அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்

அகில உலக மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அல்குர்ஆன் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறியுள்ள காலத்தில் பல அறிஞர்களை சிந்திக்கவும், ஆராய்ந்து பார்க்கவும் வைத்துள்ளது. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருவியலை ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் மனிதன் எப்படி படைக்கப்படுகிறான் என்பதனை ஆய்வு செய்தனர். வல்ல இறைவன் தன் வல்லமையை புனித குர்ஆனில் மனிதன் படைக்கப்படும் ஒவ்வொரு அசைவுகளின் நிலைப்பாட்டை மிக தெள்ளத் தெளிவாகவும், துல்லியமாகவும் விளக்கியுள்ளான்.

முதன் முதலில் ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களை “”….களிமண்ணிலிருந்து சத்தினால் படைத்தோம்” 23:12.

“நாம் மனிதனை ஓர் பாதுகாப்பான (கர்ப்பப்பை) இடத்தில் இந்திரியத் துளியாக வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை “அலக்”என்ற நிலையில் ஆக்கினோம். பின்னர் அந்த அலக்கை ஒரு தசை பிண்டமாக்கினோம். பின்னர் அந்த எலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் அதனை ஓர் படைப்பாக (மனிதனாக) ஆக்கினோம். (23:13,14)

இது 1432 ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானம் வளர்ச்சி பெறாத காலத்தில் அல்லாஹ் இறக்கிய அல்குர்ஆனில் கூறப்படும் வசனமாகும். எந்த மதங்களின் வேதங்களிலும் மனிதனின் படைப்பைப் பற்றி மிகத் துல்லியமாகக் கூறப்பட வில்லை. அல்லாஹ்வின் உயர் நெறிநூல் மூலமே மனிதன் உருவாவதை மனிதனே தெரிந்து கொண்டான்; ஆராய்ச்சியும் மேற்கொண்டான்.

“… குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். அது முதுகு தண்டிற்கும், விலா எலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகிறது. (86:7) என்ற வசனங்களின்படி ஹாம், லீவன்ஹோக் என்ற இரண்டு விஞ்ஞானிகள் முதன் முதலில் 1677ல் ஓர் (Microscope)  நுண் ணோக்கக் கண்ணாடியை பயன்படுத்தி விந்து உயிர் அணுக்களை ஆராயத் தொடங்கினர்.

ஒரு விந்து உயிரணுக்குள் ஒரு மிகச்சிறிய மனித உரு கருவாக உள்ளடங்கி உள்ளது. அதுவே கரு வறையில் ஒரு குழந்தையாக உருவாகிறது என்பதனை ஆய்வு செய்து உலகிற்கு வெளிப்படுத்தினார்கள். அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருவியல் சம்பந்தப்பட்ட வசனங்களை மேலும், மேலும் ஆய்வு செய்தவர்கள் “உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை (பாதுகாப்பாக) படைக்கிறான்” (39:6) என்ற வசனத்தை விளக்குமுகமாக மூன்று இருள்களில் முதலாவதாக “”தாயின் அடிவயிறு” என்றும் இரண்டாவதாக “”கருப்பையின் சுவர்” என்றும் மூன்றாவது குழந்தையை சுற்றி இருக் கும் சவ்வுப்படலம் என்பதனையும் தெளிவு படுத்தினார்கள்.

இவ்வசனத்தை டாக்டர் சீர்மோர் என்ற விஞ்ஞானி ஆய்வு செய்து விளக்கியதுடன் தனது சக்தி வாய்ந்த (Microscope)  நுண்ணோக்க கண்ணாடியைக் கொண்டு “”அலக்” என்ற சொல்லை ஆய்வு செய்தார். “அலக்” என்ற அரபி சொல்லுக்கு இரத்தக் கட்டி என்று மட்டுமே மொழி பெயர்த்து கூறி வந்தனர். ஆனால் டாக்டர் சீர்மோர் ஆய்வு செய்து இது தொங்கி கொண்டுள்ள ஓர் பொருள் என்றும் ஓர் அட்டை பூச்சியைப் போன்று அமைப்பு கொண்டது என்றும் ஆரம்ப நிலையில் அது இரத்தக் கட்டியாக அமையாது என்றும் விளக்கினார்.

அத்துடன் 1. அட்டை, 2. தொங்கும் பொருள், 3. இரத்தக் கட்டி என “”அலக்” எனும் அரபி சொல்லிற்கு மூன்று பொருள்படுகிறது என்றும் முதலாவதாக அட்டையைப் போன்றும், பின்பு தொங்கும் பொருளாகவும், மூன்றாவதாக அதாவது நான்காவது வாரத்தில் (கர்ப்பப் பைக்குள்) முழு வடிவம் பெற்று இரத்தக் கட்டியைப் போன்றும் காட்சி தருகின்றது என்றும் விளக்கி நூலாக வெளியிட்டார். இவர் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலை கழகத்தில் உடற்கூறு துறைத் தலைவ ராகவும், கருவியல் துறை பேராசிரியராகவும், மாபெரும் நிபுணராகவும் திகழ்பவர். இவரது நூலை சவூதி அரசாங்கமும் வாங்கி வெளியிட்டுள்ளது. மேலும் 1981ல் சவூதி அரேபியா தமாமில் நடந்த 7வது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருவியல் சம்பந்தப்பட்டவற்றை ஆய்வு செய் ததை விவரித்து கூறி இது வல்ல இறைவனின் தூதர் “முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் அருளப்பட்டது என்று கூறி ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியுள்ளார். “இதில் சந்தேகமில்லை, பயபக்தியுடையவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியது (2:2) என்ற அல்குர்ஆன் வசனப் படி இந்த குர்ஆனை படித்து, ஆராய்ந்து பார்ப்ப வர்களுக்கு நிச்சயமாக நேர்வழி காட்டுகிறது என்பதனை விஞ்ஞானிகளின் வருகைகள் தெளிவு படுத்துகின்றன.

ஒரு கால கட்டத்தில் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றுத்தான் மனிதனாக மாறினான் என்று டார்வின் என்ற மூடன் சொன்ன கருத்து பொய்யாக்கப்பட்டது அறிந்ததே. உண்மையில் மனிதன் குரங்காக ஆக்கப்பட்டான் என்பதனை அல்லாஹ் கூறுகிறான். நபி மூஸா(அலை) அவர்கள் காலத்தில் வரம்பு மீறி சனிக்கிழமையன்று மீன் பிடிக்க சென்ற அன்றைய சமூகத்தார்களை குரங்குகளாக ஆக்கியதையும் அவர்களை இம் மண்ணில் சுற்றி திரிய விட்டதையும் அல்குர்ஆன் தெளிவாக விளக்குகிறது.

“”சனிக்கிழமையன்று வரம்பு மீறி மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்கள்…” (7:163)

“…தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறி விடவே நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள் என்று கூறினோம்…” ( 7:166)

“அவர்களை நாம் பூமியில் பல பிரிவுகளாக சிதறி திரியுமாறு ஆக்கிவிட்டோம்…” (7:168)

மனிதன் குரங்காக மாறியதையும் அவர்களை பூமியில் பல பிரிவுகளாக சிதறி திரிய விட்டதையும் கூறியுள்ள வல்ல இறைவன் இழிவடைந்த குரங்குகள் என்று வார்த்தையை பயன்படுத்தி யுள்ளான். மனிதனை அல்லாஹ் மிக உயர்வான படைப்பாக படைத்து மறுமை நாளை அமைத்து நல்வழியில் வாழ்ந்தவர்களுக்கு அந்நாளில் சுவர்க்கத்தில் ஆனந்தமான வாழ்க்கையை நிரந்தரமாக்கி தருவதாக அல்குர்ஆனில் வாக்குறுதி வழங்கியுள்ளான். குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்று கூறி வந்த டார்வின் போன்ற சில மூடர்கள் அல்குர்ஆனின் தெளி வான சான்றுகள் மூலம் வாயடைத்து போய் விட்டனர்.

வல்ல இறைவனின் வசனங்கள் ஒவ் வொன்றிலும் விஞ்ஞானம் புதைந்து கிடக்கிறது என்பதனை உணர்த்துகிறது. அல்குர் ஆனின் வசனங்கள் மாற்றார் ஆய்வு செய்து வரும் காலத்தில் இன்றும் நம் மெளலவிகள் அல்குர்ஆனை விஞ்ஞான ரீதியாக ஆராயாமல், தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக மனனம் செய்து ரமழான் மாதத்தின் தராவீஹ் தொழுகையை Express வேகத்தில் தொழ வைக்க ரூ.15,000/- என்றும், ரூ. 20,000/- என்றும், கூலி கேட்டு பேரம் பேசிக் கொண்டிருப்பதைத் தான் காண முடிகிறது. மேலும் பள்ளிகளில் தஃலீம் என்று கற்பனை புத்தகங்களை புனித(?) நூலாக படிப்பதை தவிர்த்து அல்குர்ஆனின் விஞ்ஞான சிந்தனைகளை மக்களுக்கு படித்து காட்டினால் அல்குர்ஆனின் வசனங்களில் உலக மக்களுக்கு மேலும் தெளிவை ஏற்படுத்தி இஸ்லாத்தின்பால் ஈர்ப்பு ஏற்படும். இவ்வாறு மாற்றம் செய்ய மெளலவிகள் முன்வர வேண்டும்! வல்ல இறைவன் நேர்வழி காட்டட்டும்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s