இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!

இன்றைய நவீன உலகில் பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி பல வழிகளிலும் மனிதன் முயன்று கொண்டிருக்கிறான் ஆனால் அவனால் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாமல் அவதிப் படுகிறான். ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்றால் ஒன்றுண்டென்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான் என்பதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள்.

இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை.அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.

இந்த சுய இன்பத்தைப் பற்றியோ அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியோ பெரும்பாலானவர்கள் பெரிதாக எதையும் நினைப்பதில்லை.அதற்க்கு மிக முக்கியமான காரணம் ஒரு சில வைத்தியர்களும்,ஆய்வாளர்களும்,அதுபோல் சில கட்டுரையாளர்களும் இதனால் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்ற கருத்தை மக்களிடம் விதைப்பது தான்.

முதலாவதாக இஸ்லாமிய மார்க்கம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து விட்டு விஞ்ஞான ரீதீயாக இவர்களின் கருத்து எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.

முதலாவது ஒருவன் சுய இன்பத்தினை நாடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி விஞ்ஞான உலகம் கூறும் போது பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்.

1.தான் விரும்புகின்ற அல்லது ஆசைப்படுகின்ற பெண்னை அடைய முடியவில்லை என்பதால் அவளுடன் இருப்பதாக என்னிக் கொண்டு இந்த நிலைக்கு சிலர் சென்று விடுகின்றனர்.

2.தனிமையை அதிகம் விரும்புவது.

3.பாடசாலை,அல்லது கல்லூரியில் தன்னுடன் சேர்ந்திருக்கும் கெட்ட நண்பனின் தீய நடவடிக்கைகளால்.

4.அடிக்கடி ஏற்படுகின்ற தீய எண்ணங்கள்.

5.ஆபாச திரைபடம்,அல்லது புகைப்படங்களின் மோகம்.

இது அல்லாத இன்னும் பல காரணங்களைக் கூறினாலும் மிக முக்கியமானவைகளைப் மட்டுமே இங்கு நாம் பட்டியலிட்டுள்ளோம்.

இந்த வகையில் இப்படிப் பட்ட பிரச்சினைக்கு இஸ்லாம் என்ன தீர்ப்பைச் சொல்கிறது?

எந்நேரமும் நம்மை அல்லாஹ் கண்கானிக்கிறான் என்ற பயம் இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்.அவரிலிருந்து அவரது துனையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.எவனை முன்னிருத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும்(அஞ்சுங்கள்!)அல்லாஹ் உங்களை கண்கானிப்பவனாக இருக்கிறான்.(4:1)

மனிதர்கள் பாவம் செய்யும் போது அல்லாஹ்வின் பயம் அவர்களிடம் இல்லாமல்ப் போய் விடுகிறது அதன் காரணத்தாத் தான் அல்லாஹ்வை மறந்து சிறு பாவம்,பெரும் பாவம் என எல்லாவெற்றையும் செய்கிறார்கள்.இப்படி பாவம் செய்ய துணியும் போது அல்லாஹ் நம்மை கண்கானிக்கிறான் என்பதை நினைத்து உடனே அதை விட்டும் நீங்கி விட வேண்டும்.

ஆனால் இந்த சுய இன்பம் என்ற பாவம் தொடர்ச்சியாக செய்யப் படும் போது அல்லாஹ் நம்மைக் கண்கானிக்கிறான் என்ற பயம் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

சுய இன்பம் ஒரு வகையான விபச்சாரமே!

(நம்பிக்கை கொண்டோர்)தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.(23:5,6,7)

மேற்கண்ட திருமறை வசனத்தில் அல்லாஹ் கூறியபடி வாழ்பவர்கள் தம்முடைய இச்சைகளைத் தீர்க்க நாடினால் தங்கள் மனைவியரிடத்தில் அல்லது தமது அடிமைகளிடத்தில் மாத்திரம் தான் தீ;ர்;த்துக் கொள்வார்கள் அதுவல்லாத வேறு எந்த வழிகளையும் நாட மாட்டார்கள் என்று இறைவன் கூறுகிறான்.இந்த வசனத்தில் இறைவன் பயன் படுத்தும் வேறு வழிகள் என்ற வாசகத்திலிருந்து சுய இன்பமும் அதிலே அடங்கும் என்பதை அறியலாம்.

அது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் இதைப் பற்றி மிகவும் தெளிவாக கூறியிருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூ ஹ{ரைரா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன,இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன,இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன,மர்ம உருப்போ அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகிறது. (நூல் : அஹ்மத் 10490)

மேற்கண்ட நபி மொழியில் நபி(ஸல்)அவர்கள் விபச்சாரம் எந்தெந்த உருப்புகளின் மூலம் உருவாகும் என்பதைப் பற்றி தெளிவு படுத்துகிறார்கள்.

அதில் கண்களின் மூலம் விபச்சாரம் நடக்கிறது என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இஸ்லாம் தடுக்கக் கூடிய காட்சிகளை பார்த்தல்,அண்ணியப் பெண்களை கெட்ட எண்ணங்களில் பார்ப்பது,ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்றவைகள் இதில் அடங்கும்.

இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.இதில் மேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு உதவி செய்வதும் அடங்கும்,அதிலும் குறிப்பாக நாம் தற்போது பேசிக்கொண்டிருக்கும் சுய இன்பம் தான் இதன் மூலம் நேரடியாக குறிப்பிடப் படுவதையும் நாம் அறியலாம்.

ஏனெனில் இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்றால் அதற்கு மிக முக்கியமானது இந்தக் கைகள் தான் இந்தக் கைகளின் மூலம் தான் இன்றைய இளைஞர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக மருத்துவ உலகம் உருதிப் படுத்துகிறது.

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடும் போது.

(நம்பிக்கை கொண்டோர்)தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.(23:5,6,7)

உண்மையில் அல்லாஹ்வை கடவுளாக ஏற்று தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய ஆபாச உணர்வுக்கான தேவையை அல்லாஹ் கூறிய இரண்டு வழிகளில் மாத்திரம் தான் நிறைவேற்ற வேண்டுமே தவிர வேறு வழிகளை தேடக்கூடாது.

அதிலும் அல்;லாஹ் கூறக்கூடிய இரண்டாவது வழிமுறை நம்முடைய காலத்தில் நடைமுறையில் இல்லை என்பதால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்களின் உடலுறவுத் தேவையை தமது மனைவியிடத்தில் மாத்திரம் தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மனைவியல்லாதவர்களுடன் தனது தேவையை பூhத்தி செய்வதற்கு முனைவதோ,அல்லது சுய இன்பம் போன்றவற்றில் ஈடுபடுவதோ அல்லாஹ்விடத்தில் வரம்பு மீறிய குற்றத்தை ஏற்படுத்தும் என்பது மேற்கண்ட திருமறை வசனத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

மறுமை நாளின் விசாரனையைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது

(மறுமை நாளில்)அவர்களின் நாவுகளும்,கைகளும்,கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.(24:24)

இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம்,அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்;;.கால்கள் சாட்சி கூறும்.(36:65)

முடிவில் அவர்கள் அங்கே வந்ததும்,அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும்,பார்வைகளும்,தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி சொல்லும்.(41:20)

மேற்கண்ட குர் ஆன் வசனங்களில் மறுமை நாளின் விசாரனை பற்றி மிகத் தெளிவாக இறைவன் எடுத்துரைக்கிறான்.

மறுமையில் ஒவ்வொரு உருப்பும் தாம் செய்தவைகளைப் பற்றி விசாரிக்கப் படும்.அப்போது தாம் செய்த நல்ல கெட்ட காரியங்களுக்கு அந்த உருப்புகளே சாட்சியாகவும் மாறிவிடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

ஆக சுய இன்பம் போன்ற காரியங்களை நாம் செய்வதின் மூலம் மறுமை விசாரனையில் அல்லாஹ்விடத்தில் நமது உருப்புகளே நம்மைக் காட்டிக் கொடுத்து அதன் மூலம் வரம்பு மீறியோராகி,நஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்.

அதே போல் இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்றும் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.உண்மையில் விபச்சாரம் செய்வதற்காக செல்லுதல்,அல்லது அதற்கு உதவி செய்வது,ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு செல்லுதல்,இஸ்லாம் தடுத்த இடங்களுக்கு செல்லுதல் போன்றவைகள் கால்களால் செய்யும் விபச்சாரத்தில் அடங்கும்.

இதிலிருந்தும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பை கேட்க வேண்டும்.

சுய இன்பத்தின் மூலம் ஏற்படும்(உடலியல்)விபரீதங்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சுய இன்பம் என்ற மிகக் கொடூரமான மன நோயை பெரும்பாலான மருத்துவர்களும்,விஞ்ஞானிகளும் கூடாது என்று தடுத்தாலும் ஒரு சிலர் இதனை ஆதரிக்கவும் செய்கின்றனர்.

இப்போது அவர்கள் சுய இன்பத்தை ஆதரிப்பதற்கு கூறும் காரணத்தையும்,வாதங்களையும் அதில் உள்ள தவறுகளையும் ஆராய்வோம்.

அவர்களின் வாதம் :

சுய இன்பத்தின் மூலம் ஒருவன் யாருக்கும் தொந்தரவுகளைக் கொடுக்காமல் தனிமையில் அவனது தேவையை தீர்த்துக் கொள்கிறான் இதன் மூலம் அவன் மற்றவர்களுக்கு நல்லதைத் தான் நாடுகிறானே தவர யாருக்கும் கெடுதி செய்யவில்லை.

நமது பதில் :

ஒருவன் யாருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்க்காக ஒரு குற்றத்தை ஆதரிப்பது ஒரு அறிவாளியின் செயல் அன்று.அத்துடன் இப்படிப் பட்டவர்கள் இதுவல்லாத மற்ற எல்லா குற்றங்களுக்கும் இந்த அளவுகோளையே வைப்பார்களா? யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல் ஒருவன் போதை மாத்திரைகளையோ,அல்லது போதை ஊசிகளையோ பயன்படுத்தினால் இவர்கள் அதை ஆதரிக்கிறார்களா? மறுக்கிறார்களா? மறுக்கத் தான் செய்கிறார்கள்.

ஏனெனில் அது உடலுக்கு கேடானது என்பதுதான் அவர்களின் பதில்.அதுபோல் சுய இன்பமும் உடலுக்கு கேடானது என்பதில் சந்தேகமில்லை.(இதைப் பற்றி பின்பு விரிவாக விளக்கப் படும்.)ஆக ஒரு குற்றத்தை தடுத்தல் என்ற முடிவுக்கு வரும் போது அது அவனுடன் மட்டும் தொடர்பு பட்டாலும்,மற்றவர்களுடன் தொடர்பு பட்டாலும் குற்றம்,குற்றமே!

அவர்களின் வாதம் :

சுய இன்பத்தில் ஒருவன் ஈடுபடுவதின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்துவதினால் எந்த பிரச்சினையும் இல்லை.ஆதலால் இதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

சுய இன்பத்தின் மூலம் வெளியாக்கப் படும் இந்திரியமும்,தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதே ! தூக்கத்தில் அறியாமலும்,சுய இன்பத்தில் அறிந்த நிலையிலும் இந்திரியம் வெளியாகிறது.இதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.

இது நாம் உமிழ் நீரை உமிழ்வதைப் போன்றதே உமிழ் நீர் எப்படி உடனே சுரந்து விடுகிறதோ அது போல்தான் இந்திரியம் வெளியேற்றப் பட்ட சில மணி நேரத்திலேயே சுரந்து விடும்.இதனால் எந்த சிக்களும் உடலுக்கு ஏற்படாது.

நமது பதில் :

சுய இன்பத்தின் மூலம் வெளியாகும் இந்திpரியமும்,தூக்கத்தில் வெளியாகும் இந்திரியமும் சமமானதுதான் அதனால் அதனை தடுக்கத் தேவையில்லை என்பது அவர்களின் வாதம்.

உண்மையில் வெளியாகும் அளவில் வேண்டுமானால் இரண்டும் சமமாக இருக்களாம்.ஆனால் முறைமையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

தூக்கத்தில் இந்திரியம் வெளியாவது என்பது இயற்க்கை.சுய இன்பத்தின் மூலம் வெளியாவது என்பது இயற்கைக்கு மாற்றமான செயற்கை

உடலில் ஏற்படும் எந்த மாற்றமும் இயற்கையில் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை.(இயற்கை அளவுக்கு அதிகமானாலும் பிரச்சினையாகும்.அப்படியிருக்க செயற்கை முறையில் மாற்றம் ஏற்படுவது உடலுக்கு கேடானது என்பதில் எந்த மருத்துவருக்கும் மாற்றுக் கருத்தில்லை) மாறாக செயற்கையில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றால் அது பிரச்சினைதான்.

உதாரணத்திற்கு ஒருவர் மெலிந்தவராக இருந்து,இயற்கையாக(அளவாகக்) கொளுத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆனால் செயற்கை முறைகளை பயன் படுத்தி ஒருவர் தனது பருமனை அதிகரித்துக் கொண்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட சிக்களை ஏற்படுத்தி விடும்.

அது போல்தான் தூக்கத்தில் ஒருவருக்கு இந்திரியம் வெளிப்பட்டால் அதன் மூலம் உடலுக்கு நல்லது ஏற்படும்.

சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளிப்படுத்தினால் உடலுக்கு கேடுதான் விளையும்.

இந்தக் கருத்தில் தான் பெரும்பாலான மருத்துவர்களும்,விஞ்ஞான ஆய்வாளர்களும் இருக்கின்றார்கள்.

அத்துடன் உமிழ் நீர் சுரப்பதைப் போல் இந்திரியமும் சுரந்து விடும் என்பதால் இதை ஆதரிக்க முடியாது.ஏனெனில் இந்திரியம் சுரக்கிறதா இல்லையா என்பது பிரச்சினை இல்லை.வெளியேற்றும் முறை சிறந்ததா? சுpக்களானதா? என்பதுதான் பிரச்சினை.

சுய இன்பத்தின் மூலம் இந்திரியத்தை வெளியேற்றுவது உடலுக்கு கேடானது என்று உருதியான பின் இந்திரியம் மீண்டும் சுரந்தாலும்,சுரக்கா விட்டாலும் அதை சுய இன்பம் மூலம் வெளியாக்க கூடாது.

அவர்களின் வாதம் :

சுய இன்பத்தின் மூலம் உடலுக்கு எந்த கேடும் ஏற்படவில்லையே! பிறகு ஏன் இதைத் தடுக்க வேண்டும்?

நமது பதில் :

சுய இன்பத்தை ஆதரிக்கக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் இதுதான் மிக முக்கியமானது.

அவர்கள் சொல்லும் இந்த பதில்தான் அதிகமான இளைஞர்களை இந்த கெட்ட நடத்தையின் பக்கம் இழுப்பதற்கு காரணமாக இருக்கிறது.

சுய இன்பத்தில் ஈடுபடுவதின் மூலம்,அதில் ஈடுபடுபவர்களின் உடலுறவு நாட்டம் படிப்படியாகவே குறைந்து விடுகிறது.ஏனெனில் சுய இன்பத்தின் மூலம் அதில் ஈடுபடக்கூடியவன் அவசரமாக இந்திரியத்தை வெளிப்படுத்தவே நினைப்பான் அப்படி அவசரமாக வெளிப்படுத்திப் பழகிவிடுபவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் போது,அவசரமாக இந்திரியம் வெளியாகிவிடுவதால்.அவர்களின் இல்லற வாழ்க்கையில் இன்பம் இல்லாமல் ஆகிவிடுவதின் மூலம் அவர்களின் மனைவியர் வேறு வழிகளை நாடி வழிகெட்டுப் போவதற்கு அவர்களே காரணமாகவும் ஆகிவிடுகின்றனர்.

தாம் விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுவோம் என்ற பயம் ஏற்பட்டால் சுய இன்பம் கண்டு கொள்ளலாமா?(சகோதரர் பி.ஜெ அவர்கள் இது தொடர்பாக தமது இணையத் தளத்தில் வெளியிட்ட பதிலையே இதற்கு பதிலாக வெளியிடுகின்றோம்.)

இமாம் அஹ்மத் பின் ஹம்பல்,இப்னு ஹஸ்ம் போன்ற மிகச் சிறந்த அறிஞர்கள் இவ்வாறு (சுய இன்பத்தில்) ஈடுபடுவது குற்றமில்லை என்று கூறியதை அடிப்படையாக வைத்து ஹராமை ஹலாலாக்கும் கொள்கையுடைய யூசுப் அல் கர்ளாவி போன்றவர்கள் இது ஹலால் என்று பத்வா கொடுப்பதால் எவ்வித உறுத்தலும் இல்லாமல் இதைச் சில இளைஞர்கள் செய்து வருகின்றார்கள்.

இவர்கள் அனைவரும் விபச்சாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிர்பந்தத்தைத் தான் காரணம் காட்டுகிறார்கள்.

ஆனால் திருக்குர்ஆனும்,நபி வழியும் இவர்களின் கருத்துக்கு எதிராகவே அமைந்துள்ளன.

(நம்பிக்கை கொண்டோர்)தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிற தமது கற்பை காத்துக் கொள்வார்கள் அவர்கள் பழிக்கப் பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் வேறு வழியை)தேடியவர்களே வரம்பு மீரியவர்கள்.(23:5,6,7)

ஆண்கள் தமது மனைவியர் மூலம் அல்லது அடிமைப் பெண்கள் மூலம் தவிர மற்ற வழிகளை விட்டும் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும்,இ;வ்விரு வழிகளில் தவிர மற்ற வழிகளில் இச்சையை தீர்த்துக் கொள்வோர் பழிக்கப் பட்டவர்கள் என்றும்,வரம்பு மீறியவர்கள் என்றும் இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.இப்போது அடிமைப் பெண்கள் இல்லாததால் மனைவியர் தவிர மற்ற வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்வது வரம்பு மீறிய குற்றம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போது ஏற்படுவது போலவே நபியவர்களின் காலத்திலும் இருந்தது.இதற்கு மாற்ற வழியை நபி(ஸல்)அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உங்களில் எவர் தாம்பத்தியத்திற்கு சக்தி பெற்றிருக்கிறாறோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும்.ஏனெனில் திருமணம்(அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்)பார்வையைக் கட்டுப் படுத்தும்.கற்பைக் காக்கும்.யார் அதற்கு சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையை கட்டுப்படுத்தும்.(புகாரி : 1905)

அப்துர் ரஹ்மான் பின் யஸீத்(ரஹ்)அவர்கள் கூறியதாவது :

நானும்,அல்கமா,மற்றும் அஸ்வத் ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி)அவர்களிடம் சென்றோம்.அப்போது அப்துல்லாஹ்(ரழி)அவர்கள் (பின்வருமாறு)சொன்னார்கள்.நாங்கள் (வசதி,வாய்பு)ஏதுமில்லாத இளைஞர்களாக நபியவர்களுடன் இருந்தோம் அப்போது நபியவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் முடித்துக்கொள்ளட்டும்.ஏனெனில் அது (தகாத)பார்வையை கட்டுப்படுத்தும்.கற்பைக் காக்கும்.அதற்கு சக்தி பெறாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்.ஏனெனில் நோன்பு(ஆசையை)கட்டுப் படுத்தக் கூடியதாகும்.என்று சொன்னார்கள்.(புகாரி : 5066)

நபியவர்களின் ஆட்சியின் துவக்க காலத்தில் ஏற்பட்ட வறுமையைப் போல் இனி ஒரு காலத்தில் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கூட கிடைக்காத,ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாத அளவுக்கு அந்த வறுமை இருந்தது.பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது.

இந்த நிலையில்தான் திருமணம் செய்வதற்க்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றும் இல்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையிpல் பலர் இருந்தனர்.அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தை கையில் எடுக்குமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

சுய இன்பம் செய்வதற்கு அனுமதியிருந்தால் அதைச் சொல்வதற்கு பொருத்தமான இடம் இதுதான்.ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளை கட்டுப் படுத்துமாறு நபி(ஸல்)அவர்கள் வழிகாட்டி விட்டனர்.

நபியவர்கள் காட்டிய இந்த வழியை விட சுய இன்பம் விபச்சாரத்தை தடுக்கக் கூடியதாக இருக்காது.உணர்வுகளைக் கட்டுப் படுத்தும் பயிற்சியில்லாமல் இப்படி நடந்து கொள்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் எளிதில் விபச்சாரத்தில் விழுவதற்குத் தான் இது வழிவகுக்கும்.

நபியவர்களின் காலத்தில் போர் செய்வதற்க்காக வெளியே செல்கின்ற நேரத்தில் மனைவியர் இல்லாததால் விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று நபித்தோழர்கள் அஞ்சினார்கள் எனவே அவர்கள் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி கேட்ட போது நபி(ஸல்)அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்

இப்னு மஸ்¥த்(ரலி)அவர்கள் கூறியதாவது :

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. எனவே, நாங்கள்,இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? என்று கேட்டோம். அப்போது நபி(ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.(புகாரி : 5071)

கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்)அவர்கள் கூறியதாவது :

அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி)அவாகள் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்,(ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்.

இறை நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை(5:87) (புகாரி : 5075)

குறைந்த மஹரைக் கொடுத்தாவது திருமணம் தான் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

சுய இன்பம் என்பது விபச்சாரமாகவே நபித்தோழர்களால் கருதப்பட்டதால் தான் எந்த நபித்தோழரும் சுய இன்பம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாக காண முடியவில்லை.

மார்க்கத்தில் இது தடை செய்யப் பட்டது என்றாலும் விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தற்காத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு செய்யலாமா? என்று சிலர் வாதிடுகின்றனர்.இவ்வாறு வாதிடுவதும் தவறானதாகும்.

மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட வழிகள் இல்லா விட்டால் தான் நிர்ப்பந்தம் என்ற நிலை ஏற்படும்.

நபித்தோழர்களுக்காவது திருமணம் முடிக்க வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது.இன்று அத்தகைய நிலை இல்லை.மேலும் குறைந்த மஹருக்கு வாழ்க்கைப் பட பெண்கள் காத்திருக்கிறார்கள்.இளைஞர்கள் தக்க வயது வந்த பின்பும் பொருந்தாத காரணங்கள் கூறி திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டு அதை நிர்பந்தம் என்று சொல்ல முடியாது.

மேலும் வெளிநாட்டுக்குச் சென்று பல வருடங்கள் தங்கினால் இல்லற இன்பம் கிடைக்காது என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரியும்.தெரிந்து கொண்டே இந்த நிலையை நாமாக தலையில் போட்டுக் கொண்டால் அது நிர்பந்தம் ஆகாது.

ஒரு ஊரில் பன்றியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது.கண்டிப்பாக பன்றியைத் தான் தின்னும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அந்த ஊருக்குச் சென்று பன்றியைச் சாப்பிடுவது நிர்பந்த நிலையில் சேராது.

தாமாகச் செத்தவை,இரத்தம்,பன்றியின் இறைச்சி,அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான்.வரம்பு மீறாமலும்,வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை.அல்லாஹ் மன்னிப்பவன்,நிகரற்ற அன்புடையோன்.(2:173)

வலியச் செல்லாத நிலையில் இருந்தால்தான் அது நிர்பந்தம்,நாமாக வலியச் சென்று அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டால் அது நிர்பந்தம் இல்லை என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் இது விபச்சாரத்தை தடுக்காது தூண்டவே செய்யும் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.

சரி குடும்ப நிலை காரணமாக வெளிநாட்டுக்கு வந்து விட்டு மனைவியின் துணையில்லாமல் இருக்கிறோம் அந்த நிலையில் இது போன்ற கெட்ட எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள முடியாதா? நிச்சயம் முடியும்.

இந்த நிலை ஏன் ஏற்படுகிறது? விபச்சாரத்தைத் தூண்டும் சினிமாக்கள்,பாலியல் காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளை எவ்வித உருத்தலும் இன்றி பார்ப்பது தான் இதற்கு முதல் காரணமாக உள்ளது.பொதுவாகவே இவை தவிர்கப்பட வேண்டியவை என்றாலும் மனைவியின் துணையின்றி இருக்கும் போது அதிகம் தவிர்கப் பட வேண்டியதாகும்.இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது நம்மை தீய செயலில் தள்ளும் என்பதை உணர வேண்டும்.

மேலும் நபியவர்கள் கற்றுத் தந்த முறையில் நோன்பு நோற்று கட்டுப் படுத்திக் கொள்ளலாம்.

தனிமையாக இருப்பதால் இது போன்ற எண்ணம் ஏற்பட்டால் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து தங்குவதின் மூலம் தீய எண்ணத்தை மாற்றலாம்.வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதின் மூலமும் இது போன்ற செயலை விட்டு ஒழிக்கலாம்.

இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன் தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடுடன் இருக்க சுய இன்பப் பழக்கம் உதவவே செய்யாது.நோன்பு நோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம் விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றும்.

இதையும் மீறி உடம்பில் ரொம்ப முறுக்கேறிவிட்டால் தூக்கத்தில் ஸ்கலிதம் ஆவதின் மூலமாக அதற்கு அல்லாஹ் இயற்கை வடிகாலை அமைத்துள்ளான் என்பதையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.

இது போன்ற செயலில் கடந்த காலங்களில் ஈடுபட்டவர்கள் அல்;லாஹ்விடம் பாவ மன்னிப்பைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அன்பின் சகோதரர்களே! இளைஞர்களே! இந்த கேடு கெட்ட செயல்பாடு ஒரு குறுகிய நோக்கம் கொண்டதே! இதில் ஈடுபடுவது எதிர்காலத்தையே நாசம் செய்துவிடும் என்பதில் அனுவளவும் சந்தேகமில்லை.

ஆக நம்முடைய சிறிது நேர இன்பத்திற்க்காக எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்த்துத்தான் ஆக வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் இலேசாக்குவானாக!

 

நன்றி:RasminMisc

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

One Response to இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!

  1. mohammad hassan says:

    all hamdhulillah this best advice for evry youngers jazakallahu hair

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.