தொலைக் காட்சி நாடகங்களும், சீர்கெட்டுப் போகும் குடும்பங்களும்.

தொலைக்காட்டி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அசிங்கப்பட்டு நிற்பதற்குக் காரணம் அதில் வெளிவரும் தகவல்கள் தாம். நாட்டு நடப்புக்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், சமுதாய விளிப்புணர்வுத் தகவல்கள் என்று நல்ல செய்திகள் வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்று சொல்லுமளவுக்கு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமுதாய சீர்கேட்டை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திறைப்படமாவது ஒளி, ஒலிபரப்பாத சேனலே இருக்க முடியாது. அதே போல் எந்த சேனலில் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் இல்லையோ அந்த சேனல்களை வீட்டுப் பெண்கள் பார்ப்பதற்கே விரும்புவதில்லை.

ஆம் திரைப்படத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கு மூன்று மணி நேரங்கள் வீனடிக்கப்படுகின்றனவென்றால், தொலைக்காட்சித் தொடர்களுக்கு நாளும் பல மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டு குடும்பமே அமர்ந்து ரசிக்கும் நிலை உருவாகியுள்ளது.

குடும்பப் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர்.

இளைஞர்களுக்கான உற்சாகமூட்டும் தொலைக்காட்சித் தொடர் நாடகம்.

இளம் பெண்களின் எண்ணத்திற்கேற்ற தொடர் கதை.

சிறுவர்களை வயப்படுத்தும் தொடர் நாடகம்.

வயோதிபர்களின் வயதுக்கேற்ற நாடகம்.

என்று பல வித்தியாசமான விளம்பரங்களுடன் ஒளிபரப்பப்படுகின்றன இன்றைய நாடகங்கள்.

இந்தியா போன்ற ஆசிய தமிழ் பேசும் மக்களைத் தாண்டி உலகலவில் பல நாடுகளிலும் இந்த தொலைக் காட்சித் தொடர் நாடகங்கள் பிரபலம் பெற்றுள்ளன.

தொலைக்காட்சித் தொடர்களும், விபரீதங்களும்.

தொலைக்காட்சித் தொடர் நாடகங்களுக்காக நேரம் ஒதுக்கி, அவற்றை ரசித்துப் பார்க்கக் கூடிய பெண்கள், மறுமை நாளின் நிகழ்வுகளை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

கற்பனையான கதைகள், பொய்யான தகவல்கள், சமூக சீர்கேடுகள், பழிவாங்கள் தந்திரங்கள், கொலை முயற்சிகள், என்று மனிதனை ஒரு கேவலமான ஜீவனாக காட்ட முனையும் இந்த தொடர் நாடகங்களைப் பார்ப்பவர்கள் இறுதியில் அதை தானும் பின்பற்றும் தீய நிலைக்கு செல்வதை கண் கூடாகக் காணக் கிடைக்கிறது.

தொலைக்காட்சி நாடகம் பார்த்தேன் அதன் படி கொலை செய்தேன்.

நாடகத்தில் வந்ததைப் போல் செய்து பார்க்க எண்ணி தூக்கில் தொங்கினான் மரணித்து விட்டான்.

தொலைக்காட்சித் தொடர் வழியில் எனது கோபத்தை தீர்த்துக் கொண்டேன்.

தவறு செய்துவிட்டு இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவதைப் தினமும் காணக்கிடைக்கும்.

மாமியாரை பழிவாங்குவது எப்படி?

மருமகளை அடக்குவது எப்படி?

தாயையும், மகனையும் பிரிப்பது எப்படி?

சகோதரர்களுக்கு மத்தியில் பிரச்சினையை உண்டாக்குவது எப்படி? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது இந்த தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள்.

உலக வழிகாட்டி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் எப்படி மரணிக்கிறானோ அப்படியே தான் (மறுமையில்) எழுப்பப் படுவான். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) அவா்கள். (நூல் முஸ்லிம்5126)

நாம் தொலைக்காட்சியைப் பார்ப்பது தவரல்ல அதில் உள்ள நல்ல செய்திகளைப் பார்க்களாம், பார்க்க வேண்டும். ஆனால் தொலைக்காட்சி தொடர் போன்ற பாவமான நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது அல்லாஹ்விடம் தண்டனை பெரும் குற்றத்தை நாம் செய்கிறோம் என்பதை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

இது போன்ற பாவங்களை செய்து கொண்டிருக்கும் போது (தொலைக்காட்சித் தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது) நமது உயிர் பிரிந்தால் நமது நிலை என்னவாகும்?

நாம் எப்படி மரணிக்கிறோமோ அப்படித்தான் மறுமையில் எழுப்பப்படுவோம் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நமது மரணம் தீமையை செய்து கொண்டிருக்கும் போது நிகழ்ந்தால் கண்டிப்பாக நாம் பாவியாகத்தான் எழுப்பப்படுவோம். ஆதலால் இந்தத் தீய காரியத்தை விட்டும் நாம் நம்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வு நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

வீட்டில் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஓய்வாக இருக்கும் போதுதான் இந்த நாடகங்களைப் பார்க்கிறோம் என்று சிலர் தாம் செய்யும் பாவத்திற்கு ஒரு சாக்குச் சொல்வார்கள்.

ஓய்வு நேரத்தை எத்தனையோ நல்ல காரியங்களில் பயன்படுத்த முடியும் ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இது போன்ற தீய காரியங்களில் பயன்படுத்துவதற்கான வழியாகத் தான் இந்த பதிலை அவர்கள் தயார் செய்திருப்பார்கள்.

பார்க்காமல் இருக்க முடியவில்லை பழகிவிட்டோம், பார்த்தாலும் இருக்க முடியவில்லை பிடித்துவிட்டது இது போன்ற பல பதில்கள் நமது குடும்பப் பெண்களிடம் இருந்து சர்வ சாதாரணமாக வெளிப்படுகின்றன.

குர்ஆன் ஓதுதல்.

மார்க்கம் தொடர்பான மாத இதழ்களை படித்தல்.

சிறந்த புத்தகங்களை வாசித்தல்.

பயான் நிகழ்ச்சிகளை பார்த்தல்.

பிள்ளைகளுடன் விளையாடுதல்.

பிள்ளைகளுக்கு படித்துக் கொடுத்தல்.

தையல் வேலைகளை செய்தல்.

தாய்க்கு உதவிகளை செய்தல்.

உறவினர்களுக்கு உதவுதல்.

மனைவிக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்தல்.

நமது சொந்த வேலைகளை செய்து கொள்ளுதல்.

சொந்தங்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்தல் என்று எத்தனையோ நல்ல காரியங்கள் செய்ய முடியுமான ஓய்வு நேரத்தில் எங்களுக்கு வேலைகள் இல்லை, அதனால் தொலைக்காட்சித் தொடர் பார்க்கிறோம் என்று சர்வ சாதாரணமாக பதில் சொல்லும் தாய்மார்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும்.

இரண்டு அருட்கொடைகள் விஷயத்தில் மக்கள் நஷ்டத்திலேயே இருக்கிறார்கள் அவை ஓய்வு நேரமும், ஆரோக்கியமுமாகும். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்(நூல்:புகாரி)

ஓய்வு நேரத்தை ஒரு பாக்கியமாக இஸ்லாம் சொல்லித்தருகிறது. ஓய்வு நேரத்தை மிகச் சரியான முறையில் பயன்படுத்தும் போது வாழ்க்கையில் பல வெற்றிப்படிகளை நாம் எட்ட முடியும்.

நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குறிய வேலைகளை செய்திருக்கிறார்கள், தனது செருப்பை தானே தைத்திருக்கிறார்கள் என்ற செய்திகளையெல்லாம் நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம்.

நமது ஓய்வு நேரங்களில் நாம் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நேரத்தை பிரயோஜனமானதாக மாற்றலாம்.

நம்மையே மறக்கச் செய்யும் தீய செயல்.

தொலைக்காட்சி தொடர் நாடகங்களினால் ஏற்பட்ட பல விளைவுகள் பத்திரிக்கைச் செய்திகளில் நாம் காணக்கிடைக்கின்றன.

தாய் நாடகம் பார்த்துக் கொண்டிருப்பதை பயன்படுத்தி கடத்தப்பட்ட குழந்தைகள்.

தொலைக்காட்சித் தொடரில் தாய் மூழ்கிப் போய் குழந்தையை மறந்திருந்த நேரம் வீட்டு முன்பிருந்த சாக்கடையில் விழுந்து மரணித்த குழந்தை.

இது போன்ற செய்திகள் தினமும் செய்தித் தாள்களில் வருவதற்கு காரணம் என்ன? கற்பணையகஷாக உருவாக்கப்பட்ட கதைகளில் நம்மை நாம் தொலைத்து நமது பொன்னான நேரத்தையும் தொலைத்து, நமது குடும்பத்தினரின் எதிர்காலம், நமது எதிர்காலம் என்று அனைத்தையும் இழந்துவிடுகிறோம்.

வெட்கத்தை இழக்க வைக்கும், வெட்கம் கெட்ட செயல்.

ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(நூல்: புகாரி9)

மனிதனின் மிக முக்கிய குணங்களில் மதிக்கத் தக்க ஒரு குணம் தான் வெட்கம் என்பது இன்றைக்கு யாரெல்லாம் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி இருக்கிறார்களோ அவர்களிடம் இந்த குணம் படிப்படியாக குறைந்துவிடுவதை நாம் காண முடியும்.

அண்ணிய ஆண்களிடம் சாதாரணமாக பேசும் பெண்கள், பெண்களிடம் சாதாரணமாக குழைந்து பேசும் ஆண்கள் என்று அனைவரிடமும் வெட்கம் அற்றுப் போவதற்கு இந்த தொடர்கள் காரணமாக இருக்கின்றன.

அண்ணியை அண்னை என்று நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அண்ணனுக்கு துரோகம் செய்யும், தம்பிகளை உருவாக்கியது இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தாம்.

கணவனின் தம்பியை என் தம்பியாக நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு கணவனுக்க மாறு செய்யும் மணைவிகளை உருவாக்கியதும் இந்த தொலைக்காட்சித் தொடர்கள் தாம் என்பதில் எல்லளவுக்கும் சந்தேகம் இல்லை.

என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, “ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா?அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி),(நூல்: புகாரி6846, 7416)

மனைவி என்பவள் நமக்கு மட்டும் உரிமையானவள், நவீன விற்பனை பொருள் அல்ல மற்றவர்களுக்கும் காட்சிப் படுத்துவதற்கு.

“என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்களே அவர்களின் ரோஷம் நமக்கு வேண்டாமா? நபியவர்கள் அவர்களை பாராட்டிப் பேசினார்களே அது போல் நாம் மாற வேண்டாமா?

சமுதாயத்தில் நடப்பதைத்தானே காட்டுகிறார்கள்?

சமுதாயத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறார்கள் என்று தன்னிலை விளக்கம் சொல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன தெரியுமா? சமுதாயத்தில் நடப்பதை காட்டுவதாக சொல்பவர்கள் தாம் சமுதாயத்தில் அப்படி நடப்பதற்கு காரணமாகவே இருக்கிறார்கள்.

ஒரு குற்றத்திற்கு காரணமாக இருந்துவிட்டு, அப்படி நடக்கிறது என்பதை சமுதாயத்திற்கு உணர்த்துகிறோம் என்று பதில் சொல்வது எந்த ஊரில் அறிவுடமையாக பார்க்கப்படுகிறது? கேவளமான தொழிலுக்கு மரியாதையான பெயரா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார்,அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: முஸ்லிம்3971

சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகராத பெண்களின் பட்டியலில் நாம் சேர வேண்டுமா என்ன?

சகோதரிகளே! ஆடை விஷயமாக இருந்தாலும், தலை முடியை பிண்ணல் போடும் விஷயமாக இருந்தாலும் அனைத்திலும் நாம் பின்பற்ற நினைப்பது தொலைக்காட்சித் தொடர் நாயகிகளை, நாயகர்களைத் தானே?

நமது வழிகாட்டியாக நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது இவர்கள் யார் நமக்கு நாகரீகம் கற்றுத்தருவதற்கு?

உலகிலும், மறுமையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட தீய செயல்களைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக!

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.