அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் அரங்கேறும் விழா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்…

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும் (திருக் குர்ஆன் 7:194)
ரபீவுல் ஆகிர் மாதம் பிறந்து விட்டது. முஹ்யித்தீன் ஆண்டவர்(?) பிறந்த நாள்விழா கொண்டாட்டங்கள் குதூகலத்துடன் தொடங்கப்போகின்றன. இதயத்தில் இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச ஈமானும் கொடிமரங்களில் இனி தஞ்சமடையப் போகின்றன. (நவு+து பில்லாஹ்) அல்லாஹ் நம்மைக் காப்பானாக. தூய இஸ்லாத்தில் இல்லாத திருவிழாக்களும் வழிகேடுகளும் மாற்றார் எள்ளி நகையாடும் விதத்தில் முஸ்லிம்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களால் இன்னமும் அரங்கேற்றப் படுவதைக் கண்டு நம் நெஞ்சு பொறுக்குதில்லையே!
அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அநாச்சாரங்களில் முஹ்யித்தீன் அப்துல்; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் தான் கொடுமையிலும் கொடுமை. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் அந்தந்த ஊர்களில் தான் நடக்கின்றன. ஆனால் தமிழகமெங்கும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் கேளிக் கூத்துக்கள் சொல்லி மாளாது.
ரபீவுல் ஆகிர் மாதம் வந்து விட்டால் அப்துர; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் பள்ளிகள் தோறும் பரவசமாக முஹ்யித்தீன் மௌலிது ஓதப்படுவது ஷிர்க்கின் உச்சக் கட்டம்.
அல்லாஹ்வை வணங்க கட்டப்பட்;ட பள்ளிவாசல்கள் என்னும் இறையில்லங்களில் அல்லாஹ்வை அழைத்துப் பிராh;த்திப்பதை விட்டு விட்டு ஒரு மனிதரை அழைத்துப் பிரார்த்திப்பது பச்சையான ஷிர்க் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? இதை உணர மாட்டீர்களா? பக்திப் பரவசத்துடன் அர்த்தம் புரியாமல் ஓதிக் கொண்டிருக்கிறீர்களே! அதை ஓதிக் கொண்டிருக்கும் மௌலவி மார்களிடமே அதன் அர்த்தத்தைப் கேட்டுப் பாருங்கள் அப்போது தான்; அது எவ்வளவு பெரிய ஷிர்க் என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளையே கொண்டாட மார்க்கத்தில் அனுமதி இல்லாத போது, அவர்களை தம் உயிரினும் மேலாக மதித்த சத்திய சஹாபாக்கள் கொண்டாடாத போது முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது மிகப் பெரும் வழிகேடல்லவா? நான்கு கொடியை பக்தி சிரத்தையுடன் தூக்கி ஊர்வலம் செல்வதும் அதைத் தொட்டு முத்தமிடுவதும், அதற்காக நேர்ச்சை செய்வதும் இவை யாவும் நரகப் படுகுழியில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இஸ்லாம் நமக்கு வழங்கிய இரு பெரு நாட்களையும் விடச் சிறப்பாகவும் குதூகலமாகவும் இந்தக் ‘கொடிச்சீலை’த் திருவிழாவைக் கொண்டாடும் நெஞ்சங்களே அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்களா? இஸ்லாம் அனுமதித்த  இரு பெருநாட்களுக்காகக் கூடத் தங்கள் அரபு நாட்டு விடுமுறையைத் தள்ளிப் போடாதவர்கள் இந்த அநாச்சார விழாவுக்காக உங்கள் விடுமுறையை மாற்றி அமைத்து இஸ்லாத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே! ஏகத்துவப் பிரச்சாரங்கள் தினந்தோறும் உங்கள் செவிகளை வந்தடைந்த போதும் அவற்றைத் துச்சமென மதித்து ‘இன்னும் கெடுவேன் என்ன பந்தயம்?’ என்ற பாணியில் நரகப்படுகுழியை நோக்கி வெகு வேகமாகப் பயணிக்கின்றீர்களே! கொழுந்து விட்டெரியும் அந்த நரக நெருப்பை அஞ்சமாட்டீர்களா?
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் மீது காட்டும் பாசத்தையும்  நேசத்தையும் அண்ணல் நபி (ஸல்) மீது காட்டுங்கள். அல்லாஹ்வின் அன்பைப்  பெறுவீர்கள். இல்லையேல் அண்ணல் நபி (ஸல்)அவர்களின் உம்மத்திலிருந்து அப்புறப்பட்டு போவீர்கள். அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மீது காட்டும் பக்தியையும் சிரத்தையையும் அல்லாஹ்வின் மீது காட்டுங்கள் இல்லையேல் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவீர்கள். நன்மையும் தீமையும் மார்க்கத்தில் தெளிவாக்கப் பட்டுவிட்டன. தீயவை எவை என்பதில் நமக்கு குழப்பமில்லை. ஆனால் நன்மை என கருதிக் கொண்டு தீமையைச் செய்தால் ஏற்படும் இழப்பு தான் உண்மையில் பேரிழப்பாகும்.
அறிந்துக் கொண்டே பயணச்சீட்டு பெறாமல் பயணம் செய்பவன் பிடிபட்டு தண்டிக்கப்பட்டால் அது நியாயம் தான். ஆனால் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்று மிகவும் ஆடம்பரமாகப் பயணத்தை மேற்கொள்ளும் போது பரிசோதனையில் அது போலியானது எனத் தெரிய வந்து நீங்கள் தண்டிக்கப்பட்டால் எவ்வளவு வேதனைப்படுவீர்கள்?
அறிந்து கொண்டே தவறுகளைச் செய்தவன் நாளை மறுமையில் தண்டிக்கப்படுவது உறுதி. நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் உரைகல்லாக அல்லாஹ்வின் திருமறையும் அவனது திருத்தூதரின் வழிகாட்டுதல்களும் தௌ;ளத் தெளிவாக நம் முன்னே இருக்கும்போது அவற்றை ஏரெடுத்துப் பார்க்காமலும், செவி தாழ்த்திக் கேட்காமலும் ‘முன்னோர்கள் காட்டிய வழி’ என்று அநாச்சாரங்களிலும், வழிகேடுகளிலும் பிடிவாதம் காட்டுவீர்களானால் அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.
இது நாள்வரை அறியாமையினால் இந்த கொடிச்சீலை விழாவைக் கொண்டாடி இருந்தால் அறியாமல் செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் அழுதழுது மன்னிப்புக் கேளுங்கள். இந்த அநாச்சார விpழாவை இனி கொண்டாடுவதில்லை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சபதம் செய்யுங்கள்.
அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)

நன்றி: தவ்ஹீத் அரங்கம்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.