“கசகசா” மார்க்கதில் அனுமதிக்கப்பட்டதா?

இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள் ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம். கசகசா வை ஆங்கிலத்தில் Opium Pappy என்று சொல்லப்படும்.

இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்

அதுதான் ஓபியம் என்ற போதைப் பொருள்.

இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார், குவைத், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம்.

கசகசா தொடர்பாக புதிய தலைமுறை என்ற தமிழக வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியை பாருங்கள்.

சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தந்த விளக்கம் :  ”வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை!

இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.

கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக ‘கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை’ என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்

அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார்.

அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட… எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர்.

கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன.

இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க… உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!

இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார்.

இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார்.

கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது.

இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், ‘உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள். நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம்.

எல்லாவகையானபோதைப்பொருட்களும்இஸ்லாத்தில்தடைசெய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “பித்உ’ (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :புகாரி (5585)

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் “அவை யாவை?” என்று கேட்டார்கள். நான் “அல் பித்உ, அல் மிஸ்ர்’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல் :புகாரி (4343)

கசகசா என்பது அதிகம் சாப்பிட்டால்தானே போதை வருகிறது. நாம் குறைவாகத்தானே பயன்படுத்துகிறோம் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழி கவனிக்கட்டும்.

அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில்  குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : திர்மிதீ (1788)

எனவே உணவுகளில் கசகசா வை சேர்த்துப் பயன்படுத்துவதையும், கசகசா சேர்க்கப்பட்ட உணவுகளையும் கண்டிப்பாக நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே மார்கத்தின் தெளிவான தீர்ப்பாகும்.

“கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.

கசகசா மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்ற தலைப்பில் நாம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அது தொடர்பில் சில சகோதரர்கள் இரண்டு சந்தேகத்தை எழுப்பியுள்ளார்கள்.

முதலாவது சந்தேகம் :

குளிர் பானங்களுக்கு பயன்படுத்தப் படும் “கருப்பு கசகசா” வின் நிலை என்ன?

“கருப்பு கசகசா” வைப் பொருத்த வரையில் அது “கசகசா” இனத்தைச் சேர்ந்த ஒன்றல்ல அதன் பெயர் “சப்ஜா”  (basil seeds) என்பதாகும். துளசி செடி வகைகளில் இனிப்புத் துளசி என்ற வகையைச் சேர்ந்த தாவரத்தினால் இந்த சப்ஜா என்ற பதார்த்தம் தயாரிக்கப்படுகின்றது.

இந்த சப்ஜா வைப் பொருத்த வரையில் இதுவொரு சுவை சேர்க்கும் பதார்த்தமாகும். பெரும்பாலும் இதற்கு பாலுடா விதை (faluda seeds) என்ற பெயரையே பயன்படுத்துவார்கள். தமிழகத்தில் சில பகுதிகளிலும் மாத்திரம் இதற்கு கருப்பு கசகசா என்ற பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதன் உண்மையான பெயர் “சப்ஜா” எப்பதாகும்.

இந்த “சப்ஜா” என்ற பதார்த்தம் உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். அதே போல் இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் இது நிவாரணி என்று சொல்லப்படுகின்றது. அத்துடன் வாந்தி ஏற்படும் தன்மையை இது இல்லாமலாக்கவும் செய்யுமாம்.

அதனால் இந்த கருப்பு கசகசா (சப்ஜாவை) வை பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஓபியம் பொப்பி என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் உண்மையான கசகசா தான் தடுக்கப்பட்டது.

இரண்டாவது சந்தேகம் :

ஓபியம் பொப்பி (Opium Pappy) என்ற தாவரத்தின் மூலம் போதை பொருள் தயாரிக்கிறார்கள். ஆனால் அதன் விதைக்கும் போதைக்கும் தொடர்பில்லையே அப்படியிருக்கும் போது அதை எப்படி ஹராம் என்று சொல்வது?

ஓபியம் பொப்பி என்ற தாவரத்தில் இருந்து போதை பொருள் தயாரிக்கிறார்கள் என்பதற்காக மாத்திரம் கசகசா வை நாம் தடை என்று சொல்லவில்லை.

ஓபியம் பொப்பி (Opium Pappy) என்ற தாவரத்தில் இருந்து ஹெராயின் என்ற போதைப் பொருள் தயார் செய்யப்படுகின்றது. இதைத் தயார் செய்வதற்கு பொப்பி தாவரத்தின் பால் பயன்படும். அந்தப் பாலில் போதை ஏற்படுத்தக் கூடிய ஒரு பதார்த்தம் இருக்கிறது. அதற்கு ஓபியேட் (Opiate) என்று பெயர் சொல்லப்படும்.

இந்த ஓபியேட் என்ற பதார்த்தம் பொப்பி தாவரத்தின் பாலில் இருப்பதினால் தான் ஹெராயின் போதைப் பொருளாக இனம் காணப்பட்டுள்ளது.

ஓபியம் பொப்பி செடியில் இருந்து பெறப்படும் போதை பொருளின் பொதுவான பெயர் ஒபியேட் (Opiate) என்பதாகும். இதில் மார்பின் (Morphine) கோடியம் (Codeime) ஆகிய இரு வகையான போதை தரக்கூடிய பதார்த்தங்கள் அடங்கியுள்ளன.

ஓபியேட் என்ற போதையை ஏற்படுத்தக் கூடிய பதார்த்தம் அதன் விதையிலும் சிறு அளவுக்கு காணப்படுகின்றது. அனதால் தான் அது ஹராம் என்றாகின்றது.

அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில்  குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : திர்மிதீ (1788)

ஓபியம் பொப்பி செடியில் இருந்து பெறப்படும் “கசகசா” கருப்பு, வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களிலும் காணப்படுகின்றது. இந்த இரண்டு நிற கசகசாவும் ஹராமானதாகும்.

பொதுவாகவே ஓபியம் செடியில் இருந்து பெறப்படும் “கசகசா” வை பிரியானி போன்ற சாப்பாட்டில் தான் பெரும்பாலும் பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது.

(கருப்பு கசகசா என்ற பெயரில் அழைக்கப்படும் சப்ஜா என்பது வேறு  கசகசா என்பது வேறு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸின் படி ஓபியம் பப்பி செடியில் இருந்து பெறப்படும் “கசகசா” விதையிலும் போதை இருப்பதினால் அந்த விதையை நாம் பயன்படுத்துவது கூடாது.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.