வந்தே மாதரம்? & தாயே வணக்கம்?

வந்தே மாதரம் பாடலுக்க முஸ்லிம்களாகிய நாம் எதிர்ப்பது எதன் அடிப்படையில் என்று புரிந்துக்கொள்ளுங்கள்! நாம் வணக்கு வது அல்லாஹ் ஒருவனைத் தான் அவனைத் தவிர யாரை வணங்கக்கூடாது என்று தடை உள்ளது! எனவே பாரத மாதாவை வணங்குவது போன்ற பாடல் எங்களுக்கும் எங்கள் இஸ்லாமிய கொள்கைக்கும் மாற்றமானதாகும்! எனவே நாம் எதிர்க்கிறோம்.

தமிழ் செய்யுள்களைப் புரட்டிப் பார்த்தால் நக்கீரர் உங்கள் தெய்வம் சிவபெருமானின் பாடலில் குற்றம் இருந்தது கண்டு நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றால் அவரு டைய பாணியில்தான் நாம் வந்தே மாதரம் பாடலில் பொருள் குற்றம் உள்ளதால் புலவர் நக்கீரன் பாணியில் இந்த பாடலை எதிர்க்கிறோம்.

இந்தியாவில் 1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் உங்கள் கண்முன்னே உள்ளன ஆனால் ஒரு திராவிடர்கள் ஒரு தேசிய மொழியான இந்தி யையே எதிர்த்து குரள் கொடுக்கம் போது முஸ்லிம்களாகிய நாம் வந்தே மாதரம் என்ற இந்தி பாடலை எதிர்க்க ஏன் உரிமை யில்லை! என்ன சகோதரர்களே உங்களுக்கு ஒரு நியாயம்! ஊருக்கு ஒரு நியாயமா?

எங்களுக்கும் அடிப்படை உரிமைகள் உள்ளனவே! அதன் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலை எதிர்க்கிறோம்!

எதிர்ப்புக் குரள் கொடுக்க வேண்டாம் என்றால் எங்களுக்கு இந்தியாவில் வாழ்வுரிமை இல்லையா? நாம் இந்தியாவில் வழ்வதற்கு தகுதியற்றவர்களா? அப்படியானால் பாராளு மன்றத்தில் ஒரு சட்டம் இயற்றி இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்ற முனைப்பு காட்டுங்கள் உங்கள் தெய்வங்களுக்கு இது பிடித்தமாக இருந்தால் உங்களுக்கு உதவுவார்கள்!

இந்தியாவின் அடிப்படை உரிமைகள்

இந்தியாவின் வாழ்பவர்களுக்கான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பின் பகுதி 3 ல் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் படி அனைவரும் அடிப்படை உரிமைகள் பெற்று இந்தியக் குடிமகன்களாக வாழ வகை செய்யப்பட்டுள்ளது,

ஒரு இந்திய குடிமகனின் சமூக உரிமை (சம உரிமை), பேச்சுரிமை (பேச்சு சுதந்திரம்), வெளிபடுத்தும் உரிமை (எழுத்துரிமை),  கூடிவாழும் உரிமை மற்றும் அமைதி வழிபாட்டு உரிமை, சுதந்திர சமய உரிமை, சமூக நீதிக் கோரும் உரிமை போன்ற உரிமைகள் இன்றியமையாத உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த உரிமைகள் மறுக்கப்படுவதோ அல்லது மீறப்படுவதோ குற்றமுறு செயல்களாக இந்திய தண்டணைச் சட்டக் (இ.த.ச) கூற்றில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தனக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அதை சுதந்திரமாக அனுபவிக்க கடமைபட்டவர்களாவர். இவ்வடிப்படை உரிமைகள் இனப்பாகு பாடின்றி (சாதி, நிறம், பாலினம்,மொழி), மொழி வேறுபாடின்றி, சாதி மாறுபாடின்றி, அனைத்துக் குடிமக்களும் அனுபவிக்க கடமைபட்ட வர்களாவர். இவைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றங்கள் தலையிட்டு அவற்றை பெற்றுத்தர தயங்காது.

இந்த அடிப்படை உரிமைகள் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள அடிப்படை உரிமைகளைச் சார்ந்து, அதன் வழித் தோன்றலாக இங்கும் பயன்படுத்தப்படுகின்றது.

ஆறு அடிப்படை உரிமைகளாவன

  1. சம உரிமை
  2. சுதந்திர உரிமை
  3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை
  4. சமய சார்பு உரிமை
  5. கலாச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை
  6. அரசியல் அமைப்பை சீர்மைப்படுத்தும் உரிமை

இந்திய தேசிய கொடி

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1921ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன.

மத சுதந்திரம்

அரசியல் சட்டத்தின் 25,26,27,28 பிரிவுகள் மத சுதந்திரம் குறித்தவை. அரசியல் சட்டத்தினை உருவாக்கியவர்கள் மத சுதந்திரம் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர்.

இந்திய சட்டம்

இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்

  1. இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்
  2. குற்றவியல் சட்டம்
  3. ஒப்பந்தச் சட்டம்
  4. தொழிலாளர்ச் சட்டம்
  5. பொல்லாங்கு குற்றவியல் சட்டம் (டோர்ட் லா)
  6. குடும்பச் சட்டம்
  7. இந்துச் சட்டம்
  8. இசுலாமியச் சட்டம்
  9. கிருத்துவச் சட்டம்
  10. பொதுச் சட்டம்
  11. தேசியச் சட்டம்
  12. அமலாக்கச் சட்டம்

இத்துடன் உங்கள் குழுமத்திலிருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன்! எனக்குப் பின்னால் நீங்கள் இஸ்லாத்தை இகழ்வீர்கள் என்பது தெரிந்த விஷயமே ஆனால் எல்லா விஷயங்களும் அல்லாஹ் கண்காணித்து மறுமையில் பதில் தருவான் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இதோ திருக்குர்ஆன் வசனங்கள் படியுங்கள்!

إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ

(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- (திருக்குர்ஆன் 50:17)

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). (திருக்குர்ஆன் 9:35)

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (திருக்குர்ஆன் 9:32)

குறிப்பு

மின் தமிழ் குழும மட்டருத்துனர் தமிழர்கள் பேசுவதில் தவறு இல்லை என்ற வகையில் என்னிடம் வாதாடி அவர்களின் வாதத்திற்கு தக்க பதில் கொடுத்த என்னுடைய வாதம் தவறு என்றும் எனக்கு உகந்த குழுமம் மின்தமிழ் குழுமம் இல்லை என்றும் கூறி என்னை மட்டறுக்க நேரிடும் என்றும் என எச்சரித்தார்!

உண்மையைச் சொன்னால் எச்சரிக்கையா?  நானே விலகுகிறேன் என்று எண்ணி விலக நேரிட்டது! (மின்தமிழ் மட்டறுத்துனர் என்னுடன் கூகுல் சாட்டிங் செய்து நான் விலகும் முன் தனிப்பட்ட முறையில் தவறாக நடந்த தம் குழும உறுப்பினர்களைக் கண்டு மனம் வெந்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்)

குறிப்பு

நான் முஸ்லிம்தான்! இந்தியன்தான் ஆனாலும் என் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் உரிமையை பரிக்க முயற்சிக்கும் மாற்று மதத்தினருடன் அமைதியான முறையில் எதிர்ப்பு குரள் கொடுப்பது ஒரு முஸ்லிம்  மற்றும் இந்தியன் என்ற அடிப்படையில் உரிமை உள்ளது.  என்னைப் பற்றி அவதூறாக பேசக்கூடியவர்களுக்கு இது எடுத்துக்காட்டாக இருக்க இதை முன் மொழிந்துள்ளேன்!  அவதூறு பேசி முஸ்லிம் சகோதரர்கள் உணர்ந்துக் கொள்ளட்டும்!

 

 

 

தாயே வணக்கம்! ???

தலைப்பு                                   – வந்தே மாதரம்

தலைப்பின் பொருள்      – தாயே வணங்குகிறோம்

பாடலின் தாய்மொழி          – தேவ நாகரி & வங்காளம்

பாடலை எழுதியவர்          – பன்கிம் சந்திர சட்டோபாத்யாய்

பாடல் உருவான கதை

1870 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை ஆங்கிலேய பிரிட்டீஷ் ஏகாதிபத்திய குரங்குகள் ஆட்சி செய்தன. அப்பாவி இந்திய மக்களை கொன்று குவித்து அதன் மூலம் நாட்டை உரிமை கொண்டாடினர் இது உலகம் அறிந்த விஷயம். இப்படிப்பட்ட சர்வாதிகார நிலைமையில் தாங்கள் செய்வதுதான் சரி என்று தங்கள் நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு பாடலை இயற்றினர் அதுதான் இங்கிலாந்து நாட்டின் ராணியைப் பற்றிய புகழ் பாடல் அந்த பாடலுக்கான பெயர் God Save the Queen இந்த ஆங்கில பாடலை இந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய குரங்குகள் தங்கள் நாட்டு தேசபக்திப் பாடலாக அறிவித்து அனைவரும் பாடும்படி கட்டாயப் படுத்தினார்கள். இதுதான் இந்த வரலாற்று பின்னனி.

இந்த பாடலைக் கண்டு அன்றைய இந்தியர்கள் வெகுண்டெழுந்தனர் அவர்களில் ஒருவர் தான் இந்த வங்காளி பன்கிம் சந்திரர் சட்டோபாத்யாய். இவர் நமக்கும் நாடு உள்ளது நம் நாட்டிற்கும் ஒரு தாய் இருக்கிறால் என்று எண்ணி பாரதமாதாவிற்கு பாடலை இயற்றினார் அதுதான் வந்தேமாதரம் (தாயே வணங்குகிறோம்) என்ற பாடல் இது 1876லேயே எழுதப்பட்டுவிட்டது. இந்த பாடல் ஆனந்தமாதா அதாவது வங்காள மொழியில் ANONDOMOTT என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும், இப்பாடல் அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்தார். இவ்வாறுதான் இந்த வந்தேமாதரம் பாடல் உருவானது!

சுநத்திர இந்தியாவில் இந்தப் பாடலுக்கு சர்ச்சை ஏன்?

விடுதலை பெறுவதற்கு முன் இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். லாலா லஜ்பத் ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கினார்.

இந்த பாடலின் மூல கருத்து துர்கை அம்மனை துதி பாடுவதே! ஆம் அதுதான் உண்மை! எனவேதான் அன்றைய காலத்திலேயே முஸ்லிம்கள் எதிர்த்து வந்தனர்.  வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது.

வந்தே மாதரம் பாடல் நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்து தெய்வமான துர்கைக்கும் ஒப்புமைப் படுத்துவதாக இஸ்லாமியர்கள் கருதியதால் அன்றைய தேசத் தலைவர்கள் சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும் முகமாக வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்கப்படவில்லை. இது இந்திய தேசத் தலைவர்களின் நற்குணத்தை பிரதிபலிக்கிறது. மேலும் வந்தே மாதரப் பாடல் இடம்பெற்றிருந்த பன்கிம் சந்திரரின் நூல் இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததாகவும் அவர்கள் கருதினார்கள்.

சுந்திர இந்தியாவில் இஸ்லாமியர்கள் எழுப்பிய உரிமைக்குரள் அப்போதைய தேசத் தலைவர்களால் நியயாமான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது அதன் மூலம் பாடல் சர்ச்சை நீங்கியது.

இந்தப் பாடலுக்கு மீண்டும் சர்ச்சை எவ்வாறு எழுப்பப்பட்டது?

வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக 07.09.2006 அன்று இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலை பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது. அப்போதுதான் இசைப் புயல் என்றழைக்கப்படும் ஒரு முஸ்லிம் இசையமைப்பாளர்  (இஸ்லாத்தில் இசை தடுக்கப்பட்டது எனவே இவரை இசைப் புயல் என்று கூறுவதைவிட ஷைத்தானின் புயல் என்று கூறலாம் தவறில்லை) வந்தேமாதரம் பாடலுக்கு இசையமைத்தார். இவர் பம்பாயில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்கம் பாடல் இசையமைத்தவர் எனவே இவர் ஏகத்துவவாதியல்ல மாறாக தர்காஹ் கப்ரு வணங்கியே! பணத்திற்காக மார்க்கத்தை விடுபவர்களை நாம் முஸ்லிம் என்று பாராட்ட முடியுமா? அப்படி பாராட்டுவதாக இருந்தால் இந்த இசையமைப்பாளரையும் பாராட்ட வேண்டும், உடல் அங்கங்களை வெளிப்படுத்தி டென்னிஸ் விளையாடும் (சா-மி)யையும் பாராட்ட வேண்டும் ஆனால் இவ்வாறு பாராட்டினால் நம் ஈமான் நிலைத்திருக்குமா? என்பதுதான் உண்மையான இறை விசுவாசிகளின் கேள்வியாகும்!.

இந்தப் பாடலை பாடுவது கட்டாயமா? அரசின் பதில்!

பல இஸ்லாமிய அமைப்புக்கள் இந்த பாடலை பாடுவதற்கு தயக்கம் தெரிவித்தன எனவே மத்திய மாநில அரசாங்கம் கீழ்கண்ட வழிகளை அறிவித்தது.

  • மத்திய அரசாங்கம்– இப்பாடலைப் பாடுவது கட்டாயமல்ல என்றும் சமயச் சார்பற்ற முதல் இரண்டு பத்திகளை பாடினால் போதும் என்றும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
  • மதச்சாற்பற்ற மாநில அரசாங்கங்கள்- தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டிருந்தான.
  • மதவாத மாநிர அரசாங்கங்கள் – பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இப்பாடலை பாட வைப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதை அடுத்து, சில இஸ்லாமிய அமைப்புகள், அன்றைய தினம் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

பாடல் பாடப்பட்டதன் நோக்கம் மற்றும் பொருள்

வந்தே மாதரம் என்றால் “தாய்க்கு வணக்கம்’ என்று பொருள்

ஆனந்தமத் நூலில் உள்ள வந்தேமாதரம் பாடலின் முழு வடிவம்

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்

இன்சுவைக்கனிகள்

தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

 

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

எங்கள் தாய்

சுகமளிப்பவளே

வரமருள்பவளே

தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்

உன் திருப்பெயர் முழங்கவும்

கோடிக் கோடிக் கரங்கள்

உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?

பேராற்றல் பெற்றவள்

பேறு தருபவள்

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

அறிவு நீ

அறம் நீ

இதயம் நீ

உணர்வும் நீ

எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே

செங்கமல மலர் இதழ்களில் உறையும்

செல்வத் திருமகள் நீயே

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

தாயே வணங்குகிறோம்

திருமகளே

மாசற்ற பண்புகளின் மனையகமே

ஒப்புயர்வற்ற எம் தாயகமே

இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

கருமை அழகியே

எளிமை இலங்கும் ஏந்திழையே

புன்முறுவல் பூத்தவளே

பொன் அணிகள் பூண்டவளே

பெற்று வளர்த்தவளே

பெருமைகள் அனைத்தும் அளித்தவளே

தாயே வணங்குகிறோம்

ஆங்கிலேயரின்

தேசபக்தி பாடல்

இந்துக்களின் 

வந்தேமாதரம் பாடல்

 

God save our gracious Queen,

Long live our noble Queen,

God save the Queen:

Send her victorious,

Happy and glorious,

Long to reign over us:

God save the Queen.

O Lord, our God, arise,

Scatter her enemies,

And make them fall.

Confound their politics,

Frustrate their knavish tricks,

On Thee our hopes we fix,

God save us all.

Thy choicest gifts in store,

On her be pleased to pour;

Long may she reign:

May she defend our laws,

And ever give us cause

To sing with heart and voice

God save the Queen.

 

 

 

सुजलां सुफलां मलयजशीतलाम् सस्य श्यामलां मातरंम् . शुभ्र ज्योत्सनाम् पुलकित यामिनीम् फुल्ल कुसुमित द्रुमदलशोभिनीम्, सुहासिनीं सुमधुर भाषिणीम् . सुखदां वरदां मातरम् ॥

सप्त कोटि कन्ठ कलकल निनाद कराले द्विसप्त कोटि भुजैर्ध्रत खरकरवाले के बोले मा तुमी अबले बहुबल धारिणीम् नमामि तारिणीम् रिपुदलवारिणीम् मातरम् ॥

तुमि विद्या तुमि धर्म, तुमि ह्रदि तुमि मर्म त्वं हि प्राणाः शरीरे बाहुते तुमि मा शक्ति, हृदये तुमि मा भक्ति, तोमारै प्रतिमा गडि मन्दिरे-मन्दिरे ॥

त्वं हि दुर्गा दशप्रहरणधारिणी कमला कमलदल विहारिणी वाणी विद्यादायिनी, नमामि त्वाम् नमामि कमलां अमलां अतुलाम् सुजलां सुफलां मातरम् ॥

श्यामलां सरलां सुस्मितां भूषिताम् धरणीं भरणीं मातरम् ॥

வணக்கம் என்பதன் பொருள் என்ன?

வணக்கத்துக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு தெரியுமோ? அதாவது கும்பிடுதல், தொழுதல், வழிபடுதல் என்றுதான் அர்த்தமாகும்.

இந்துக்களில் சிலர் காலில் விழுந்து வணங்குவார்கள், சிலர் கையால் கும்பிட்டு வணங்குவார்கள், சிலர் பாடலை பாடி வணங்குவார்கள் அப்படிப்பட்ட பாடல் வணக்கங்களில் வந்தேமாதரம் ஒன்று எனவே நாம் இந்த வணக்கத்தை பாடலாமா?

அல்லாஹ்வைத்தான் வணங்குவோம் என்பது முஸ்லிம்களின் நிலை, அவ்வாறு இருக்க பாராதமாதாவை வணங்குவது முறையா? முஸ்லிம்களாகிய நாம் நம்மை 10மாதம் பெற்று வளர்த்த தாயைக் கூட வணங்கமாட்டோம் ஆனால் அவளுக்காக உயிர் கூட கொடுப்போம் அப்படியிருக்க இந்தியத்தாய் எங்களை ஈன்றெடுத்தாலா! எங்களை பெற்ற தாயை விட இந்தியத் தாய் சிரந்தவளா? எங்களை பெற்ற தாய்க்கு இல்லாத மரியாதையை நாம் எவ்வாறு இந்தியத்தாய்க்கு கொடுப்போம்.

நபியவர்கள் இருக்கும் போதும் தன்னை வணங்கக் கூடாது என்றார்கள். தன் மறைவுக்குப் பின்னும் தன்னை வணங்கக் கூடாது என்றும் எச்சரித்துச் சென்றார்கள் அப்படியிருக்க எங்கள் நபிக்கு இல்லாத வணக்கம் இந்த பாரதமாதாவுக்கா?

லா இலாஹ இல்லல்லஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ்

(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்)

மூமின்களே! முஸ்லிம்களே! அல்லாஹ்வைத்தவிர யாரையும் எதையும் வணங்காதீர்கள்! அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள்! தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை!

அல்ஹம்துலில்லாஹ்! (எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)

இப்படிக்கு

அன்புடன் – சிராஜ் அப்துல்லாஹ்

 

 

 

 

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s