அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிப்போம்

உலகில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் நேரான வழியில் வாழவேண்டும் என்பதற்க்காக மனிதர்களுக்குறிய நேர்வழி காட்டிகளாக அல்லாஹ் காலத்திற்குக் காலம் பல நபிமார்களை இவ்வுலகுக்கு அனுப்பியுள்ளான்.அந்த நபிமார்கள் அல்லாஹ் தமக்கு அறிவிக்கும் வஹி எனும் இறைத் தூதுச் செய்தியை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதின் முலம் அவர்களுக்கு நேர்வழியைக்காட்டுவார்கள்.

அந்த வரிசையில் இவ்வுலகுக்கு நேர்வழி காட்ட அனுப்பப் பட்ட நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் நமக்கு பல செய்திகளை சொல்லித் தருவதின் முலம் நம்மை நல்லவர்களாக உலகில் வாழ வழி செய்துள்ளார்கள்.

அதிலே மிக முக்கியமான ஒரு விஷயம் தான் எந்த ஒரு காரியத்தை யார் ஆரம்பித்தாலும் அதில் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்பது.ஏன் எனில் அல்லாஹ் நம்மைப் படைத்து தினமும் கண்காணிக்கின்றான்.நமது ஒவ்வொரு செயலையும் அவன் பதிவு செய்கிறான்.

இப்படிப்பட்ட இறைவனின் பெயரை நாம் அனுதினமும் சொல்வதின் முலமாக அல்லாஹ்விடம் அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால்அமைதியுறுகின்றன.கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள்அமைதியுறுகின்றன.(13:28)

அல்லாஹ்வை நமது கடவுல் என ஏற்றுக் கொண்டு பின் அவனை அதிகமதிகம் நினைப்பதனால் உள்ளங்கள் அமைதியடைவதாக அல்லாஹ் தனது திருமறையிலேகுறிப்பிடுகிறான்.அப்படியானால் நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதிலே அல்லாஹ்வுடைய பெயரை சொல்லிக் கொள்வதால் நமது உள்ளங்கள் அமைதியை நோக்கி சென்று விடும்.

பிஸ்மில்லாஹ்வைக் கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என கட்டளையிட்ட நபியவர்கள் பல இடங்களில் அதனை நடைமுறைப் படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.அவைகளில் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

பிரானிகளை அறுக்கும் போது.

நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பினால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!(6:118)

பிராணிகளை அறுக்கும் போது அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படவில்லை எனில் அந்த பிரானிகளின் இறைச்சியைச் சாப்பிட வேண்டாம் என அல்லாஹ் தடைவிதிக்கிறான்.பிஸ்மில்லாஹ் கூறாமல் யாராவது பிராணிகளை அறுத்தால் அதை உண்பதே தடை என்று அல்லாஹ் கூறுகிறான். சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ்.

நபி(ஸல்)அவர்களின் வளர்ப்பு மகனான உமர் பின் அபூ ஸலமா அவர்கள் கூறுகிறார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதரின் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாகஇருந்தேன்.(ஒரு முறை சாப்பிடும் போது)என் கை உணவுத் தட்டில் (இங்கும்அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது.அப்போது நபியவர்கள் என்னிடம்சிறுவனேஅல்லாஹ்வின் பெயரைச் சொல்,உன் வலக் கரத்தால் உனக்கு அருகிலிருக்கும்சாப்பாட்டிலிருந்து எடுத்துச் சாப்பிடுஎன்று சொன்னார்கள்.அதன் பிறகுஇதுவே நான் சாப்பிடும் முறையாக அமைந்தது.(புஹாரி :5376)

நபி(ஸல்)அவர்கள் சிறுவர்களுக்கு சாப்பிடும் ஒழுங்கை கற்றுக் கொடுக்கும் போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித்தான சாப்பிட வேண்டும் எனகட்டளையிட்டார்கள்.ஏன் எனில் நாம் சாப்பிடும் பொருள் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதாகத்தான் நம்முடைய உடலுக்குல் செல்ல வேண்டும். வாகனங்களில் ஏறும் போது..

நாம் பிரயானம் செய்வதற்க்காக வாகனங்களில் ஏறும் போதும் பிஸ்மில்லாஹ் எனக்கூறித்தான் ஏறவேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபி நூஹ் (அலை) அவர்களின் வரலாற்றை அல்லாஹ் குர்ஆனிலே குறிப்பிடும் போது நபி நூஹ் அவர்கள் தாம் கட்டிய கப்பலில் தம்மை நபி என ஏற்றுக் கொண்டவர்களைஏற்றும் போது கப்பல் ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயரால்த்தான் எனக்கூறியதை எடுத்துச் சொல்கிறான்.

இதில் ஏறிக்கொள்ளுங்கள்!அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும் நிற்ப்பதும் உள்ளது.(11:41)

மேற்கண்ட வசனத்திலிருந்து வாகனங்களில் ஏறும் போது பிஸ்மில்லாஹ் என சொல்ல வேண்டும் என்பதை நாம் அறியலாம்.

யுத்தத்தின் போது பிஸ்மில்லாஹ்.

நபி(ஸல்)அவர்கள் பெரிய படை,அல்லது சிரிய படைக்கு ஒரு தலைவரைநியமித்தால் அவரிடத்தில் குரிப்பாக அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வதைப் பற்றிஉபதேசிப்பார்கள்,பின்பு பிஸ்மில்லாஹ் என்று அல்லாஹ்வின் பாதையில் போராடும்படி கூறுவார்கள். (முஸ்லிம் :139)

யுத்தம் என்பது தனது உயிரைப் பணயம் வைப்பது,அப்படிப் பட்ட நேரத்தில் அல்லாஹ்வை அஞ்சி அவனது பெயர் கூறி ஆரம்பிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு உபதேசிக்கின்றது.

எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அல்லாஹ்வுடைய பெயர் கூறித்தான் அதை ஆரம்பிக்க வேண்டும்.அப்போது அல்லாஹ்வை நாம் நினைப்பதாக அது அமைந்துவிடுகிறது என்பது மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குத்தெரியவருகிறது.

ஆனால் இன்றைய முஸ்லீம்களுக்கு மத்தியில் பிஸ்மில்லாஹ்வின் நிலை என்ன தெரியுமா? யாருக்காவது கடிதம் எழுதுவதாக இருந்தாலும்,அல்லது எதையாவதுஒன்றை ஆரம்பிப்பதானாலும்.அதிலே பிஸ்மில்லாஹ் என்பதற்குப் பதிலாக 786 என்ற இலக்கத்தை இடுகிறார்கள்.

786 என்றால் என்ன?

அரபி மொழியில் உள்ள அரபி எழுத்துக்களுக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு இலக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளார்கள்.அந்த இலக்கங்களில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்ற வாசகத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள இலக்கங்களைக் கணக்கிட்டுப் பார்த்தால் மொத்தம் 786 என்று வரும்.அதனால் பிஸ்மில்லா என்று எழுதுவதற்க்குப் பதில் 786 என்று சிலர் எழுதுகின்றனர்.

இதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் பிஸ்மில்லாஹ்வை நாம் எழுதும் போது அதை முஸ்லீம்கள் மாத்திரம் தொடுவது இல்லை.மாற்று மதத்தவரும் அதைத் தொட வேண்டியசந்தர்ப்பங்கள் ஏற்படுவதால் அதனைச் சுருக்கி 786 என்று எழுதினால் அதை யார் தொட்டாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறுகிறார்கள்.

முதலில் இந்த 786 என்ற முறையை யார் ஏற்படுத்தியது? இந்த786 என்ற இலக்க முறையை எதை ஆதாரமாக வைத்து நடைமுறைப் படுத்துகிறார்கள்?

நபிகளாருக்குத் தெரியாத மார்க்கமா இவர்களுக்குத் தெரிந்து விட்டது?

நபியவர்களின் காலத்தில் நபி(ஸல்)அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்த பல மன்னர்களுக்கும் கடிதம் அனுப்பினார்கள் அதிலே அவர்கள் கடிதத்தை எழுதஆரம்பிக்கும் போது 786 என்று எழுதினாhகளா? அல்லது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதினார்களா?

நபி(ஸல்)அவர்கள் ஹிர்க்கல் மன்னருக்கு கடிதம் எழுதினார்கள். அதனைஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றுதான்ஆரம்பித்தார்கள்.(புகாரி :07)

அதே போன்று சுலைமான் நபியவர்களின் வரலாற்றை அல்லாஹ் கூறும் போது நபி சுலைமான் அவர்கள் காபிராக இருந்த ஓர் அரசிக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து கடிதம் எழுதியதாக குரிப்பிடுகிறான்.அதிலே சுலைமான் நபியவர்கள்பிஸ்மில்லாஹ் என்றுதான் எழுதினார்கள்.

அது(அந்தக் கடிதம்)சுலைமானிடமிருந்து வந்துள்ளது.அளவற்றஅருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்என்னை மிகைக்கநினைக்காதீர்கள்.கட்டுப் பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! என்று அதில்உள்ளது.(27:30)

இப்படி நபிமார்கள் கூட கடிதங்கள் எழுதும் போது பிஸ்மில்லாஹ் என்றுதான் ஆரம்பித்துள்;ளார்கள்.ஆனால் இவர்கள் மாத்திரம் 786 என ஆரம்பிக்கிறார்கள் என்றால் நபிமார்களைவிட மார்க்கத்தில் எங்களுக்குத்தான் தெரியும் என சொல்ல வருகிறார்களா?

அன்பின் சகோதரர்களே! அல்லாஹ்வும் அவனது தூதரும் எப்படி நமக்கு மார்க்கத்தை கற்றுத் தந்தார்களோ அந்த முறையில்தான் நாம் மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமேதவிற வேறு எதையும் மார்க்கமாக நினைத்து நாமாக பின்பற்றக் கூடாது.

அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பி,அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.(33:21)

ஆகவே அல்லாஹ்வும் அவனது தூதரும் அல்லாஹ்வை எப்படி நினைவு கூறும்படி கூறியிருக்கிறார்களோ அந்த முறையில் நினைவு கூர்ந்து சுவனத்தை அடையமுயற்சிப்போமாக!

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s