மரணித்தவருக்காக என்ன செய்ய வேண்டும்?

ஒரு முஸலிம் மரணித்து  விட்டால் அவரை நல்ல முறையில் குளிப்பாட்டி கபனிட்டு , தொழுவித்து அடக்கம்  செய்ய வேண்டும் மரணித்தவருக்காக முஃமின்கள், குடும்பத்தார், பிள்ளைகள்  செய்ய வேண்டிய இன்னும் சில கடமைகளும் இருக்கின்றன அவையாவன :-

01. பாவமன்னிப்புத் தேடுதல்

எங்கள் இறைவனே முன் ஈமான் கொண்ட சகோதரர்களுக்கும் மன்னிப்பை அருள்வாயாக (குர்ஆன ;59:10) மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த அனைத்து அமல்களும் அவனை விட்டும் நின்று விடுகின்றன மூன்றைத் தவிர 1.அவன் செய்த நிலையான தர்மம் (ஸதகா) 2.பயன்தரும்  கல்வி அறிவு 3.அவனுக்காக துஆச் செய்யும் சாலிஹான பிள்ளை இவைகளால் மட்டுமே  மரணத்துக்குப்பின் கூலி கிடைத்துக்கொண்டிருக்கும் என நபியவர்கள் கூறினார்கள  (நூல்;: முஸ்லிம்)

02. தர்மம் செய்தல்

ஒருவர்  நபியவர்களிடம் வந்து எனது தாய் மரணித்து விட்டார், அவர் மரணிக்கும்  தருவாயில் பேசியிருந்தால் (ஸதகா) தர்மம் செய்யும் படி கூறியிருப்பார், நான்  அவருக்காக  தருமம் செய்தால் அதன் நன்மை கிடைக்குமா எனக் கேட்டார் ஆம்  (நன்மை கிடைக்கும்) என்று கூறினார்கள் (நூல்; : முஸ்லிம்) -எனது  தந்தை வஸிய்யத் எதுவும் செய்யாமல் சிறிது சொத்தை விட்டு விட்டு இறந்து  விட்டார் அவருக்காக நான் அதை தர்மம் செய்தால் போதுமா (அவருக்கு அதன் கூலி  கிகை;குமா) என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்க அதற்கு நபியவர்கள் ஆம்  என்று கூறினார்கள் ( ஆதாரம் : முஸ்லிம்)

03.பொது வசதி செய்து கொடுத்தல்

ஸஃத்  இப்னு உபாதா (ரழி;) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ! எனது தாயார் மரணித்து  விட்டார் அவருக்காக செய்வதற்குறிய சிறந்த தர்ரம் என்ன ? என்று கேட்டார்கள்  அதற்கு நபியவர்கள் தண்னீர் என்றார்கள் எனவே அவர் ஒரு கிணறு தோண்டி (பொது  வசதிக்காக) தரும்ம செய்து விட்டார் . (நூல்; : அஹ்மத்;)

04. நோன்பு நோற்றல்

அல்லாஹ்வின்  தூதரே ஒரு மாத கால நோன்பு கடமையான நிலமையில் என் தாய் மரணித்து விட்டார்  அதை நான் நிறை வேற்றலாமா ? ஏன்று ஒரு மணிதர் கேட்டார் அதற்கு நபி (ஸல);  அவர்கள் உன் தாயாருக்கு கடன் இருந்தால் அதை நிறைவேற்றத்தானே செய்வாய் என்று  கேட்டார்கள் அதற்கு அம்மனிதர் ஆம் என்றார்கள் அவ்வாரானால் அல்லாஹ்வின்  கடன் நிறைவேறற்ப்பட மிகத் தகுதியானது (அதை நிறைவேற்று) எனக் கூறினார்கள்  (நூற்கள்; புஹாரி, முஸ்லிம்)

05. ஹஜ் செய்தல் கடனை நிறை வேற்றல்

ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து என்னுடைய சகோதரி ஹஜ்ஜு செய்வதாக நேர்ச்சைசெய்தார் ஆனால்  அதற்கு முன் மரணித்து விட்டார் அதை நான் நிறைவேற்ற வேண்டுமா எனக்  கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் உனது சகோதரி கடன் பட்டிருந்தால் அதை நீ நிறை  வேற்றுவாயா ? ஆம் நிறை வேற்றுவேன் எனக்; கூறினார்கள் அப்படியாயின்  அல்லாஹ்வுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்று. கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்கு  அல்லாஹ்மிகத் தகுதியானவனாவான் என நபியவர்கள் கூறினார்கள்  (நூல்;: புஹாரி)

06.நேர்ச்சையை நிறை வேற்றல்

எனது  தாயார் மீது ஒரு நேர்ச்சை இருந்தது அனால் அதை நிறைவேற்றாமல் மரணித்து  விட்டார் (நான் என்ன செய்யலாம் ) என்று ஸஃத இப்னு உபாதா (ரழி) நபி (ஸல்)  அவர்களிடம் கேட்டார்கள் அதை நிறைவேற்றும்படி நபியவர்கள் தீர்ப்பளிததார்கள்  பின்பு இதவே நடைமுறையானது. (ஆதாரம் : புஹாரி)

ஹதீஸ்களின் விளக்கம்

ஓவ்வொரு  முஸ்லிமும் தன்னுடைய மரணத்திற்குப்பின் நிரந்தர நன்மை கிடைக்கக் கூடியதாக  நல்லமல்களை செய்து கொள்ள வேண்டும் தருமம் கொடுக்க வேண்டும் ஏழை எளியவர்கள்,  அனாதைகள், இயலாதவர்கள் , வறுமைப்படிக்குல் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவி  செய்தல் வாரி வழங்குதல் இது போன்ற நடவடிக்கைகளால் மரணத்திற்குப் பின்  நிரந்தர நன்மைகள் கிடைத்துக் கொண்டிருக்கும், மேலும் மக்கள் பிரயோசனம்  பெறும் விதத்தில் கல்வி அறிவை பயன்படுத்த வேண்டும்.

நல்ல கருத்துக்களை  தாங்கி வரக்கூடியதாக நூல் சஞ்சிகைகள், பத்திரிகைள் மார்க்கம் சம்பந்தமான  ஓடியோ வீடியோக்களை வெளியிடல், கல்விக்கூடங்கள், வாசிக சாலைகள், விஞ்ஞான  ஆய்வு கூடங்கள் நிர்மானித்தல் இதன் மூலமாக மக்கள் பயன் பெறும் போது  அதற்குறிய கூலி மரணத்திற்குப்பின் கடைத்துக் கொண்டே இருக்கும் ஒவ்வொரு  முஸ்லிமும் தன்னுடைய மரணத்திற்கு முன் இது போன்ற செயல்களை செய்து கொள்ள  வேண்டும், பெற்றோர்கள் மரணித்து விட்டால் அவர்களுக்காக பிள்ளைகள் என்னசெய்ய  வேண்டும் இக்கேள்வியை ஸஹாபாக்கள  நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள் அதற்கு  நபியவர்கள் பெற்றோருக்காக பிள்ளைகள் தான தருமங்கள் கொடுக்க வேண்டும்  மக்கள் நன்மை அடையும் விதத்தில் பொது வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்  பெற்றோரின் கடனை அடைக்க வேண்டும் நேர்ச்சை செய்வதாக நேர்ந்திருந்தால் அதை  நிறை வேற்ற வேண்டும் இது போன்ற காரியங்கள் செய்வதனால் அதன் நன்மையை  பெற்றோர்கள் மரணத்திற்குப்பின் பெற்றுக் கொள்வார்கள் என்று நபி (ஸல்)  கூறினார்கள். இதைத்தவிர கத்தமுல் குர்ஆன் ஓதவேண்டும், ராத்திப் வைக்க  வேண்டும் 3, 7, 15, 20, 30, 40, 60 வருட கத்தம் கொடுக்க வேண்டும் என்று  நபியவர்கள் கூறுவேயில்லை என்பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் முலமாக விளங்கிக்  கொள்ளளாம்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.