தற்கொலைக்கு முயன்ற ரசிகன்

உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் விட மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவன் மனிதன். காரணம் மற்ற எல்லா உயிரினங்களையும் விட அவனிடம் இருக்கும் சிறப்புத்தகுதியான பகுத்தறிவுதான். இதன் மூலம் அவன் நாளுக்கு நாள் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி காட்டிக்கொண்டே இருக்கிறான். அந்த வரிசையில் கண்டுபிடிக்கப்ப்பட்ட சாதனம்தான் வீடியோ கேமராக்கள். இன்று இது அதிகளவில் பயன்படுத்தப்படுவது சினிமாத்துறைகளில்தான்.

 ஆரம்பத்தில் தெருக்கூத்தாகவும், மேடை நாடகங்களாகவும் இருந்து படிப்படியாக சினிமா எனும் ஒரு துறையாகவே மாறிவிட்டது. மேலை நாடுகளில் ஹொலிவூட் என்றும் இந்தியாவில் ஹிந்தி திரைப்படத்துறை பொலிவூட் என்றும் தமிழ் நாட்டு திரைப்படத்துறை கொலிவூட் என்றும் பரிணாமம் பெற்றுள்ளது. இந்த துறையால் மனித குலத்திற்கு ஏதும் நன்மை வந்துள்ளதா என்று சிந்தித்துப்பார்த்தால் இல்லை என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு சமூகத்தில் கேடுகெட்ட கலாச்சாரங்களும், அசிங்கமான பழக்க வழக்கங்களும் மேலோங்கிக்காணாப்படுகின்றன. ஒரு காலத்தில் இதுபோன்று நடிப்புத்தொழில் செய்தவர்கள் கூத்தாடிகள் எனும் பெயரில் கேவலமாகக்கருதப்பட்டவர்கள் இன்றோ ஸ்டார் என்று போற்றிப்புகழப்படுகிறார்கள். இவர்கள் ஸ்டார் ஆவதற்கு அப்படி என்ன் சாதனை செய்தார்கள் என்று பார்த்தால் கண்ட கண்ட பெண்களுடன் அரை குறை ஆடைகளுடன் ஆடியதும், சிகரட் வைன் போன்ற கேடுகெட்டப்பழக்கத்துக்கு தன்னை அடிமையாகவும் அதுதான் ஆண்களுக்கு அழகானதும் என்று காட்டியதும்தான் இவர்கள் ஸ்டார் எனப்பட்டம் வாங்க வைத்துள்ளது. இதில் உள்ள பித்தலாட்டங்களை நாம் சிந்திக்கிறோமா? இது சமூகத்திற்கு நல்லதா? கெட்டதா? என்று யோசிக்கிறோமா? இதனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பதை எண்னிப்பார்க்கிறோமா? என்றால் இல்லை! ஏன்? அந்தளவுக்கு எமது பகுத்தறிவை மழுங்கடித்து எம்மை அறியாமலேயே நாம் அதற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறோம்!
தற்கொலைக்கு முயன்ற ரசிகன் (?)
தமிழுலகில் மட்டுமல்ல! உலகம் பூராவூம் கூட இப்போது வியாபித்திருக்கும் ஒரு பெயர்தான் ஸூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் எனும் கூத்தாடி. இவர் தற்போது உடல் நலக்குறைவால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதும் வீடு வருவதும் என்றே ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி இவருக்கு என்னதான் நோய்? தெரியாமல் முழிக்கின்றனர் அப்பாவி ரஜினி பக்தர்கள். இதனால் வேதனையுற்ற ஒரு 19 வயது இளஞன் தீக்குளிக்கும் அளவுக்கு சென்று பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளான் என்ரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்? இவருக்கு நோய் வந்தால் எங்கோ இருக்கும் ஒருவன் தீக்குளிக்குமளவுக்கு என்ன செய்தார் அந்த ஸூப்பர் ஸ்டார்? இவனது தாய்க்க்கு அல்லது தந்தைக்கு ஒரு நோய் ஏற்பட்டால் இவ்வாறு செய்வானா? குறைந்தது மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று மருந்தாவது எடுத்துக்கொடுப்பானா என்றால் இல்லை! பெற்ற தாயையும் வளர்த்த தந்தையையும் விட பாசத்திற்குரியவராக ஒரு கூத்தாடி இருக்கிறார் என்றால் இவர் இந்த இளஞனுக்கு என்ன செய்தார்? இவன் தீக்குழிப்பதால் மட்டும் ஸூப்பர் ஸ்டார் பிழத்துக்கொள்வாரா? அல்லது எனக்காக ஒருவன் தீக்குழித்துவிட்டானே என்று கவலைப்படுவாரா? மாறாக காதிலே கூட போட்டுக்கொள்ளமாடார்! இந்த சினிமாத்துறை இவனது பகுத்தறிவை எந்தளவுக்கு முடக்கிவிட்டது என்பதை சிந்தித்துப்பர்ர்க்க வேண்டும். இதுபோல் இன்னும் எத்தைனையோ கிறுக்கர்கள் இருக்கலாம்  இவர்கள் இந்த மாயையிலிருந்து மீண்டு வர வேண்டும்.
யார் இந்த ஸூப்பர் ஸ்டார்?
இவரது ரசிகர்களுக்கு ஓர் அளவே இல்லை! இவருக்காக உயிரைக்கொடுக்கத்துணியும் இளைஞர் கூட்டம்! கண் முன் காட்சிதந்தால் கடவுளைப்பார்த்ததுபோன்ற பூரிப்பு இந்த ‘பக்தர்’களுக்கு! ஆஹா ஓஹோ என்று போற்றிப்புகழ்வதும், தலைவர் என்று வெட்கமில்லாமல் கோஷம் போடுவதும் இன்று இளைஞர்களின் தொழிலாகிவிட்டது. இவர் இந்த இளைஞர்களுக்கு அப்படி என்ன செய்தார்? பெரிதாக ஒன்றுமில்லை! எப்படி ஸ்டைலாக சிகரட் பிடிப்பது? என்று படித்துக்கொடுத்தார் அவ்வளவுதான். அதுதான் இளைஞர்களின் மத்தியில் மிகவும் விருப்புக்குரியவராக இருக்கிறார். இது தவிர இவரால் தமிழுலகம் கண்ட பயன் என்ன? எம்மை ஏமாற்றி எம்மிடம் பணம் பிடுங்கும் ஒரு தொழிலைச்செய்ய்யும் கூட்டத்தைச்சேர்ந்தவர்தான் இந்த ரஜினி. எம்மை ஏமாற்றுவதற்காக தந்திரம் செய்கிறான். நாம் வாயைப்பிழந்துகொண்டு நிற்கிறோம்! எமது பணம் மற்றும் நேரத்தையும் வீணடிக்கிறோம். வாழ்க்கையை நாசமாக்குகிறோம். இவரை ஒரு ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு சீரழிந்த இளஞர்கள் எத்தனை பேர்…. சினிமாதான் வாழ்க்கை என்று போய் வாழ்வை தொலைத்து விட்டு நிற்பவர்கள் எத்தனை பேர்? இன்று நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று கேட்டால் நான் ஒரு நடிகனாக வர வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு போய்க்கொண்டிருக்கிறது இந்த உலகம். அதற்கு களமமைய்த்துக்கொடுக்க கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறது டிவி சேனல்கள்.
சினிமாவின் சீர்கேடுகள்
இந்த சினிமா எனும் துறையினால் இவ்வுலகம் அடைந்த நன்மைகள் (?) என்ன? சினிமா வந்ததற்குப்பிறகுதான் இவ்வுலகத்தில் ஒழுக்கம் கெட்டு குட்டிச்சுவராய்ப்போனது என்று சொல்லலாம். அந்தளவுக்கு ஒழுக்க விடயத்தில் தலைகீழாக சென்றுகொண்டிருக்கிறது. இது சினிமாத்துறை வருவதற்கு முன்னுள்ள காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்ப்ட்டுப்பார்த்தால் உண்மை விளங்கும். திரைப்படங்களில் காட்டப்படுவது அனைத்தும் உண்மையா? ஹீரோ ஒற்றை ஆளாக நின்று 100 பேரைக்கூட சமாளிப்பதாக காட்டப்பட்டவுடன் அதைப்பர்ப்பவர்கள் வாயைப்பிளந்துகொண்டு நிற்கின்றனர். இதெல்லாம் சாத்தியமா? முடியுமா? நிஜ வாழ்க்கையில் இவரால் இப்படி செய்துகாட்ட முடியுமா? என்றெல்லாம் சிந்திப்பதில்லை! இவர் அடிக்கும் அடியில் கட்டிடங்கள் கூட நொறுங்கி விழுவதாக காட்டுகிறார்கள். உண்மையில் என்ன நிலை? அப்படி அடித்தால் இவர் அடுத்த நொடியே கையைத்தொலைத்துவிட்டு நிற்க வேண்டும். இதைப்பார்த்து மலைத்துப்போய் நிற்கின்றனர். காதல் எனும் கருமாந்திரத்தை ஏதோ ஒரு பெரிய தியாகம் போன்று காட்டியவுடன் அது இளைஞர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டு காதலுக்கும் அடிமையாகிவிடுகின்ரனர். இதைபோல் அடுக்கிக்கொணடே போகலாம் அந்தளவுக்கு அசிங்கங்களும், கிறுக்குத்தனங்களும், பித்தலாட்டங்களும் நிறைந்த ஒரு துறைதான் இந்த திரைப்படத்துறை. இதன் பிறகு எம்மில் ஒட்டியிருந்த கொஞ்ச நெஞ்ச வெட்க உணர்வு கூட அற்றுப்போவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. நடிகர்கள் தங்களை திரைப்படத்தில் உத்தமர்களாக காட்டிக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் அவர்களை விட அயோக்கியர்கள் இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லுமளவிற்கு கேவலாமன செயற்பாட்டையே மேற்கொள்கின்ரனர். இவர்களது உண்மை முகம் தற்காலத்தில் வெளியில் வந்து நாறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர்களுக்குப்பின்னால் சென்று கொண்டிருப்பதை எண்ணிப்பார்த்தால் மிகவும் வேதைனயாகவுள்ளது.
இதுபோன்ற ஒரு கேடுகெட்ட துறையை நாம் இனிமேலும் ஆதரிக்கக்கூடாது! எமது பிள்ளைகளும் இதில் ஆட்பட்டுவிடாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாக இருந்து கொண்டிருக்கிறது.
Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s