நிர்வாணமாக குளிக்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?

இன்றைய நாட்களில் பல சகோதரர்கள் இந்தக் கேள்வியை முன்வைக்கிறார்கள்.அதாவது ஒருவர் தனிமையில் குளிக்கின்ற நேரங்களில் உடம்பில் துணியின்றி நிர்வானமாக குழிக்க முடியுமா?

இந்தச் கேள்வியை பொருத்தவரை இரண்டு விதமான கருத்துக்கள் அறிஞர்களால் முன்வைக்கப் படுகின்றது.

முதலாவது :தனிமையில் நிர்வாணமாக குளிக்களாம்.

இரண்டாவது :எந்தக் காரணம் கொண்டும் தனிமையில் கூட நிர்வாணமாக குளிக்கக் கூடாது.

இந்த இரண்டு கருத்துக்களில் இரண்டாவது கருத்துத் தான் சரியானதாகும்.

அதாவது முதல் கருத்தை சொல்லக் கூடியவர்கள் வைக்கும் அதாரத்தையும் அதற்குறிய பதிலையும் தெளிவாக நாம் தெரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்குறிய பதிலை அறிந்து கொள்ளலாம்.

நிர்வாணமாக குழிக்க முடியும் என்று சொல்லக் கூடியவர்கள் நபி மூஸா அவர்கள் சம்பந்தப் பட்ட ஒரு சம்பவத்தை அதாரமாக முன்வைக்கிறார்கள்.

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا عَوْفٌ عَنْ الْحَسَنِ وَمُحَمَّدٍ وَخِلَاسٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مُوسَى كَانَ رَجُلًا حَيِيًّا سِتِّيرًا لَا يُرَى مِنْ جِلْدِهِ شَيْءٌ اسْتِحْيَاءً مِنْهُ فَآذَاهُ مَنْ آذَاهُ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَقَالُوا مَا يَسْتَتِرُ هَذَا التَّسَتُّرَ إِلَّا مِنْ عَيْبٍ بِجِلْدِهِ إِمَّا بَرَصٌ وَإِمَّا أُدْرَةٌ وَإِمَّا آفَةٌ وَإِنَّ اللَّهَ أَرَادَ أَنْ يُبَرِّئَهُ مِمَّا قَالُوا لِمُوسَى فَخَلَا يَوْمًا وَحْدَهُ فَوَضَعَ ثِيَابَهُ عَلَى الْحَجَرِ ثُمَّ اغْتَسَلَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ إِلَى ثِيَابِهِ لِيَأْخُذَهَا وَإِنَّ الْحَجَرَ عَدَا بِثَوْبِهِ فَأَخَذَ مُوسَى عَصَاهُ وَطَلَبَ الْحَجَرَ فَجَعَلَ يَقُولُ ثَوْبِي حَجَرُ ثَوْبِي حَجَرُ حَتَّى انْتَهَى إِلَى مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَرَأَوْهُ عُرْيَانًا أَحْسَنَ مَا خَلَقَ اللَّهُ وَأَبْرَأَهُ مِمَّا يَقُولُونَ وَقَامَ الْحَجَرُ فَأَخَذَ ثَوْبَهُ فَلَبِسَهُ وَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا بِعَصَاهُ فَوَاللَّهِ إِنَّ بِالْحَجَرِ لَنَدَبًا مِنْ أَثَرِ ضَرْبِهِ ثَلَاثًا أَوْ أَرْبَعًا أَوْ خَمْسًا فَذَلِكَ قَوْلُهُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا(بخاري :3404

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது பனூஇஸ்ராயீல்கüல் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ”இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்க வேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்; அல்லது வேறு ஏதேனும் குறைபாடு இருக்க வேண்டும்என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகüலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். ஆகவே (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூசா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்து விட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடலாயிற்று. மூசா (அலை) அவர்கள் தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப் பிடிக்க முனைந்தார்கள். கல்லே என் துணி! கல்லே என் துணி!என்று (அதை விரட்டிச் சென்றபடி) குரல் எழுப்பலானார்கள்.

இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பனூஇஸ்ராயீல் சமுதாயத்தினர் மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் தாம் சொன்ன குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்களாகவும் இருப்பதை அவர்களை ஆடையில்லா கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக் கொண்டார்கள். கல் (ஓடாமல்) நின்று விட்டது. உடனே மூசா (அலை) அவர்கள் தமது துணியை எடுத்துக் கொண்டு (கோபத்தில்) தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கலானார்கள்.

அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தழும்புகள் (இன்னும்) உள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தான் இறை நம்பிக்கை கொண்டவர்களே! மூசாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிருபித்து விட்டான். மேலும் அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்என்னும் (33:69) இறைவசனம் குறிக்கின்றது

(நூல்  புகாரி 3404)

இந்தச் செய்தியை முன்வைத்து சிலர் மூஸா நபியவர்கள் நிர்வாணமாக குளித்துள்ளதால் நாமும் குழிக்கலாம் என வாதிடுகிறார்கள்.

ஆனால் இந்த வாதம் தவறானதாகும்.

முதலில் இவர்களுக்கு இந்தச் செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை ஏன் என்றால் மூஸா நபியவர்கள் உடலில் குறைபாடுள்ளவர்கள் என்று மக்கள் நம்பி மூஸா நபியவர்களுக்கு துன்பம் கொடுத்ததினால் தான் இறைவனே மூஸா நபியவர்கள் விஷயத்தில் இப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்துகிறான்.

அத்துடன் மூஸா நபியவர்கள் தனது ஆடையை எடுப்பதற்காக கல்லே என் துணி கல்லே என் துணி என்று சத்தம் போட்டுக் கொண்டு சென்றதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.

மூஸா நபியவர்க விரும்பி தானாக இப்படி குழிக்கவில்லை இறைவன் அந்த சமுதாயத்திற்கு உண்மையை உணர்த்துவதற்காக செய்த ஏற்பாடுதான் இது ஆக இந்தச் செய்தியை நாம் ஆதாரமாக கொண்டு நிர்வாணமாக குழிக்க முடியும் என்ற சட்டத்தை முன்வைக்க எந்த முகாந்திரமும் இல்லை.

இரண்டாவது இந்தச் சட்டத்தை நபியவர்கள் மாற்றி விட்டார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا أَبِي ح و حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى نَحْوَهُ عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ قَالَ إِنْ اسْتَطَعْتَ أَنْ لَا يَرَيَنَّهَا أَحَدٌ فَلَا يَرَيَنَّهَا قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ أَحَدُنَا خَالِيًا قَالَ اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنْ النَّاسِ(أبو داود: 3501

உன் மனைவி அடிமை ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் உன் அந்தரங்கப்பகுதியை பாதுகாத்துக் கொள் என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சிலர் சிலருடன் கலந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. (அப்போது சில பகுதிகள் தெரிய வாய்ப்புள்ளதே) என்று நான் கேட்டேன். அதை மற்ற எவரும் பார்க்க முடியாமல் வைத்துக்கொள்ள சக்திபெற்றிருந்தால் அதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.எங்களில் ஒருவர் தனித்திருக்கும் போது? என்று நான் கேட்டேன். மனிதர்களை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிவாய்ந்தவன்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி), நூல் : அபூதாவுத் (3501)

மேற்கண்ட செய்தியில் தனிமையில் இருக்கும் போது (அந்தரங்க இடங்கள் தெரிகின்ற வகையில்) நிர்வாணமாக இருப்பது பற்றி கேட்கப் படுகிறது.

அதற்கு பதில் சொன்ன நபியவர்கள் மனிதர்களை விட அல்லாஹ்விடமே வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதி வாய்ந்தவான் என்று சொல்கிறார்கள்.

மனிதர்கள் நம்மைப் பார்க்காவிட்டாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.அதனால் தான் வெட்கப் படுவதற்கு மிக தகுதி வாய்ந்தவன் அல்லாஹ் தான் என்பதை நபியவர்கள் நமக்கு தெளிவாக உணர்த்துகிறார்கள்.

ஆக ஆண்கள் பெண்கள் யாராக இருந்தாலும் நிர்வாணமாக குளிப்பது மார்க்கத்தின் அடிப்படையில் தவரான செயலாகும் நாம் குழிக்கின்ற நேரங்களில் கண்டிப்பாக தனிமையில் குளித்தாலும் அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்பதை மேற்கண்ட அபூதாவுதின் அறிவிப்பில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.