ஹபாயா தான் பெண்களுக்கான இஸ்லாமிய ஆடையா?

இன்றைய நவீன உலகில் எந்த ஒரு மார்கமும் ஏற்படுத்தாத அளவுக்கு பல விதமான தாக்கங்களையும் உண்டு பண்ணக் கூடிய மார்கம் உண்டெண்ரால் அது இஸ்லாமிய மார்கமாகத்தான் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

அதிலும் இந்த மார்கத்தை பின்பற்றக் கூடியவர்கள் இந்த மார்கத்தை பின்பற்றாத சிலரால் கடுமையாக விமர்சிக்கப் படுகிறார்கள்.

அதிலும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள பலவிதமான உரிமைகளைப் பற்றியும் பலர் விமர்சனம் செய்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்களின் ஆடைகள் தொடர்பில் இன்று பலவிதமான சர்சைகள் ஏற்படுத்தப் படுகின்றன.

ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியத்தின் உச்சகட்டமாகவே அவர்களின் உடலை மறைக்கும் விதமான சிறப்பான ஆடை முறையை ஏற்படுத்தியுள்ளது.

காட்டு மிராண்டிகளாக,கல் வணக்கம் செய்பவர்களாக நாகரீகம் என்றால் என்னவென்றே புரியாதவர்களாக பெண்களை ஒரு போதைப் பொருளாகப் பார்த்தவர்களிடம் பெண்களுக்கும் ஆன்மா உண்டென்று உணர்த்தியது இந்த இஸ்லாம் தான்.

பெண்னென்றால் அவள் ஒரு ஜடமாகவே பல ஆயிரம் ஆண்டுகளாக பார்க்கப் பட்டால் ஆனால் அவளை ஒரு உயிரோட்டமுள்ள ஜீவனாக இந்த உலகுக்கு இஸ்லாமே காட்டியது.

ஆனால் அன்றிருந்த அதே நிலை மீண்டும் n;பண்களுக்கு ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாக இன்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இன்று பெரும்பாலானவர்கள் பெண்னை ஒரு போதையாகத்தான் பார்க்கிறார்கள்.

சுதந்திரம் என்ற பெயரால் அதிகமான பெண்களே தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொள்ளிறார்கள்

ஆனால் இந்த இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு மிக அழகிய ஒரு கண்ணியத்தை கொடுப்பதின் மூலமாக அவர்களை இந்த பூவுலகில் தலை நிமிர்ந்து நடக்கச் செய்கிறது.

அதுதான் ஹிஜாப் என்ற கண்ணியம்.

ஆனால் இன்றைய முஸ்லீம் பெண்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஹிஜாப் என்ற ஆடையை ஒரு பேஷனாகவும், நவீன கலாச்சாரமாகவும் தான் பார்கிறார்களே தவிர இஸ்லாமிய ஆடையாகப் பார்பது கிடையாது.

ஹபாயாதான் இஸ்லாமிய ஆடையா?

இன்று நமது நாட்டில் உள்ள அனேக முஸ்லீம் பெண்கள் ஹபாயாதான் இஸ்லாமிய ஆடை என்று நினைகிறார்கள்.

ஆனால் அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ எந்த இடத்திும் ஹபாயாதான் பெண்கள் அணிய வேண்டிய ஆடை என்று கூறியதில்லை மாறாக பெண்கள் தங்கள் முகம்,இரண்டு கைகள் பாதம் தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் மறைக்க வேண்டும் என்று மிகத் தெளிவாக நமக்கு கூறியிருக்கிறார்கள்.

இன்றைக்கு ஹபாயா அணிந்து கொண்டு செல்லும் பெண்களின் நிலை என்ன?

அவர்கள் அணிவதைப் போன்று ஆடை அணிந்தால் அதனை இஸ்லாம் அங்கீகரிக்குமா?

இது போன்ற என்னோரன்ன கேள்விகள் இந்த ஹபாயா விஷயத்தில் ஏற்படுகிறது.இவைகள் ஒவ்வொன்றையும் நாம் தனித் தனியாக பார்க்களாம்.

ஹபாயாவின் இன்றைய நிலை?

இன்று பெரும்பாலும் நகரங்களில் வாழக்கூடியவர்கள் இஸ்லாமிய ஆடை என்ற பெயரில் ஹபாயாவைத் தான் அணிகிறார்கள்.

அதற்கு அவர்கள் இஸ்லாமியச் சாயம் பூசுவதற்குறிய காரணம் அந்த ஆடை அவர்களின் அங்கங்களை மற்ற ஆண்களின் பார்வைகளை விட்டும் மறைக்கிறதாம்.

முதலில் இவர்கள் சொல்லும் காரணங்கள் சரியானவையா என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

ஹபாயா என்ற ஆடை பெண்களின் உடளை மறைப்பதற்கு பயண்படுத்தத் தக்க ஒரு ஆடைதான் என்பதில் மாற்றுக்கருத்திpல்லை.ஆனால் இன்று பெண்கள் அணியும் ஆடை அவர்களின் உடலை மறைப்பதற்கு பதிலாக வெளிக்காட்டுகிறது என்பதே உண்மை.

அதிகமான முஸ்லீம் பெண்கள் இந்த ஹபாயாவை ஒரு பேஷன் ஆடையாகத்தான் பார்கிறார்கள்.

மிகவும் இருக்கமான முறையில் இதனை அணிந்து கொண்டு தலையை சுற்றி ஒரு துணியால் மூடியிருப்பார்கள்.அந்த அவர்களின் ஆடை முறையில் தலையில் அவர்கள் கட்டியிருக்கும் துண்டை பார்த்தால் ஏதோ தூக்கு தண்டனைக் கைதி கழுத்தில் கயிறை மாற்றியிருப்பதைப் போல் கழுத்தை சுற்றி கட்டியிருப்பார்கள் அது மக்கள் பார்வையில் மார்க்கம் அவர்களின் பார்வையில் பேஷன்.

இன்னும் சிலர் இந்த ஹபாயா என்ற ஆடையுடன் தங்கள் முகங்களையும் மறைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் முகத்தை மறைப்பதில் எந்தக் குற்றமும் இல்லை.ஆனால் முகத்தை மறைத்துக் கொண்டு இன்றைக்கு என்ன நடக்கிறது?

கடற்கரை ஓரங்களிலும், பஸ்தரிப்பிடங்களிலும், பூங்காக்களிலும் இன்றைக்கு அதிகமான ஆண்களும் பெண்களும் இந்த முகம் மறைத்தல் கலாசாரத்தின் மூலமாக தங்கள் சில்மிசங்களை மிகவும் சுலபமாக நடத்தி முடிக்கிறார்கள்.

அவர்கள் என்ன சில்மிசத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் யார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்ற தைரியம் அவர்களை இந்நிலைக்கு மிக சுலபமாக கொண்டு போய் விடுகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த நாசகார செயல்களில் ஈடு படும் சில பெண்களால் நல்ல முறையில் வாழும் பெண்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

அதிலும் முக்கியமாக பகுதி நேர வகுப்புகளுக்கு செல்லும் பிள்ளைகளை அவர்களின் பெற்றோர் இந்த விஷயத்தில் மிகவும் கவணம் எடுத்து கண்கானிக்க வேண்டும்.

இன்றைய நாட்களில் பஸ்களில் நாம் பிரயாணம் மேற்கொள்ளும் போது இவர்களின் இந்த கேடுகெட்ட நடத்தைகளை கண்முன்னே பார்கிறோம்.

இஸ்லாமிய சகோதரிகளே! ஹபாயாதான் இஸ்லாமிய ஆடை அல்ல உங்கள் உடல் உறுப்புகள் அண்ணிய ஆண்களுக்கு தெரியாத வகையிலும்(முகம்,இரு கைகள் பாதம் தவிர)இருக்கமாக அணியாமலும் நீங்கள் எந்த ஆடையை அணிந்தாலும் அது இஸ்லாமிய ஆடையே.

அது இஸ்லாம் கூறக்கூடிய விதத்தில் அமைந்த இருக்கம் இல்லாத பேஷன் என்ற எண்ணம் இல்லாத ஹபாயாவாகவோ அல்லது இஸ்லாம் வெளிக்காட்ட அனுமதித்த இடங்களைத் தவிர மற்ற இடங்களை மறைக்கும் விதத்தில் இருக்கும் ஒரு சல்வாராகவோ கூட இருக்கலாம்.

நிபந்தனை இருக்கமாக இல்லாமல் உடல் மறைக்கப்பட வேண்டும்.

இனி இஸ்லாம் ஹிஜாப் என்று எதனைக் குறிப்பிடுகிறது.ஹிஜாபுக்குறிய சட்டதிட்டங்கள் என்ன என்பவற்றைப் பார்போம்.

ஹிஜாப் என்றால் என்ன?

பெண்கள் முகத்தையும் மணிகட்டு வரை இரு கைகளையும் பாதத்தையும் வெளிப்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி தரப்பட்டுள்ளது. இதைத் தவிர மற்ற அனைத்து உறுப்புக்களையும் அண்ணிய ஆடவரிடமிருந்து பெண்கள் அவசியம் மறைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு மறைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆடை எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் தைக்கப்பட்டிருக்கலாம். இதற்கு அரபியில் ஹிஜாப் என்று சொல்லப்படுகிறது. நமது வழக்கில் பர்தா என்றும் புர்கா என்று கூறப்படுகிறது.

கண்டிப்பாக அண்ணிய ஆண்களிடமிருந்து தமது அங்கங்களை மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்

ஹிஜாப் எப்படி அணிய வேண்டும்?

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.    அல்குர்ஆன் (24 : 31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.    அல்குர்ஆன: (33 : 59)

திருக்குர்ஆன் 24:31 வது வசனத்தில் ”பெண்கள் அலங்காரத்தை வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது” எனக் கூறப்படுகிறது.

இங்கே ‘ஜீனத்’ என்ற மூலச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஜீனத் என்றால் அலங்காரம் என்பது பொருள்.அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள்ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.

உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, ‘மேக்கப்’ பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்ரிலில் அடங்கும்.

எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக்கூடாது.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘ஜீனத்’ என்பதைச் சிலர் அழகு என விளங்கிக் கொண்டனர். அழகு வேறு, அலங்காரம் வேறு என்பதை அவர்கள் உணர்வதில்லை.

சீலையை பெண்கள் உடுத்தும் வழக்கம் நம் நாட்டில் உள்ளதால் இஸ்லாமிய பெண்களும் சீலையை உடுத்துகிறார்கள். ஆனால் இந்த ஆடை பெண்களின் இடுப்புப்பகுதியையும் முதுகுப்பகுதியையும் மணிக்கட்டிற்கு மேலே உள்ள கைப்பகுதிகளையும் வெளிப்படுத்திக் காட்டும் விதத்தில் அணியப்படுகிறது.

பின்வரும் செய்தியை கவனத்தில் வைத்துக்கொண்டு ஹிஜாப் விஷயத்தில் பேணுதலாக பெண்கள் நடந்துகொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.

அறிவிப்பவர் ; அபூஹ‚ரைரா (ர­),நூல் : முஸ்லிம் (3971)

வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டப் பகுதி

பெண்கள் தமது உடல் அழகில் கைகள், முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிரிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளது.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை பிறகு பிலால் (ர­) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தை கடைபிடிக்கும் மாறும் இறைவனுக்கும் மாறும் வ­யுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வலங்கினார்கள் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள் மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள் அப்போது பெண்கள் நடுவி­ருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள் அதறட்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள் நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள் அப்போது அப்பெண்கள் தம் காதனிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ர­) அவர்களின் ஆடையில் போட்ôர்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ர­),நூல்: முஸ்­ம் (1612)

(‘விடைபெறும்ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகான வராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அüப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) கஸ்அம்குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­),நூல் : புகாரி (6228)

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும்.

பெண்கள் முழங்கா­­ருந்து ஒரு முழம் வரை உள்ள பகுதிகளை மறைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முழங்கா­­ருந்து ஒரு முழம் என்பது கரண்டை வரைக்கும் வரும். எனவே கரண்டைக்குக் கீழே உள்ள பாதத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இதி­ருந்து விளங்கிக்கொள்ளலாம்.

பெருமைகொண்டவனாக தன் ஆடையை எவன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் (கருணை பார்வை) பார்க்கமாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா (ர­) அவர்கள் பெண்கள் தங்களின் கீழாடையை எவ்வாறு தொங்கவிட்டுக்கொள்வார்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (முழங்கா­­ருந்து) ஒரு ஜான் தொங்கவிடுவார்கள் என்று கூறினார்கள். அப்படியானால் பெண்களின் கால் தெரியுமே? என்று உம்மு ஸலமா (ர­) அவர்கள் கேட்டதற்கு ஒரு முழும் தொங்கவிடுவார்கள். இதற்கு மேல் (ஆடையை) அதிகப்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ; இப்னு உமர் (ர­),நூல் : திர்மிதி (1653)

முகத்தை மறைப்பதில் தவறில்லை.

பெண்கள் முகத்தை மறைத்துக்கொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக்கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்யவில்லை.

இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­), நூல் : புகாரி (1838)

முகத்திரை அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் இஹ்ராமின் போது மாத்திரம் அதை அணியக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இஹ்ராம் அணியாத மற்ற பெண்கள் முகத்திரை அணிவதற்கு தடை இல்லை என்பதை இதி­ருந்து விளங்கிக்கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களுடன் ஆயிஷா (ர­) அவர்கள் ஒரு போருக்குச் சென்று திரும்பி வந்துகொண்டிருந்த போது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒரிடத்தில் ஆயிஷா (ர­) அவர்கள் ஒட்டகச் சிவிகையில் இருந்து இறங்கினார்கள். ஆயிஷா (ர­) அவர்கள் திரும்பி வருவதற்குள் படை சென்றுவிட்டது. ஸஃப்வான் பின் முஅத்தல் என்ற நபித்தோழர் ஆயிஷா (ர­) அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஆயிஷா (ர­) அவர்கள் தம் முகத்தை மறைத்துக்கொண்டார்கள்.

ஸஃப்வான் பின் முஅத்தல் என்னை அறிந்து கொண்டு இன்னா­ல்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ர­),நூல் : புகாரி (4750)

எனவே பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை. என்றாலும் முகத்தை மறைப்பதால் நம் வாழ்க்கையில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்.

ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

பெண்கள் தாம் என்று இல்லை. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லா விட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையை கேடையமாக பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாக செயல்படுகிறார்கள். எனவே தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.