வட்டி… வட்டி… வட்டி…

அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியைக் கட்ட முடியாமல் அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன். – பழமொழி அட்டிகையை விற்றும் வட்டிக் கணக்கு முடியாமல் புட்டி விஷத்தில் மொத்தக் கணக்கையும் முடித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோப் பேர். 

 உங்கொப்பன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு, உன் கணவன் செத்தால் என்ன ? நீ வட்டியைக் கட்டு என்று கல்நெஞ்சர்கள் மனைவிப் பிள்ளைகளை விரட்டுவார்கள் என்பதால் அவர்கள் வாயிலும் விஷத்தை ஊற்றி என்னுடன் அழைத்துச் சென்று விட்டேன் என்று வட்டிக்கடன் அடைக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்களின் காலுக்கடியில் இருக்கும் கடிதத்தில் மேற்காணும் விதம் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

 வாழ்ந்து கெட்டவர்கள் என்று சொல்வதுண்டு வட்டியால் அழிந்து கெட்டவர்களே அதிகம்.

 இன்னும்

வட்டிக் கொடுமையால் பல தொழில் நிருவனங்கள் மூடப்பட்டு அதன் அதிபர்கள் எஸ்கேப், அல்லது சூஸைட்.

 இன்னும்

வட்டிக் கொடுமையால் சின்னஞ்சிறு நாடுகள் கடன் பெற்ற நாடுகளின் (திரைமறைவில்) காலணி நாடுகள்.

 இன்னும்

வட்டியின் அடிப்படையில் பொருளாதாரத்தை அமைத்துக்கொண்ட ஆஹா, ஓஹோ நாடுகளின் அடித்தளம் இன்றுக் காலி.

1400 வருடங்களுக்கு முன்னரே வட்டி எனும் தீமை வளர்வதுப்போல் தெரிந்தாலும் அதன் இறுதிப் பலன் அழிவையேத் தரும் என்று அறிவின் பொக்கிஷம் அன்னல் நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றார்கள். வட்டிப்பொருள் வளர்ந்த போதிலும்இ உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம் தான். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதிஇ நஸயீ

 திருக்குர்ஆன் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதற்கு 1400வருடங்களுக்கு முன்பு இறக்கி அருளிய திருக்குர்ஆன் முழங்கிய வட்டியின் தீமைகள் பற்றிய எச்சரிக்கைகள் இன்று நம் கண் முன் நிகழும் பேரழிவுகள் பெரிய எடுத்துக் காட்டாகும்.

 மனித குலத்தைப் பெரும் அழிவில் ஆழ்த்தும் வட்டி எனும் தீமையை தடுத்து நிருத்துவதற்காக அதை பெரும் பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் சேர்த்து. அந்தப் பெரும் பாவத்தை செய்பவர்களுக்கு ரைட் அன்ட் லெஃப்டாக துணை நிற்பவர்கள், அதில் ஊழியம் செய்து கூலிப் பெறுபவர்கள்அனைவரையும் பாவத்தில் இழுத்துப்போட்டது இஸ்லாம். வட்டியைப் புசிப்பவன்இ அதனைப் புசிக்கச் செய்பவன்இ அதற்காக கணக்கு எழுதுபவன்இ அதற்கு சாட்சியம் கூறுபவர்களை பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டுஇ அத்தனை பேரும் குற்றத்தில் சமமானவர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)இ ஆதாரம்: முஸ்லிம்.

 இன்று வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில் பணிபுரிவதற்கு மறு உலக வாழ்வை நம்பி வாழும் முஸ்லீம்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு இஸ்லாம் தடுத்த வழியில் பொருளீட்டுவதற்கு ஆர்வம் காட்டும் மக்கள் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்பு செய்து விட்டார்கள். மக்களுக்கு ஒரு காலம் வரும் அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா ? ஹராமானதா ? முறையானதா ? முறையற்றதா ? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைரா (ரழி) புகாரி.

 இவர்கள் எந்தக் காற்றில் பறக்க விட்டார்கள் வட்டியைப் புசிப்பவன், அதனைப் புசிக்கச் செய்பவன், அதற்காக கணக்கு எழுதுபவன்இ குற்றத்தில் சமமானவர்கள் என்ற இஸ்லாமிய எச்சரிக்கையை?

 இதை நிர்பந்தம் என்று சொல்வார்கள்.

 நிர்பந்தம் எது என்று அல்லாஹ்வுக்குத் தெரியும்.

 அனுமதிக்கப்பட்ட எந்த ஒன்று எங்கு அறவே கிடைக்க வில்லையோ அங்கு மட்டுமே அனுமதிப்படாததை அனுபவிப்பதை அல்லாஹ் நிர்பந்தம் என்று விட்டு விடுகிறான்.

 படித்திருக்கின்றோம் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் இறைவனால் அனுமதிக்கப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நிருவனங்களில் நல்ல வேலையுடன் நல்ல சம்பளத்தில் அல்லாஹ் நமக்கு நாடுவான் என்ற நம்பிக்கை வரவேண்டும் காரணம் பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான். நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.திருக்குர்ஆன்  2:153

 வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில் பணிபுரிந்து அதன் சம்பளத்தில் தானும் உண்டு, தன்னை ஈன்றோர் சான்றோர் அனைவரையும் உண்ணச் செய்யும் சகோதரர்களே ! இன்னும் அதில் இணைவதற்காக ஆர்வம் காட்டும் சகோதரர்களே! அண்ணல் நபி(ஸல்) அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட மக்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் என்ற நபிழத்தோழர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் படியுங்கள்.

 நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவி) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், ‘இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்; அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, ‘நீங்கள் பள்ளி வாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், ‘இவர் சொர்க்கவாசி’ என்று கூறினர்” என்றேன். அதற்கு அவர் கூறினார்: அல்லாஹ்வீன் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக்கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன். அதாவது, நான் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பது போன்று கண்டேன் – அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் – அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், ‘இதில் ஏறு” என்று சொல்லப்பட்டது. நான், ‘என்னால் இயலாதே” என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பிடித்துப் பின்னாலிருந்து உயர்த்திவிட்டார்.

உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்டபோது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், ‘நன்கு பற்றிப் பிடித்துக் கொள்” என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித்தெழுந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, ‘அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறை நம்பிக்கை என்னும்) பிடியாகும். எனவே, நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்” என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) தாம். கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார். புகாரி 3813.

 மேற்காணும் அப்துல்லாஹ் இப்னு சலாம் என்ற நபித் தோழர் பெருமானார் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் பொழுது அவர்கள் கண்ட கணவுக்கு நீங்கள் இறக்கும் காலம்வரை தீனுடைய மார்க்கத்தில் நிலைத்து நிற்பீர்கள் இறைநம்பிக்கை குறையாதவராக வாழ்வீர்கள் என்று விளக்கமளித்தார்கள்.

 பெருமானார் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் அந்த நபித்தோழர் சிறிதளவும் கூட இறைநம்பிக்கை குன்றாதவராகவே வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் என்பதற்கு கீழ்காணும் சம்பவமும் உதாரணமாக அமைகிறது.

நான் மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்), ‘நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேழீச்சம் பழத்தையும் உண்ணத் தருவேன். நீங்கள் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்த என்) வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமே” என்று கேட்டார்கள். பிறகு, ‘நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள்.உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து. அவர் ஒரு வைக்கோல் போரையோ, வாற்கோதுமை மூட்டையையோ, கால்நடைத் தீவன மூட்டையையோ அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அதுவும் வட்டியாகும்” என்று கூறினார்கள். 3814. அபூ புர்தா ஆமிர்(ரஹ்) அறிவித்தார்

 அதாவது அபூ புர்தா ஆமிர்; அவர்கள் வட்டிக்குக் கொடுத்து வாங்கவில்லை மாறாக வட்டிப் புழக்கத்தில் இருக்கும் நாட்டில் குடி இருந்தார்கள் அங்கு அவர்கள் தொடர்ந்து குடி இருப்பதை நேரடியாக தடுக்காமல் மறைமுகமாக மாரக்க உபதேசத்தின் மூலமாக தடுக்கின்றார்கள்.

 ஏன் என்றால் ?

வட்டிப் புழங்குகின்ற ஊரில் குடி இருந்தால் எந்த வழியிலாவது வட்டி உணவில் கலந்து விடும் என்பதை பெருமானார்(ஸல்) அவர்கள் வாயிலாக அறிந்திருந்தார்கள்.

 ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவர்கள் மிகைத்திருப்பார்கள் வட்டி உண்ணாதிருப்பவர் மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்இ நஸயீ

இன்று நாம் வாழும் காலத்தில் நம் கண் முண்ணேப் பார்க்கின்றோம் வங்கிகளுக்கு சவால் விடும் அளவுக்கு வட்டிப் பல பெயர்களில் வங்கிகளுக்கு வெளியில் பவனி வருகின்றது.

  • இன்ஷூரன்ஸ்      அறிமுகப்படுத்தும் போனஸ் என்றப் பெயரில் வட்டி.
  • கன ரக      வாகனங்கள் முதல் மித ரக வாகனங்கள் வரை, பாத்திரம் பண்டங்கள் வரை தவனை முறையில் பணம் செலுத்தும்      இன்ஸால்மென்ட் என்றப் பெயரில் வட்டி.
  • ஏலச்      சீட்டு என்றப் பெயரில் கர்ண கொடூரமான வட்டி.
  • சாதாரண      மளிகைக் கடையில் தினந்தோறும் காசு கொடுத்து வாங்குபவருக்கு ஒரு ரேட் மாதம்      முடிந்து காசுக் கொடுப்பவருக்கு ஒரு ரேட் என்று பகிரங்க வட்டி.

இப்படி வட்டி மலிந்து விட்ட ஊரில் குடி இருக்கும் பொழுது எதாவது ஒரு வழியில் வட்டிப் புகுந்து விடுகிறது அதில் மாட்டிக் கொண்ட ஒருவர் நமக்கு நெருக்கமானவராக இருந்து விட்டால் அவருடைய உணவின் மூலம் அது நம்மிலும் பகுந்து கொள்வதற்கு பெரிதும் வாய்ப்பிருக்கிறது என்பதால் தான் வட்டி உண்ணாதிருப்பவர் மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்றப் பெருமானார் (ஸல்) அவர்களுடைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு இராக்கில் குடி இருக்கும் தமது தோழர் அபூ புர்தா ஆமிர்அவர்களை அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் எச்சிக்கின்றார்கள்.

 நல்ல வேலை, நல்ல சம்பளம் இதை விட்டால் இதைப்போன்று வேரொன்று அமைவதுக் கஷ்டம் என்ற முடிவுக்கு வந்து இஸ்லாமிய ஏவல் – விலக்கல் சட்டங்களை காற்றில் பறக்க விட்டுப் பொருளீட்ட முடிவு செய்து விடுகின்றனர். அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.திருக்குர்ஆன் 5:62

 இஸ்லாம் என்பது இவர்களுடைய வீட்டின் கத்னா, காது குத்து, கல்யாணம் போன்ற வைபவங்களுக்கும், திருக்குர்ஆன் அவர்களுடைய வீட்டு அலமாரியை அலங்கரிக்கவுமேப் பயன்படுகிறது.

 இவ்வாறு முறையற்று ஈட்டுகின்ற வருமானத்தில் இவர்கள் மட்டும் உண்டு பாவத்தாளியாவதில்லை, மாறாக இவர்களின் கீழ் உள்ள பொறுப்பாளிகளாகிய மனைவி, பிள்ளைகளுக்கு உண்ணச் செய்கின்றனர் உன்னதமான கல்வியைப் புகட்டுகின்றனர், இன்னும் இவர்களை ஹலாலான முறையில் பொருளீட்டிப் படிக்கவைத்த தாய் தந்தையருக்கும் அவர்களுடைய வயதான காலத்தில் வட்டித் தொழில் சம்பளத்திலிருந்தே உண்ணக்கொடுக்கின்றனர்.

 இவ்வாறு இவர்கள் உண்பதிலும் இவர்களை ஈன்றோர், சான்றோரை உண்ணச்செய்வதனாலும் அதிலிருநது வளரும் அவர்களுடைய கொழுத்த சதைப் பிண்டங்கள் நரக நெருப்பிற்கு எரி பொருளாக தயாராகிறது என்று பெருமானார் அவர்கள் எச்சரித்தார்கள்.’வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும்இ ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : தப்ரானி

 வட்டியை இறைவன் தடைசெய்து தர்மத்தை இறை நம்பிக்கையாளர்களிடம் வளர்த்ததாக கூறுகின்றான் இதை மறுப்போர், அல்லது இதற்கு துணை நிற்போர், அதில் ஊழியம் செய்து கூலிப் பெறுவோர் அனைவரும் இறைவனுக்கு நன்றிக் கெட்டவர்கள், நன்றிக் கெட்டவர்களை இறைவன் நேசிப்பதில்லை அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.திருக்குர்ஆன் 2:276

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

 நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.