தோல்வி! வீழ்வதற்கல்ல வாழ்வதற்கே!

என்னால் இனிமேல் முடியாது, அதைப் பற்றிப் பேசாதீர்கள், கேட்டாலே எரிச்சலாக உள்ளது, இனிமேல் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன், என் வாழ்கை அவ்வளவு தான் இது போன்ற வார்த்தைகளை பேசுபவர்களை நாம் அடிக்கடி நமது வாழ்வில் சந்திப்பதுண்டு. காரணம் கேட்டால் தோற்று விட்டேன் என்பார்கள்.

தோழ்வியை சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத காரணத்தினால் வெளியாகும் வார்த்தைகள் தாம் அவை. வாழ்க்கை என்றால் தோழ்வி என்றொன்று இல்லாமல் பயணிக்க வேண்டும் என்ற அதீத ஆசை நம் ஆழ் மனதில் வேரூன்றி இருப்பதுதான் அதற்கான காரணம்.

பாதை என்றால் வலைவுகள் இருக்கத்தான் செய்யும் வலைவுகள் இல்லாமல் எங்கும் திரும்பாமலேயே நான் பயணிக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி அறிவுடமையாகும்.

ஓடுகின்ற நதியினைப் பற்றி கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். எங்கோ ஒரு மலையில் ஆரம்பிக்கிறது. பல பள்ளங்களைத் தாண்டி, எத்தனையோ இடத்தில் வீழ்ந்து, கற்பாரைகளை தனதாக்கிக் கொண்டுதான் இறுதியில் கடலோடு சங்கமித்து அமைதியாகின்றது.

பள்ளத்தில் விழாமல் ஆறு உருவாக முடியுமா?

பக்குவப் படாமல் வெற்றியை நமதாக்க முடியுமா?

தோழ்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் போவதற்குறிய முக்கிய காரணம் என்ன தெரியுமா? நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிப்பதில்லை. அடுத்தவர்களுக்கு அந்த அதிகாரத்தை நீங்கள் கொடுத்துவிடுவதினால் தான் நீங்கள் பிரச்சினைப் படவேண்டியுள்ளது.

ஒரு காரியத்தை வெல்வதற்கான முயற்சி, இலக்கு, குறிக்கோல் அனைத்தும் உங்களுடையதாக இருக்கும் போது அதன் முடிவை மாத்திரம் மற்றவர்கள் தீர்மானிப்பதற்கு ஏன் விடவேண்டும்?

வெற்றி, தோழ்வி இரண்டும் அடுத்தவர்கள் பார்வையாகத் தான் இருக்கிறது. ஒரு விளையாட்டில் இந்த வருடம் நீங்கள் ஜெயித்தால் அதனை வெற்றி என்று கொண்டாடுபவர்கள் ஒரு வேலை அடுத்த வருடம் நீங்கள் அந்த விளையாட்டில் ஜெயிக்க முடியாமல் போனால் அதனை தோழ்வி என்று வர்ணிப்பார்கள்.

ஆனால் இவை இரண்டையும் இரு சம்வங்களாக நினைத்தீர்கள் என்றால் இந்தப் பிரச்சினை உருவாகாது.

நீங்கள் செய்த முயற்சி போதுமானதாக இருந்தால் நீங்கள் ஜெயித்தீர்கள் என்று ஊர் பேசும், முயற்சி போதாவிட்டால் தோழ்வி என்று பேசுவார்கள் ஆக மொத்தத்தில் முயற்சியின் ஏற்ற இரக்கத்தின் வெளிப்பாடுதான் வெற்றி, தோழ்வி என்று பிரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் போதுமானதாகும்.

“வெற்றி என்பது அடுத்தவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவதற்கானது” என்ற எண்ணத்தில் இருந்து நாம் விடுபடாத வரையில் தோழ்விகளின் ரனத்தில் இருந்து உங்களை நீங்கள் மீட்டுக் கொள்ளவே முடியாது.

நாம் ஆசைப்படும் விஷயத்தில் வெற்றி பெற முடியாது என்பதில்லை இறைவன் நாடினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். ஆனால் அதற்கான நமது உழைப்பு சரியாக இருக்க வேண்டும்.

நூறு சதவீதம் உழைத்தால் கிடைக்கும் வெற்றியை வெறும் இருபத்தி ஐந்து சதவீத உழைப்பினால் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது எப்படி சாத்தியமாகும்.

“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டானாம்” என்ற கதையைப் போல் ஆகிவிடாதா?

நமது உழைப்பின் போதாக் குறையை உணர முடியாத காரணத்தினால், தோற்று விட்டோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடுகிறோம்.

உலகில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களின் வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் அவர்களின் உழைப்பின் வேகவும், விவேகமும் நமக்கு அழகாகத் தென்படும்.

வரலாற்றின் சில பக்கங்கள் இதோ………………..

உலக வரலாற்றில் மக்கள் மனங்களில் இடம் பிடித்த 100 பேர்களின் வரலாற்றைத் தொகுத்த மைக்கல் ஹெச் ஹாட் என்பவர் நுறு பேரில் முதல் இடத்தை நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கினார். ஏன் தெரியுமா?

வரலாற்றில் வெற்றி பெற்றவர்களை நாம் பார்த்திருக்கிறோம் வரலாற்றையே வென்றவர் என்று ஒருவருக்கு பெயர் சொல்வதன்றால் அது நபி முஹம்மத் (ஸல்) அவர்களாகத்தான் இருக்க முடியும்.

ஏன் தெரியுமா?

நபியவர்களைப் போல் இந்த உலகில் மிகப் பெரும் வெற்றி பெற்றவர் யாரும் இல்லை. காரணம். வெற்றி, தோழ்வி இரண்டையும் ஒரு சம நிலைபாட்டில் நபியவர்கள் வைத்துப் பார்த்தார்கள்.

வெற்றி கிடைத்தாலும் அது இறைவன் மூலம் கிடைத்தது. தோழ்வி என்றாலும் அது இறைவனின் ஏற்பாட்டில் நடந்தது. ஆனால் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

வெற்றி கிடைத்தால் சந்தோஷத்திற்கு அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே!) என்று புகழ்ந்த நபியவர்கள். தோழ்வி கிடைத்தால் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன். என்றும் கூறி இறைவன் பக்கமே இரண்டையும் ஒப்படைத்துவிட்டு தனது முயற்சியில் கவணம் செலுத்தினார்கள்.

தோற்றுவிட்டால் நம்மால் முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால் “உஹதுப்” போருக்குப் பின் நடந்த போர்களில் வெற்றி பெருவதை நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது.

சுமார் 318 க்குற்பட்ட படை வீரர்களுடன் போய் “பத்ர்”  யுத்தத்தில் நபியவர்கள் ஜெயித்ததின் மர்மம் என்ன? இறைவனின் உதவி கிடைத்தது நபியவர்களின் சரியான திட்டமிடலும் இருந்தது அதுவே அந்த வெற்றிக்கான காரணம்.

நாம் தோற்கிறோம் என்பதினால் வீழ்கிறோம் என்று அர்த்தமல்ல! மீண்டும் சரியாக எழுவோம் என்பதே அர்த்தம்.

குழந்தை விழுவதினால் தான் சரியாக நடக்கக் கற்றுக் கொள்கிறது. விழாமலேயே நடக்கக் கற்றுக் கொண்டவர்கள் யார்?

குழந்தை கீழே வீழ்வது தோழ்வியென்றால், நீங்களும் நானும் தோற்றுப் போவது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை.

இந்திய வரலாற்றில் கஜினி முகம்மது என்பவரைப் பற்றிப் பேசும் போது அவர் 17 முறை போர் தொடுத்து 16 முறை தோற்றதாகவும், 17வது முறைதான் ஜெயித்ததாகவும் வரலாறு சொல்கிறது.

16 முறை தோற்ற கஜினி முஹம்மது “நமக்கு வாய்த்தது அவ்வளவு தான்” , “எல்லாம் போச்சு” ,  “என்னால் இனிமேல் முடியாது”, “அதைப் பற்றிப் பேசாதீர்கள்”, “கேட்டாலே எரிச்சலாக உள்ளது”, “இனிமேல் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்”, “என் வாழ்கை அவ்வளவு தான்” என்று நாம் சொல்வதைப் போன்று சொல்லியிருந்தால் 17வது முறை ஜெயித்திருக்க முடியுமா என்ன?

உண்மையில் கஜினி முஹம்மது 16 தடவைகள் தோற்கவில்லை. முயற்சி செய்தார் நடக்கவில்லை. இறைவனின் நாட்டம் 16 தடவைகள் முயற்சி செய்து 17வது தடவை வெற்றி பெற்றார்.

இப்படி ஏன் நமது வாழ்வின் தோழ்வி என்று நாம் எண்ணும் விஷயங்களை நம்மால் மாற்றிக் கொள்ள முடிவதில்லை?

நமக்கு கிடைத்தது இவ்வளவுதான் என்று வாழ்வதென்றால் அந்த வாழ்வில் என்ன சுவாரஷ்யம் இருக்கிறது?

வியர்க்காமல், மோதாமல், குட்டுப்படாமல், திட்டு வாங்காமல், கை கால்களில் அடிபடாமல் வாழ்க்கை நடந்தால் வாழ்வில் என்ன இன்பம் இருக்கும்? எல்லாம் ஒரு திட்டமிடலின் படிதான் இயங்குகின்றது?

“விரும்பியது கிடைக்கவில்லை இனிமேல் வாழ்ந்து என்ன பயன்?” என்ற கேள்வியுடன் பயணிப்பதில் என்ன நன்மை விளையப் போகிறது?

நாம் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அது நல்லதுக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முதன்மையாக நமக்கு வேண்டும். அடுத்தவர் பார்த்துப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் தோழ்வியை சகித்துக் கொள்ள முடியாமல் போய்விடும்.

உலகில் சாதனை படைத்தவர்களை பற்றிப் படித்துப் பாருங்கள் அவர்கள்;  தாம் அடுத்தவர்களால் போற்றப்பட வேண்டும் என்பதற்காக அவற்றை செய்யவில்லை அப்படி செய்திருந்தால் அவர்களினால் வெற்றியை நுகர்ந்திருக்க முடியாது.

நாம் செய்யும் காரியத்தில் சரியான ஈடுபாடு காட்டினால் (இறைவன் நாடினால்) நமது முன்னேற்றத்திற்கான வாயில் கதவை நாமே திறக்க முடியும்.

உலகின் பார்வையில் தோற்றவர்கள் அனைவரும் தமது தோழ்வியை, தோழ்வியாக உணரவில்லை. வெற்றிக்கு அருகில் இருப்பதாகத் தான் உணர்ந்தார்கள் அதனால் தான் அவர்களால் வெற்றி பெற முடிந்தது.

அடுத்தவர் மூலையைப் பற்றிய சிந்தனை ஏன்?

நமது வெற்றியை நோக்கிய பயணத்தில் நம் சிந்தனை நம்முடைய மூலையுடன் தொடர்புடையதாகவே இருக்க வேண்டும் அடுத்தவர் மூலையைப் பற்றி நாம் சிந்தித்தால் நமது மூலையை எந்த மூளையில் வைப்பது?

சிலரை நீங்களே பார்க்களாம், “அவனைப் போல் மூலையும், ஆற்றலும் எனக்கிருந்திருந்தால்”என்று எதையெடுத்தாலும் சொல்லுவார்கள். அவனைப் போல் மூலையும், ஆற்றலும் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பது ஒரு புரம் இருக்கட்டும். உங்களுக்கிருந்த மூலையை வைத்து என்ன சாதித்தீர்கள்?

இன்னும் சிலர், ஏதாவது பிரச்சினைகளுக்குறிய தீர்வைத் தேடும் போது, “இதற்கெல்லாம் அவர் இருக்க வேண்டும். கலக்கியிருப்பார்”  என்பார்கள். அவர் இருந்தால் கலக்கியிருப்பார், பிரச்சினையை சரியான முறையில் தீர்த்து வைத்திருப்பார் என்பது ஒருபுறமிருக்கட்டும். நீங்கள் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டி உங்கள் சிந்தனையை எந்தளவுக்குப் பயன்படுத்தினீர்கள்?

இப்படி அடுத்தவர்களின் சிந்தனை, ஆற்றல், முயற்சிகளைப் பற்றி சிந்திப்பதில் காலம் கடத்துவதை விடுத்து அந்நேரத்தில் நமது சிந்தனையைப் பயன்படுத்தி நாம் ஒரு முடிவை எடுக்க முயலும் போது வெற்றி நம்முடையதாகிறதல்லவா?

யோசியுங்கள், யோசியுங்கள் நீங்களும் அறிவாளிதான்…………..

நம்முடைய வெற்றி என்பது எதில் இருக்கிறது? என்று பேரறிஞர் தனிஸ்லாஸ் ஒரு கூட்டத்தில் வைத்துக் கேட்டார். விதவிதமான பதில்கள் வந்து குவிந்தன.

நிறைய பணம் சம்பாதிப்பது, சொந்தமாக ஒரு வீடு கட்டி அழகான ஒரு பெண்ணை திருமணம் செய்வது, குறைந்தது பத்துப் பேருக்காவது நாம் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறுவது, நம்மை இகழ்ந்து பேசியவர்கள் வியக்கும் அளவுக்கு வாழ்க்கைப் பயணத்தில் உயர்ந்து வளர்வது இப்படி ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள்.

பேரறிஞர் தனிஸ்லாஸ் அமைதியாக பதில் தந்தார். “நமது வெற்றி என்பது அடுத்தவர்களின் தோழ்வியில் உள்ளது”

ஆம் நாம் ஒரு போட்டியில் முதலாவது ஆளாக வரவேண்டும் என்றால் கண்டிப்பாக யாரோ ஒருவர் இரண்டாம் ஆளாக பின்தங்க வேண்டும். பின் தங்கும் அளவில் முயற்சியில் குறை உள்ள ஒருவர் இல்லாமல் நாம் எப்படி முதலாம் இடத்தைப் பிடிப்பது?

வெற்றியை ஒரு கொண்டாட்டமாக நாம் நினைப்பதினால் தான் நமது வெற்றி அடுத்தவர்களின் தோழ்வியில் இருக்கிறது என்ற விடை பிறக்கிறது. வெற்றியும், தோழ்வியும் இரு வேறு சம்பவங்கள் என்ற எண்ணம் நம்மில் உருவாகுமானால் “ நமது வெற்றி நமது முயற்சியில் உள்ளது” என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்வோம்.

நாம் தோழ்வியைக் கண்டு துவண்டு போவதற்கான காரணம் வெற்றியைக் கொண்டாடுவது, வெற்றியைக் கொண்டாடும் யாரும் தோழ்வியைக் கொண்டாடுவதில்லையே?

தோழ்வி என்பது தோழ்வியே அல்ல உங்கள் முயற்றி சரியாக உள்ள வரை.

இறைவனை நம்புங்கள் இறுதியில் வெற்றி உங்களுக்கே!

தோழ்வியை சகித்துக் கொள்ள முடியாமல் போவதற்கான முக்கிய காரணங்களில் இறை நம்பிக்கையின்மை முதன்மை இடத்தைப் பெருகிறது.

கடந்த ஆண்டு உலகமே பயப்பட்ட விபரீதம் பற்றிய செய்தி உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

உலகப் பொருளாதார வீழ்ச்சி (World economic collapse) பொருளாதார ஜாம்பவான்களாக அறியப்பட்ட பல நாடுகள் நடுத்தெருவுக்கு வந்துவிடுமோ என்று பலரும் பயந்தார்கள்.

அமெரிக்காவின் 80 க்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலாகிப் போயின.

ஆஸ்த்திரேலியாவின் 50க்கும் மேற்பட்ட வங்கிகள் இந்நிலையைச் சந்தித்தன.

ஐரோப்பா முழுவதும் ஆட்டம் கண்டது.

இந்தியாவின் ஐ.டி துறை(Information Technology Department) அடிமட்டத்திற்கு சென்றுவிடுமோ என்றளவுக்கு அஞ்சப்பட்டது. பொருளாதார வீழ்ச்சி, வேலை வாய்பின்மை, இருந்த வேலையும் பலருக்கு பரிபோனது இப்படி வாழ்வின் கடைசி நிலைக்கு நாம் சென்றுவிட்டோம் என்ற பலரும் எண்ணும் அளவுக்கு உலகம் ஒரு பெரும் விபரீதத்தை உணர்ந்தது.

இந்த விபரீதத்தின் விளைவு பல உயிர்கள் உடலை விட்டு செயற்கையாக நீக்கப்பட்டன. ஆம் தற்கொலையில் போய் முடிந்தது.

தோழ்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை, இழப்பை ஏற்றுக் கொள்ளத் தெரியவில்லை, முடியாமல் போன காரியத்தினால் மனமுடைந்தவர்கள் இறுதியில் உயிர் நீத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

இதுதான் தோழ்வி தரும் பாடமா? இல்லையே!

தோழ்வியை வெல்வதற்குத் தெரிந்தவன் தான் உண்மையில் வெற்றி பெற முடியும் என்பதை மனதில் ஆழமாக பதித்துக் கொள்ளுங்கள்.

இறைவனின் அழகிய வழிகாட்டுதலை நாம் அறிந்திருந்தால் இந்தப் பிரச்சினை யாருக்கும் ஏற்படாது. தோழ்வி பயம் தொலைந்து போய் விடும்.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும்அல்லாஹ் நேசிக்க மாட்டான் (57:23)

இஸ்லாம் விதியைப் பற்றிக் குறிப்பிடுவதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.

நமக்குக் கிடைக்க வேண்டிய ஒன்று கிடைக்காமல் போனதற்காக நாம் கவலைப் படாமல் இருப்பதற்கு விதி பற்றிய நம்பிக்கை நமக்குத் துணையாக இருக்கிறது.

இதே நேரத்தில் நமக்கு கிடைக்கும் வெற்றிகளின் போது நாம் பூரித்துப் போய் விடாமல் இருப்பதற்கும் இந்த விதி பற்றிய தூய நம்பிக்கை துணை நிற்கிறது.

ஒரு மனிதன் தனது முழு முயற்சியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தை செய்கிறான். அது கைகூடவில்லை என்று வைத்துக்கொள்வோம். விதியை நம்புகிறவன் நாம் என்ன முயற்சி செய்தாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா என நினைத்து உடனேயே சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறான்.

அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக்கொள்வோம். இவ்வளவு பாடுபட்டும் கைக்கூடவில்லையே என்று புலம்பியே வாழ்க்கையை அழித்துவிடுவான்.

துன்பங்களைக் கண்டு துவண்டு போகாமல் தடுக்கும் கேடயமே விதி.

“விதியை நம்பி முடங்கிக்கிட” என்று மற்ற மதங்கள் கூறுவது போன்று இஸ்லாம் கூறவில்லை. மனித முன்னேற்றத்திற்கு எந்தத் தடங்களும் ஏற்படாத வகையில்தான் விதியை நம்புமாறு இஸ்லாம் கூறுகிறது.

இந்த நிமிடம் வரை என்ன நடந்துவிட்டதோ அதுதான் நமது விதி என்று நமக்குத் தெரியும். அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பது தெரியாததால் எதிர்கால விதி நமக்குத் தெரியாது.

எது நடந்து முடிந்துவிட்டதோ விதி இன்னதென்று தெரிந்துவிட்டதோ விதியை நம்பி ஆறுதல் படு. எது நடக்கவில்லையோ அதில் நீயாக திட்டமிட்டு செயற்படு என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்றார்கள்.

அப்போது மக்களில் ஒருவர் அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா?இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார்,தீயோர்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு (இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து,நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம் எனும் (திருக்குர்ஆன்92:5-7)வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்- அலீ(ரலி), (நூல் – புகாரி 6605)

இறைவனை நம்பி, அவனுடைய ஏற்பாட்டில் தான் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன என்பதை ஒருவர் ஏற்றுக் கொண்டாலே தோழ்வி பயம் தானாக இல்லாமல் போய்விடும்.

தோழ்வியை நினைத்து நினைத்து தொடர்ந்து தோற்றுக் போவதை விட“தோழ்வி வீழ்வதற்கல்ல வாழ்வதற்குத் தான்” என்ற எண்ணத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்.

இனிமேல் உங்கள் வாழ்வில் தோழ்வியும் வெற்றிதான்.

நமது பிறப்பு சம்பவமாக இருந்தாலும், இறப்பு சரித்திரம் படைக்க வேண்டாமா?

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.