விண்ணில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?

ஓர் ஆன்மீக அறிவியல் கண்ணோட்டம்.

 உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று நாம் வாழும் காலம் வரை இவ்வுலகில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வளர்சிகள் அழிவுகள் புதிய தோற்றங்கள் என்று நாளுக்கு நாள் இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இந்த உலகின் வின்வெளி பற்றிய ஆய்வுகளும் அபூர்வங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வின்வெளியின் அமைப்பு அதன் செயற்பாடு பற்றியெல்லாம் பல ஆய்வுகளை அன்று தொடக்கம் இன்று வரை மனிதன் செய்தாலும் இதுவரை இந்த வின்வெளி ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கீங் கலிலியோ கலிலி போன்றவர்கள் தொடக்கம் இன்றுள்ள விஞ்ஞானிகள் வரை அனைவரையும் இந்த வின்வெளி பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது.இனி விஷயத்திற்கு வருவோம்.

பறக்கும் தட்டு விளக்கம் என்ன?

பறக்கும் தட்டு என்ற பெயரில் ஒன்று இந்த உலகுக்கு அடிக்கடி வந்து போவதாகவும் அதில் ஏதோ மனிதனை ஒத்த தோற்றத்தில் உள்ளவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட வடிவத்தில் ஒரு வாகனத்தை வைத்துக் கொள்வதாகவும் அது உலகில் உள்ள வாகனங்களை விட வித்தியாசப் படுவதாகவும் சொல்லப் படுகிறது.ஆனால் இவையனைத்தும் வடி கட்டிய பொய்களாகும்.

(மேலதிக விபரங்களுக்கு பறக்கும் தட்டு பற்றிய நமது ஆய்வுக் கட்டுரையை படிக்கவும்)

மனிதன் விண்ணில் வாழ முடியுமா?

இந்த உலகைப் பொருத்தவரை மனிதன் வாழ்வதற்குறிய சிறப்பான தகுதியான இடமாக இறைவன் பூமியை மாத்திரம் தான் அமைத்திருக்கிறான் பூமியல்லாத எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாதென்பது உருதியாக்கப் பட்ட விஞ்ஞானமாக இருக்கிறது.

இதையே திருமறைக் குர்ஆனும் தெளிவாக உறுதிப் படுத்துகிறது.

பூமியில் தான் வாழ முடியும்.

மனிதன் பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் என்பதை கீழ்க்கானும் திருமறை வசனங்கள் தெளிவா எடுத்தியம்புகின்றன.

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்!உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளனஎன்றும் நாம் கூறினோம்.(2:36)

(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர்.உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன என்று (இறைவன்) கூறினான்.(7:24)’அதிலேயே(பூமியிலேயே)வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்என்றும் கூறினான்.(7:25)

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம்.குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்(7:10)

அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான்.அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்(30:25)

இவ்வசனங்களில் இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம். சூரியனிலிருந்து 5 80 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது.

முதலாவது இக்கோளில் காற்று இல்லை. அடுத்து இக்கோளின் அதிகப் பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.

அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையே இக்கோளில் உள்ளது.

வீனஸ் எனப்படும் வெள்ளிக் கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10 08 00 000 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கும் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இதுவும் பூமியின் அதிகப்பட்ச வெப்பத்தைப் போல் சுமார் 10 மடங்கு ஆகும். மேலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் இங்கு இல்லை. எனவே இது கொதிக்கும் கோள் என்று அழைக்கப்படுகிறது. இங்கும் மனிதர்கள் வாழ முடியாது.

மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கோடி கி.மீ. தொலை விலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகித அளவுக்குத் தான் ஆக்ஸிஜன் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும் குறைந்தபட்ச வெப்பம் மைனஸ் 17 டிகிரியும் ஆகும். இதனால் இங்கும் மனிதன் வாழ முடியாது.

ஜூபிடர் எனும் வியாழன் கோள் சூரியனிலிருந்து 78 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கும் மனிதன் வாழ முடியாது.

சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு எப்பொருளும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே உள்ளது.

யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கி.மீ. தொலைவிலும் நெப்டிய+ன் கிரகம் சூரியனிலிருந்து 450 கோடி கி.மீ. தொலைவிலும் புலூட்டோ கிரகம் சூரியனிலிருந்து 590 கோடி கி.மீ. தொலைவிலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில் கற்பனை செய்ய முடியாத கடுங்குளிர் நிலவுகின்றது. எனவே இவற்றிலும் மனிதர்கள் வாழ முடியாது.

பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர் காற்று எதுவும் இங்கு இல்லை. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும் இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.

சூரியனிலிருந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள ப+மியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும்.

சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.

மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும் குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும். சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். உயிர் வாழ அவசியமான காற்றும் ப+மியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில் அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது.

அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனி லிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை குளிர் வசந்தம் மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன. வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது.

இறைவன் சொன்ன வார்த்தைகள் விஞ்ஞானமே தோற்றுப் போகும் அளவு மிகவும் உருதியானதாக உள்ளது.

ஏன் எனில் மனிதன் சுகமாக தனது வாழ்வை இந்தப் பூமியில் மாத்திரம் தான் கழிக்க முடியும் என்பது முக்காலமும் அறிந்த இறைவன் விதித்த முறையாகும்.

ஆக எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டாலும் கடைசிவரை மனிதன் இந்த பூமியில் மாத்திரம் தான் வாழ முடியும் ஒரு சில நாட்கள் மாத்திரம் தான் எடுத்துச் செல்லும் ஆக்சிஜனைப் பயன் படுத்தி மற்ற கோள்களில் தங்க முடியும் அது தவிர பூமியில் வாழ்வதைப் போல் வாழ இயலாது என்பது தெளிவாகி விட்டது.

விண்ணில் உயிரினங்கள் வாழ்கிறதா?

பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்று திருமறை வசனம் தெரிவித்தது விஞ்ஞானமும் அதனை உருதிப்படுத்தியது.ஆனால் வின்னில் மனிதனால் வாழ முடியாதே தவிர அங்கு சில உயிரினங்கள் வாழ்கின்றன என்று விஞ்ஞானம் ஊகிப்பதை திருமறை மறுக்கவில்லை.

பூமியல்லாத மற்ற இடங்களில் மற்ற சில உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன என்று திருமறையில் இறைவனே குறிப்பிடுகிறான்.

(ஆனால் பறக்கும் தட்டு தொடர்பான உயிரினங்கள் பற்றிய செய்திகள் பொய்யானவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்)

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்(42:29) மேற்கண்ட வசனத்தின் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும்என்ற வாசகத்தின் மூலம் பூமி அல்லாத மற்ற இடங்களில் நமது விஞ்ஞானத்தினால் இது வரை கண்டு பிடிக்காத (அறிவியல் வளர்ச்சியின் மூலம் பிற்காலத்தில் கண்டு பிடிக்கலாம்) உயிரினங்களை இறைவன் படைத்திருக்கும் செய்தியை தெளிவாக குறிப்பிடுகிறான்.

துருவப் பிரதேச ஆய்வின் போது செவ்வாயில் இருந்து விழுந்ததாக சொல்லப் பட்ட பனியைப் பற்றி ஆய்வு செய்யப் பட்டதில் அதன் உள்ளே இருந்த பாசிலைப் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.அந்த பாசிலைப் பற்றிய செய்திகள் உண்மையானதாக இருப்பின் திருமறையின் இவ்வசனத்தை விஞ்ஞானம் உருதிப் படுத்திய பட்டியலில் முதன் முதலில் இந்தப் பாசிலைப் பற்றிய செய்தியே இடம் பிடிக்கும்.

இந்தப் பாசிலைப் பற்றிய செய்தி செவ்வாய் மற்றும் அதைப் போன்ற மற்ற கோள்களிலும் சூட்சும உயிரினங்கள் (Micro-Organism) இருப்பதாகவே கூறுகின்றன.

உதாரணமாக மனிதனாகிய நாம் கரிமம் அடிப்படையிலான உயிரினமாக (Cabom Based Organism) படைக்கப் பட்டுள்ளோம்.இதே போல இந்தப் பேரண்டத்தின் மற்றக் கோள்களில் சிலிக்கான் (Silicon) அல்லது கந்தகம் (Salphur) அல்லது அதைப் போன்ற வேறு தனிமங்களை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கலாம்.

ஆனால் அப்படிப் பட்ட கோள்களில் புவிவாழ் உயிரினங்களாகிய நாம் ஒரு போதும் கண்டிப்பாக வாழ முடியாது என்பது தெளிவான விஷயமாகும்.

எது எப்படியோ விஞ்ஞானம் சொல்கிறதோ இல்லையோ முக்காலமும் அறிந்த இறைவன் பூமியில் மாத்திரம் தான் மனிதன் வாழ முடியும் என்றும் பூமியல்லாத மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றும்  தெளிவாக சொல்லியுள்ளான் இதுவே நமது நம்பிக்கைக்கு போதுமான ஆதாரமாகும்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s