சொர்க்கமும் – நரகமும்

அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

மறுமையின் இன்பம் மரணிக்க இருக்கின்ற நாம் அழிந்துப் போக இருக்கின்ற இந்த உலகில் இறைவனால் தடுக்கப்பட்ட தீமையான வழிகளில் மூழ்கித் திளைக்காமல் நம்பிக்கை கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாகவும், உற்றத் தோழர்களாகவும் மறுமை வாழ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாவும், ஏகஇறைவனை முறையாகத் தொழுது, இயன்றவரை ஹலால் – ஹராம் பேணி, நன்மைகளை ஏவித் தீமைகளைத் தடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தியை அடைந்தவர்களாக வாழ்ந்து வந்தால் அவர்களுக்கு மறுமையில் நிம்மதியான வாழ்வை நிரந்தரமாக்கித் தருவதாக திருமறைக்குர்ஆன் நெடுகிலும் ஏகஇறைவன் வாக்களிக்கிறான்.

‘எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன்” ‘மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி தரும் சொர்க்கத்து இன்பங்களை அறிய மாட்டார்கள்,, என்னும் திருக்குர்ஆன் 32:17 இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி 3244.

வர்களுடைய மனம் விரும்பியதையெல்லாம் அங்கு அடைந்து கொள்வார்கள், உலகில் அவர்களுடைய கண்கண் கண்டிராத, காதுகள் கேட்டிராத அனைத்து அம்சங்களையும் காணப் பெறுவார்கள் என்று அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் மேற்காணும் அறிவிப்பில் கூறுகின்றார்கள். 9:72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. 44: 51, 52. (இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள். திருமறைக் குர்ஆனில் சுவனத்தைப் பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் சொர்க்க வாசிகள் அடர்ந்த சோலைகளில் வசிப்பார்கள் என்றும், அதனருகில் நீரூற்றுக்களும், ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும் என்று பல இடங்களில் இறைவன் சொல்லிகாட்டுகிறான். பார்க்க திருமறைக்குர்ஆன் வசனங்கள் 2:74, 3:137, 3:195, 3:136, 3:198, 4:13, 4:57 5:12, 5:85, 5:119, 4:122, 7:43, 9:72, 9:89, 9:100, 10:09, 14:23,16:31, 18:31, 20:76, 22:14, 22:23, 25:10, 29:58, 47:12, 48:5, 48:17, 57:12, 58:22, 64:9, 65:11, 66:8, 85:11, 98:8,

ஒரே செய்தியை இத்தனை வசனங்களில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்படும் காரனமென்ன ? சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி)அவர்கள் அறிவித்தார். புகாரி 3250. ஏன் என்றால் ? உலக நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகம் மட்டுமே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், உடனே இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப் போதுமானதாயிற்றே என்று கேட்டதும் உலக நெருப்பைவிட நரகநெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும் என்றுக் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 3265.

சொர்க்கமும் – நரகமும். சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் தூரஇடைவெளி இதிகம் இருக்காது இரண்டும் அருகருகே அமைந்திருக்கும் சொர்க்க வாசிகளும், நரகவாசிகளும் ஒவ்வொருவரும் பார்த்து பேசிக்கொள்ளும் அளவே தூர இடைவெளி இருக்கும் பார்க்க திருமறைக் குர்ஆன் 7:46, முதல் 7:50 வரையிலான வசனமும், 74:38 முதல் 74:47 வரையிலான வசனமும். சூரியன் கியாமத் நாளில் மனிதர்களிடமிருந்து ஒரு மைல் உயரத்தில் நெருக்கமாக நிறுத்தப்படும்.

மக்கள் தம்தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் நிற்பார்கள். அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி) நூல்கள்: முஸ்லிம் நரகத்தில் அளவுக்கதிகமாக நெருப்பு மூட்டப்படுவதால் அதனுடைய வெப்பமும், தரைக்கு சற்றே உயரத்தில் கொண்டு வரப்படும் சூரியனின் வெப்பமும் சேர்ந்து நரகில் கடும் சூட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.  தென்றல் காற்று சுவன வாசிகள் வாழும் சொர்க்கத்தில் எந்நேரமும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டு இருந்தால் தான் அதனருகில் எந்நேரமும் எரிந்து கொண்டிருக்கும் நரத்தின் வெப்பத்தை அது தடுக்கும் அரனாக இருக்கும். குளிர்நத காற்று வீச வேண்டுமெனில் அதனருகில் நதிகளும், சோலைகளும் இருந்தாக வேண்டும் நதியில் விளையாடி கொடியில் தலை சீவி வளர்ந்த இளம் தென்றலே என்றும் கவிஞன் பாடினான் காற்று நதியில் விழுந்து அதன் பிறகு இலை செடி,கொடிகளில் மீது விழுந்தெழும் பொழுது அது  குளிர்ந்த காற்றாக மாறுகிறது அந்த குளிர்ந்த காற்றைத் தான் தென்றல் காற்று என்றும் வர்ணித்துக் கூறுகின்றோம்.

தென்றல் பிறப்பதற்கு நதிகள், நீரருவிகள், நீரூற்றுக்கள் அமைந்திருக்க வேண்டும் என்பதால் சுவனவாசிகள் சுகமானக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வசிக்கும் ஒவ்வொரு சோலைகளின் கீழ்பகுதிகளிலும் நதிகளையும், நீரூற்றுக்களையும் நிரந்தரமாக இறைவன் ஓடச்செய்கிறான். குளிரும் சூரிய வெப்பம். ஒரே இடத்தில் வெப்பமும், குளிருமா ? அது சாத்தியப்படுமா ? என்று நினைப்பவர்களுக்கு ஒரு உதாரணம். கடந்த காலங்களில் எப்பொழுதாவது நீங்கள் கொடைக்கானல் சென்று வந்திருந்தால் சற்று கண்களை மூடிக் கொண்டு ஒரே ஒரு நிமிடம் ஃப்ளாஷ் பேக். கொடைக்கானலில் குறிப்பிட்ட சில மலைகளை சுற்றியும் அமைந்துள்ள நீரருவிகள் காரணத்தால் அதன் மேல் கொட்டும் சாரல், கொளுத்தும் வெயிலின் வேகத்தை குறைத்து உடலுக்கு குளிரை கொடுத்துக்கொண்டிருக்கும்.

இதற்காகவே தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் சிறிது நேரமாவது உடலுக்கு குளிர்ச்சியையும், பசுமை நிறைந்த சோலைகளின் அழகை கண்ணுக்கு காட்சியாக்குவதற்காகவும் கடும் கோடையில் மக்கள் திரண்டு செல்வார்கள்.  அத்தனைப் பெரிய சூரியனின் சூட்டை இத்தனை சிறிய சாரல் துளிகளால் எவ்வாறு தடுத்து உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த முடிகிறது ? அதிசயம்தான் ! இந்த அதிசயத்தை நாம் வாழும் காலத்தில் நிகழ்த்திக்காட்ட முடிந்த இறைவனுக்கு அவனுடைய திருப்தியைப் பெற்ற நல்லடியார்களுக்காக மறுமையில் நிகழ்த்திக் காட்டுவது கடினமா ? உதாரணத்திற்கு மட்டுமே கொடைக்கானலை சுட்டிக்காட்டுகிறோம் உலகில் பல பகுதிகளில் இங்கொன்றும், அங்கொன்றுமாக இந்த அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. இங்கொன்றும்? அங்கொன்றுமாக இப்படி அதிசயம் நடக்கும் இதே பூமியில் தான் மறுமையில் சொர்க்கத்தில் சோலைகள் அமைக்கப்பட்டு அதன் கீழ்பகுதிகளில் நீரருவிகளையும், நீரூற்றுக்களையும் ஓடச்செய்து அதிலிருந்து அள்ளி வீசும் சாரல் துளிகளும், அவற்றில் குளித்து புறப்படும் தென்றல் காற்றும் இறைவனின் திருப்திக்காக உலகில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நல்லடியார்கள் வசிக்கும் பகுதியில் நிரந்தரமாக வீசிக் கொண்டு அதனருகில் எரியும் நரகின் கடும் வெப்பத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் அதிசயம் நிகழும்.

படிப்பினைகள் நமக்கு உயரே பல்லாயிரம் கோடி மைல் தொலைவிலிருந்து சூரியன் எரியும் பொழுதே செருப்பு அணியாமல் ஒரே ஒரு நிமிடம் நம்மால் பூமியில் நடக்க முடிவதில்லை  ? சூரியன் தலைக்கு மேல் கொண்டு வரப்படும் அந்த நாளில் நம்மால் எவ்வாறு நிற்க முடியும்? நடக்க முடியும் ? என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதனால் தான் சுவனத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடத்தைப் பெறுவது உலகில் விரும்பி சேர்த்த அனைத்து செல்வங்களையும் விடச் சிறந்தது என்று பெருமானார்(ஸல்) அவர்கள் வர்னித்துக் கூறினார்கள். நம்மால் இயன்றளவு இன்றே நற்செயல்களை முற்படுத்தி நரக நெருப்பிலிருந்து தப்பிததுக் கொண்டு சுவனத்தின் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் நன்மக்களாக ஆக முயற்சிப்போம்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s