் நடத்தி அதன் மூலம் தேர்தெடுக்கப்படும் அழகி(?)களை விளம்பரங்களில் நடிக்கவைத்தும், அரசியல் பிரமுகர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சப்ளை செய்து கோடிகளை உண்டாக்க முடியாத நிலை ஏற்படும்.
நட்சத்திர ஹோட்டல் குபேரர்கள்,
Ø  எல்லாப் பெண்களும் புர்காவே பாதுகாப்பு என்றுக் கருதி இஸ்லாமிய பர்தா சட்டத்திற்கு சென்று விட்டால் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்காக வருகை தரும் விஐபி, மற்றும் தொழில் அதிபர்களுக்கு மஸாஜ் செய்து விட்டும், பார்களில் ஊற்றிக் கொடுத்தும், பிரம்மாண்டமான அரங்குகளில் ஆடிப்பாடி மகிழ்வித்து கத்தை கத்தையாக கரன்சிகளை கரக்கச் செய்வதற்கு பெண்கள் கிடைக்கா விட்டால் நட்சத்திர அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்படும்.
அவ்வாறான ஒரு நிலை உருவானால் பெண்களை மூலதனமாகக் கொண்டு நடத்தப்படும் அவர்களது கேளிக்கை நிருவனங்களை அவர்களது குடும்பத்துப் பெண்களைக் கொண்டு தூக்கி நிருத்த முன் வர மாட்டார்கள். இந்த சேடிஷ்டுகள் ஊரான் பெற்றப்பிள்ளைகளைக் கொண்டு தான் அந்தரங்கங்களையும், ஆபாசங்களையும் கடைவிரித்து காசு பண்ணுவார்கள்.
அதனால் மேற்காணும் சதை வியாபாரிகளே அதிகபட்சம் பெண்களின் பாதுகாப்பு பர்தா சம்மந்தமான சர்ச்சைகள் உலகில் எங்காவது ஒரு மூளையில் புகைவதைக் கண்டால் வீறு கொண்டெழுந்து அதை ஊதி நெருப்பாக்கப் பார்ப்பார்கள்.
அதில் ஒன்று தான் சமீபத்திய விஜய் டிவி புர்கா அணிந்து பெண்கள் வெளியில் செல்வதை கொச்சைப் படுத்தும் விதமாக நடத்தவிருந்த நீயா ? நானா ? போட்டி சரியான தருணத்தில் தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போராட்டம் அறிவித்ததால் நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள்.
இன்னும் சில கடவுள் மறுப்பாளர்களும், இஸ்லாமிய விரோதிகளும் நடத்தும் ஊடகத்திலும், இனையத்திலும் பர்தா சம்மந்தமான சர்ச்சைகைள் எழும்போது இதுப்போன்ற போட்டோக்களை மட்டும் இட்டு மதவெறியையும், கடவுள் மறுப்பையும் வெளிப்படுத்தி குதூகலம் அடைவார்கள் ஹிஜாப் எங்கள் உரிமை எனறு வீதியில் இறங்கிப் போராடும் பெண்கள் முகம் திறந்த நிலையில் இருக்கிறது. இதுப் போன்ற போட்டோக்கள் எல்லாம் அவர்களுடைய மதவெறிப் பார்வையில் படாது உலகம் முழுவதிலும் முஸ்லிம் பெண்கள் இது மாதிரியே நடப்பதுப் போன்றும் சித்திரிப்பார்கள். குறுகிய வட்டத்திற்குள் முடங்கி கிடக்கும் குறுமதியாளர்கள்.
நடந்தது என்ன ?
ஃபிரான்ஸில் ஒருக் கல்லூரி நிர்வாகம் முகத்தை மறைத்துக் கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்று முஸ்லீம் பெண்களுக்கு தடை விதித்தார்கள். இதே புர்கா அணிந்து கொண்டு வரக் கூடாது என்ற தடையை விதித்திருந்தால் இது போன்ற பல தடைகளை அதே ஃபிரான்ஸிலும், இன்னும் பல நாடுகளிலும் அந்தந்த நாட்டில் இயங்கும் சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள் ஜனநாயக ரீதியில் போராடி உடைத்தெறிந்திருக்கின்றன அதேப் போன்று இதையும் உடைத்தெறிய ஃப்ரான்ஸில் இயங்கும் முஸ்லீம் அமைப்புகள் போதுமானது.
பல சமுதாயத்தவர்களும் இணைந்துப் போராடி சுதந்திரம் பெற்ற இந்திய ஜனநாயக நாட்டில் இயங்கும் ஊடகங்கள் இதுமாதிரி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மதம் சார்ந்த பிரச்சனைகள் எழும்போது அதில் நியாய, அநியாய அடிப்படையில் தங்களது ஊடகங்களில் பதிய வேண்டும், இல்லை என்றால் கோடம்பாக்கத்தையே உற்று நோக்கியவர்களாக இருக்க வேண்டும்.
கற்பழிப்புக்கான காரணம் ?
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உருவான காதல் அதிசயம் என்றான் சினிமாக் கவிஞன்.
கல் தோன்றி மண்தோன்றி கடல் தோன்றும் முன்னாலே உருவான கற்பழிப்பு அதிசயம் என்பதே உண்மை.
இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் 1929ல் எட்டு வயதிற்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டமியிற்றினார்கள் எட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களை கற்பழிப்பது குற்றமில்லை எனும் அளவுக்கு தொன்மை வாய்ந்தது இந்தியாவின் கற்பழிப்பு நிகழ்வுகள்.
சமீபத்தில் தலைநகர் டெல்லியை குலுக்கும் தொடர் கற்பழிப்புகள் என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதனால் மற்ற மாநிலங்களில் கற்பழிப்புகள் இல்லை என்றோ, அல்லது குறைவு என்றோ கருதிடக்கூடாது. இந்தியாவில் 26 நிமிடத்திற்கு ஒரு பெண் மானபங்க படுத்தப் படுகிறாள் என்றும், 43 நிமிடத்திற்கு ஒரு பெண் கடத்தப் படுகிறாள் என்றும் போலீஸ் தகவல் அறிக்கைக் கூறுகிறது. பாராளுமன்றம் இயங்கும் தலைநகரில் லட்சனம் பாரீர் எனும் தொனியில் தலைப்புக் கொடுக்கப்பட்டு எழுதப்பட்டது அவ்வளவு தான்.
மேல்படி அத்து மீறல் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பாவில் 6 நிமிடத்தறிகு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.
இதற்கு எது காரணம் என்றுக் கண்டறிய பல சமுதாயத் தொண்டு நிருவனங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்த வகையில் சென்ற வருடம் அம்னஸ்டி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடத்தில் நடத்திய கருத்து கணிப்பில் 25 க்கும் மேற்பட்ட சதவிகித இளைஞர்கள் பெண்கள் அணியும் செக்ஸியான உடையேக் காரணம் என்றும் இதையே அயர்லாந்தில் 40 சதவிகித இளைஞர்கள் வழி மொழிந்தனர் என்றும் அம்னஸ்டி உலகுக்கு அறிவித்தார்கள்.
மேற்காணும் அம்னஸ்டி அமைப்பினர் பெண்களைக் கொண்டு கேளிக்கை நிருவனங்கள் நடத்தக் கூடியவர்கள் அல்ல, மாறாக உலகம் முழுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவலை உலகம் ஏற்றுக் கொள்வதா ? அல்லது பெண்களை போகப் பொருளாக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கேளிக்கை நிருவனத்தார்கள் நடத்தும் பட்டிமன்றத் தகவலை ஏற்றுக் கொள்வதா  ?
புர்காவே பாதுகாப்பு என்பதற்கு இன்னும் ஆதாரங்கள்
ஒருமுறை ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக தெரிந்ததைக் கண்ட டி.ஜி.பி கில் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் அவரது பெட்டெக்ஸை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது. அது பொதுவான இடம் என்பதால் அவரால் அத்துடன் நிருத்திக்கொள்ள முடிந்தது அதுவே தனிப்பட்ட இடமாக இருந்தால் வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம். ( இன்று அவ்வாறே அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். )
மலேஷியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதால் அழகலங்காரத்தை முதலில் தடைசெய்தனர், இதையும் மீறி பலாத்காரங்கள் நடைபெறவேச் செய்தன இறுதியில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இறுக்கமான உடைகள் அணிந்து வருவதே சக ஆண் ஊழியர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக அறிந்தவர்கள் உடம்பை மறைக்கும் புர்கா அணிந்து வர சட்டமியற்றினர்.
சிறகடித்துப் பறக்கும் பருவத்தில் அதன் சிறகொடித்து பூட்டியக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டப் பறவைப் போல் படித்துக் கொண்டிருக்க கூடிய 17 வயது பிஞ்சுப் பருவத்து இளம் மொட்டொன்று சமீபத்தில் காமுகன் ஒருவனால் கசக்கிப் பிழிந்து முதியோர் காப்பகத்தில் வீசி எறியப்பட்டதற்கு எது காரணம் ?
கீழ்காணுமாறு புர்கா அணிந்து கொண்டு கண்ணியமாக அமர்ந்து பாடம் படித்திருந்தால் காமுக ஆசிரியர்களின் பார்வை கண்ட இடங்களிலும் பட்டு இந்நிலை உருவாகி இருக்குமா ?
பெண்களின் உடம்பில் எதாவது ஒரு இடம் தெரிந்தாலும் ஆண்களின் விரசப் பார்வைகள் அங்கு சென்று மேயாமல் திரும்புவதில்லை என்பதுவே  யதார்த்த நிலை.
Ø  பெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சுகள், உரசல்கள் ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும் பாடாகிறது என்று தினமனி கதிரில் (4-4-99ல்) பெருமூச்சு விட்டிருந்தார் ஜோதிர் லதா கிரிஜா அவர்கள்.
ஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பதுவே சிறந்ததென்று ஜோதிர் லதா கிரிஜாவின் கருத்தாக இருக்கிறது இஸ்லாமும் அவ்வாறேக் கூறுகிறது.
Ø  24:31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.300
மேற்காணும் திருமறைக் குர்ஆனில் பெண்களுக்கு சொல்லப்பட்ட ரத்தின சுருக்கமான கட்டளைகளை அவர்கள் பேணிக் கொண்டால் கற்பழிப்புகள், மற்றும் கள்ளக்காதல்களின் வாசல் கதவுகள் நிரந்தரமாக இழுத்து தாழிடப்படும். அல்லாஹ்வின் கட்டளைப்படி நடப்பதுவே எங்களுக்கு பாதுகாப்பு அதனால் புர்கா அணிந்து கொண்டே  வெளியில் செல்வோம், புர்கா அணிந்து கொண்டே கல்லூரிக்கு செல்வோம் எங்கள் உரிமையில் கை வைக்காதே என்று புர்கா அணியச் செய்வது முஸ்லீம் பெண்களின் மீது இழைக்கப்படும் அநீதி என்று ஓநாய்கள் அழுத பொழுது வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள் முஸ்லீம் பெண்கள்.
இந்தியாவில் தொன்று தொட்டு நடந்து வரும் கற்பழிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரமுடியாதக் காரணத்தால் இறுதியாக அத்வானி அவர்கள் கற்பழிப்புகளுக்கு ( இஸ்லாமிய ) மரண தண்டனையே சரியானத் தீர்வு என்று பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வரும் கற்பழிப்புகள்.
கற்பழிக்கும் ஆண்களுக்கு மரண தன்டனையை தீர்ப்பாக்கிய இஸ்லாம் கற்பழிப்புகளுக்கு தூண்டும் அனைத்து அம்சங்களையும் பட்டியலிட்டுக் கூறி அவற்றை தடுத்துக் கொள்ளும் படி பெண்களுக்கும் கட்டளையிட்டது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் வீதியில் நடந்து கொள்ளுங்கள் உங்கள் மீது கை வைக்கும் ஆண்களை கொல்வோம் என்றுக்கூறி ஒரு சாராருக்கு (ஆண் வர்க்கத்திற்கு ) மட்டும் அநீதி இழைக்க வில்லை இஸ்லாம்.ஒரு காலகட்டத்தில் பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா ? அவர்கள் மனித இனமா ? என்ற ஆய்வை ஆணினம் மேற்கொண்ட பொழுது உனது ஆய்வை நிருத்திக்கொள் அவர்களும் உன்னைப் போன்ற மனித இனமே உன்னிலிருந்தே அவர்கள் படைக்கப்பட்டார்கள் என்றுக் கூறி அவர்களுடைய ஆய்விற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம். 49:13. மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
படைப்பாளன் அல்லாஹ்வே என்பதற்கு அல்லாஹ்வின் வாக்குகள் அடங்கிய ஆண் பென் இரு சாராருக்கும் மத்தியில் பாரபட்சம் காட்டாத மேற்காணும் திருமறைக்குர்ஆனின்; வசங்கள் மிகப் பெரிய ஆதாரம். 5: 8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு  ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. அன்புடன்
-அதிரை ஏ.எம்.பாரூக்
Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.