எயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே! மீண்டும் நிரூபித்தது பி.பி.ஸி உலக சேவை.

இயற்கை மார்க்கம் தான் உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தர முடியும். இஸ்லாம் என்பது இறைவனால் அருளப் பெற்ற இயற்கை மார்க்கமாகும்.

இந்த இயற்கை மார்க்கம் மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகத் தெளிவான பதில்களைத் தருகிறது என்றால் அது மிகையில்லை. உலகையை ஆட்டம் காணச் செய்யும் மிகக் கொடிய நோயான ஹெச்.ஐ.வி. எய்ட்ஸை விட்டும் மனிதனைக் காப்பாற்ற பல நாடுகளும் தங்களால் முடிந்த மருத்துவக் கண்டுபிடிப்புக்களில் இறங்கியுள்ளன.

இவ்வகையில் ஆய்வுகளை மேற்கொண்ட பல நாடுகளும் இந்தக் கொடுமையான நோய்க்கு தீர்வாக முன்வைத்துள்ளது விருத்த சேதனம் என்ற இஸ்லாமிய வழிகாட்டளைத் தான்.

ஆம் ஆண்கள் தங்கள் மர்ம உருப்பின் முன் பகுதியை நீக்கி விருத்த சேதனம் செய்து கொள்வதின் மூலம் இந்த நோயின் பாதிப்பை 60 சதவீதத்தினால் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இஸ்லாம் கூறும் தீர்வுதான் இறுதித் தீர்வாகும்.

இயற்கை மரபுகள் ஐந்தாகும்.விருத்த சேதனம் செய்து கொள்வது,மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது,மீசையைக் கத்தரிப்பது,நகங்களை வெட்டுவது,அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி5891

மேற்கண்ட செய்தியில் இயற்கையாக செய்ய வேண்டிய கடமைகளின் பட்டியலில் முதல் இடத்தில் விருத்த சேதனத்தைத் தான் இஸ்லாம் குறிப்பிடுகிறது.

ஆண்கள் விருத்த சேதனம் செய்து கொள்வதென்பது எயிட்ஸ் என்ற கொடிய நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.

பி.பி.ஸி உலக சேவை 18.08.2011 வெளியிட்டுள்ள தகவல்.

உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை,அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம்60வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.

இதனால்,பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது.2025ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது.

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி பி.பி.சி ஏற்கனவே வெளியிட்ட ஒரு தகவல்.

இஸ்லாம் சொல்லும் கத்னா முறை – ஆண்கள் தங்கள் மர்ம உருப்பின் முன் பகுதியை நீக்குவதின் மூலம் விருத்த சேதனம் செய்துகொள்வதின் மூலம் ஏற்படும் நன்மைகளை பி.பி.சி உலக சேவை ஏற்கனவே பல முறை சுட்டிக் காட்டியிருந்தது. அதன் ஒரு பகுதியை இந்த ஆக்கத்துடனும் இணைத்துத் தருகிறோம்.

 

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.

தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.

இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.

இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா? அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா?என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.

கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.

ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது என்று அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.

சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இறுதியாக………………

இஸ்லாமிய மார்க்கம் தான் இவ்வுலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல முடியும் என்பதை மேற்கண்ட செய்திகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

ஆக இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஏற்று நடந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.