ஆலிம்களை ஆக்கிரமிக்கும் ஆடைத் திணிப்பு !

தவ்ஹீது கொள்கைக்கு மரண அடி கொடுப்போம் என்று இணைவைப்பாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டு தடம் புரண்ட கொள்கைக்கு வக்காளத்து வாங்கிய நேரத்தில் ஏகத்துவத்தை ஏற்றவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட வாதங்கள் எதுவும் ஏற்புடையதள்ள என்று அக்காலத்தில் பேசியவர்கள் எல்லோறும் இக்காலத்தில் அக்கொள்கைகளை தம் கொள்கையாக மாற்றிக் கொண்டுள்ளது வியப்பல்ல பரிதாபமே!

ஆம் அன்று ஆயிரத்து தொல்லாயிறத்து ஐம்பதுகளுக்கு மேல் ஏகத்துவம் இந்நாட்டில் தலை காட்ட ஆரம்பித்தது. இறைவனை வணங்க வேண்டிய மக்கள் இணை வைத்துக் கொண்டிருந்த காலம் அது.

ஏகத்துவக் கொள்கையை எடுத்துச் சொன்னால் கொடுமை அல்லது கொலைதான் சன்மானம் என்றிருந்த நேரத்தில் உயிர் போனாலும் எம் கொள்கை போகாது, மானத்தை இழந்தாலும் மார்க்கத்தை இழக்கோம் என்ற கோஷத்தோடு தவ்ஹீத் சகோதரர்கள் திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நபியவர்கள் தொழுது காட்டியதைப் போல் தொழுததற்காக விரலாட்டி என்ற பெயரெடுத்தார்கள்.

வஹ்ஹாபி என்று வாயாளப்பட்டார்கள்.

உண்மை கொள்கையை எடுத்து சொன்னதற்காக புதிய கொள்கை சொல்பவர்கள் என்று முரைக்கப்பட்டார்கள்.

அவையெல்லாம் எதற்காக மறுமை வெற்றியை நேசித்ததற்காக.

ஆனால் இன்றைய நிலை ? ? ? ? ? ?

அல்லாஹ் திருமறையிலே ஒரு மனிதனின் இறுதி நேரம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் போது நீங்கள் மரணிக்கும் போது முஸ்லீம்கள் அல்லாமல் மரணிக்க வேண்டாம் (2:132)என்கிறான்.

வாழ்கின்ற காலத்தில் முஸ்லீம்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் எத்தனையோ பேர் மரணிக்கும் போது காபிராக மரணிக்கிறார்கள்.

வாழும் காலத்தில் ஏகத்துவ வாதிகளாக காட்டிக் கொள்ளும் எத்தனையோ பேர் இறுதி நேரத்தில் இணைவைப்பாளனாக மரணிக்கிறார்கள்.

இதே நேரத்தில் உலகில் வாழும் நேரம் காபிராக அல்லது முஷ்ரிக்கா வாழும் பலரின் கடைசி நேரம் ஏகத்துவத்தில் முடிகிறது.

அப்படியானால் அவ்வளவு காலம் தன்னை கொள்கைவாதியாக ஒருவன் காட்டிக் கொண்டிருந்தால் அவனின் உண்மை நிலைதான் என்ன?

உண்மையில் அவன் கொள்கைவாதியாக காட்டினானே ஒழிய உண்மையில் கொள்கை உள்ளவனாக இருக்கவில்லை என்பதே மெய்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முற்காலத்தில்) பெண்ணொருத்தி தன் மகனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அவள் அவனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த போது வாகனத்தில் சென்ற ஒருவன் அவளைக் கடந்து சென்றான். அப்பெண், இறைவா! இவனைப் போல் என் மகன் ஆகும் வரை அவனுக்கு நீ மரணத்தைத் தராதே என்று பிரார்த்தித்தாள். உடனே அந்தக் குழந்தை, இறைவா! என்னை இவனைப் போல் ஆக்கி விடாதே என்று பிரார்த்தித்தது. பிறகு திரும்பச் சென்று(அவளது) மார்பில் பால் குடிக்கலானது. பிறகு (தரையில்) இழுபட்டுக் கொண்டே வந்த ஒரு பெண் அவளைக் கடந்து சென்றாள். அவளைப் பிறர் கேலி செய்து விளையாட்டுப் பொருளாக நடத்திக் கொண்டிருந்தனர். (தன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த) அந்தப் பெண், இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே என்று பிரார்த்தித்தாள். உடனே அக்குழந்தை, இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு என்று பிரார்த்தித்தது. பிறகு அது, வாகனத்தில் சென்றவன் இறைமறுப்பாளன் ஆவான். இந்தப் பெண்ணோ, இவளைப் பற்றி மக்கள் இவள் விபசாரம் செய்கிறாள் என்று (அபாண்டமாகக்) கூறுகிறார்கள். ஆனால், இவள், எனக்கு அல்லாஹ்வே போது மானவன் என்று கூறுகிறாள். அவர்கள், இவள் திருடுகிறாள் என்று (அவதூறாகக்) கூறுகிறார்கள். இவள், எனக்கு அல்லாஹ்வே போதுமானவன் என்று கூறுகிறாள் என்று (அக்குழந்தை) சொல்லிற்று.

இதை அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் : புகாரி 3466)

வெளிப்படையில் நாம் யாரை நல்லவன் என்று நம்புவோமோ அது போல் அந்தத் தாயும் நல்லவன் என்று நம்பினால் யாரைக் கெட்டவர் என்று நம்புவோமோ அது போல் அவளும் கெட்டவர் என்று நம்பினால் ஆனால் இறைவனின் பார்வையில் அதற்கு மாற்றமான முடிவுதான் கிடைத்தது என்பதை மேற்கண்ட செய்தி நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

நாம் யாரையெல்லாம் உண்மைக் கொள்கை வாதிகள் என்று முற்காலத்தில் நம்பினோமோ அவர்களில் பலர் இன்று கொள்கையை கொடியேற்றிவிட்டதை உலகம் கண்டு கொண்டுதான் இருக்கிறது.

இன்றும் இலங்iயில் பல ஊர்களில் ஆலிம்களுக்கு என்று சில கோட்பாட்டை எழுதப்படாத விதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

எந்தக் கொள்கை உடைத்துத் தரை மட்டமாக ஆக்கப்பட்டதோ அந்தக் கொள்கைக்கு இன்று தண்ணீர் ஊற்றி வளர்ப்பவர்களாக பல பேனர் தவ்ஹீத் வாதிகளை காண்கிறோம்.

எழுதப் படாத கோட்பாடுகளில் மிக முக்கியமானதுதான் மவ்லவி என்றால் அவர் ஒரு தொப்பியைப் போட்டுக்கொள்ள வேண்டும், ஜுப்பாவும் அதனுடன் சேர்ந்திருந்தால் வரவேற்கத்தக்கதாக இருக்கும் இந்தக் கொள்கையை பல தவ்ஹீத் பள்ளி நிர்வாகிகளே வலியுறுத்திச் சொல்வதைக் காணலாம்.

எந்தளவுக்கெண்றால் எந்நேரத்தில் தொப்பி, ஜுப்பா போடாவிட்டாலும் பயான் பண்ணும் போது கண்டிப்பாக போட்டுக்கொள்ளும் படி வேண்டிக்கொள்கிறார்கள். ஜுப்பா இல்லாவிட்டாலும் தொப்பி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இந்த பழைய குப்பை மீண்டும் பந்திக்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஓன்று புதிதாக பள்ளிக்கு வரக்கூடியவர்கள் பயானில் கலந்து கொள்பவர்கள் ஏதாவது நினைத்துவிடுவார்களோ மீண்டும் நமது பள்ளிக்கு வராமல் இருந்து விடுவார்களோ என்ற நப்பாசை.

இரண்டு தம் கையால் உழைத்துச் சாப்பிட முடியாத அல்லது சவூதி ஷேக் மார்களுக்கும்,  ஹாஜியார்களுக்கும் ஜால்ரா போடும் மவ்லவிமார்களின் ஏமாற்று பாணி இந்தத் தொப்பி, ஜுப்பாவாக இருப்பதுதான்.

ஒரு ஆலிமாக ஒருவன் இருந்தால் அவன் ஒரு கால் சட்டை அணியக் கூடாதா? டீ சேர்ட் ஒன்றை போட்டால் மார்க்கம் தடுக்கிறதா என்ன? மானத்தை மறைத்தால் சரிதானே அது எந்த ஆடையாக இருந்தால் என்ன? இஸ்லாம் அனுமதித்தாக இருந்தால் சரி அவ்வளவு தானே.

இதை ஏற்றுக் கொள்ள ஏன் தயக்கம்? தவ்ஹீத் வாதியாக படம் காட்டவும் வேண்டும், ஊரோடு ஒத்துப் போகவும் வேண்டும் என்ற உயர்ந்த (?) நோக்கம் தான் காணரமா?

மீசைக்கும் ஆசை கஞ்சிக்கும் ஆசை என்ற கதையாக பல தவ்ஹீத் பள்ளி நிர்வாகிகளின் நிலை இன்று மாறிவிட்டது.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவனுக்கும் தவ்ஹீத் வாதியாக இருந்து கொண்டு குராபாத்து சிந்தாந்தத்துக்கு சீர் தூக்குபவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

நபியவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றிலாவது இந்தக் கொள்கை இருக்கிறதா? ஆனால்; இதற்கு மாற்றமாக இருக்கிறதே ?

நபியவர்கள் தொழும்போதே தொப்பியின்றி தொழுது வழிகாட்டியிருக்கும் போது பயானுக்கு அல்லது மற்ற நேரத்திற்கு தொப்பி போடுங்கள் அல்லது தொப்பி இருந்தால் நல்லது என்று கருத்துக் கூற யாருக்கு அதிகாரம் உண்டு?

(ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களுடைய இடத்தில் போய் நின்றதும் தனக்கு குளிப்பு கடமையானது நினைவுக்கு வந்ததால் எங்களைப் பார்த்து “உங்களுடைய இடத்தில் நில்லுங்கள் என்று சொல்லி விட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தலையில் ஈரம் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லி தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்.

அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி),நூல்: புகாரி 275

நபியவர்கள் காட்டிந்தந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கும் தொப்பிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மேற்கண்ட நபிமொழி நமக்குத் தெளிவாக உணர்துகிறது.

அதுபோல் நபியவர்கள் காலத்திலும், தற்காலத்திலும் பெரும்பாலான அரபிகள் தங்கள் ஆடையாக ஜுப்பாவை வைத்திருக்கிறார்களே தவிர ஜுப்பா அணிவது சுன்னத்தோ விரும்பத்தக்கதோ அல்ல.

இல்லாத சுன்னத்தை இருக்கிறது என்பதற்கோ இருக்கும் வழிமுறையை இல்லை என்பதற்கோ இந்த மார்க்கத்தில் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.

ஆதலால் நிர்வாகிகளே!

ஊர் பிரமுகர்களே!

மார்க்கம் காட்டாத செயல்பாடுகளை மார்க்கமாக மக்கள் மத்தியில் காட்ட முனைந்து உலகிலும் நஷ்டப் பட்டு மறுமையிலும் கஷ்டப்பட வேண்டாம்.

உண்மை மார்க்கத்தை உரத்து சொல்வதற்கு வழிவிடுங்கள் அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் சுவர்கத்திற்கு வழி காட்டுவான் இன்ஷா அல்லாஹ்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.