இணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள்!

முன்னுரை

அன்பிற்கினிய சகோதர, சகோதரரிகளே இறைவனாகிய அல்லாஹ் நம் அனைவரையும் படைத்து, பரிபாலித்து பக்குவப்படுத்தி யிருக்கிறான் அப்படியிருக்க வணங்கத் தகுதியான் அல்லாஹ் மட்டும்தான் என்று உணர்ந்த முஸ்லிம்களில் சிலர் அவ்லியாக்களையும் வணங்கலாம் என்றும் அவர்கள் இறைவனை நெருக்கமாக்கி வைப்பார்கள் என்றும் கருதுகின்றனர். இவர்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் குர்ஆன் ஹதீஸ்களை பின்பற்றாத மூதாதையர்கள்தான், இவர்கள் மார்கத்திற்கு முரணாக கடைபிடித்து வந்த தவறான கொள்கையே ஆகும்.
நம்முடைய மூதாதையர்கள் குர்ஆன் ஹதீஸ்களை தங்களது தாய்மொழியில் உணர்ந்து படித்து தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்காக மார்க்க அறிவை போதித்து வந்திருந்தால் இந்த இழிவு நம் முஸ்லிம் சகோதரர்களிடம் ஏற்பட்டிருக்காது. எனவே இணைவைத்து வணங்கக்கூடிய சகோதரர்கள் வழிகெட்ட மூதாதையர்களின் மீது கொண்டிருக்கும் அளவுக்கதிகமான பாசம் அவர்களை நரகத்தை நோக்கி நகரச் செய்கிறது.
எனவே மார்க்க அறிவில் மிகவும் பின்தங்கியுள்ள, இணைவைக்கும் சகோதரர்களுக்கு இந்த கட்டுரை உண்மையை உணர்த்தக்கூடியதாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திவனாக ஆரம்பம் செய்கிறேன்!
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு கூறும் அறிவுரை

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும்உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களைஅழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!(அல்குர்ஆன் 7:194)

இந்த வசனத்தில் கூறப்பட்ட அறிவுரை என்ன?

 • அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ
இங்கு அல்லாஹ்வையன்றி என்று கூறப்பட்டுள்ளது எனவே ஆற்றல்கள் அனைத்திற்கும் உரிமையாளன் அல்லாஹ்தான் என்று உணர வேண்டும. அடுத்து எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ என்று கூறப்பட்டுள்ளது இதன் மூலம் அல்லாஹ்வையன்றி எவராக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது என்று உணர வேண்டும்.
 • அவர்களும்உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களைஅழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
இங்கு அவர்களும் என்று கூறப்பட்டுள்ளது அவர்கள் என்றால் அல்லாஹ்வைத் தவிர உள்ள மற்ற அனைத்து படைப்பினங்களும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.  உதாரணமாக நபிமார்கள், அவ்லியாக்கள், நல்லடியார்கள், மனிதர்கள், ஜின்கள் என்று அல்லாஹ்வின் படைப்பினங்களை வரிசைப்படுத்திக்கொண்டே செல்லலாம் அத்தனையும் இந்த அவர்கள் என்ற அர்த்தத்தில் அடங்கிவிடுகிறது.
இதன் அடிப்படையில் இணைவைக்கும் மக்கள் அவ்லியா என்று யாரை கருதுகிறார்களோ அவர்களும் இந்த அவர்கள் என்ற வட்டத்திற்குள் அடங்குகிறார்கள்.
இந்த வசனத்தின் இறுதியில் இணைவைப்பாளர்கள் அழைக்கும் அந்த அவர்களை அழைத்தால் எந்த பதிலும் கிடைக்காது என்று அல்லாஹ் கூறிவிட்டு கூடவே சவால் விடுகிறான்.
எனவே சகோதரர்களே இந்த அவர்கள் என்ற வட்டத்தில் அடங்கும் அல்லாஹ்வின் படைப்பினங்களை நீங்கள் வணங்குவதாக இருந்தால் மறுமையின் கேள்விக்கணக்கு நாளில் அல்லாஹ்வின் சவாலுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்!

அல்லாஹ்வுடைய அந்தஸ்தை எடை போடும் அவலம்!

எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு)இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே)படைக்கப்பட்டவர்களாயிற்றே!(அல்குர்ஆன் 7:191)
சகோதரர்களே சிந்தித்துப்பாருங்கள் அல்லாஹ்வுக்கு என்று ஒரு அந்தஸ்து உள்ளது.  அருள்புரிவதை அல்லாஹ் தமக்கு கடமையாக்கி வைத்துள்ளான் இந்த அந்தஸ்துக்கு நிகராக யாரேனும் இருப்பார்களா? ஆனால் மக்களில் பலர் அவ்லியாக்கள் என்று கூறிக்கொண்டு அவர்கள் தங்களுக்கு உதவுவார்கள் அருள்புரிவார்கள் என்று கருதுவது நியாயமா? அவ்லியா என்று நீங்கள் கருதும் நபர்களை ஏன் அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துகிறீர்கள். இப்படி கருதுவதால் அல்லாஹ்வின் அந்தஸ்தை நீங்கள் எடைபோடும் குற்றத்திற்கு ஆளாகிறீர்களே இது நியாயமா?

சிந்தித்துப் பாருங்கள்!

 • ஒரு அவ்லியா உயிருடன் இருந்து அவருக்கு நோய் வந்து அவதிப்பட்டால் என்ன செய்வார் இன்னொரு அவ்லியாவை பிரார்த்தித்து அழைப்பாரா அல்லது அல்லாஹ் என்று கண்ணீர்விட்டு அழைப்பாரா?
 • சரி அந்த அவ்லியாவுக்கு நோய் குணமாக அல்லாஹ்விடம் பிரார்த்தித்து விட்டு உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகுவாரா? அல்லது தனக்கு சக்தி உள்ளது என்று கூறி தாயத்த கட்டிக்கொள்வாரா? தாயத்து கட்டுவது இஸ்லாத்தில் கூடுமா?
 • அல்லது ஒரு அவ்லியா உயிருடன் இருக்கிறார் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது கழிப்பிடம் சென்று விடுகிறார் அங்கு வாளியில் தண்ணீர் தீர்ந்துவிடுகிறது! உடனே அவர் என்ன செய்வார்? தன்னுடைய பணியாளை கூப்பிட்டு ஒரு சொம்பு தண்ணீர் கொடு என்று சத்த்ம் போட்டு கேட்பாரா? அல்லது தன்னிடம் உள்ள ஆற்றிலின் காரணமாக அந்த அசுத்தம் தானாகவே நீங்கிவிடுமா?

அவ்லியாவின் ஆற்றல் இங்கு ஏன் வெளிப்படுவதில்லை

 • ஒரு அவ்லியா இறந்துவிடுகிறார் உடனே அவருடைய ஜனாஸா தானாகவே எழுந்து நின்று தன்னைத்தானே குழிப்பாட்டிக் கொள்கிறதா? அல்லது அவருடைய ஜனாஸாவை சாதாரண மனிதன் குளிப்பாட்டுகிறானா?
 • அந்த இறந்த அவ்லியாவின் மீது கபன் துணி தானாகவே போர்த்தப்படுகிறதா? மனிதன் போர்த்தி விடுகிறானா?
 • அந்த இறந்த அவ்லியாவுக்கு மனிதர்கள் ஒன்று கூடி ஜனாஸா தொழுகை மேற்கொள்கிறார்களா? அல்லது அந்த அவ்லியாவின் ஜனாஸா தன்னைத்தானே ஜனாஸா தொழுகையை நிறைவேற்றிக்கொள்கிறதா?
 • அந்த இறந்த அவ்லியாவின் ஜனாஸாவை மனிதர்கள் தோல் கொடுத்து கப்ருஸ்தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்வார்களா, அல்லது அந்த அவ்லியாவின் ஜனாஸா காற்றில் மிதந்தவாறு தன்னைத்தானே சுமந்து செல்கிறதா?
 • அந்த இறந்த அவ்லியாவுக்காக மனிதன் கப்ரு தோண்டுகிறானா? அல்லது அவருடைய கப்ரு தானாக வெளிப்பட்டு அந்த ஜனாஸாவை உள்ளே இழுத்துக் கொள்கிறதா?
இதை ஏன் இந்த இணைவைக்கும் சகோதரர்கள் சிந்திப்பதில்லை, அடிக்கடி அல்லாஹ் திருமறையில் சிந்தியுங்கள் என்று கூறுகிறானே ஒருமுறையாவது கீழ்க்கண்ட இறைவசனத்தை சிந்தித்துப்பார்த்தால் இந்த சமுதாயம் திருந்திவிடுமே! ஏன் இதை மேற்கொள்வதில்லை!
இதோ இணைவைப்பாளர்கள் சிந்திக்க வேண்டிய வசனம்
அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும்செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்; (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமேஉதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.(அல்குர்ஆன் 7:192)

இணைவைப்பாளர்களை நோக்கி அல்லாஹ் விடும் சவால்

அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா?
அல்லது
அவர்களுக்குபிடிப்பதற்குரிய கைகள் உண்டா?
அல்லது
அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா?
அல்லது
அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா?
(நபியே!) நீர் கூறும்; ”நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த்தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம்கொடுக்காதீர்கள்”” என்று.(அல்குர்ஆன் 7:195)
அல்லாஹ்வை இணைவைத்து வணங்கும் தர்காஹ்வாதிகளே அருமைச் சகோதர சகோதரிகளே நீங்கள் அவ்லியா என்று கூறும் நபர்கள் இறந்துவிட்டார்கள். மேலும் மண்ணோடு மண்ணாகவும் மக்கிவிட்டார்கள். எனவே அல்லாஹ் இணைவைப்பாளர்களிடம் முன்வைக்கும் இந்த சவால் நிறைந்த அருள்மறை வசனத்தை சிந்தித்துப்பாருங்கள்!
நீங்கள் அவ்லியா என்று யாரை கருதுகிறீர்களோ அவர்கள் ஒருகாலத்தில் கப்ரில் நல்லடக்கம் செய்யப் பட்டவர்கள்தானே அப்படியானால் அந்த கப்ரில் உறங்கும் அவ்லியாக்களுக்கு
 • இப்போது நடக்கும் கால்கள் உண்டா?
 • இப்போது பிடிக்கும் கைகள் உண்டா?
 • இப்போது பார்க்கக்கூடிய கண்கள் உண்டா?
 • இப்போது உங்கள் பிரார்த்தனைகளை கேட்க காதுகள் உண்டா?
மேலும் அல்லாஹ் தன்னை இணைவைத்து வணங்குவோர்களை நோக்கி கேட்கிறான்
நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த்தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம்கொடுக்காதீர்கள்”
தெய்வம் என்றால் தெய்வீகத்தன்மை கொண்டவை என்று பொருள்படுகிறது. எனவே அல்லாஹ்வைத்தவிர யாரிடமாவது நீங்கள் அருள் தேடினால் அந்த அருள் தேடப்படக்கூடிய நபருக்கு தெய்வீகத்தன்மை இருக்கிறது என்றுதானே நம்புகிறீர்கள் அப்படியானால் தர்காஹ்வாதிகள் யாரை அவ்லியாக்கள் என்று அழைத்து கப்ருவணக்கம் புரிகிறார்களோ அவர்கள் தெய்வங்கள் என்றுதானே மறைமுகமாக பொருள்படுகிறது!

அவ்லியாக்கள் உங்களுக்கு உதவ இயலாது உணருங்கள்

 • உங்கள் தாய் உங்களை 10 மாதம் சுமந்து பெற்றெடுத்தாள்,
 • பாலகனாக இருந்த உங்களை ஆசையோடு தாய்ப்பால் ஊட்டி வளர்த்தால்!
 • ஓடியாடும் குழந்தையாக இருந்த உங்களுக்கு தினமும் தலையை வாரிவிட்டு, பவுடர் அடித்து, நறுமனம் தடவி, புதுப்புது டிசைன்களில் ஆடைகளை உடுத்தி அழகுபடுத்தி பார்த்தால்!
 • உங்கள் தந்தையோ நீங்கள் படிக்க வேண்டும் என்று எண்ணி மூதுகில் மூட்டை சுமந்து கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்!
 • பெற்றோர் வயதான பருவத்தை அடைந்தவுடன் தன் மகன் அநாதையாக நின்றுவிடக்கூடாதே என்று உங்களுக்கு திருமணம் முடித்துவைத்து அழகுபார்த்து மகிழ்நதனர் இறுதியாக இருவரும் மரணித்துவிடுகின்றனர்.
இப்போது நீங்கள் அந்த அருமைத்தாயாரின் கப்ருக்கு அருகில் நின்று அம்மா! என்று அழைத்தால் அவர் பேசுவாரா? அப்பா என்று அழைத்தால் பதில் கொடுப்பாரா?
உங்களுக்கு தாய்ப்பால் ஊட்டி வளர்த்த உங்கள் அன்புத்தாய் இறந்தபிறகு உங்களுக்கு உதவ முடியவில்லை அப்படியிருக்க யாரோ ஒருவர் அவ்லியாவாம் அவர் உங்களுக்கு உதவி செய்வாரா?
என் மகன் கஷ்டப்படக்கூடாது படித்து பட்டம் வாங்கி பாரினில் வேலை செய்ய வேண்டும் என்று துடித்து வாழந்து மடிந்த உங்கள் அன்புத்தந்தை இறந்தபிறகு உங்களுக்கு உதவ முடியவில்லை அப்படியிருக்க யாரோ ஒருவர் அவ்லியாவாம் அவர் உங்களுக்கு உதவி செய்வாரா?
தன்னுடைய கணவன் இல்லற சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தன் உடலையே உங்களுக்கு அர்ப்பணம் செய்த அன்பு மனைவி இறந்தபிறகு உங்களுக்கு உதவ முடியவில்லை அப்படியிருக்க யாரோ ஒருவர் அவ்லியாவாம் அவர் உங்களுக்கு உதவி செய்வாரா?
நீங்கள் பெற்றெடுத்த அன்புமகன் ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துவிடுகிறான் அவனை நல்லடக்கம் செய்துவிடுகிறீர்கள் பின்னர் சிலகாலம் கழித்து தன் மகன் கப்ருக்கு அருகில் நின்று மகனே என்று கூப்பிடுகிறீர்கள் அந்த இறந்த மகன் தந்தைக்கு பதில் கொடுப்பானா? இறந்தபிறகு உங்களுக்கு உதவ உங்கள் மகனுக்கு இயலவில்லை அப்படியிருக்க யாரோ ஒருவர் அவ்லியாவாம் அவர் உங்களுக்கு உதவி செய்வாரா?
அட! நீங்கள் மரணித்துவிட்டீர்கள் உங்கள் மகன், மனைவி, மருமகன் உங்கள் கப்ருக்கு அருகில் நின்று அழுகின்றனர் உதவி கேட்கின்றனர் உங்களால் உதவி செய்துவிட முடியுமா? உங்களுக்கு இல்லாத அந்த ஆற்றல் யாரோ அவ்லியாவாம் அவருக்கு கிடைத்துவிடுமா?
அப்படி அவ்லியாவுக்கு ஆற்றல் உள்ளது என்று நினைத்தால் அல்லாஹ் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டானா?

என் அருமைச் சகோதரர்களே!

இணைவைப்பை விட்டுவிடுங்கள் சகோதரகளே அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக மாறிவிடுங்கள்! அல்லாஹ் உங்ககளுக்கு மிக சமீபமாக இருக்கிறதாக பிரகடனப்படுத்துகிறான் இதோ அல்லாஹ்வின் வார்த்தைகள்!
(البقرة )   وَإِذا سَأَلَكَ عِبَادِيْ عَنِّي فَإِنِّيْ قَرِيْبٌ أُجِيْبُ دّعْوَةَ الدَّاعِى إِذَا دَعَانِ
மேலும் , (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபத்தில் இருக்கிறேன் (என கூறுவீராக!). அழைப்பாளனின் அழைப்பிற்கு  அவன் என்னை அழைக்கும்போது நான் பதிலளிக்கிறேன் என்று கூறினான். (அல்பகறா:186)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்!

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.