உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள்.

உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள். (அல்குர;ஆன் 2: 223)

அல்லாஹ் மனைவியரை விளைநிலங்களுக்கு உவமையாக இங்கு குறிப்பிடுகின்றான். அதனைத் தொடர்ந்து உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள் என்று மேலும் தெளிவுபடுத்துகின்றான்.

இந்த அல்குர்ஆன் வசனத்தின் மூலம் மேலோட்டமாக பார்த்தால் கணவன் மனைவியிடம் எல்லா விதத்திலும் உரிமை படைத்தவன் என்று புலப்படுகின்றது. ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் ‘விளைநிலம்’ என்ற சொல்லின் மூலம் நமக்கு ஏராளமான விளக்கங்களை அருளியுள்ளான். படைத்த படைப்பாளன் மட்டும் தான் முக்காலங்களும் அறிந்தவன். உலகம் அழிவதற்குள்ளான காலம் மட்டும் ஏற்படும் விளைச்சலுக்கான விளைநிலத்தை மனிதன் எவ்வாறு அணுக வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை அல்லாஹ் ‘விளைநிலம்’ என்ற சொற் பிரயோகத்தின் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.

ஒரு மனிதன் விளைநிலத்தைப் பயன்படுத்துவதன் நோக்கம் விளைச்சலைப் பெறுவதற்கே. மேலே குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் விளைநிலம் மனைவியாக இருப்பதால் விளைச்சல் குழந்தைகளாக இருக்கின்றன. விளைச்சலான குழந்தையை எதிர்ப்பார்த்து விளைநிலமாகிய மனைவியுடன் கணவன் விரும்பியவாறு அறுவடை செய்யலாம் என இந்த அல்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது. எல்லோரும் நினைக்கலாம் இதில் என்ன புதுமை இது தெரிந்த விஷயம் தானே என்று. ஆனால், அறுவடையின்போது விளைச்சல் பெறப்படவில்லை என்றால் தான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. வேறு வழிகளில் விளைச்சலைப் பெறுவதற்கு மனிதன் முற்படுவான். எனவே, இஸ்லாத்தில் இது கூடுமா? கூடாதா? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழும்.

முன்னைய காலத்தை விட இக்கால கட்டத்தில் குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் கூடுதலாக காணப்படுகின்றனர். அதே போல் நவீன கண்டுபிடிப்புக்களின் உதவியுடன் இதற்கான தீர்வு முறைகளும் வைத்தியத் துறையில் காணப்படுகின்றன. அத் தீர;வு முறைகளில் சிலவற்றை கடைபிடிப்பது மார்க்கத்திற்கு முரணானதா? என்ற கேள்வி எழுகின்றது. இதற்குக் காரணம் நமக்கு வாழ்க்கைக்கு வழி காட்டியாக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இம் முறைகள் இருக்கவில்லையே அவர்கள் இவ்வாறு செய்யுமாறு ஏவவில்லையே என்ற மனக் குழப்பம்.

இஸ்லாம் முழுமைப் பெற்ற மார்க்கம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5: 3)

அல்குர்ஆனும், நபி வழியும் மட்டுமே பின்பற்றுவதற்கு மார்க்க ஆதாரமாகும் எனவும் அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வுக்கும், அவனது துhதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அல்குர்ஆன் 8: 46)

இவ்விரு அல்குர்ஆன் வசனங்களிலிருந்து அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் (ஆதாரமானவையாக இருக்க வேண்டும்) எல்லா வகையான பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு உண்டு என சந்தேகமில்லாமல் தெளிவாகின்றது. காரணம் இஸ்லாமிய மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

இனி, குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு வைத்தியத் துறையின் நவீன சிகிச்சை முறைகள் என்ன என்பதையும், அவை மார;க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையா? என்பதையும் பார;ப்போம்.

செயற்கை கருத்தரிப்பு முறைகள்.

தம்பதியினரில் கணவன் அல்லது மனைவியிடம் உடல் ரீதியான குறைபாடுகள் அதாவது பெண்ணின் முட்டையின் வளர்ச்சி போதாமை, பெண்ணின் கருவறைச் சுவரின் கலங்கள் வேறு இடத்தில் வளர;ந்து காணப்படுதல் இதற்கு  நுனெழஅநவசழைளளை கோளாறு என்பர். இதனால் கருத்தரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் குறைவு. மேலும், பெண்களில் கருக்கட்டல் நடைபெறக்கூடிய பலோபியன் குழாயின் சிதைவு, ஆண்களின் விந்துக்களின் தரக் குறைவு ஆகிய காரணங்களால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகின்றது.

இங்கு ஒன்றை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அல்லாஹ் நாடினால் எந்தக் குறைபாடு இருந்தாலும் குழந்தை பாக்கியம் அமையும். சிலர் எந்தவித குறைபாடுகள் அற்றவர்களாக இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கின்றனர்.

வானங்கள் மற்றும் புமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகின்றான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்ககிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 42: 49,50)

இரு வகையான செயற்கை கருத்தரிப்பு முறைகளாவன:

Intrauterine insemination (IUI) – செயற்கை விந்தூட்டல் முறை

In Vitro Fertilization (IVF) – Test tube pregnancy – பரிசோதனைக்குழாய் குழந்தை

Intrauterine insemination (IUI) – செயற்கை விந்தூட்டல் முறை.

இது ஒரு செயற்கை கருத்தரிப்பு முறையாகும். இம் முறையில் ஆணிடமிருந்து பெறப்பட்ட விந்து மாதிரி ஆய்வு கூட செயல் முறையின் மூலம் பரிசோதிக்கப்பட்டு மிக வேகமாக நகரும் விந்து ஏனைய குறைவாக நகரக்கூடிய விந்துக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு  நேரடியாக கருப்பை வாய் அல்லது கருப்பை அல்லது பலோபியன் குழாய் ஆகிய ஏதேனும் ஒன்றினுள் பெண்ணின் மாதாவிடாய் சக்கரத்தின் முட்டை வெளியாகும் காலப்பகுதியைக் கணித்து கருவியின் உதவியுடன் உட்செலுத்தப்படும். இம் முறையின் மூலம் விந்து எந்தவித தடங்களும் இல்லாமல் குறைவான துhரத்தில் பயணம் செய்யக்கூடியதாக இருக்கும். இயற்கையான முறையை விட இம் முறையில் கருத்தரிப்பு சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படும். கருப்பையில் விந்து வைக்கப்படுவதே இம் முறையின் விஷேட நிகழ்வாகும்.

இம் முறையினால் ஏற்படும் கற்ப விகிதமானது இதற்குப் பயன்படுத்தப்படும் அதி உயர; தொழிநுட்பத்தின் அளவுக்கு இல்லாவிடினும் இம் முறையானது மலட்டுத் தன்மை உடையவர;களுக்கு (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) ஒரு திறவுகோளாக அமைந்திருக்கின்றது.

In Vitro Fertilization (IVF) – Test tube pregnancy  – பரிசோதனைக்குழாய் குழந்தை.

இதுவும் ஒரு செயற்கை கருத்தரிப்பு முறையாகும். இச் செயல்முறையின் மூலம் செயற்கையான கருக்கட்டல் மனித உடலுக்கு வெளியே ஆய்வுகூடத்தின் சோதனைக் குழாயில் நடைபெறுகின்றது. இதனாலேயே இம் முறையில் பிறக்கும் குழந்தை Test tube Baby என அழைக்கப்படுகின்றது. இம்முறை பலோபியன் குழாய் சேதமடைந்தவர்களுக்கும், முன்னர் குறிப்பிட்ட IUI முறையின் கீழ் சிகிச்சை பெற்று சிகிச்சை பயனளிக்காதவர்களக்கும், ஏனைய சில காரணங்களால் கருத்தரிப்பு அடையாதவர்களுக்கும் உகந்தது. வைத்தியர்களின் ஆலோசனை இம்முறையில் சிகிச்சை பெறும் பெண்கள் 38 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதே சிறந்தது. இது மிகவும் சிக்கலான செயல்முறையாகவும், அதிகமான செலவையும், நேரத்தையும் கொண்டதாகவும் இருக்கின்றது. இச் சிகிச்சை முறை வெற்றி அளிக்கக்கூடிய விகிதம் 15-30% ஆகும்.

இச் சிகிச்சை முறைக்கு தம்பதியினர் ஏற்றவர்கள் என முடிவு செய்யப்பட்ட பின் விந்து பகுப்பாய்வு (semen analysis) விந்து கலாச்சாரம் (semen culture), ஹார்மோன் சார் மதிப்பீடு, மாதவிடாய் சுழற்சி மதிப்பீடு ஆகிய சோதனைகள் மேற்கொள்ளப்படும். பெண்ணின் முட்டைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க மருந்துகள் கொடுக்கப்படும். இதனால் பல தகுந்த வளர்ச்சியடைந்த முட்டைகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படுகின்றன. இவற்றில் ஒன்று முதலில் குறிப்பிட்டது போல் பிரித்தெடுக்கப்பட்ட வேகமாக நகரக்கூடிய விந்துடன்  சோதனைக்குழாயில் கருக்கட்டச் செய்யப்பட்டு வெற்றிகரமாக கருவறையில் உள்வைக்கப்படும். கருவின் வளர;ச்சியின் முன்னேற்றம் பெண்ணின் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை அல்லது செவி உணரா ஒலி (ultrasound) மூலம் கணிக்கப்படுகின்றது.

செயற்கை முறையினால் கூட கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள்.

சில தம்பதியினருக்கிடையே சில நிரந்தரமான குறைபாடுகள் காணப்படலாம். அதாவது கணவனின் விந்தின் செயற்பாடு போதாமை, ஹார்மோன் சமனிலையின்மை, இன்னும் ஏராளாமான கெட்ட பழக்க வழக்கங்களின் மூலம் ஏற்படும் குறைபாடுகள், மனைவியின் முட்டை தகுந்த வளர்ச்சியடைந்து காணப்படாமை, ஹார்மோன் சமநிலையின்மை, பாதிக்கப்பட்ட சூலகங்கள், பலோபியன் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு,  Endometriosis கோளாறுகள் (கருவறைச் சுவரின் கலங்கள் வேறு இடத்தில் வளர;ச்சியடைதல்), கருப்பையில் ஏற்படும் கட்டிகள் (Polycystic ovary syndrome) போன்ற காரணங்களால் ஒரு பெண் செயற்கை முறைகளாலும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்களை இழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். ஆகையால் தற்போதைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியில் தம்பதியினருக்கு வேறு ஆணிடமிருந்து விந்தையோ அல்லது வேறு பெண்ணிடமிருந்து முட்டையையோ நன்கொடையாக பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. இதற்காக விந்து மற்றும் முட்டை வங்கி (Sperm and egg Bank) உலகில் காணப்படுகின்றது. அது மட்டுமில்லாது கருப்பையில் குழந்தையை சுமக்க முடியாத நோய்க் காரணிகளைக் கொண்டவர்களுக்கு வாடகை தாய்மார்கள் (Surrogate Mother) அதாவது பிற தம்பதியினருடைய அல்லது பிற ஆணினது குழந்தையை செயற்கை கருத்தரிப்பு முறையான Test tube முறை மூலம் கருக்கட்டப்பட்ட நுகத்தை  தன் கருப்பையில் சுமந்து பிரசவித்துக் கொடுக்கும் பெண்ணே வாடகைத் தாய் என்று அழைக்கப்படுகிறாள்.

விந்து அல்லது முட்டை நன்கொடை, வாடகைத் தாய், இஸ்லாத்தில் கூடுமா?

மேலுள்ள தகவல்களின் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறைகளுக்கு தம்பதியினருடைய அல்லாத வேறு நபர்களுடைய விந்து அல்லது முட்டையும் கருத்தரிப்புக்கு பயன்படுத்தப்படுவது தெளிவாகின்றது.

மேலுள்ள அல்குர்ஆன் வசனத்தில் உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்’ என்பதிலிருந்து ஒரு குழந்தையை ஈன்றெடுப்பதற்கு அந்த தம்பதியினரின் ஈடுபாட்டைத் தவிர வேறு எந்த நபரின் பங்களிப்பிற்கும் அனுமதி இல்லை. அத் தம்பதியினருக்கு வேறு ஒருவரின் முட்டையையோ அல்லது விந்தையோ அல்லது கருவறையையோ பயன்படுத்த அனுமதி இல்லை. விளைநிலம் என்பது விளைச்சலைத் தரக்கூடியது. எனவே தான் எல்லாம் வல்ல அல்லாஹ் மனைவியரை ‘விளைநிலம்’ என உவமையாக்கி மனைவியிடம் மட்டுமே விளைச்சலை விரும்பியவாறு பெற்றுக் கொள்ளுமாறு ஏவுகின்றான்.

ஒருவருக்கு இஸ்லாம் அனுமதித்த ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தால் கருத்தரிப்பிற்கு சாத்தியம் இல்லாத, கருப்பையில் குழந்தையை சுமக்க முடியாத மனைவிக்காக மற்ற மனைவியின் கருவறையில் சோதனைக் குழாயில் கருக்கட்டப்பட்ட நுகத்தை உட்பதிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. காரணம் அந்த கணவரைப் பொருத்தவரை இரு மனைவியரும் அவரது விளைநிலங்களாகும்.

இதிலிருந்து தம்பதியினர; செயற்கை முறையில் குழந்தையை நாடினால் அவர்களின் விந்து, முட்டை அல்லாத வேறு நபர்களினது விந்து அல்லது முட்டையை பாவிப்பது கூடாது என்றும், தம்முடைய விந்து, முட்டை ஆகியவற்றால் உருவான கருவாக இருந்தாலும் வேறு ஒரு கருப்பையில் பதிப்பது அதாவது வாடகைத் தாய் கூடாது எனவும் தெளிவாகின்றது. தம்முடைய குழந்தையின் உருவாக்கத்தை எதிர்பார்த்து தம்பதியினர் அல்லாத மூன்றாவது நபரின் பங்களிப்பிற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதை மேற்குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லாஹ் மனிதர்களிடம் ஏற்படும் பல சிக்கல்களுக்கு தீர்வு அளிக்கின்றான்.

ஆக்கம் : பாத்திமா ஷஹானா

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.