பெண்கள் காது, மூக்கு குத்துதல் பற்றிய தெளிவு.

மனிதப் படைப்பில் மிக முக்கியமானவர்களாக ஆண்,பெண் என்ற இரண்டு சாராரை இறைவன் படைத்திருக்கிறான். படைக்கும் ஆற்றலை தனக்கு மாத்திரமே சொந்தமாக்கியிருக்கும் இறைவன் தனது படைப்பை மிகவும் அழகாகவும், நேரத்தியாகவும் உருவாக்கியிருக்கிறான்.

ஆனால் ஆணுக்குத் துணையாக படைக்கப்பட்ட பெண்கள் இன்று தங்கள் காதுகளை துளையிட்டு அதிலே ஆபரணங்களை அணிகிறார்கள். இது மார்க்க அடிப்படையில் ஆகுமாக்கப்பட்டதா? இது இன்று நமக்கு மத்தியில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை பிரச்சினைகளில் ஒன்றாகும்.

இந்தப் பிரச்சினையைப் பொருத்தவரை அறிஞர்கள் இரண்டு விதமான கருத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் காது, மூக்கை துளையிட்டு அதிலே ஆபரணங்கள் அணிவது தடையில்லை என்பது முதல் சாராரின் வாதமாகும்.

இரண்டாவது சாராரின் வாதம் பெண்கள் காதுகளிலோ, மூக்கிலோ துளையிட்டு எந்த ஆபரணங்களையும் அணியக்கூடாது.

இந்த இரண்டு சாராரின் கருத்துக்களில் எது சரியானது என்பதை நாம் ஆய்வு செய்து பார்த்தால் இரண்டாவது கருத்தான பெண்கள் தங்கள் உடம்பிpல் துளையிட்டு எந்த ஆபரணங்களையும் அணியக் கூடாது என்ற கருத்துத்தான் சரியானதாக அமைகிறது.

அதற்கான ஆதாரங்களையும், எதிர் வாதங்களையும் பார்ப்போம்.

இறைவனிடம், ஷைத்தானின் உரையாடல்.

إِنْ يَدْعُونَ مِنْ دُونِهِ إِلَّا إِنَاثًا وَإِنْ يَدْعُونَ إِلَّا شَيْطَانًا مَرِيدًا (117) لَعَنَهُ اللَّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا (118) وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا النساء : 117 – 119

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்துவிட்டான். உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன், அவர்களை வழி கெடுப்பேன், அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்.அவர்களுக்குக் கட்டளையிடுவேன், அவர்கள் கால் நடைகளின் காதுகளை அறுப்பார்கள்.(மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன். அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள். என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொருப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான இழப்பை அடைந்து விட்டான்.(4: 118,119)

மேற்கண்ட வசனத்தில் ஷைத்தான் மக்களை வழிகெடுக்கும் விதத்தைப் பற்றி சொல்லும் போது ஒரு முக்கியமான முறையைச் சொல்லிக் காட்டுகிறான்.

அதில் ஒரு முறையாக அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள். என்று இறைவனிடம் ஷைத்தான் சொல்லிக் காட்டுகிறான்.

இறைவன் நம்மை படைத்த கோலத்தையே மாற்றுவதற்கு ஷைத்தான் நம்மைத் தூண்டுவான் என்பது மேற்கண்ட வசனத்தில் நமக்குத் தெரிய வருகிறது.

படைப்பதில் வல்லவன் இறைவனே !

அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.(23:14)

படைப்பதிலேயே அழகாகப் படைப்பவன் அல்லாஹ்தான் என்று இறைவன் தன்னைப்பற்றி சொல்லிக் காட்டுகிறான்.

الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا  الفرقان : 2

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது.அவன் பிள்ளைகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. ஒவ்வொரு பொருளையும் படைத்தான் அதைத் திட்டமிட்டு அமைத்தான்.(25:2)

وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ المؤمنون : 17

உங்களுக்கு மேலே ஏழு வழிகளைப் படைத்துள்ளோம்.இப்படைப்பைப் பற்றி நாம் கவனமற்று இருக்கவில்லை.(23:17)

ஒவ்வொரு பொருளையும், கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.(54:49)

வானங்களையும், பூமியையும் தக்க காரணத்துடன் அவன் படைத்தான், உங்களை வடிவமைத்து உங்கள் வடிவங்களை அவன் அழகுபடுத்தினான். அவனிடமே மீளுதல் உண்டு.(64:3)

படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுற்பமானவன், நன்கறிந்தவன்.(67:14)

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.(95:4)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் இறைவன் தான் அழகிய படைப்பாளம் என்பதை மிகத் தெளிவாக நமக்கு விளக்குகின்றன. இவைன் தனது படைப்பில் ஆண் ஒருவன் எப்படி இருக்க வேண்டும், பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுப் படைத்திருக்கும் போது,பெண்கள் தங்கள் காதுகளை துளையிட்டுக் கொள்வது அவனுடைய படைப்பை குறை காண்பதாகும்.

இறைவனுக்கு சரியாகப் படைக்கத் தெரியவில்லை என்பதைச் சொல்லாமல் சொல்வதைப் போன்றதாகும்.

ஏன் என்றால் உலகில் உள்ள எந்த மனிதனும் தான் பிறக்கும் போது காதில் துளையுடன் பிறப்பதில்லை. அப்படிப் பிறக்காத போது நாமாக துளையை உண்டாக்குவது அதிகப் பிரசங்கித் தனமாகும்.

ஒருவருக்கு உடலியல் ரீதியாக ஒரு குறையிருந்து அதை அவர் சரி செய்தால் அது இறைவனின் படைப்பைக் குறை சொல்வதாக ஆகாது. உதாரணத்திற்கு எல்லா மனிதர்களுடைய பற்களும் சரியாக இருக்கும் போது ஒருவருடைய பற்கள் மாத்திரம் கொஞ்சம் நீட்டிக் கொண்டு நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது அவர் அந்த பற்களை மறுத்துவ ரீதியாக சரி செய்தால் அது இறைவனின் படைப்பில் மாற்றம் ஏற்படுத்தியதாக கருத முடியாது.

ஏன் என்றால் மனிதர்களின் பற்கள் எப்படி இருக்கிறது என்று இறைவன் பல கோடி மக்களின் பற்களின் மூலம் நமக்குக் காட்டியிருக்கிறான். இப்படியிருக்கும் போது ஒருவரின் பல் மாத்திரம் நீட்டிக்கொண்டிருந்தால் அது அவருடைய உடலியல் பிரச்சினை அதை சரி செய்வதை யாரும் குறை காண முடியாது.

ஆனால் உலகில் பிறக்கும் பெண்கள் தங்கள் காதுகளிலோ, மூக்கிலோ எந்தவிதமான துளையுமில்லாமல் பிறக்கும் போது நாம் அதில் துளையிடுவோமாயின் இறைவனுக்குத் தெரியாத ஒரு அழகிய படை கோலம் நமக்குத் தெரியும் என்ற மமதை அந்த இடத்தில் உருவாகிறது.

பெண்களுக்கு காதுகளில் அல்லது மூக்கில் துளை போடுவது அழகு என்றிருந்தால் படைக்கும் போதே  ஒரு துளையை வைத்துப் படைப்பதற்கு இறைவனுக்கு முடியாதா?

நபியின் சாபத்திற்கு உள்ளானவர்கள்.

நபியவர்கள் சிலரைப் பார்த்து சபிக்கும் போது இறைவனி படைப்பை மாற்றுபவர்களையும் சோத்து சபிக்கிறார்கள்.

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ مَا لِي لَا أَلْعَنُ مَنْ لَعَنَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي كِتَابِ اللَّهِ (خ : 5943)

அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத் தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டதே என்று சொன்னார்கள்.(புகாரி : 5943,5948)

அல்லாஹ் படைத்த படைப்பை விட அழகு என்று நினைத்துக் கொண்டு யாராவது மேலதிகமான உடம்பில் மாற்றம் ஏற்படுத்தினால் அது சாபத்திற்கு உரிய செயல் என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மேற்கண்ட செய்தியில் இருந்தும் எந்தக் காரணம் கொண்டும் பெண்கள் காது, மூக்குகளில் துளையிடக் கூடாது என்பது தெளிவாகிறது.

எதிர் கேள்விகளும், நமது பதில்களும்.

முதலாவது வாதம் :

கத்னா (ஸ{ன்னத்) செய்வது உருவத்தை மாற்றுவதாக அமையாதா?

நமது பதில் :

இந்தக் கேள்விக்கு இரண்டு விதமான பதில்கள் இருக்கிறது.ஒன்ற கத்னா செய்வதைப் பொருத்தவரையில் இறைவன் கத்னா செய்வதற்கு அவனுடைய நபியின் மூலம் நமக்குக் கட்டளை பிறப்பித்துள்ளான். நபியவர்களே கட்டளையிட்டதை நாம் செய்வது எப்படி உருவ மாற்றமாக அமையும்? அது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இஸ்லாம் நமக்குத் தெளிவாக அறிவித்துவிட்டது.

இரண்டாவது கத்னா செய்பவர்கள் யாரும் அழகுக்காக கத்னா செய்வதில்லை. கருவரைக்குள் நாம் இருக்கும் காலம் வரை மர்ம உருப்பு மூடியிருப்பதுதான் குழந்தையின் உடலுக்கு நல்லது.

வெளியில் வந்தவுடன் அதை அகற்றுவதுதான் உடலுக்கு உகந்தது என்பது விஞ்ஞானமே இன்று ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் தான் அதனால் தான் அதனை நபியவர்களே அகற்றும் படி கட்டளையிட்டுள்ளார்கள் இது இறைவனின் படைப்பில் குறை காண்பதாக ஆகாது.

இரண்டாவது வாதம் :

நபியின் காலத்தில் பெண்களே தங்கள் காதணிகளைக் கலட்டிப் போட்டுள்ளார்கள் என்று ஹதீஸ் கூறுகிறது.பெண்கள் காது குத்துவது ஹராம் என்றால் நபியின் காலத்தில் பெண்கள் அணிந்திருக்கிறார்கள் என்ற செய்திக்கு என்ன பதில்?

நமது பதில் :

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَيُّوبَ قَالَ سَمِعْتُ عَطَاءً قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ قَالَ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ عَطَاءٌ أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ وَمَعَهُ بِلَالٌ فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعْ فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ فَجَعَلَتْ الْمَرْأَةُ تُلْقِي الْقُرْطَ وَالْخَاتَمَ وَبِلَالٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ قَالَ أَبُو عَبْد اللَّهِ وَقَالَ إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ عَطَاءٍ وَقَالَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (خ : 98

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளை யும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக் கிறேன்.(புகாரி : 98)

மேற்கண்ட ஹதீஸில் பெண்கள் பெருநாள் தினத்தில் கொடுத்த ஸதகாவைப் பற்றிப் பேசுகிறது. அதாவது ஸத்தகா கொடுக்கும் போது அந்தப் பெண்கள் தங்கள் காதுகளில் அணிந்திருந்த காதணிகளையும் எடுத்துப் போடுகிறார்கள்.

இந்தச் செய்தியில் பெண்கள் காதணிகளைப் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்ற தகவல் உள்ளடங்கியிருக்கிறது. காதுகளில் துளையிட்டிருந்தால் தானே காதணி அணிந்திருக்க முடியும் இல்லாவிட்டால் எப்படி அணிவது என்ற கேள்வியை இதிலிருந்து முன்வைக்கிறார்கள்.

முதலில் காதுகளில் துளையிட்டால்தான் காதணி அணிய முடியும் என்பதில்லை காதுகளில் துளையிடாமலும் காதணி அணிய முடியும். காதுகளில் துளையிட்டுத்தான் நபியின் காலத்தில் பெண்கள் காதணிகளை அணிந்திருந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை வைத்து நாமும் காதுகளில் துளையிடலாம் என்ற வாதத்தை யாரும் முன் வைக்க முடியாது.

நபியவர்களின் முன்னிலையில் யாராவது ஒரு பெண்மணி தனது குழந்தையை அழைத்து வந்து நபியின் கண் முன்னால் காது குத்தி அதனை நபியவர்கள் தடுக்காமல் இருந்திருந்தால் காது குத்துவதை நபியவர்கள் அங்கீகரித்தார்கள் என்ற முடிவுக்கு வரலாம்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் மேலதிகமாக நமக்குத் தெரிய வரும் தகவல் என்னவெனில் காது குத்தக் கூடாது என்ற தகவல் தெரியாதவர்கள் இதற்க்கு முன் காது குத்தியிருந்தால் அதைத் தொடர முடியும், கலற்றிப் போடத்தேவையில்லை. என்பது மட்டும் தான் இதில் உள்ள மேலதிக தகவலாகும்.ஆக மொத்தத்தில் இறைவனின் படைப்பை மாற்ற முயலும் இந்தக் காரியத்தை யாரும் செய்யக் கூடாது.

இதற்கு முன் யாராவது காது குத்தியிருந்தால் அவர்கள் அதனை தொடரலாம் என்பதே தெளிவான முடிவாகும்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.