குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

 அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்!

குர்ஆனை ஆராய்ச்சி செய்துப்பார்க்கும் போது அது பல்வேறு அரிய தகவல்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது அவைகளின் வரிசையில் மருத்துவப் படிப்புகள் பற்றி இஸ்லாம் கூறும் பல அறிய தகவல்களை உங்கள் முன் பதிக்கிறோம். 

குர்ஆன் தெளிவைத்தரும் வேதம்

அருள்மறை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது இந்த குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்கு ரஹ்மத் அதாவது பேரருள் என்றும் அருமருந்தாகவும் என்றும் குறிப்பிடுகிறான். இதோ அந்த அருமையான வசனத்தை சற்று படியுங்கள்!

 

அத்தியாயம் – பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அருள்மறை குர்ஆன் 17:82)

 

வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் இறைவன் எங்கே என்று அலைந்து திரிந்து தன் வாழக்கையைத் தொலைத்துவிடக் கூடாது அதே சமயம் படைத்த இறைவனை அவன் சரியாக அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் அருள்மறையை குர்ஆனை புரட்ட வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகிறது.

 

எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் மூஃமின்களுக்கு அதாவது இறைநம்பிக்கையாளர்களுக்கு ரஹ்மத் எனும் பேரருள் கொண்டதாக உள்ளது என்று கூறப்படுகிறது.

 

ரஹ்மத் என்றால் பேரருள் என்று பொருள்படும் மனிதன் உள்ளிட்ட படைப்பினங்களுக்கு அருள்புரிபவன் அல்லாஹ் மட்டுமே அவனைத்தவிர யாரும் எவருக்கும் அருள்பாளிக்க இயலாது என்ற கருத்தையும் வலியுறுத்துவதன் மூலம் உலகில் உள்ள எந்த வஸ்துக்களையும் வணங்கி மோசம் போகாதீர்கள் என்று குர்ஆன் வலியுறுத்துகிறது.

 

அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு இந்த குர்ஆனை பொருளுணர்ந்து படித்தால் படிக்கக்கூடிய மனிதனது மனம் புத்துணர்ச்சி பெற்று அவனுடைய உள்ளத்தில் காணப்படும் ஏக்கம், தாகம், மற்றும் பயம் ஆகியன விலகுகிறது.

 

உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மனிதன் திருமறைக் குர்ஆனை படித்து இறைவனது தன்மைகளை உணர்ந்துக் கொண்டால் அவன் நற்பாக்கியத்தை பெறுகிறான் மேலும் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட முற்படுகிறான் இப்படிப்பட்ட பேரருள் மற்றும் பாக்கியம் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்த ஒரு இறைவிசுவாசிக்கே கிடைக்கிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் முஃமின்களுக்கு ரஹ்மத்தாக உள்ளது.

 

குர்ஆனை நம்புபவர்களுக்கு இது ஒரு அருமருந்து!

 

அருமருந்து என்று கூறப்படும்போது அதற்கு எதிர்ப்பதமாக நோய் என்ற ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இயல்பாகவே மனிதனுக்கு உண்டாகும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம் அதாவது

 

 • உள்ளத்தில் ஏற்படும் நோய்
 • உடலில் ஏற்படும் நோய்.

 

உள்ளத்தில் ஏற்படும் நோய்

ஒரு மனிதனுக்கு இதயம், சுவாச உருப்புகள் உள்ளது போன்று உள்ளமும் இருக்கிறது. அந்த உள்ளத்தை உணரத்தான் முடியுமே தவிர யாராலும் காட்ட இயலாது.

 

ஒரு மனிதன் நல்ல உள்ளம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் இறைவன் இருப்பதாகவும் ஒருவன் கெட்ட எண்ணடம் படைத்தவனாக இருந்தால் அவனுடைய உள்ளத்தில் சாத்தான் குடியிருப்பதாகவும் அனைத்து மதத்தவர்களாலும் நம்பப்படுகிறது எது எப்படியோ உள்ளம் என்று  ஒன்று இருப்பதாக நாம் நம்ப வேண்டும்.

 

இஸ்லாம் இந்த உள்ளத்தை பற்றி கூறும் போது அந்த உள்ளத்தில் கூட நோய் உருவாகும் என்றும் இது அப்பாவி மக்களை ஏமாற்றும் மனிதர்களிடம் அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. அதாவது ஒருவனை ஏமாற்ற நினைப்பவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஏமாற்றுவித்தைகளில் மூழ்கி நன்மை தீமைகளை உணரக்கூடிய நிலையை இழந்துவிடுகிறான்.  உதாரணமாக பிரேமானந்தா, நித்யானந்தா போன்ற சாமியார்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கூறலாம் இப்படிப்பட்ட சாமியார்கள் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு தீட்சை அளிப்பதாக பொய் கூறுவார்கள் பின்னர் இந்த பொய்களில் மூழ்கி பித்தலாட்டம் மற்றும் விபச்சாரம் ஆகிய பாவங்களில் தங்களை சிக்கவைத்துக்கொண்டு பாவத்தில் மூழ்கி விடுகிறார்கள். இது போன்ற நோய்கள்தான் உள்ளத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் என்று இஸ்லாம் வர்ணிக்கிறது.

 

அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 2:9,10)

 

ஒரு இறைவிசுவாசிக்கு உள்ளத்தில் இப்படிப்பட்ட நோயின் தாக்கம் ஏற்பட்டால் உடனே அந்த நோயிலிருந்து அவன் சுதாரித்தக் கொள்ள அருள்மறை குர்ஆன் மாபெரும் சாதனமாக விளங்குகிறது.

 

அதாவது பொய் கூற முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், திருட முற்படும்போது இஸ்லாம் தடுப்பதை உணரலாம், விபச்சாரத்தை நெருங்கும்பொது இஸ்லாம் கடுமையாக கண்டிப்பதை உணரலாம். மேலும் எந்த ஒரு செயலையாவது நாம் செய்ய முற்படும்போது இது கூடுமா?கூடாதா? மார்க்க எல்லைக்கு உட்பட்டதா? மார்க்கத்தில் வரம்பு மீறிய செயலா? என்று யோசிப்போம்.

 

மனதில் ஆழ்ந்த குழப்பம் ஏற்படும் யாரிடம் சென்றாலும் தீர்வு கிடைக்காது தட்டுத்தடுமாறி அங்கும் இங்குமாக அலைவோம் இறுதியாக வேறு வழியின்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று அல்குர்ஆனை புரட்டுவோம் அந்த அருள்மறையின் வசனங்களை பொருளுணர்ந்து படிப்போம் கூடவே நபிகளார் (ஸல்) கூறிய அறிவுரைகளையும் அவர்  வாழந்துகாட்டிய விதத்தையும் அலசிப்பார்ப்போம் பின்னர் நம் உள்ளத்தில் தோன்றிய குழப்பமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் குர்ஆன் குழப்பத்தை தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது என்ற உண்மை நமக்கு வெளிப்படுகிறது.

 

உள்ளத்தின் நோயை தீர்த்து வைக்க எந்த டாக்டரும் இல்லை, அதற்காக உலகில் எந்த மருத்துவ பட்டய படிப்பும் கிடையாது மேலும் இந்த உள்ளத்தில் ஏறபடும் இந்த நோய்க்கு ஒருவனே மருத்துவனாக உள்ளான அவனே அல்லாஹ்! அவன் காட்டும் மருந்தே அருள்மறை குர்ஆன்!

 

உடலில் ஏற்படும் நோய்

உடல் இல்லாமல் மனிதன் இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம், கண்கள், கல்லீரல், கணையம் போன்ற விலைமதிக்க இயலாத உறுப்புகளை சரியான இடத்தில் பொருத்தியவன் படைத்த இறைவனாகிய அல்லாஹ் தான். எனவே ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு உரிய மருந்தையும் அவனே படைத்துள்ளான் மேலும் நோய்க்கான மருந்து மனிதனுடைய சிந்திக்கும் திறமை மற்றும் கண்டு பிடிக்கும் ஆற்றலை பொருத்தே அமைகிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் இந்த மருந்துகளை தேடுவதில் ஆர்வம் காட்டுவதில்ல.

 

இதோ அல்லாஹ் அருள்மறை குர்ஆன் மூலமாக மனிதர்களாகிய நமக்கு மருந்துகளை பற்றி ஆராய்ச்சி செய்ய அழகான வழிவகைகளை போதிக்கிறான் இதை சற்று உண்ணிப்புடன் கவனித்துப் பாருங்கள்.

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)

பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)

குர்ஆன் கூறும் தேனீ மற்றும் தேன் ஆராய்ச்சி படிப்பினை

அருள்மறை குர்ஆன் தேனீக்கள் பற்றியும் அவற்றின் மூலம் கிடைக்கும் தேன் பற்றியும் மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. அதாவது ஒரு மனிதனுக்கு தேனீ போன்ற சிறிய ஜீவனிடம் கூட மருந்து உள்ளதாக அருள்மறை கூறுகிறது.

 

சற்று யோசித்துப்பாருங்கள் ஆறு அறிவு படைத்த மனிதனுக்கு ஐந்து அறிவு கொண்ட ஈக்களின் இனமான தேனீயிடம் மருத்துவம் என்ற செய்தி மகத்தான உண்மைதானே!

 

நீங்கள் இந்த வசனத்தை படித்தவுடன் தேன் என்ன அனைத்து நோய்களையும் தீர்க்குமா? மனிதனுக்கு புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் வருகிறது இதற்கெல்லாம் இந்த தேன்தான் மருந்தா என்று சிந்திக்க தோன்றும்.

 

ஆனால் இந்த வசனத்தை நீங்கள் பொறுமையாகவும்  வசனம் உணர்த்தும் பொருளை நன்கு உணர்ந்தும் படித்தால் இந்த வசனத்தின் மூலம் இந்த அறிவியில் உலகம் எதை நோக்கி பயனிக்க வேண்டும் என்ற அறிவுரையை நமக்கு விளக்கிக் காட்டுகிறது! வாருங்கள் சிந்தித்து ஆராய்வேமா?

 

 • தேனியிடம் மருந்து உள்ளது மேலும் தேனீ முதற்கொண்டு மற்ற உயிருள்ள ஜீவன்களிடமிருந்தும் நோயை குணப்படுத்தும் மருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுகிறது. இவ்வாறு பட்சிகள், ஈக்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி படிப்பான விலங்கியல் ஆராச்சிகள் தேவை

 

 • தேனீ தானான தேன் என்ற பொருளை தருவதில்லை மாறாக அது பலவகையான கனிகள், மலர்கள் ஆகியவற்றை உட்கொண்டு அதிலிருந்து ஜீரணமாகி வெளியாவதுதான் தேன் எனவே தேனீ உட்கொள்ளும் தாவரங்களை ஆராய்ச்சி செய்ய தாவரவியல் ஆராச்சிகள் தேவை.

 

 • தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான் அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துள்ளியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம்.

 

 • இறுதியாக இந்த வசனத்தில் தேன் என்பதை அல்லாஹ் கூறுகிறான் அதாவது தேன் என்ற மருத்துவ குணம் கொண்ட திரவம் அதிக காலம் கெடாமல் இருக்கும். அதே போல மனிதனை நோக்கி இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி என்று கூறுகிறான் அதாவது தேன் அல்லாத மற்ற மருந்துகளுக்கு மருந்தின் தன்மை, கெட்டுப்போகும் காலநிலை, மருந்து கெட்டுப்போனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை சிந்திக்க வேண்டும் இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மருந்து தயாரிப்பு முறைகள் பற்றிய ஆராய்ச்சி கல்வி மிக அவசியம்!

 

உடலளவில் ஏற்படும் ஒரு நோய்க்கு கீழ்க்கண்ட ஆராய்ச்சிகள் இன்றியமையாதவை

மனிதன் கற்க வேண்டிய ஆராய்ச்சி படிப்புகள்

 • உடலியல் ஆராய்ச்சி படிப்பு
 • விலங்கியல் ஆராய்ச்சி படிப்பு
 • தாவரவியல் ஆராய்ச்சி படிப்பு
 • நவீன உபகரணங்கள் பற்றிய ஆராய்ச்சி படிப்பு
 • மருந்து தயாரிப்பு ஆராய்ச்சி படிப்பு

 

சிந்தித்துப்பாருங்கள் அருமைச் சகோதரர்களே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆராச்சி பற்றிய அறிவு யாருக்கேனும் இருந்ததா? ஆனால் அருள்மறை குர்ஆன் இத்தனை ஆராய்ச்சிகளையும் தேடுங்கள் அந்த தேடுதல் உங்களுடைய நோய்களுக்கு மருந்தாக அமையும் என்று அழகாக வர்ணிக்கிறது நாம் ஆராய்கிறோமா?

 

தேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி ஆராய்வோமா?

தேன்

 • தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை

 

 • சித்த மருத்துவம் தேன் பற்றி கூறும்போது இந்த தேன் 12 நாழிகையில் செரிந்து உடலுக்க பலத்தை கொடுக்கிறதாம்.

 

 • புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகுமாம்

 

 • தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்கிறதாம்.

 

 • தேன் மலமிலக்கியாக கூட செயல்படுகிறதாம்.

 

 • தேன் உதிரப் போக்கை கட்டுப்படுத்துகிறதாம்.

 

 • தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகுமாம்.

 

 • இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு ஏற்பட்டு ISCHEMIA, INFRACTION எனும் அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறதாம். மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கிறதாம்.

 

 • தேனும் கரித்தூலும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடுமாம்.

 

 • முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டுவிட்டு பிறகு வெண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம்.

 

 • காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் எனக் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று ஒரு செய்தி கூட உள்ளது.

 

அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கும் இறுதி வேதம் என்பதற்கும் இந்த தேன் மற்றும் தேனீ பற்றிய படிப்பினை ஆதாரமாக இருக்கிறது. நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வரலாமே!

 

தேனீக்கள் ஆராச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல

அல்ஹம்துலில்லாஹ்

(எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)

– நன்றி: சிராஜ் அப்துல்லாஹ்,  Islamicparadise 

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s